கடமை

 

அலுவலக நாற்காலியில் அமர்ந்து கோப்புகளை பிரித்து கையில் பேனா பிடித்தும் சந்தரத்துக்கு வேலையில் மனம் பதியவில்லை.

நாலு கொத்து, எட்டு சித்தாள், தவிர இரண்டு ஆள்… கூலி இன்றைக்கு ஐயாயிரத்தைத் தாண்டும். ! – வீட்டு வேலையிலேயே மனம் சுழன்றது.

பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஆட்களை விரட்டி விரட்டி வேலை வாங்கியதில் வீடு தரை மட்டத்தைத் தாண்டி மேலே வந்திருப்பதால் ரொம்ப திருப்தி.

விடுப்பை 15 நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில் சில சிக்கல்கள். அதனால். .. இன்று ஒரு நாள் மட்டும் அலுவலகம் வந்து விட்டு நாளை முதல் மீண்டுமொரு 15 நாட்கள் விடுப்பு எடுக்கத் திட்டம். அதைக் கருத்தில் கொண்டு தான் இன்றைக்கு வேலைக்கு வந்தான். வீட்டு வேலையிலேயே மனம் லயிப்பு.

வேலை நடக்கும் இடத்தில் அப்பாவைக் காவலுக்கு வைத்து விட்டு வந்தும் திருப்தி இல்லை. மனம் அல்லாடல். !

அப்பா வயதானவர். வெயிலில் நின்று ஆட்களை விரட்டி வேலை வாங்க முடியாது. கண், காது வேறு கொஞ்சம் மட்டு. தூரத்தில் ஆட்கள் இருப்பதும் தெரியாது. அவர்கள் பேசுவதும் புரியாது.

இதையும் மீறி ஆட்களை விரட்டி வேலை வாங்கினால். ..அவர்களிடம் அசைவுகள் இருக்குமேத்தவிர வேலைகள் நடக்காது.

கல் எடுத்து சுமக்கும் இடத்தில் சும்மா வெட்டிக்கதைகள் பேசிக்கொண்டு நாலைந்து பேர் நிற்பார்கள். கவனிக்க ஆளில்லை என்பதால் வேலை மெதுவாகத்தான் நடக்கும்.

” சார் ! ” குரல் கேட்டு நிமிர்ந்தான்.

எதிரில் கடைநிலை ஊழியன் கதிர்.

” என்ன கதிர். .? ”

” மேனேஜர் ஐயா உங்களை கூப்பிடுறாங்க. ”

கோப்பில் அடையாளத்துக்குப் பென்சிலை வைத்துவிட்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தான்.

” வணக்கம் சார். ” முதல் மரியாதை சொன்னான்.

” உட்காருங்க. ..” எதிர் நாற்காலியைக் காட்டிய ஏகாம்பரம் ரொம்ப கண்டிப்பானவர், கண்ணியமானவர்.

அமர்ந்தான்.

” என்ன கதிர். நான் கொடுத்த வேலையை முச்சுட்டீங்களா…? ” கேட்டு ஆளை ஏறிட்டார்.

கோப்புகளைப் பிரித்ததோடு சரி. இன்னும் தொடவில்லை. மனசு வீட்டு வேளையிலேயே இருப்பதால் அதைப்பற்றிய சிந்தனை இல்லை.!

” வந்து சார்…. ” சுந்தரம் இழுத்தான்.

” அரை மணி நேரத்துல முடிக்க வேண்டிய வேலை .இன்னும் ஏன் முடியல. .? ”

‘ என்ன சொல்வது…? ‘ மௌனமாய் இருந்தான்.

” சும்மா சொல்லுங்க. .? ”

” வீட்டு வேலை நடந்துக் கிட்டிருக்கு சார். மேஸ்திரி கிடையாது. நான்தான் பார்த்துப் பார்த்து கட்டுறேன். பதினைந்து நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து விடுப்பு எடுக்க முடியாத்ததுனால இன்னைக்கு வேலையில சேர்ந்துட்டு நாளையிலேர்ந்து விடுப்பு எடுக்கலாம்ன்னு வந்தேன் சார். ”

” அதனால நாம இல்லைன்னா ஆளுங்க வேலை பார்க்க மாட்டாங்க. பேசிக்கிட்டே நேரத்தை ஓட்டுவாங்க. அந்த எண்ணம்தானே. .? ”

” ஆமாம் சார். .! ”

” ஒரு கொத்து, சித்து சம்பளம் எவ்வளவு. .? ”

” அறநூறு, நாநூறு … ஆயிரம் சார். ”

” நாம கொடுக்கிற கூலிக்கு வேலை சுறுசுறுப்பாய் நடக்கணும்ன்னு எதிர்பார்க்கிறதுல தப்பொண்ணும் இல்ல. ..”

” அ. . ஆமாம் சார். ! ”

” இங்கே உங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு. .? ”

” ஆயிரத்து ஐநூறு ! ”

”உங்க சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது… கொத்து சித்தாள் மூணுல ஒரு பங்கு. சரியா. .? ”

” ச. .. சரி சார். ”

” அந்த சம்பளத்துக்கே அவர்கள் முதுகொடிய வேலை பார்க்கணும்ன்னு எதிர்பார்க்கிறபோது. .. நாம வாங்கற சம்பளத்துக்கு நாம் எவ்வளவு உழைக்கனும். ?.! ”

” சார் ! ” பிடரியில் அடிபட்டவனாக அலறினான்.

”சொந்த வேலை. மன உளச்சல் எல்லாம் எல்லோருக்கும் இருக்கு. அதுக்காக அதையே நினைச்சுக்கிட்டு நம்ம கடமையிலிருந்து தவறுவது நாம வாங்கற சம்பளத்துக்கு செய்யிற மிகப்பெரியது துரோகம். ! யோசிச்சுப் பாருங்க. ” முடித்தார்.

சுந்தரத்துக்குள் தன் தவறு சுருக்கென்று குத்தியது.

” மன்னிச்சுக்கோங்க சார். இனி இந்த தவறு நடக்காம பார்த்துக்கிறேன். நீங்க கொடுத்த வேலையை உடனே முடிச்சு வர்றேன் . ” சொல்லி சுறுசுறுப்பாக எழுந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
'' ஜோசியம். .. ஜோசியம். ..! '' தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா இருக்க முடியவில்லை. உடலும் உள்ளமும் சேர்ந்து துடித்தது. உடனே வீட்டை விட்டு வெளியே வந்தாள். கையில் மந்திரக்கோல் மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஜோசியக்காரி ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவிற்கு நெஞ்சு குழியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. இன்றோ... நாளையோ. .. எப்போது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஊசலாட்டம். ஆனால்... கண்டிப்பாய் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது என்பது நிச்சயம்.! வந்திருந்த சுற்றம், நட்புக்கெல்லாம் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறதே... கவலை.! டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று ...
மேலும் கதையை படிக்க...
இரவு பத்து மணி. கட்டிலுக்கு வந்த மகேசுக்குள் மகிழ்ச்சித் துள்ளல். காரணம் இன்றைக்குத் தாம்பத்திய நாள். கணவன் மனைவி மாதச் சம்பளக்காரர்கள், அலுவலக உழைப்பாளிகள் என்றாலே தாம்பத்தியத்தில்கூட கட்டுப்பாடு என்பது காலத்தின் கோலம். என்னதான் ஆண் பெண்ணுக்கு உதவி ஒத்தாசை அனுசரணையாக இருந்தாலும் காலை...சமையல் ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! " பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான் பரமசிவம். வயசு நாற்பது. சாய்மான நாற்காலியில் சவகாசமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்தவர் "ஏன்டா ?" - ரொம்ப உரிமையாய்க் கேட்டார். தன் தகுதிக்குக் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்தில் நுழைந்த திவ்யா கண்களில் இருக்கையில் அபிஷேக்கைக் கண்டதைவிட ஆனந்தைக் கண்டதில் இவளுக்கு ஏக கடுப்பு. இதில் ஆளைப் பார்த்ததும் வேறு அவன் முகத்தில் 'ஈ' என்று இளிப்பு. 'வரட்டும் ! இன்னைக்கு எதிர்க்க உட்கார்ந்து ஆள் ஏடா கூடமாய்ப் பேச வாய்ப்பே ...
மேலும் கதையை படிக்க...
தெளிவு…!
அப்பா..!
ஞாயிறு…!
காவல் நிலையம்…!
அவன்..! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)