ஓடிச்செல்லும் நதிகள்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,580 
 

“”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?”
வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று, தியாகு புன்னகையுடன் கவனித்தான். ஆனால், அலைபேசி <உடனே அழைத்தது. லேப்-டாப்பிலிருந்து தலையைத் தூக்கி மொபைலை பார்த்தான். சிவராமனின் எண் அது, அவன் கம்பெனியின் சூப்பர்வைசர்.
ஓடிச்செல்லும் நதிகள்!“”யெஸ் சிவராமன்… சொல்லுங்க…” என்றான்.
“”குட்மார்னிங் சார்… அது வந்து…” என்று இழுத்தார். குரல் தயக்கமும், குழப்பமும் சேர்ந்து தடுமாறியது.
“”என்ன சொல்லுங்க…”
“”ராத்திரி சரியா தூக்கம் இல்ல சார்… கொஞ்சம் காலாற நடக்கலாம்ன்னு, மெயின் ரோடுக்கு வந்தேன். கால் தானா நம்ம ஆபீஸ் பக்கம் வந்துச்சு… அப்பத்தான் சார் பாத்தேன். மெயின் டோர் பூட்டவே இல்ல சார்… திக்குன்னு ஆய்டுச்சு. வாச்மேன் வேற ஒரு வாரம் லீவாச்சே… வீட்டுக்கு ஓடிப்போய் எங்க வீட்டு பூட்டை எடுத்திட்டு வந்து, பூட்டிட்டேன் சார்… ராத்திரி உங்களை எழுப்பி தொந்தரவு தர வேண்டாம்ன்னுதான் போன் செய்யல சார்,” என்றார் படபடப்பாக.
இப்போது அவனுக்கு திக்கென்றது.
நேற்று இரவு, நிறைய வேலைகள் இருந்தன. ஊழியர்களை அனுப்பி விட்டு, அவன் ஆடிட்டருடன் உட்கார வேண்டியிருந்தது. முதலாளி என்ற பந்தா எதுவும் பார்க்காமல், அவனே காரை எடுத்து ஓடி, பிட்சா, பர்கர், பராத்தா என்று வாங்கி வந்து, அவருக்கு ஊட்டி விடாத குறைதான். ஒரு வழியாக, அந்த மிஸ்ராவை சந்தோஷ மழையில் குளிப்பாட்டி, ஆடிட் ரிபோர்ட்டை வாங்கி விட்டான். அந்த மகிழ்ச்சியில் பரபரப்பாக கிளம்பிய போது, பூட்ட மறந்திருக்கிறான். “அய்யோ… எவ்வளவு பொறுப்பின்மை…’
“”என்ன சார்… தப்புங்களா சார்… ராத்திரி@ய உங்களுக்கு போன் பண்ணியிருக்கணுமா சார்?” கவலையுடன் கேட்டார் சிவராமன்.
“”நோ… நோ… எவ்வளவு பெரிய விஷயம் சார் நீங்க செய்தது? ஆபீஸ் கதவுதானேன்னு அலட்சியமா இருக்காம… அந்த ராத்திரியிலயும் உங்க வீட்டு பூட்டை @பாட்டு பூட்டியிருக் கீங்களே…. உண்மையிலேயே, நீங்க பெரிய மனசு கொண்டவர் சார்… தேங்க்ஸ் அ லாட் சார்,” என்றான் மனப்பூர்வமாக.
“”அய்யோ… முதலாளி இப்படி பேசலாமா? நான் எல்லாம் சின்ன ஆள் சார்… நாப்பது வயசு வரைக்கும், ஆறு கம்பெனிகள்ல குப்பை கொட்டிட்டு, இப்பதான் சார் உங்கள மாதிரி நல்ல ஓனர்கிட்ட வந்திருக்கேன். நன்றி சார்… வெச்சுடறேன் சார்.”
“”ஓகே பை!”
இன்னும் மனதில் படபடப்பு இருந்தது.
“இப்போது நிற்கிற இடம், எவ்வளவு தடைகள், எவ்வளவு வளைவுகள், எவ்வளவு சவால்களைத் தாண்டி வந்த இடம்? இன்னும், இன்னும் பொறுப்பாக, இன்னும் இன்னும் கடமை சார்ந்ததாக, இன்னும் இன்னும் ஒழுங்கு நிறைந்ததாக செழித்துக் கொண்டு போவதுதானே, அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடிப்படையாக இருக்க முடியும்? இப்படி அலட்சியமாக இருப்பது, எந்த விதத்திலும் சரியானதில்லையே…’ மனம் கனத்தது.
“”ராமாயணத்துல எனக்குப் பிடிச்சது, ராமன் என்ற ராஜா, குகன் என்ற படகோட்டியை, தன் சகோதரனா ஏற்றுக் கொண்டானே… அந்த இடம்தான்,” என்று, வினோவுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பா, கமகமவென்று அவனுக்காகவே, கத்திரிக்காய் ரசவாங்கி செய்து கொண்டிருந்த ரம்யா, வெள்ளை அரளிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த அம்மா என, யாரிடமும் ஒரு வார்த்தையும் பேச முடியாத, கனத்த இதயத்துடன் அவன் கிளம்பினான்.
“”ஒரு நிமிஷம் சார்… உள்ளே வரலாமா?” என்று, சாரதாவின் மெல்லிய குரல் கேட்டது.
“”வாங்க மேடம்…” என்று நிமிர்ந்தான்.
“”இன்னிக்கு வியாழக்கிழமை… ஆபீஸ் பூரா, வேலம்மாவை வெச்சுக்கிட்டு கிளீன் செய்யறது என் வேலை… வந்து சார்…” என்று தயக்கத்துடன் நிறுத்தினாள்.
“”சொல்லுங்க சாரதா…”
“”பின் பக்கம், மாடிப்படிக்கு அடியில கறுப்பு நாய், குட்டி போட்டிருக்கு சார்… மூணு குட்டி, ரொம்ப அழகா இருக்கு. பீப்பிள் பார் அனிமல்ஸ்க்கு போன் செய்து சொல்லிட்டேன் சார்… “ரெண்டு நாள்ல வரோம்’ன்னு சொல்லியிருக்காங்க சார், அதுவரைக்கும் அதுங்க, அங்கேயே இருக்கட்டும் சார்… வித் யுவர் பெர்மிஷன் சார்…” என்றாள் ஆர்வமும் இரக்கமுமாக.
“”அதுக்கென்ன சாரதா மேடம்… தாராளமா இருக்கட்டும். பை த வே… போன மாசம், சர்வீஸ் டாக்ஸ் அண்ட் வேட் ரெமிட் செய்த டீடெய்ல்ஸ் வேணும்.”
“”தேங்க் யூ சார்… அது, பிளஸ் டி.டி.எஸ்., அனுப்பின டீடெய்ல்ஸ் எல்லாமே, அந்த பச்சை கலர் பைல்ல இருக்கு சார்… உங்க டேபிள்ல,” அப்போது தான் சரியாகப் பார்த்தான்; இருந்தது.
“”குட்… குட் ஜாப்,” என்றான் முறுவலுடன்.
“”தாங்க் யூ அகைய்ன்,” அவளும் புன்னகையுடன் வெளியேறினாள்.
மதிய உணவு இடைவேளையின் போதுதான், மனம் கொஞ்சம் சமாதானத்துக்கு வந்திருந்தது. காரிலிருந்து, காரியரை எடுத்து வரச் சொல்வதற்காக, வடிவேலை அழைக்க நினைத்த போது, <அவனே உள்ளே வந்தான்.
“”சார்… யாரோ சுகுமார்ன்னு வந்திருக்கார் சார்… உங்க கூட படிச்சவராம்,” என்றான்.
“”சுகுமாரா… வரச் சொல்லு, வரச் சொல்லு…”
“”சரி சார்…”
சுகுமார், நல்ல தோழன். இயல், இசை என்று, கலக்கலாக இருப்பான். அறுபது மெக்கானிகல் இன்ஜினியரிங் மாணவர்களில், அவனுக்கு தனியிடம் உண்டு.
“”தியாகு… பார்த்தியா, உன்னை தேடி கண்டு பிடிச்சுட்டேன்,” என்று “ஹ…ஹா…’ சிரிப்புடன் சுகுமார் <உள்ளே வந்தபோது, இவன் எழுந்து, அவனை தழுவிக் கொண்டான்.
“”உன்னால் முடியாதது என்னப்பா இருக்கு?” என்று, இவனும் சிரித்தான்.
பழைய கதைகளின் பேச்சிலும், நினைவிலும், இருபது நிமிடங்கள் ஓடின.
பிறகு சுகுமார் கேட்டான்…
“”இந்த அளவுக்கு தனியா கம்பெனி ஆரம்பிச்சு, கியர் பாக்ஸ் டிரேடிங்ல, நீ வளர்ந்துகிட்டு வர்றது அருமைதான் தியாகு. ஆனா, வயலுக்கு நல்ல நெல், பாசனம், எரு, காவல் இதெல்லாம் மட்டும் போதாது. களை எடுக்கணும், அதுவும் முக்கியம்.”
“”என்னப்பா, திடீர்ன்னு தத்துவமா பொழியுற… சொல்லு எதைப்பத்தி பேச நினைக்கிற?” தோழனின் கை பற்றினான் தியாகு.
“”உன் ஸ்டாப், வெளியில இருக்கும்போது கவனிச்சேன்; அதிர்ந்து போய்டேன்பா… என்னப்பா இப்படி கிரிமினல்கள், போக்கிரிகள்ன்னு வேலைக்கு வச்சிருக்கே?” என்று சுகுமார் படபடத்தபோது, அவன் திகைத்தான்.
“”என்னப்பா சொல்றே?”
“”ஆமாம் தியாகு…ரெண்டு பேர், ஒரு ஆண், ஒரு பெண்.”
“”அவங்களுக்கு என்ன?”
“”சிவராமன்… அவனை நான் பார்த்திருக்கேன்… எங்க தெரியுமா? வேலு<õர் ஜெயில்ல, குடியரசு நாள் அன்னிக்கு, சிறையில ஒரு நாடகம் போட்டோம்… அதுக்கு இவந்தான் தலைமைக் கைதியா இருந்து ஏற்பாடு செஞ்சது. அடுத்தது, அந்த சாரதா, என் அக்கா, கலை தெரியுமில்ல <உனக்கு, அவளோட கம்ப்யூட்டர் படிச்ச சாரதா… ஒரு நாள் அவங்க வீடு இருந்த தெருவே அமர்க்களப்பட்டது. ஏன் தெரியுமா? சாரதா பாலியல் தொழிலாளியா இருந்திருக்கா… மகளிர் போலீஸ் காவல், பைன், போலீஸ் கேஸ்ன்னு, குடும்பமே நாறிப்போச்சு.”
தியாகு திகைத்தான், புன்னகை மறைந்து, முகம் இருண்டது.
“”ஸ்டன்னாய்ட்டேன் தியாகு… வேற யாராவதுன்னா பேசாம, “ஹாய்… பாய்…’ன்னு போய்கிட்டே இருந்திருப்பேன். தியாகு நல்லவன் என்கிறதாலதான், உன்கிட்ட உடனே சொல்லிட்டேன். வளர்ச்சிக்கு நாம தான் பாடுபடணும். ஆனா, அழிக்கறதுக்கு ஆயிரம் பேர், கூப்பிடாமலே ஓடி வருவர். டேக் கேர் தியாகு. வர்றேன்.”
சுகுமார் போய் விட்டான். அவன் உள்ளத்தில், சைத்தான்களை உலவ விட்டு விட்டு.
அடுத்த இரண்டு நாட்களில், உண்மைகள் உறுதியாகி விட்டன. யாரோ ஒருத்தனுக்கு கியாரண்டி கையெழுத்து போட்டு, சிவராமன் ஜெயிலுக்குப் போனதும், பாலியல் தொழில் செய்து, சாரதா சிறைக்குப் போனதும் அப்பட்டமான நிஜங்கள் என்று, நிலைப்படுத்தப்பட்டு விட்டன.
அவன் தடுமாறிப் போனான்.
“அய்யோ… ஏன் தெரிந்தன, இந்த கசப்பு உண்மைகள்…’ என்று கலங்கினான்.
“சுகுமார் எதற்காக வந்தான் தேடிக்கொண்டு…’ என்று தவித்தான். “பழையபடி அவர்களிடம் இயல்பாக இருக்க முடியுமா? முதலில் வேலையை தொடர அனுமதிக்கலாமா… சட்ட விரோதம், சமூக விரோதம் என்பதெல்லாம், மனித தர்மத்திற்கு வேட்டு வைப்பவை அல்லவா… தெரிந்தே குற்றவாரிகளுக்கு இடமளிக்கலாமா, அய்யோ…’
உணர்வுகளில், சொக்கப்பனைகள் பற்றிக் கொண்டன.
ரம்யா வந்து அருகில் நின்றாள்.
“”என் புடவையை சரியா கவனிச்சீங்களா… பல்லூல பாருங்க ஒரு கொத்து ரோஜா… நானே பத்திக் பிரின்ட் போட்டது,” என்றாள் கிறக்கமாக.
“”ஒரு காபி கொடு முதல்ல… நா<லு நாளா தலைவலி,” என்றான் பட்டென்று.
முகம் சுருங்க அவள் நகர்ந்தாள்.
எழுந்தான்; அரசமரக்காற்று வேண்டும் போலிருந்தது. தோட்டம் நோக்கி நடக்கையில், அப்பாவும், வினோவும் பேசிக் கொண்டிருப்பது கேட்க, அவன் நின்றான். வினோ கேட்டாள், “”நீ பெரியவர் தானே… ஆனா, நீ செய்யறதெல்லாம் தப்பு தாத்தா… தெரியுமா <உ<னக்கு?”
அப்பா சிரித்தார்.
“”என்னடா கண்ணு… சொல்லு, திருத்திக்கறேன்,” என்று வினோவிடம் கைகட்டி நின்றார்.
“”ராமாயணம்ன்னு சொல்றே… திருப்புகழ், திருவாசகம்ன்னு சொல்றே, எப்ப பார்த்தாலும் படிக்கிறே, ஆனா, மிஸ் சொன்னாங்க, வால்மீகி கொள்ளைக்காரராம்… அருணகிரிநாதர் ஒழுக்கமில்லாதவராம்… அப்படிப்பட்டவங்க எழுதினதையா தாத்தா நீ படிக்கிற… மோசம் தாத்தா.”
அப்பா பலமாக சிரித்தார்.
“”பலே… பலே…” என்று பேத்தியைத் தூக்கிக் கொண்டார்.
பிறகு கனிவான குரலில் சொன்னார்…
“”நீ கேட்டதெல்லாம் நிஜம் தாண்டா ராஜாத்தி… ஆனா, அவர்கள் அந்த மாதிரி தப்பெல்லாம் செய்து, அடிப்பட்டு திருந்தி, புது மனிதர்களா ஆன பிறகு எழுதினது தான் ராமாயணமும், திருப்புகழும். இதுல இருக்கிற நல்லவைகள்தான் வாழ்க்கைக்கு தேவை. இப்ப இருக்கிற நல்லதை பாராட்டி, பயன்பாட்டுக்கு எடுத்துக்கணுமே தவிர, பழைய வாழ்க்கையை ஆராய்ஞ்சு, குழம்பறது முட்டாள்தனம்டா வினோ… இன்னும் சொல்லப் போனா, தப்பே செய்யாம இருக்கிறவனை விட, தப்பு செய்து, திருந்தின மனிதன் இன்னும் மேம்பட்டவன்.”
அப்பா சொல்லிக்கொண்டே போனது, தனக்குத்தானோ, என்று நினைத்தான் தியாகு. மனது நிதானமாக தெளிவுக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *