கடன்காரர் – ஒரு பக்க கதை

 

”ஏன்’யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் வாங்கியது எப்போது?”

“ஒரு மாதத்துக்கு முன்னே”.

“எப்போது தருவதாகச் சொன்னேன்?”

“இருபது நாளில்”.

“கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”

“ஆமாம்”.

”பின்னே ஏன்’யா வந்து கேட்கவில்லை?”

“நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.

“நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து நான் அலைய வேண்டுமா?”

“மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள் என்று நினைத்தேன்”.

”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”

“உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?”

“இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா? இருநூறு வாங்கின நான் கேவலமானவன் என்று குத்திக் காட்டுகிறாயா?”

“ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி எறிந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.”

“என்னது? எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா. ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்று ஒளவையார் சொன்னதைப் படித்ததில்லையா?”

“நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக் கொள்வேன்”.

“எப்போது?”

“நாளைக் காலையிலே”.

“கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.”

“கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.”

“வார்த்தை தவற மாட்டாயே?”

“மாட்டேன்.”

“ஜாக்கிரதை! காத்திருப்பேன்!”

- சொ.ஞானசம்பந்தன் (ஓகஸ்ட் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
வெளி உலகில் தன்னை அதிகம் வெளிச்சத்துக்கு கொண்டு வராமலும்,தன்னை நம்பாமலும் பிரிந்து சென்று விட்ட தன் மகனை நினைத்து பெரிதும் கலங்கிக்கொண்டிருந்த தனவந்தரான சூரிய நாராயணன் தற்போது வந்த தொலை பேசி அழைப்பால் இறுதலை கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருக்கிறார். சூரிய நாராயணன் அந்த ...
மேலும் கதையை படிக்க...
அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ள மாட்டாராம். அவரைப் பார்க்க யார் போனாலும் அவர்களை மரியாதையுடன் நடத்துவாராம். தன் வீட்டில் ஊஞ்சலில் அமர்ந்தபடி அதை அடிக்கடி வலது காலால் உந்தி உந்தி ஆட்டி விட்டுக் கொள்வாராம். எப்போதும் அவர் ...
மேலும் கதையை படிக்க...
ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. ...
மேலும் கதையை படிக்க...
எவர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் ...
மேலும் கதையை படிக்க...
தன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
நேர் காணல்
மெளன குருவும் விலை மாதுவும்
நுகம்
எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்
அத்துவான வெளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)