கறுப்புச் சூரியனும் கறுத்த ஆடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 15,157 
 

மனிதன் தனிமையாக மகிழ முடியாது. மற்றவர்களோடு பேசி மகிழ்ந்து சிரிக்கும்போதுதான் மற்றவர்களுக்கும் அந்தச்சிரிப்புத் தொற்றி எல்லோரையும் மகிழச்செய்கின்றது.

ராஜி போன் செய்து கதைக்கத் தொடங்கும்போதே சிரிப்பு வந்துவிடும் புனிதாவுக்கு.

இந்தக் கொரோனா வந்ததும் போதும் எங்கட சனங்கள் விதம் விதமாகச் சமைக்கிறதும் சாப்பிடுகிறதும்தான் வேலை புனிதா.

ஏதோ ஒரு கூட்டத்தில் பேசப்போன முன்னைய பிரபல நடிகர் எம்ஆர்.ராதா அவர்கள்; ‘ஏண்டா டே ஏண்டா கத்துறிங்கள்’ என்றுதான் பேச்சை ஆரம்பித்தாராம் சனங்களைப் பார்த்து வணக்கம் கிணக்கம் எதுவுமே கிடையாதாம்; என்று அவரது குரல் மாதிரியே பாவனை செய்துகாட்டிப் பேசியவரைக் கேட்டு மகிழ்ந்தது போலத்தானிருக்கும் ராஜியின் கதைகள்; புனிதாவுக்கு. அதே தோரணையில்தான்; ராஜியும் பேச்சை ஆரம்பிப்பாள். அவள் கதைக்கிற விதத்தில் ‘படா’ரென்று சிரிப்பு வந்துவிடும்;

எங்கட வீட்டிலும் இதுதான் எனக்கு வேலையாகக்கிடக்குப் புனிதா. ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த சில சனங்கள் இந்தக் கொரோனாக் காலத்தில வேலைக்கும் போக முடியாமல், இந்தப் பயலுகள் சட்டங்களையும் அடிக்கடி மாத்தி, வேலையையும் இழந்து சரியாகக் கஷ்டப்படுகுதுகள். தெரியுமே? செய்திகள் பார்த்தனியே புனிதா?

புனிதா சிரித்துக்கொண்டாள். ‘தகவல்சாலை’ என்ற தமிழ் நிகழ்ச்சி வீட்டிலை இருந்து ஒளி பரப்புவதாலை எனக்குத் தெரியாமலிருக்குமா ராஜி? பிபிசியும், பிரான்ஸ் 24 உம் தவறாமல் பார்க்கிறனான். நல்ல சமுதாயப் பத்திரமாக்கியும்; பார்த்துக்கொள்வேன். வார்த்தைகளுக்குள் வாழ்க்கையை வைப்பதுதானே பேச்சு ராஜி. இப்படித்தான் அந்த நிகழ்ச்சிகளையும் நெழிந்து சுழிந்து போறதை கொஞ்சம்; ரசிக்கிறனான் ராஜி.

கொரோனாவுக்குப்பிறகு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆளுக்கொரு ஒலி, ஒளி பரப்புக்கள் ஷ{முக்குள்ளால் தொடங்கி இப்போ எதைக் கேட்பது என்று தெரியவில்லை புனிதா.

நான் பார்க்கிறது லண்டனுக்கு வந்தகாலத்திலிருந்தே கேட்கிற தமிழ் ஒலிபரப்பு ராஜி. இதுதான் பிரித்தானியாவில் முதன் முதலாக ஆரம்பித்த தமிழ் ஊடகம் என்ற ஒரு குறிப்பு உண்டு..

அப்ப அந்த ‘சண்றைசோ’ புனிதா?

ஓமோம். இப்ப அது பெயர்கள் தமிழில மாற்றிக்கிடக்கு.

ஆனா இப்ப கொரோணா வந்ததும்போதும் வட்சப்பின்ர ஆக்கினை தாங்கேலாமல் கிடக்கு. உதுகளுக்கெல்லாம் விசர் புனிதா. தமிழ் பொம்பிளைகளின்ர படத்தை உடம்பு கூசுகிறமாதிரி போடுதுகள்;. ஐயோ நேற்று மலேசியாவில ஒரு தமிழ் பொம்பிளையைக் கொல்லுறமாதிரி… என்னால சொல்லமுடியாது நெஞ்சு நொருங்கி நடுங்கிப்போனேன். வட்சப்;பில வாறதுகளை அழிக்கவே கையெல்லாம் வலி எடுக்குது.

பொம்பிளைகளைப்பற்றிக் கேவலமாக வந்தால் உடனேயே அழித்துவிடுவேன். சிலவற்றை தெரிவு செய்து பார்க்கவேண்டும் ராஜி. பல நல்ல விடயங்களையும் அனுப்புகிறார்கள்தானே!

சும்மா கிட புனிதா.

ராஜி போன் செய்து புனிதாவுடன் கதைத்தால் சில வேளைகளில் முழுத்தரிப்புக் கிடையாது. தற்போது தான் வாழ்ந்துகொண்டிருக்கிற லண்டன் தமிழ் மக்களின்ர புதினங்கள் அது இது என்று பலதும் பேசி மகிழும் ராஜி, மறக்காமல்; தான் வாழ்ந்த கிராமத்தைப்; பற்றியும் சுவையாக ஒன்றைப்பற்றிச் சொல்லாமல் போன்; அமைதி பெறாது.

புனிதாவுக்கு சிரிப்பு பீறிட்டு வயிறு நோவெடுத்துவிடும்.

கொரோனா காலத்தின் மீளவும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் ஒரு புறம். காண்டீபக்குரல் கொண்ட பிரபலத்தின்; உயிர் இழப்போ மறு புறம். மூளை, உடம்பு, மனசு எல்லாம் சேர்ந்து மகிழ்ந்தால்த்தானே வாழ்வை அழகாக முன்னெடுக்கலாம். ஆனால் ஐக்கிய ராச்சியத்தில் வேலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஆரம்பித்தாலும் சனங்கள் அச்சத்தோடுதான் திரியுதுகள் ராஜி. இந்தக் கொரோனோ காலத்தில் நோய் ஒருபுறம், சாவு ஒரு புறம், கஷ்டம் ஒரு புறம். அத்தோட சாப்பாடு இல்லாமல் முப்பத்திநாலு வயதுப் பெண்ணும் அவளின் ஒன்றரை வயதுக் குழந்தைப்பொடியனும் உயிர் பிரிந்து கிடந்ததுகளாம். எனக்கு நெஞ்சு வலிச்சுது ராஜி.

உண்மையாயோ புனிதா!

ஐயோ இதென்ன கொடுமை. எங்க பாத்தனி புனிதா? பசியால செத்ததுகளோ? பதறிப் போய் அங்கலாய்த்தாள் ராஜி.

பிபிசியில பார்த்தனான்.

ராஜி மிகவும் மனித நேசம் கொண்டவள். வெளிப்படையாக எதையும் கதைக்கும் சுபாவம் அவள் சொத்து. அதனால் புனிதாவின் இதயத்தில் அவள்மீது ஒரு தனி அன்பு. அவள் தொடர்ந்தாள்…

ஏதோ சனங்களுக்குச் சாப்பாட்டுச்சாமான்கள் கொடுக்கிறமாதிரி உதவி செய்யிறது மாதிரி செய்தியில் காட்டினாங்கள்தானே புனிதா.

அதுவும் சிலர் செய்யினம்தான். எத்தனை நாளுக்குதான் செய்வினம் ராஜி?

அதுகள் அந்த ‘மேர்சி பேகுமா’ என்ற பொம்பிளையும் அவளின் குழந்தைப்பொடியனும் பசியால் சாகிறதுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தான் கொஞ்ச அரிசியும் சாமான்களும் கொடுத்ததாக பத்திரிகையில் போட்டிருக்கு.

என்ன பத்திரிகையில பாத்தனியோ புனிதா?

வேறே என்னத்தில பார்க்கிறது? இன்ரனெற்றில்தான் போட்டிருக்கு. படம் எல்லாம் உடனுக்குடன் இப்N;பா எடுக்கிறதும் ஊடகங்களில போடுறதும்தானே இப்ப நடக்குது? அதுவும் செத்தவர்களின் படங்களைப் போட்டால் பெரிய செய்திதானே!

ஐயோ தாயே! புனிதா அதுகள் எந்த நாட்டவர்கள் ?

உகண்டா நாட்டவர்களாம். அண்மைக் காலத்தில்த்தான் எங்களைப்போல சிரமப்பட்டு தஞ்சம் கேட்டு வந்ததுகளாம். ஆதரவற்ற பொம்பிளையாம் ராஜி. அதோட அதுக்கு மொழிப்பிரச்சினையும் என்றால் என்ன செய்யிறது?

இதில என்ன புனிதா கறுப்பு வெள்ளை என்ற நிறம் இருக்கு. அதுகள் எங்களைப்போல மனிதப்பிறவிகள். அந்தத் தாயும் பிள்ளையும் ஆ.. ஐயோ.. இதென்ன வேதனை! இந்தத் தேசத்தில …எனக்குத் தெரிந்திருந்தால் நான் வீட்டில சமைக்கிறதுகளைக் கொண்டுபோய்க்; கொடுத்திருப்பேனே.

அந்தப் பொம்பிளை பாவம் ராஜி. ஐக்கியராச்சியச் சட்டப்படி வேலை செய்யிற அனுமதிப்பத்திரம் காலாவதியாகப் போயிட்டுது என்ற குற்றமாம். அதால அந்தப் பொம்பிளைக்கு வேலை செய்யிற உரிமை இல்லாமல் போச்சாம். இந்தக் கொரோனா வந்ததால அதுகள் எங்க வெளியிலயும் போகேலாது. வீட்டிற்குள் முடக்கினால் அதுகள் என்ன செய்யுங்கள்;? பசியால் சாப்பாடு இல்லாமல் அநியாயமாக அதுகளின்ர உயிர் போயிட்டுது. இந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது ராஜி.

இதைக் கேட்க வெட்கமாயிருக்குப் புனிதா.

ஓம் ராஜி. ஒரு ஒழுங்கில்லாத அமைப்புகளின் செயல்களால் ஒரு இளம் தாயும் மகனும் உயிரிழந்து விட்டுதுகள். அதுகளுக்கு கொரோனாத் தொற்று வந்திருந்தால் அது தாக்கிவிட்டது என்று செய்திகள் வந்திருக்கும். அதுக்குள்ள செய்திகளைச் சோடிச்சிருப்பினம்.

அதுகளின்ர ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்!

ஊடகங்கள் தங்களது பொய்த் துயரங்களைப் பரப்பாமல் இருக்கட்டும்! ராஜி கவலையோடு வெளிப்படுத்தினாள்.

சரியாகத்தான் கூறினீங்கள் ராஜி. மனிதருக்குக்; கவசமாக இருப்பது மனித நேசம். எத்தனையோ மனிதர்கள் இதனைச் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள். மறைந்த பிரபல இசைக்கலைஞன்;; எஸ்.பியும் இந்த மனித நேசத்தினால்தான் உலகெல்லாம் இமயமாகக் காட்சி தருகின்றார். ‘நாம் உயிரோடு இருக்கும்வரை யாரும் வெறுக்கக்கூடாது. நாம் இறந்தபிறகு யாரும் மறக்கக் கூடாது’ என்றல்லவா அந்த மகான் தனது இசையையும்; எமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் ராஜி.

அந்த வேதனையோ சொல்லமுடியாது புனிதா. அந்த மனுஷனின்ர மனித சேவையைப் பாhர்த்து நான் கண்ணீர்விட்டேன் புனிதா! மனிஷரெண்டால் இப்பிடியெல்லோ இருக்கவேணும்.

ஓம் ராஜி என்னுடைய அம்மா நவமணியும் அவரின் பிரிவால் ‘அழுதேன்’ என்று கூறினார். ‘மரணம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதைப் புரிந்து அதைத் தாங்கும் பக்குவம் பெறவேண்டுமே ஒழிய, அதை ரசிக்க முடிவதில்லை. அதை ரசிக்கிறவர்கள்தான் அதைத் தாங்கமுடியாதவர்களாக அழுது புலம்புகின்றனர்’ என்று ஜெயகாந்தன் சொன்னதெல்லோ இப்ப நினைவுக்கு வருகுது ராஜி. என்ன செய்கிறது? அந்தத் தத்துவத்தை மனதில் கொள்வோம்.

இந்தக் கொரோனோவால் எத்தனை விதமாகின்றது சனங்களின் சோகங்கள்.

அது மாதிரித்தான் கொரோனாவில் சனங்களின் கஸ்டங்களைப் பார்த்த மன்சிஸ்டர் உதைபந்தாட்ட வீரரான மார்கஸ் ரஷ்ஃபோhட் உதவ வந்திருக்கிறான். உணவுக் கஷ்டம் உள்ள குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் உணவுப் பொட்டலங்களும் உணவுகள் வழங்கும் திட்டங்களை முன்னெடுக்க வந்திருக்கிறது பெரிய செய்தியாகக் கதைக்கினம் ராஜி.

அதுவும் துன்பப்பட்டு வளர்ந்த பிள்ளையாக்கும் புனிதா.

சரியாச் சொன்னாய் ராஜி. ரஷ்ஃபோர்ட்டும் ஆதரவற்ற தாயோடு மட்டும் இருந்து வளர்ந்த பிள்ளையாம்;. அவனும் சின்னப் பையனாக இருந்தபோது வறுமையில் வாடியிருக்கிறான். சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறான். கைம்பெண்ணான அந்தத் தாயும் துன்பத்திற்கு மத்தியில் அவனை வளர்த்திருக்கிறார்.

அப்படியே புனிதா?

இப்ப அந்தப் பையன் என்னமாதிரி பெரிய விளையாட்டு வீரனாக வந்திட்டான் ராஜி. என்ர மகன் மாதிரித்தான் அவனுக்கு இருபத்திரண்டு வயதுதான்.

இப்போ கொரோனா காலத்தி;ன் கோடை விடுமுறை நாட்களில் வறுமையில் வாழும் பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச உணவு வவுச்சர்களை பெறுவதற்காகப் பிரச்சாரம் செய்திருக்கிறான்;. அப்படியான உதவிகள் செய்ய முடியாது என்று சொன்ன எங்கட பிரதமரையெல்லோ தலைகுனிய வைச்சிட்டான்.

அவன் ஒரு பொடியனாக இருந்து கொண்டு ஏழைகளுக்கு உதவ வந்தவுடன் இந்த அரசியல்வாதிகளுக்குப் பெரிய சவாலாகப் போயிட்டுது போல. பாத்தியே புனிதா? அந்தப் பிள்ளை தான் பட்ட கஷ்டத்தை உணர்ந்து தனது வருமானத்தை இப்படி ஒடுக்கப்பட்ட சனங்களுக்கு கொடுக்க முன்வந்திருக்கிறான். உண்மையாகப் புனிதா மனித குலத்தின் வயிற்றிற்கு உணவுபோடும் மார்கஸின் சிந்தனையைப் பார்க்க சரியான சந்தோஷமாகக் கிடக்கு. இந்தக் காலத்தில எங்கட பிள்ளைகளும் இப்படி நடந்தால் எவ்வளவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்?

கடைசியாக எங்கட பிரதமர் பொறிஸ் ஜொன்சனும் தினமும் நடக்கும் டவுனிங் தெருவின் மாநாட்டிலே மார்கஸ் ரஷ்ஃபோர்ட்டிற்கு வாழ்த்தும், நன்றியுமெல்லே சொல்லியிருக்கிறார் ராஜி.

அவர் அதைச் சொல்லாத்தானே வேண்டும். பார்த்தியே புனிதா! குழந்தைகளின் உணவு வறுமையை அதுகளின்ர பசியைச் சமாளிக்க இதைவிட வேற என்ன மிகச்சிறந்த சேவை கிடக்கு. எல்லாச் சமூகங்களுக்கும்; ஒரு அதிர்வையெல்லோ செய்து காட்டியிருக்கிறான். அந்தப் பிள்ளைக்கு புண்ணியம் கிடைக்கட்டும். எங்கட சில சனத்துக்கு ஆசை. தேவைக்கு மேலே ஆசைப்பட்டு சேர்க்குங்கள். கடைசியாக என்னத்தைக் காண்கிறது? மற்றவர்களுக்கும் குடுத்து வாழப் பழகவேண்டும். அதெங்க அதுகள்… லண்டனில் வைத்தியசாலையில் வேலை செய்த ஆட்களுக்கு வியாழக்கிழமைகளில மாலை எட்டு மணிக்கு கைதட்டி நன்றி சொல்லிச்சினம். நல்ல விசயம். அதுபோல இந்தப் பொடியன் ரஷ்ஃபோர்ட்டுக்கும் ஒரு நாளைக்கு இப்படி கைதட்டலாம்தானே!
ஓம் ராஜி. பிதமருக்கு ஒருக்கா போன் பண்ணிக் கதைச்சுப் பாப்போம்.

உனக்கு நான் ஏதும் சொன்னால் ஒரே பகிடியும் சிரிப்பும்தான் புனிதா. இண்டைக்கு ஒரு கதை கேள்விப்பட்டனான். தெரியுமே! இந்தக் கொரோனாவுக்கு தனிய சின்னக்கடை வச்சிருக்கிற முதலாளிமாருக்கு அரசாங்கம் ஒரு தொகைக் காசு கொடுத்து உதவினாங்களாம். சில முதலாளிமார் நியாயமாக சனத்துக்கு விற்றார்களாம். ஆனால் சில எங்கட முதலாளிமார் இந்த உயிர்போற நேரத்திலகூட கொள்ளை லாபம் வைத்து விற்றதோட அங்கு வேலை செய்யிறதுகளுக்கும் சம்பளத்தை சரியாகக் கொடுக்காமல் அதைத் தங்களுக்குள்ள அமுக்கிப் போட்டாங்களாம்.

பார்த்தியே எங்கட சனத்தின்ர விளையாட்டை. சீ.. இதுகள் என்ன மனிதரப்பா?

அந்தக்காசில் இலங்கையில தங்கட ஊரிலயெல்லே கட்டிடங்கள் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கினமாம் புனிதா.

எங்கட சனத்தை திருத்த ஏலாது ராஜி. கொரோனா அமைதியாக உலகத்தை மிகக்கொடுமையாக ஆட்டிப்படைத்தாலும் எமது ஆசைகளை மட்டும் எம்மால் காலத்தால் அழிக்கமுடியாது. பறவைகள்போல நாமும் வாழக்கற்றுக்கொண்டால் என்ன என்பதுபோல் எனக்குத் தோன்றுகின்றது ராஜி. எறும்புகள், தேனீக்கள், கறையான்கள் இவை என்ன சேமித்து சேமித்து கடைசியாக எல்லாவற்றையும் பறிகொடுக்கின்றனதானே!

சரியாகச் சொன்னாய் புனிதா! நாங்கள் உழைக்கிறதும் உலகம் சுத்துறதும்தான் வேலை.

அப்போ உங்களிட்ட கனக்க காசு இருக்குதுபோல ராஜி.

மனசுக்குள்ளதான் கனக்கக் காசு இருக்கு. சும்மா கதைக்குச் சொன்னனான். இந்தியாவிலுள்ள கோயில்களுக்கும், இலங்கை, ஐரோப்பா என்று சும்மா போய் பார்த்துட்டு வந்தனாங்கள். இந்த அற்புதமான உலகத்தை போய்ப்பார்க்கத்தானே வேண்டும்? இப்ப கொரோனா வந்ததும் நல்லதாகப்போச்சு வீட்டுக்குள்ள இருந்துகொண்டு ஷ}முக்குள்ளால உலகத்தைச் சுத்துறம். என்ன உலகத்திலுள்ளவர்களோட கதைத்துக்கொண்டிருக்கிறோம். அதுவும் மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு இப்போ ரஷ்ஃபோட் மாதிரி பெரிதாக இல்லாவிட்டாலும் சமைக்கிற சாப்பாட்டில் வசதியற்ற மற்றவர்ளுக்கும் கொடுக்கவேண்டும் போல இருக்கிறது புனிதா.

நல்ல யோசனை வந்துட்டுது உங்களுக்கு. சின்ன சின்ன உதவிகள் கூட சிறப்பான விடயம்; ராஜி.

ஓ! இயற்கை அழகானது! இயற்கை அதிர்ச்சி தருவது! எமது வாழ்க்கையும் அழகானதுதான். நெருக்கடிகளின் மத்தியிலும் அழகான உருவம்தான் வாழ்க்கை. பிரச்சனைகளை முறியடிப்போம்! வாழ்க்கையை வெற்றியாக முன்னெடுப்போம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *