கதையாசிரியர்

 

குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான், திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான், மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான்.

ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது, அதை கலைக்கும் விதமாக ஒரே சத்தம், அந்த சத்ததில் அவன் கற்பனை ஓட்டம் கலைந்ததைக் கண்டு, முகம் சுளித்து என்னவென்று கவனித்தான், அவன் வீட்டின் முன்னால் இருந்துதான் சத்தம் வந்துக் கொண்டிருந்தது. உடனே வெளியில் எட்டிப் பார்த்தான், அவன் அப்பா நாதனிடம், ஊர் ஆட்கள் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

நாதன் அவர்களிடம், “கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள், என்ன பிரச்சினை என்று சொன்னால்தானே தெரியும், எதுவும் சொல்லாமல் மல்லுக் கட்டினால் நான் என்ன செய்வது, யாரவது ஒருத்தர் என்ன விடயம் என்று சொல்லுங்கள்” என்றார்.

ஒருவர் பேசத் தொடங்கினார், “உன் மகனை எதுக்குய்யா, கதை எல்லாம் எழுதத் சொல்றே, அவன் கதை எழுதறேன் என்று எங்கள் உயிரை எடுக்கிறான், எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதைச் சீண்டிப் பார்க்க வேண்டாமென்று சொல்லு” என்றார்.

“என் மகன் கதை எழுதுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, அவனை கதை எழுதக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்றார்.

“எவன் கதையையாவது எழுதச் சொல், எங்க வீட்டு கதையை ஏன் எழுதறான்” என்றனர்.

“உங்கள் வீட்டு கதையா, என்ன சொல்றீங்க ஒன்றும் புரியவில்லையே” என்றார் நாதன்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த குறளரசன் அங்கு வந்தான், “அப்பா என்ன பிரச்சனை ஏன் எல்லாம் சத்தம் போடறாங்க” என்றான்.

“நீ அவங்க வீட்டு கதையை எல்லாம் எழுதறே என்று சொல்றாங்க, என்னடா எனக்கு ஒன்றும் புரியவில்லை”

“நான் கதை எழுதுவது நம் ஊர் சம்பந்தப்பட்ட புத்தகத்தில், அதை வரைமுறை செய்வதற்கு என்று சங்க உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், உங்களுக்கு என் கதையில் ஏதாவது பிரச்சினை என்றால், அதை அவர்களிடம் புகாராக தெரிவியுங்கள், நான் அங்கு வந்து அவர்களிடம் பதில் சொல்கிறேன், உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றான் குறளரசன்.

“நாதன் உன் பையன் பேசுவது சரியில்லை, முதலில் அவனை எழுதுவதை நிறுத்தச் சொல், இல்லே எங்களுடைய நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.

“அவன்தான் சொல்லிவிட்டான்ல முறைப்படி அங்கே போய் புகார் கொடுங்கள், அங்கு வந்து அவன் பதில் சொல்வான், உங்கள் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்” என்றார் நாதன்.

எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, சிலர் புகார் கொடுக்க தயங்கினார்கள், சிலர் கொடுத்தே ஆக வேண்டும் என்றார்கள், அவர்களுக்குள்ளே ஒரே குழப்பம் நடந்து கொண்டிருந்தது, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து புகார் கொடுப்பது என்று முடிவு பண்ணி புகாரும் கொடுத்தனர்.

புகார் கொடுக்கப்பட்டதும் உறுப்பினர்கள் குறளரசனை அழைத்தனர், அவனும் சென்று புகார் பற்றிய விபரங்களை கேட்டான். உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சொல்லச் சொன்னார்கள்.

ஒருவர் சொன்னார், “ஐயா இவன் சாதி பற்றி, பாலியல் வன்கொடுமைப் பற்றிக் கதை எழுதியிருக்கான் அது சரியில்லை, அதுவும் எங்கள் வீட்டு கதை எல்லாம் இவன் எழுதுகிறான் ஏன்?” என்றார்.

“சாதிப் பிரச்சினை, பாலியல் வன்கொடுமை எங்குதான் இல்லை அதைப் பற்றி கதை எழுதியதில், என்ன சரியில்லை உங்களுக்கு என்ன பிரச்சினை” என்றான் குறளரசன்.

“அது வந்து”, என்று அவர் இழுத்தார்………..

“என்ன இழுக்கறீங்க சொல்ல முடியவில்லையா……., நான் சொல்லட்டும்மா”, என்று உறுப்பினர்களைப் பார்த்து பேசினான், “ஐயா, இவர்கள் அனைவரும் ஊர் முனையில் உள்ள மரத்தடியில் தினமும் கூட்டம் போட்டு, நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுவது வழக்கம்”,

தினசரி நாளிதழில் சாதியால் நடந்த ஒரு கொலையைப் பற்றி பேசினார், கொலை செய்தவர்களை மனசாட்சியே இல்லாதவங்க என்றெல்லாம் திட்டினார், ஊருக்கு உபதேசம் செய்கிறார், ஆனால் இவர் வீட்டுக்குள்ளும் அதே சாதி பிரச்சினை இருக்கு, இவர் மகன் வேறு சாதியில் திருமணம் முடித்திருக்கிறார், அவரின் மருமகள் வேறு சாதி என்பதால், அவளை இவர் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை, எங்கோ நடந்த சம்பவத்திற்கு மனசாட்சி இல்லாதவர் என்று திட்டுபவர், அவர் வீட்டுக்குள் நடப்பதற்கு, அவரின் மனசாட்சி எங்கே சென்றது.

“அதோ நிற்கிறாரே அவர் எங்கோ நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிச் சொன்னார், இந்த மாதிரி ஆட்களையெல்லாம் சுட்டுக் கொல்லனும் என்றார், ஆனால் இவர் மனைவியின் தங்கை, தன் கொழுந்தியாளுக்கு வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் கொடுமை செய்தது மட்டுமில்லாமல் பலாத்காரம் செய்ய முயற்சி பண்ணியிருக்கார், சரியான நேரத்தில் இவரின் மனவி வந்ததால் தன் தங்கையை காப்பாற்றினார், இவரை எங்கே நிற்க வைத்து சுடுவது” என்றான்.

“அடுத்து இவர் தாத்தா, வயது அறுபத்தி ஐந்து, தனது வயது பத்து பேத்தி, அவள் மாற்றுத் திறனாளி என்று தெரிந்தும், தன் சபலப் புத்தியால் தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், தன் பேத்தி என்று தெரிந்தும் அந்த சிறு பெண்ணை சின்ன பின்னாமாக்க துணிந்திருக்கிறார், அதை அந்த குழந்தை வெளியில் சொன்னதால் அவளும் தப்பித்தாள், இவரை என்ன செய்வது, இது மட்டுமில்லை இங்கு நிற்கும் ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு கதை இருக்கிறது, நான் பேனாவை எடுத்தால் எழுதுவேன், நிறுத்த மாட்டேன், ஊர் புத்தகத்தில் இல்லையென்றால் என்ன, நிறைய புத்தகங்கள் இருக்கிறது அனைத்திலும் எழுதுவேன்” என்றான் குறளரசன்.

“இவன் சொல்வது அனைத்தும் பொய் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை” என்றனர்.

“சரி நான் சொன்னது பொய்யாகவே இருக்கட்டும், தன் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையென்று, அவர்களை சொல்லச் சொல்லுங்கள்” என்றான்.

உறுப்பினர் கேட்டார், “உங்கள் வீடுகளில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?,என்றார்.

“ஐயா, இவன் பொய் சொல்கிறான், இவனை நம்பாதீங்க, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை” என்றனர்.

“சரி குறளரசன் பொய் சொல்கிறான் என்றாலும், அப்படி ஒரு சம்பவம் உங்கள் வீடுகளில் நடக்கவில்லை என்றாலும், எங்கோ நடந்த சம்பவத்தைப் பற்றி குறளரசன் எழுதிய கதைக்கு, நீங்கள் ஏன் புகார் கொடுத்தீர்கள்?, உங்கள் புகாரை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இந்த சம்பவங்கள் அனைத்தும் எங்கள் வீடுகளில் நடந்ததுதான், அதனால்தான் நாங்கள் குறளரசன் மீது புகார் கொடுக்கிறோம் என்று எழுதித் தரவேண்டும்” என்றார்.

“ஐயா, எங்கள் வீட்டில் கதையை எல்லாம் எழுதி எங்களை அசிங்கப்படுத்திட்டான், அதைக் கேட்கச் சொன்னால், நீங்கள் என்ன பேசறீங்க”

“குறளரசன் இதுவரை எங்களிடம் அது உங்கள் வீட்டு கதை என்று சொல்லவே இல்லை, நாங்கள் கதையை படித்த போது கூட எங்கோ நடந்தது என்றுதான் நினைத்திருந்தோம், நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் நடந்த கதை என்று குறளரசன் மீது கொடுத்த புகாரினால் தான் எங்களுக்கும் தெரிந்தது, நீங்கள் கதையை மட்டும் படித்துவிட்டு அமைதியாக இருந்திருந்தால், எங்களுக்கு மட்டுமில்லை யாருக்கும் தெரிந்து இருக்காது, தவளை தன் வாயால் கெடும் என்பது போலிருக்கு உங்கள் கதை” என்று சிரித்தார்.

மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ளவும் முடியாமல் புகாரை வாபஸ் வாங்கிச் சென்றனர்.

“குறளரசா என்னடா நடக்கு எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்றார் நாதன்.

“அப்பா, இவர்கள் அனைவரும் வேலைக்கு எங்கு போகாமல் ஊர் முனையில் அமர்ந்து கூட்டம் போட்டு நாட்டு நடப்பை பேசுகிறோமென்று, நேரத்தை போக்குகின்றனர், வீட்டு பொம்பளைகள் வேலைக்குச் சென்று வந்தால், வீட்டில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கல் அதிகம், கேட்டாலும் நாங்கள் ஆம்பிள்ளைகள் அப்படிதான் இருப்போமென்று பேசியிருக்கீறார்கள், அதனால் இவர்கள் வீட்டு பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஊர் சங்க உறுப்பினர்களும் நானும் சேர்ந்து மறைமுகமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்றான்.

மறுநாள் ஊர்முனை மரத்தடி அமைதியாக காணப்பட்டது. அந்த ஊர் பெண்களின் வாழ்வும் அமைதியாக செல்லுமென்று நினைத்துக் கொண்டார் நாதன். 

தொடர்புடைய சிறுகதைகள்
வர்ஷா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அது அவளுக்கே தெரியாது ஏனெனில் சிறு வயதிலிருந்தே அவளின் நிறத்தைக் கொண்டு அவளுக்குள்ளேயே நாம் அழகில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டாள். அதனால் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதங்கள் ஆகியும் ...
மேலும் கதையை படிக்க...
அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது, அன்பரசி ஆறு மாதம் கர்பிணியாக வேறு இருந்தாள், தனக்கு சொந்தமாக கடை இருக்கிறது, என் பெயரில் சொத்துக்கள் நிறைய இருக்கிறதென்று சொல்லி அன்பரசியை ...
மேலும் கதையை படிக்க...
சிந்து, “என்னங்க மின் கட்டணம் செலுத்த இன்றுதான் கடைசி நாள் செலுத்த மறந்துடாதீங்க, ஒரு வாரமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன், மறந்துட்டேன் என்ற பதிலையே திரும்ப திரும்ப சொல்றீங்க, இன்றும் செலுத்தவில்லை என்றால் அதுக்கு வேற தண்டம் அழனும்” “சரி நீ எதுக்கு தொண ...
மேலும் கதையை படிக்க...
கடம்பன், “கோயிலுக்குத் தங்கைகள் இருவரையும் கூட்டிச் செல்கிறேன்” என்று தன் தாய் வள்ளியிடம் கூறினான். “சரி பத்திரமாக கூட்டிட்டு போ சின்ன பிள்ளைகள் கவனமா இரு, நீ வர எவ்வளவு நேரமாகும்” என்றாள் வள்ளி. “அம்மா போக ஒரு மணி நேரம், வர ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர். “இருடா தோசைதானே கல்லு அடுப்பில் வைத்துவிட்டேன், மூன்று தோசைதான் சாப்பிடுவே அதுக்கு ஏன் இப்படி பறக்கறே” “சரிம்மா வழவழன்னு பேசாதீங்கம்மா, தோசையை கொடுங்க, ...
மேலும் கதையை படிக்க...
அழகு
ஆடம்பரம்
கணவன்
காணவில்லை!
பிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)