ஒற்றை விளக்கு

 

போட்ட கையெழுத்தை விட அது போடப்பட்டதருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப் போகிறது.

சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது காலை மணி 11ஐ எட்டி த்தொட போகிற நேரம். எட்டித்தொட்டு தோளில் கைபோட்டு உரசி மகிழ்ந்து அடுத்தநேரம்11ன்னே என கறாராக அறிவிக்கப் போகிற வேளை. கணிணியின் முன்னமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டும் ஒரு மேட்டரை டைசெய்தவாறுமாய் அம்ர்ந்திருக் கிறா ன். ஹாலின் ஜன்னலோரமாக இருந்த கணிணியின் மீது வெயி லின் வெளிச்சம் பட்டும் அது சுமந்திருந்த மரஇலைகள்,மரத்தின் உரு, கம்யூட்டரின் நிழல் ஆகியவைளை மொத்தம் கூட்டி இவன் மீதும் கம்ப்யூட்டர் டேபிள் மீதும் சிதறியுமாய் மூடி வைத்திருந்த ஜன்னலைத் திறந்தது யார் இப்போது?என்ற கேள்வி இவனுள் முளைவிட்ட தை மனைவி சுட்ட தோசையின் சப்தம் அமுக்கியது. அடுப்படியின் புகையும், வெக்கையும் வெளியே றுவதற்காக திறந்து விட்டிருக்கவேண்டும்.

அவளும் இந்த வீட்டிற்கு குடி வந்த இந்த பத்து வருடங்களாய் கேட்டு கொண்டுதான் இருக் கிறாள்,சமைலறையில் ஒரு பேன் மாட்டவேண்டும் என/ஏனோ அது இன்று வரை கைவரப் பெறவி ல்லை.

ஊதாக்கலர்சேலையிலும்,கருப்புக்கலர்ச்சட்டையிலுமாய்பாந்தமாக த் தெரிகிறாள். காட்டன் புடவைஅது.MPPRகடையில்எடுத்தது. வெறென்னதவணையில்தான்.கடைக்காரர்சொன்னார் புடவை எடுக்கும் போது. இன்னோன்னு சேத்து எடுத்துக்குங்க சார் .இதெல் லாம் சீசன்ல வர்றதுதான்.எனச் சொன்ன அவரது வார்த்தைக்கு ஆட்படாமலும் ஆசைபட்டுவிடாமலுமாய் தனித்து ஒற்றையாய் எடுத்த புடவை அது.இந்த வீடெங்கும், கொடியிலும்,பீரோவிலுமய் நிரம்பிக் கிடக் கிற அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற துணிகள் எல்லாம் இப்படி எடுத்தது தான்.கடைக்காரர்களின் விசால மனதும் இவன் மாதிரியா னவர்கள் மனைவி மக்களுக்கு பேண்ட் சர்ட்டும், சேலையும், சுடிதா ருமாய் எடுக்க உதவியிருக்கிறது.கிட்டத்தட்டலட்சம்வரை தொட்டி ருக்கலாம் இவன் அந்தக்கடையில் எடுத்திருந்த ஜவுளியின் மதிப்பு.இவனும் மனைவியும் தூக்கம் வராத இரவுகளில் திண்னை யில் அமர்ந்து பேசிகொண்டிந்த நாட்களில் அரைபடும் சொற்கட்டு களாக/ அது மாதிரியான சமயங்களில் பேசப்பட்ட சொற்கட்டுக ளிலும், துணைச் சொற்கட் டுகளிலுமாய் உருவெடுத்த புடவை இப்போது ஊதாக்கலர்காட்டி ஜன்னலின் கம்பி வழிவெளித்தெரிந்த கொல்லைப்புற மரங்களை யும், அதை ஒட்டிய வெற்று வெளியையும் அது தாண்டியிருந்த வீடுகளையும் ரோட்டையும், அது தழுவிக் கொண்டிருந்த மனிதர்க ளையும் படம் பிடித்துச் சொல்லியதாய். வளர்ந்திருந்த பூ மரத்தில் எக்குப் போட்ட வாறு ஆடு ஒன்று தன் பசி தீர்க்கும் முயற்சியில் மரத்தின் மீது மலர்ந்திருந்த சிவப்பு நிற பூக்கள் தன் கையை அகல விரித்து அலகு காட்டியதாய்
சாம்பல் பூத்திருந்தது மரப்பட்டையாயும்,பச்சை நிறம் காட்டியது இலைகளாயும், சிவப்பு நிறம் பூக்களாயும் என தன் மேனியின் மொத்த கலர் காட்டி சிரித்த அழகு மரங்களாயும்,பச்சையும்,
மெரூனும்,இன்னும் இன்னுமாய் கலர் காண்பித்த வீடுகள் அதனுள் குடிகொண்டிருந்த மனிதர் களின் மன நிலையையும் தொட்டுச் சொல்லிச் சென்றதாய் உயரப்பறந்து சென்ற பறவை ஒன்று காற்றின் திசையில் சொல்லிச் சென்ற சேதி என்ன வென்று தெரியவில்லையாயினும் கூட சங்கரிடம் சொல்ல ஒரு சேதி இருந்தது. ”எண்ணன்னே,எங்க இருக்கீங்க? நல்லாயிக்கீங்களா?கவர்மெண்ட் ஆஸ்பத்திரிகிட்ட நிக்கிறோம், நம்மவேலை பாக்குற நிறுவனத்துல வேலைக்கு சேர வந்தவருக்கு இன்னைக்கிரெக்காடு வெரிபிகேஷன், திண்டிவனத் துல இருந்து வந்தவரு மெடிக்கல், பிட்னெஸ் வாங்காம வந்துட் டாரு. இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம யாரையாவது கௌவர் -மெண்ட் டாக்டரப்பாத்து சர்டிபிகேட் வாங்கிக் குடுக்கணும்” என்றார்.

சங்கர் சொல்லி முடித்த மறுகணம் சட்டென மனதில் தங்கி வந்து நின்றவர் தோழர் நம்பியாகத்தான் இருக்கிறார்.நம்பிக்கு டாக்டர் கள் வட்டாரத்தில் கொஞ்சம் பழக்கம் அதிகம். அவர் சார்ந்து நிற்கிற இயக்கமும்,அவரின் நன் நடத்தையுமே அம்மாதிரியான பழக்கங்க ளில் அவரை வழிகாட்டி வைத்திருக்கிறது எனலாம்.

இப்போது அவரிடம் பேசலாம்,ஆனால் அவரது நம்பர் இல்லை கைவசம், இன்னொரு தோழரானமுத்துக்கிருஷ்ணனிடம்கேட்கலாம். அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஓடிக் கொண்டே இருக்கிறவர்,அதனால் என்ன ”ஓடுகிற ஓட்டத்தின் மத்தியில் சற்றே நின்று போன் நம்பர் மட்டும் சொல்லிவிட்டு ஊங்க ளது ஓட்டத்தை தொடருங்கள்” எனச்சொன்னால் முடிந்தது விஷயம்.

செல்போன் நம்பர் வாங்கியே விட்டான் தோழர் முத்துக்கிருஷ் ணனின் ஓட்டத்தை நிறுத்தி.
சேலத்திலிருந்துவந்து கொண்டிருந்தநம்பி ஒரு மருத்துவரின் பெய ரைச் சொல்லி”அவர் அவசரவார்டில் இருக்கிறாரா பாருங்கள்,இ ருந்தால் நான் அவருடன்போனில்பேசிவிடுகிறேன் நீங்கள் வந்த வேலை எளிதாகிவிடும்” என்கிறார்.

இவன் வீட்டை விட்டு கிளம்பும் முன்பாக சங்கரிடம் சொல்லிவிட்டு ”அங்கேயே இருங்கள். இதோவந்து விடுகிறேன், ஐந்து நிமிட நேரத் தில்” எனக் கிளம்புகிறான். அவர்களை அவசர வார்ட் அருகே நிற்கச் சொல்லிவிட்டுஅங்குபோனபின்தான்தெரிந்தது.தோழர் சொன்ன டாகடர் ஒரு கேஸை அட்டெண்ட் பண்ணிக்கொண்டிருந்தார் என என்ன செய்யலாம் இப்பொழுது?வேறு யாராவது தெரிந்த டாக்டர் ,,,,என அரிச்சலாய் தூசிதுடைத்துப்பார்த்தபோது ஒன்னொரு டாக்டர் பாரதி சுப்ரணியம் தென்படுகிறார். டாக்டர் என்றால் அவர் வெறும் டாக்டர் மட்டும் இல்லை. அவர் கிளினிக் வைத்திருந்த ஏரியாவின் அதி முக்கிய அடையாளங்களில் ஒன்றாய்த் திகழ்ந்தவர்.இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து தன் மருத்துவ வாழ்க்கையை துவங்கியவர்.இன்று அசைக்க முடியாத நன்நம்பிக் கை முனையாக/

அவர் இந்நேரம் இருப்பாரா அல்லது டூட்டி முடிந்து போயிருப் பாரா? எனத் தெரிய வில்லை.முன்னால் ஓ.பி பார்க்கிற இடத்தில் கேட்டதில் அவர் ஆபரேஷன் தியேட்டர் போய்விட்டதாய்ச் சொன்னாள் நர்ஸ் ஒருத்தி.ஆபரேஷன் தியேட்டரினுள் இருக்கிற வரை எப்படிப்போய் பார்ப்பது என்கிற யோசனையும் தயக்கமுமாய் இருந்தவன் சங்ரையும் உடன் வந்திருந்தவரையும் நிற்கச்சொல்லி விட்டு எதற்குமொரு ரவுண்ட் போய்விட்டு வருவோம் என டாக்டர் கள் அமர்ந்திருக்கிற அறை நோக்கியும் அது அல்லாததுமாய் யாராவது ஒரு தெரிந்த டாக்டர் அல்லது பாரதி சுப்ரமணியமே தென்பட்டு விடமாட்டாரா என்கிற ஆவலுடன் உந்துதலுடனுமாய் நகர்கிறான்.

நீண்டுவிரிந்திருந்ததுஆஸ்பத்திரி.தடுத்துக்கட்டப்பட்டிருக்கிறஅறைக ளை ஒவ்வொன் றாக தாண்டி வந்த போது ஐந்தாவது அறையில் காட்சிப்பட்டவராக மருதம்மாள் டாக்டர் இருந்தார்.வயிற்றுவலி என வந்த சிறுவனுக்கு பக்குவமாய் மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவனுக்கு குடல் இறக்க ஆபரேஷன் பண்ணியவர். குரல் அவர் தான் எனக்காட்டிக் கொடுத் தது.பின் பக்கமாகத்தெரிந்த அவரை முன் பக்கமாகப்போய் பார்த்து பழக்க தோசத்தில் “நல்லாயிருக்கீங் களா”எனக்கேட்டு விட்டான்.

சிமிண்ட் பூசப்பட்டிருக்கிற தரையின் நான்கு மூலைகளிலும் மடக்கி சிவப்புக்கலர் சாயம் பூசியிருந்தார்கள்.வெள்ளைப்பூக்களைச்சுற்றி மலர்ந்து சதுரம் காட்டி நிற்கிற சிவப்பு நிற மலர்களைப்போல, பார்க்க நன்றாகவே இருந்தது.

பழக்க தோஷத்தில் எல்லோரையும் கேட்பது போல மருத்துவரை யும் கேட்பது உசிதமல்ல, அதுவும் மருத்துவமனையில் வைத் து,,,,,,,,,அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியை இவன் கேட்டால், ,,,,,அவரும் சிரித்துக்கொண்டே நன்றாய் இருப்பதாய்ச் சொன்னார்.”தனது பெயரின் முத்திரையை கிளினிக்கிலேயே வைத் து விட்டு வந்து விட்டேன் என்றும்,ஆபரேஷன் தியேட் டரில் இருக்கிற பாரதி சுப்ரமணியன் சாருக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் அவரிடம் போய்வாங்கிக்கொள்ளுங்கள் எனஅவரிடம் சம்மதம்கேட்டு வாங்கிக்கொண்டு அனுப்புகிறார்.

சங்கருடன் வந்தவர் கார்மேகம் என இவ்வளவு அலைச்சலுக்குப் பின்தான் அறிந்து கொள்ள முடிந்தது.அப்போதுதான் நேரமும் இருந் தது.

திண்டிவனம் அருகே இருக்கிற குக்கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த அவர் அவரது கிராமத்திலேயே முதன் முதலாய் அரசு வேலைக்கு வந்தவராம்.கலங்கிப்போய் நின்றார்.அவரது மனம் முழு க்க மெடிக்கல்,பிட்னெஸ் சர்டிபிகேட்டே அது இல்லாது போனால் வேலைக்கு வேண்டாம் எனச்சொல்லி விடுவார்களோ,வாழ்க்கை வீணாகிப் போய்விடுமோ என்கிற அவரது உள் மன பிம்பம் வார்த்தைகளிலும், பேச்சிலுமாய் கண்கள் கலங்கித் தெரிந்தது. அதற்குள்ளாக டாக்டரம்மா கூப்பிட்டனுப்பி விட்டார். டாக்டர் பாரதிசுப்ரமணியனிடம் நான்சொல்லிவிட்டேன், நீங்கள்போய் பார்த்து விடுங்கள் என/

சங்கரின் இருசக்கர வாகனத்தின் பின்னால்தான் கார்மேகம் அமர்ந்து வந்தார். கருப்புக் கலர்,நன்றாகயிருந்தது பார்ப்பதற்கு. இவனுக்குத்தெரிந்து பத்து வருடங்களாக அந்த வண்டியைத்தான் வைத்திருக்கிறார்.

செடிகள் வரிசை கட்டி நின்ற இடத்தின் ஓரமாகத்தான் வண்டியை நிறுத்தினார்கள். கம்பி வேலி கட்டம் கட்டி நின்றது.வெள்ளியில் உருக்கி ஊற்றியது போல நன்றாக இருந்தது பின்ன லுடன் பார்க்கிற போது.

இரண்டு பேரிடம் வழி கேட்டதில் சரியாகச்சொன்னார் ஒருவர் ஆபரேஷன் தியேட்டர் எங்கே இருக்கிறது என ஆஸ்க்கலர் பேண்ட்,பச்சைக்கலரில் வெள்ளைக்கோடுகள் ஓடிய டீசர்ட் இவனுக்கு நன்றாகத் தெரிந்தது.கார்மேகமும், சங்கரும் அவரவர்களுக்கு பிடித்த கலர்களில் எனஇல்லையானாலும் கூட கிடைத்த கலர்களில் உடைகள் உடுத்தியிருந்தார்கள்.கருப்பு வெள்ளை காம்பினேஷனும், கோடு போட்டசட்டையும், அடர் கலரில் பேண்டுமாய் அணிகிற தன்மை இன்னும் புழக்க த்தில்/

வெள்ளைக்கலரில் ஊதாக்கலரில் ஊதாக்கோடுகள் ஓடியசட்டை யும், கருஞ்சாந்துக் கலரில் பேண்டுமாய் கார்மேகமும்,பிஸ்கட் கலரில் டீசர்ட்டும்,ஆப் வொயிட் கலரில் பேண்டுமாய் நின்றார் சங்கர்.

ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் தாண்டி உள் நுழைந்ததிலிருந்து வரிசையாகவும் அது தப்பியுமாய் வளர்ந்து நின்ற மரங்கள் இலைகளையும்,கிளைகளையும் ,பூக்களை யும் காட்டிச்சிரித்தது. அதுதாண்டி ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்ற பொழுது தியேட்டரின் முன் வெளியில் ஐந்து பேர் வரை நின்றிருந்தார்கள்.அதில் தெரிந்த இரண்டு ஆண்கள் மிகவும் கசலையாக/அதில் ஒருவரின் மனைவிக்கு ஆபரேஷன், சிசேரியன்,”என்ன குழந்தையாய் இருக்கும் என்பது அவரது யோசனையின் பிரதான இடமாக இருந்திருக்கும். நல்ல எண்ண
மும், நல்லசிந்தனையும் கொண்டவள்தான் அவரது மனைவி. ஆனால் உடல் கொஞ்சம் பூஞ்சை”என்கிற வாதையும் அவரிடம் இல்லாமல் இல்லை.பதட்டமும், மென் வாதையுமாய் தெரிந்த அவர்களின் முகங்கள் எதிர்பார்ப்பைத் தேக்கி/

அவ்வளவுவலியிலும்,ரத்தப்போக்கிலும்,கழிவிலுமாய்பிறக்கப்போகி ற குழந்தை என்னவாக இருக்கும் என்பதே அவரது பிரதான கேள்வி யாய் இருக்கும் என்பதை வெளிச்சொல்லி விளக்கவேண்டிய தில்லை. வேகமாகநகர்ந்த நிமிடங்களும்,நொடிகளும், இவனுக்கும், சங்கருக் கும், கார்மேகத்திற்கும் மிக மெதுவாய் நகன்றோடியதாக/கண் முன் னே காட்சிப்பட்ட அத்தனையும் அவசரம் காட்டியும்,மெதுவாயும் நகர்கிறதான பிரமை/ வாங்கி விடலாமா சர்டிபிகேட்? என்கிற யோசையுடனும் அவஸ்தையுமாயும் இருந்த பொழுதுதியே ட்டரினு ள் இருந்துவந்தநர்ஸ் ஒருத்திசொல்லியிருக்கிறேன் டாக்ட ரிடம் நீங்கள் வந்திருக்கிற விஷயத் தை என்று சொன்ன நேரம் வந்து விட்டார் டாக்டரும்.

வெளியில் கிடந்த செருப்புகளை ஒரம் தள்ளியும்,அதன் மேல் மிதித்தவாறுமாய் டாக்டரின் கூப்பிட குரலுக்கு தியேட்டரினுள் செல்கிறார் கார்மேகம்.

இவனுக்கானால் ஒரே வாதிப்பு.தெரிந்த முகம்,இனிய பழக்கம், சொன்னவுடன் தியேட் டரிலிருந்து வந்து விட்டாரே ஆபரேஷனை அட்டெண்ட் பண்ணிக் கொண்டிருந்தவர். என்கிற யோசனையும், காத்திருப்புமாய் இருந்த பொழுது கரைந்த நிமிடங்களில் தியேட் டரின் கதவைத்திறந்து கையில் குழந்தையை ஏந்தியவாறு நர்ஸ் வருகிறாள். குழந்தையின் உடம்பில் சுற்றப்பட்டிருந்த துண்டில் சிவப்பு நிறப்பூக்கள் குழந்தையின் மேனியில் படர்ந்து தெரிந்ததாய் குழந்தைக்கொண்டு வந்த நர்ஸின் பின்னாலேயே கார்மேகமும் வந்துவிட்டார் கையில் சர்டிபிகேட்டோடு நர்ஸ் கொண்டு வந்த குழந்தையின் பிஞ்சு மேனிமீதுடாக்டர் பாரதி சுப்ரமணியன் ஆபரேஷன் செய்து எடுத்த தடயமும், கார் மேகம் கொண்டு வந்த சர்டிபிகேட்டில் டாக் டர் பாரதி சுப்ரமணியனின் கையெழுத்தும். 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும் தான் என்றாலும் கூட அவர்களின் இழப்பு எற்படுத்திவிட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பெரியாதாகவே. நண்பரின் அப்பா இறந்து போகிறார் ஒரு அதிகாலைப் பொழுதாக என போன் வந்த வேலை காலை 8.00 அல் லது 8.05 ...
மேலும் கதையை படிக்க...
கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய வைத்திருந்த பணம் கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. மணிகண்டனின் கடை இருக்க பயமேன் என்கிற சொல்லாக்கம் ...
மேலும் கதையை படிக்க...
அந்த மெல்லியகம்பு அவளது உடல் எடையை தாங்குமா இல்லையா என்பதல்ல தாங்குகிறது. அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே கண் கூடு. மாதவன் டீக்கடை வாசல்அது. இவன் தெற்குப்பார்த்து நிற்கிறான். மேற்குப் பார்த்து கடையின் நடை. அப்படியா னால்கடையின் டீப்பட்டரையும் அப்படித்தானே இருக்க ...
மேலும் கதையை படிக்க...
இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம் நுகர்ந்தவாறுமாய்/ கெட்டிப்பட்டமண்அல்ல,தூசியாகவே இருந்தாலும் காற்றில் பறந்து கலந்து திரிந்த போதிலும் பயணிக்கிற வேகத்தில் தன் மணம் மாறாமல் அப்படியே வந்து செல்கிறதாய்/ காடுதோட்டம்வீட்டுமனைஎதிலுமாய்பறந்துபாவியிருக்கிறமண்ணின்மணத்தைஅன்றாடங்களின்நகர்வில்நுகரக்கொடுத்துவைத்தவனாயும்நுகர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன், அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/ அப்படி என்ன காட்சிப்படுகிறது அவரிடம் என கேட்ட நாட்களில் ரகசியம் காத்த நினைவாகவும் பூதம் காத்த உயிராகவும் அதிசயம் காட்டி நிகழ்வொ ன்றை அவிழ்த்துவிட்டுச் செல்வார், அவிழ்த்து ...
மேலும் கதையை படிக்க...
விநாடி முள்ளின் நகர்வுகள்…
புரோட்டா சால்னா…
நாணல்புல்
காலடி மண்
நவாப்பழக்கலருக்காரர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)