கம்பீரம் – ஒரு பக்க கதை

 

கம்பீரம் ததும்பும் உடல் மொழியோடு வாத்தியார் கனகசபை, அன்பழகனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அன்பழகன், கார்ப்பரேஷன் ஆபிஸில் உயர் அதிகாரி.

“அங்கே வர்றாரே! அந்தக் காலத்தில் எனக்கு பள்ளியில் கணக்கு வாத்தியார். கண்டிப்பானவர். ஏதாவது தப்பு பண்ணினா உருப்படாத பய மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று கண்டபடி திட்டுவார். வகுப்பிலேயே அதிக திட்டு வாங்கினது நானாகத்தான் இருப்பேன்’

அன்பழகன் தனது தலைமைக் கிளர்க் கந்தசாமியிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே வந்தமர்ந்தார் கனகசபை.

“தம்பி, நான் ரிட்டையர் ஆன வாத்தியார். ஒரு வீடு கட்டலாம்னு இருக்கேன். அதற்கான அப்ரூவ்டு சர்டிஃபிகேட் வேணும். எல்லார்க்கிட்டேயும் கையெழுத்து வாங்கிட்டேன். உங்க கிட்டதான் பாக்கி.’

“அதனால என்ன சார். உடனே போட்டுத் தர்றேன்.’

கையெழுத்து போட்டுக் கொடுத்தார் அன்பழகன்.

நன்றிப் பெருக்கோடு வெளியேறினார் வாத்தியார்.

“ஏங்க சார்… உங்க பழைய வாத்தியார்கிட்ட உங்களை ஞாபகப்படுத்தியிருக்கிலாமே’ என்றார் தலைமை கிளர்க்.

“அவர் ரொம்ப கம்பீரமானவர். எதற்கும் வளைந்து கொடுக்காதவர். இப்போது பழசை ஞாபகப்படுத்தினா அன்று அப்படி திட்டியவனிடம் போய் உதவி கேட்கிறோமே என்று அவரது மனம் புண்படுமில்லையா?’

அதிகாரி அன்பழகனின் வார்த்தை அவரை மேலும் உயர்த்தியது.

- செல்வராஜா (ஜூலை 2011)
 

தொடர்புடைய சிறுகதைகள்
“என்ன நான் கேட்டது நிஜம்தானா ? ...பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி. “என்ன கேட்டீங்களாக்கும் .? எதையும் கண்டுகொள்ளாமல் பாத்திரத்தைப் சிங்கில் துலக்கியபடி கேட்டாள் லட்சுமிபாட்டி.’’ “உங்கள் கணவர் இறந்துவிட்டாராம், நீங்க ஆஸ்பத்திரிக்கு போய் பிணத்தை கூட ...
மேலும் கதையை படிக்க...
ஏண்டா மச்சான் 4 மணி நேரம், 5 மணி நேரம்னு கரண்ட் கட் ஆறதால பெரிய தொல்லையா இருக்குடா …ச்சே! ஏண்டா இப்படி அலுத்துக்கறே? பின்ன என்னடா மாம்ஸ், புக்கு படிக்க முடில, டீ.வி பாரக்க முடியல, வேர்வைல மூழ்காது மெழுவர்த்திய கொளுத்தினு நிம்மதியா ...
மேலும் கதையை படிக்க...
வருடம் 2013 சென்னை : பருவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர். பருவா! ஆரம்பிக்கலாமா?” பருவா தலையசைத்தார். யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் ...
மேலும் கதையை படிக்க...
யோவ் வாயா வெளிய! மதியம் ஷிப்ட்டுக்கு பேருந்தை இயக்கும் வேலைக்கு செல்ல வீட்டினுள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓட்டுனர் கந்தசாமியும் அவர் மனைவியும் வெளியே யாரோ கூவி அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். போலீஸ்காரர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர். ஐயப்பன்ங்கறது யாருய்யா? கேட்ட தோரணையிலேயே பயந்துவிட்டிருந்த கந்தசாமி ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை "காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை" என்னும் இக் கதை Lord Lytton (லார்ட் லிட்டன்) ஆங்கிலத்தில் எழுதிய "Death and Sisyphus" (காலனும் சிசுபசும்) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. மிக்க இனிமை வாய்ந்த இக்கதையை நந்தம் தமிழுலகோர் ...
மேலும் கதையை படிக்க...
மன கண்ணாடி
நல்லது – ஒரு பக்க கதை
இளமை இதோ! இதோ!!
கடமை
காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)