கரிசனம் – ஒரு பக்க கதை

 

உமாவும் தாரணியும் பஸ்ஸை விட்டு இறங்கி தியேட்டரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது –

யாரோ ஒருவன் உமாவின் பின்புறமாக வந்து அவளது செயினை படக்கென்று அறுத்துக்கொண்டு ஓட…

‘ஐயோ செயின்…செயின்…அலறினாள் உமா. உதவி செய்ய ஓடி வந்தான் இளைஞன் ஒருவன்.

”இருங்க. ஒரு நிமிஷத்திலேயே அவனைப்பிடிச்சி அந்த செயினை மீட்டுட்டு வர்றேன்..”

வேணாங்க..

ஏன்?

”அவன் மோசமான ரவுடியா தெரியறான். கோபத்திலே அவன் உங்களை கத்தியாலே குத்தினாலும் குத்திடுவான்..”

”அதனால..”

”போனாப்போகட்டும், விடுங்க ..”

அவளுடைய பெருந்தன்மையை வியந்தபடி இளைஞன் செல்ல…

உன்னோடு ரெண்டு பவுன் செயின் போனாலும் பரவாயில்லே. அனாவசியமா ஒரு இளைஞன் காயப்படக்கூடாதுன்னு நினைக்கிறே பாரு ! உண்மையில் நீ ஒரு கிரேட் உமா’ என்றாள் தாரணி நெகிழ்ந்து

‘அடிப்போடி ! வெறும் நூறு ரூபா கவரிங் செயினுக்காக அந்த அப்பாவி இளைஞன் ரத்தம் சிந்தணுமா?’.

செல்லிவிட்டு உமா நிதானமாக நடந்தாள்.

- ஜெயவண்ணன் (நவம்பர் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
சேவல் கூவுகின்ற அதிகாலைப் பொழுது. மின் மோட்டாருக்கென அமைக்கப்பட்ட அந்த அறையினுள் இரவுப் பொழுதில் மறைந்து கொண்டிருந்த ஜேம்ஸ் மனதிற்குள் பெரும் கவலை ஏற்பட்டது. தூக்கமே வரல, சாப்புடுற சாப்பாடு கூட நிம்மதியா சாப்புட முடீல, இப்புடி தெனந் தெனம் அடுத்தவென் ஒழச்ச ...
மேலும் கதையை படிக்க...
அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான். அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது. அவனுக்கு அந்த சுவை புதிது...அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது...ஆனால் அது நியாயமான பசி ...
மேலும் கதையை படிக்க...
கி.பி. 2030 வியாஸின் இன்பமான பொழுதுகள், தன் ஏழு வயது மகள் சுஹாவிடம் மாலை நேரங்களில் விளையாடுவதுதான். ஒரு சிவில் எஞ்சினியரான வியாஸ் தன் அலுவலக டென்ஷன் முழுவதும் மறந்து அவளுடன் விளையடுவதும், கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், கிண்டல் செய்வதும், பார்ப்பவர்களை ...
மேலும் கதையை படிக்க...
மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா அவளை எச்சரித்தாள். படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன் படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக ஆனால் மாலினி நம்புவதாக ...
மேலும் கதையை படிக்க...
முதலாளி…ரெண்டு வருஷமா சம்பள உயர்வு கேட்டுட்டே இருக்கேன், அப்புறம் பார்ப்போம்னே சொல்லிட்டிருக்கீங்களே… ”இப்ப லாபம் கம்மியாயிருக்கு…செழிச்சி வரட்டும்.. கவனிப்போம்’’ பதில் சொல்லி குப்பனை அனுப்பினார் முதலாளி. மேனேஜருக்கு தாங்கவில்லை. ”முதலாளி…கம்பெனி லாபத்துலதானே ஓடுது. சம்பளத்தை கூட்டலாமே…” என்றார். ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவர், ‘’அந்த குப்பன் இருக்கானே…தீடீர்னு ...
மேலும் கதையை படிக்க...
உணர்ந்து விட்டாயா தேவனை?
நாளையும் ஓர் புது வரவு
காலக்கோடு
பார்க்காமலே – ஒரு பக்க கதை
சம்பளம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)