கற்றது – ஒரு பக்க கதை

 

1990

வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான்.

பின்னால் நிழலாடியது ராகுல்!

“வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?’

“முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா முயற்சி செய்து, கற்பனை பண்ணி எழுதலாமே?’

“அடப்போடா!… சுயமா எழுதறதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. அடுத்தவன்கிட்டே வாங்கணுமா, காப்பி அடிச்சம்மா.. முடிஞ்சது வேலை! கற்பனை அது இதுவெல்லாம் உனக்குத்தான் வரும்.’

2013

“டேய், வினோத்! பார்த்து ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கியா? என்னடா பண்றே?’ – ராகுல் கேட்டான்.

“அனிமேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு பெரிய கம்பெனியிலே வேலையில் இருக்கேன்டா!’

“அனிமேஷன்னா?’

“கற்பனையா மனிதர்களை, விலங்குகளை கம்ப்யூட்டர்ல உருவாக்கி நடிக்க வச்சி படமெடுக்கிறது!’

“அப்படியா?’

“ஆமாம். ராகுல் நீ என்னடா பண்றே?’

“ஜெராக்ஸ் கட வச்சிருக்கேன்!’

- ஜெயாமணாளன் (செப்ரெம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல் தயாரித்துவிட்டு, பென்ஷன் பெற்று, திருச்செந்தூர் ஜில்லா போர்டு ரஸ்தாவில் பாளையங்கோட்டைக்கு எட்டாவது கல்லில் இருக்கும் அழகியநம்பியாபுரம் என்ற கிராமத்தில் குடியேறினார். ...
மேலும் கதையை படிக்க...
லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. அவள் கையருகில் இருந்த கடிதத்தை பிரித்துப் படித்தார் இன்ஸ்பெக்டர் பாண்டுரெங்கன. “என் சாவுக்கு நானே காரணம். இது தற்கொலைதான். மானேஜர் காரணம் அல்ல. வேலையாட்கள் காரணம் ...
மேலும் கதையை படிக்க...
புதிதாகக் கட்டப்போகும் வீட்டின் பிளானைப்பற்றி, ஓய்வு பெற்ற கட்டிட இன்ஜினியர் சபேசனோடு விவாதித்துக் கொண்டிருந்தான் வேணு. ”எனக்கும் மனைவிக்கும் தனி படுக்கை அறை, மகனுக்கு ஒன்று, வரவேற்பரை, பூஜையறை…” என்று வேணு தன் தேவைகளை விளக்கிக் கொண்டிருக்க, ”தாத்தா-பாட்டிக்கு தனியா ரூம் வேண்டாமா..?” என ...
மேலும் கதையை படிக்க...
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூடடினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடா லென்று கீழே வண்டியோடு சாய்நதாள். எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது ...
மேலும் கதையை படிக்க...
“இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?” – செல்ல மகள் சிணுங்கலோடு கேட்டாள் வெளியேதான் சாப்பிடப் போறோம்! அப்புறம் என்ன பண்றே|? வேலை இருக்குடி…நீ கிளம்பு! – ...
மேலும் கதையை படிக்க...
நாசகாரக் கும்பல்
தடயம் – ஒரு பக்க கதை
தனிமை – ஒரு பக்க கதை
எங்கே நடந்த தவறு?
உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)