தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத் துரத்திய பிரபல நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதன் நேற்று மொட்டை மாடியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டபின் தன் வெறுப்பு மனத்தை மாற்றிக் கொண்டாள்.
கீழே…சேரியில்…ஒரு குடிசையின் பின்புறம்… சாக்கடை நதியருகில்… வெகு சுலபமாக அந்தச் சிறுமி ஆடிக் கொண்டிருந்ததைப் பாரத்துப் பிரமித்துப் போனாள். அவ்வப்போது ஒளிந்திருந்து பார்த்துக் கற்றுக் கொண்ட நடன அசைவுகளையும்… முக பாவங்களையும் தன் மாணவியரை விடச் சிறப்பாக அச்சிறுமி வெளிப்படுத்திய விதம் அவளை மிரள வைத்தது .
அடுத்த வாரத்தில் ஒரு நாள் மார்க்கெட்டிற்குச் சென்றிருந்த பத்மா ரகுநாதன் அங்கு கூடியிருந்த சிறு கும்பலைக் கண்டு ஆர்வமுடன் எட்டிப் பாரத்தாள். உள்ளே அந்தச் சேரிச் சிறுமி தன் நடனத் திறமையைக் காட்டிக் கொண்டிருக்க அதற்கு கன்னாபின்னாவென தாளமடித்துக் கொண்டிருந்தான் ஒரு கட்டம் போட்ட லுங்கிக்காரன். இன்னொரு பக்கம் அவளைப் பெற்றவன் துண்டு விரித்து வசூல் நடத்திக் கொண்டிருந்தான்.
வெறுத்துப் போன பத்மா ரகுநாதன் ஆவேசத்துடன் அச்சிறுமியைப் பெற்றவனை அணுகி கத்தலாய்க் கேட்டாள். ‘ஏன்யா…எப்பேர்ப்பட்ட தெய்வீகக் கலை… அதைப் போய் இப்படி… காசுக்காக… ச்சை”
‘இதப் பார்ரா… இவங்க மட்டும் ஆயிரக் கணக்குல பணம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குள்ளார வெச்சு வியாபாரம் பண்ணுவாங்களாம்… ஆனா நாம இப்படி ரோட்டுல வெச்சு காசு சம்பாதிக்கக் கூடாதாம்… இதென்ன நியாயம்?”
சாட்டையடி பட்டாற் போலிருந்தது பத்மா ரகுநாதனுக்கு. ‘அவர்கள் சொல்வதும் உண்மைதானே?”
மறுநாளே நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதனின் வீட்டின் முன் இருந்த ‘பரத நாட்டியப் பள்ளி” என்ற போர்டு ‘இலவச பரத நாட்டியப் பள்ளி” என்று பெயர் மாற்றம் பெற்றது
தொடர்புடைய சிறுகதைகள்
அதிக சூடும் இல்லாமல் அதிக ஜில்லிப்பும் இல்லாமல் இடைப்பட்ட வெதுவெதுப்பிலிருக்கும் இதமான நீரை மொண்டு உச்சந் தலையில் வைத்து நிதானமாய் ஊற்றிக் கொள்ளும் போது மேனியில் ஏற்படும் ஒரு இன்ப சிலிர்ப்பிற்கு இந்த உலகத்தையே எழுதி வைக்கலாம். கண்களை மூடிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது.
‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. ‘ச்சை…மனுசனா அந்தாளு?…லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!….இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?….பிச்சுப் போடுவா!…அதான் அங்க காட்ட ...
மேலும் கதையை படிக்க...
அருண் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது மணி 6.30. ஏனோ வீட்டிற்குப் போவதற்கே வெறுப்பாயிருந்தது. அப்பாவை நினைக்கும் போது கொஞ்சம் கோபமாகவும் நிறைய குழப்பமாகவும் இருந்தது.
'ஏன் அப்பா திடீர்ன்னு இப்படி மாறிட்டார்?… மூணு மாசம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்… இப்ப ...
மேலும் கதையை படிக்க...
அறைக்கதவு 'தட…தட” வெனத் தட்டப்பட படுக்கையில் படுத்தவாறே செல் போனில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவசரமாய் அதைத் துண்டித்து விட்டு பாய்ந்து சென்று கதவைத் திறந்தான்.
கண்ணன் நின்றிருந்தான் கலவர முகத்துடன்.
'டேய்…கண்ணா…என்னடா?…என்னாச்சு?…ஏன் ஒரு மாதிரி பதட்டமாயிருக்கே?”
சட்டென்று உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டவன் தன் ...
மேலும் கதையை படிக்க...