ஒரு வழக்கு

 

எனக்கு இந்தப் பகுதி, வாசகனுடன் அளாவ ஒரு சந்தர்ப்பம்; திண்ணை என் முன்னுரைகளை அப்படித் தான் கான் இதுவரை பயன்படுத்தியிருப்பதாக எனக்கு எண்ணம். (மற்றவர் என் எழுத்துக்கு வழங்கியிருக்கும் முன்னுரைகளை விடுங்கள்.)

எனக்கு உன்னுடன் நெடு நாளாக ஒரு வழக்கு. ஆமாம், திருமோ தீராதோ, தீர்க்க முடியுமோ முடியாதோ, சொல்லியாவது ஆற்றிக் கொள்ளலாம் அல்லவா? ஆறுவது உன்கையில்தானிருக்கிறது. சொல்லாமல், என் ககதி உனக்கு எப்படித்தான், எப்போத்தான் தெரிவது?

முதலில் ஒரு உபகதை; உண்மைக் கதை:

அமெரிக்காவில் ஒரு எழுத்தாளன். Howard Fast அல்லது Howard Spring? Fast என்றே நினைக்கிறேன். ரோமாபுரியில் அடிமைகளின் கலகத்தை அடிப்படியாகக் கொண்டு Spartacus என்று ஒரு நாவலை எழுதினான். (Spartacus சரித்திர புருஷன், கலகக்காரர்களின் தலைவன், கலகம் முறியடிக்கப்பட்டு, Spartacts சிலுவையில் அறையப் பட்டான்.)

பொது உடைமைத் தத்துவத்தைச் சார்ந்து இருப்ப தாகக் கருதப்பட்டதால், பதிப்பாளர்கள் நாவலைப் பிரசுரிக்க மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் Fast, நன்றாக ஊன்றிக் கொண்ட எழுத்தாளன் தான். ஆனால் அவன் பாச்சா பலிக்கவில்லை.

Fast, தினசரிகளில் ஒரு விளம்பரம் விடுத்தான். பிரசுரகர்த்தாக்களின் முரண்டலைச் சொல்லி, புத்தகத்தை வெளிக் கொண்டுவர ஆகும் செலவைத் தோராயமாய்க் கணக்கிட்டு, அதன்படி ஒரு பிரதிக்கு வைக்கக் கூடிய விற்பனை விலையைக் குறிப்பிட்டு, தானே புத்தகத்தை வெளியிடப் பணம் உதவுமாறு பொதுமக்களை வேண்டிக் கொண்டான்.

உடனே தொகைகள் வந்து குவிந்தன. சிறு துளி பெரு வெள்ளம் புரண்டு, புத்தகமும் வெளியாகி, ஒருவகையில் வாசகனே வெளிக்கொண்டு வந்த புத்தகம் என்கிற காரணத்தில் அமோக வெற்றி கண்டது; அதே சமயத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே லகrயமான உறவுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்துவிட்டது.

தம்பி, உன்னையும் என்னையும் பற்றி, இக்காட்டில் அந்த முறையில் பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமா?

எழுதுவது, எழுதினதைப் புத்தகமாக உருவாக்குவது, வெளியான புத்தகத்தை வாசிப்பது-அத்தனையும் கலை தான். ஆனால் புத்தக ப்ரசுரம் ஒரு தொழில், முதலீடு கணிசமாகக் கேட்கும் தொழில், புத்தக வியாபாரம், அதன் இன்றியமையாத அம்சம் என்பது மறுக்க முடியாத உண்மை. நான் எழுத்தாளன். என் எழுத்தை நானே ப்ரசுரித்துக் கொள்ள எனக்கு வக்கில்லை. என் புத்தகங் களை விற்று, போட்டமுதலை மீட்க சாமர்த்தியமும் கிடையாது. (முதலில் போடுவதற்கு முதல் ஏது?) அப்படி யும் ஒரு முறை சூடிக் கொண்டும் ஆயிற்று.

’52′, ’53′ வாக்கில் கானும், நாலைந்து உற்சாகமான இளைஞர்களும் சேர்ந்து, என் முதல் கதைத் தொகுதி, “ஜனனி’யை வெளிக்கொண்டு வந்தோம். கி.வா.ஜ. அவர் களின் தலைமையில் வெளியீட்டு விழா, பால் பாயலம் வினியோகம், ஒவ்வொரு பிரதியிலும் தனித்தனியாக என் கையொப்பம்-தடபுடல்தான். பிரதி விலை ரூ.8-இல் அந்தத் தரத்தில் (Bamb00 Papet), புத்தகத்தை இங் நாளில், அதைப்போலப் பன் மடங்கு செலவில் கூடக் தயாரிக்க முடியாது என்று திண்ணமாகக் கூறுவேன்.

புத்தகத்தைக் கலை சிருஷ்டியாகக் கொண்டு வந்தோமே தவிர அதன் வியாபாரத்தில் எங்களுக்கு விஷயமோ, அனுபவமோ பூஜ்யம். இடை மனிதனை நம்பி, முன்பின் எங்களுக்குத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு, அவர்கள் எங்கள் தலையைத் தடவி, மோசம் போனோம்.

வீட்டுக்குத் தெரியாமல், புத்தக சம்பந்தமாக, P.F.ல் வாங்கின கடன் ரூ. 1500/- மாதத் தவணையில் அடைத்து மீள்வதற்குள், உன்பாடு என்பாடு, ஏண்டாப்பா மாட்டிக் கொண்டேன் என்று ஆகிவிட்டது.

ஆனால் அந்தப்பதிப்பின் பிரதி, இப்போது Collector’s item ஆகிவிட்டது. இப்பவும் என் எழுத்து மூலம் பரிசய மான புது கண்பர்களின் வீடுகளில் அதை அபூர்வமாகச் சக்திக்க நேரிடுகிறது. அலமாரியிலிருந்து அதை யெடுத்து, அதில் என் கையொப்பத்தைப் பெருமை யுடன் எனக்குக் காட்டி அலமாரியில், பக்தியுடன், மீண்டும் சேர்த்த பின், என் வாசகன் அலமாரியை இழுத்துப் பூட்டு கிறான். கதவுதிறந்து மூடிய நேரத்துக்கு அலமாரியிலிருந்து குங்குமப்பூ மணம் கமகம- -

வெட்கத்தில் தலைகுனிகிறேன். ஏனெனில் என்னிடத் தில் ஒரு பிரதி கூட இல்லை. புத்தகத்தைக் கடனாகக் கேட்கக் கூடக் கூசுகிறது. சரி, இது போகட்டும்.

பதிப்பாளர்கள், அவர்கள் பிரச்சனைகளை அவர்களே சொல்லக் கேட்கும்போது, அவை பூதம் காட்டுகின்றன. ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு, அவைகளை விற்பனைப் படுத்த அவர்கள் படும்பாடு-கேட்க அதைரியமாகவே இருக்கிறது. வியாபார நோக்கோடு மட்டும் இல்லாமல் உண்மையான எழுத்தார்வம் கொண்ட பதிப்பாளன், எழுத்தாளனுடைய பாக்கியம், பூஜாபலன், உழவன் லாபக் கணக்குப் பார்க்கிற மாதிரியான இந்த ப்ரசுரத்தொழிலில் உங்களுக்காக ஈடுபடுகிறோமே, அதுவே எங்கள் கலை ஆர்வத்துக்கு சாr என்று கட்சி கட்டுவோர்களும் இருக் கிறார்கள். எங்களுக்குப் பேசவே வழியில்லை.

தம்பி, இங்குதான் உன்னோடு என் வழக்கு வரு கிறது.

தமிழ காட்டின் ஆறு கோடி மக்களில், ஒரு எழுத் தாளனுக்கு அவன் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கிப் படிக்க ஆயிரம் பேர் இல்லையா? நம்பும்படி இருக்கிறதா? இது யாருக்கு அவமானம், வாசகனுக்கா, எழுத்தாள னுக்கா? ஐம்பத்திரண்டு வருடங்களுக்கும் மேல் எழுத்தில் ஈடுபட்டுக் கண்ட பலன் இது தானா? ஒரு ஆயிரம் பேர்கள்! -

லா. ச. ரா – இலக்கியச் சிற்பி. சிறுகதையின் பிதாமகர். கனவோடை உத்தியை முதன் முதலா கத் தமிழில் கையாண்டவர். கவிதை ததும்பும் உரை கடை ஆட்சி கொண்டவர்.

லா, ச. ராவின் முத்திரையை அவருடைய பெயர் இல்லாமலே அடையாளம் கண்டு கொள்ளலாம். படிக்கும் ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு புது அர்த்தம், புது வெளிச்சம் தெரியும்.

லா. ச. ராவின் ஆத்ம விசாரணை, தமிழில் கற்பனை இலக்கியத்துக்குப் புதிது.

லா, ச. ரா. தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரிய சகாப்தம்.

தம்பி, மலைக்காதே, உன்னைப் போல் வாசகர்களின் பாஷைதான். இது போன்ற பாராட்டுக்களிலே ஒரு அர்ச்ச னையே தயாரித்து விடலாம். ஆனால் என்ன ப்ரயோ ஜனம்: ஒன்று சொல்கிறேன். நாட்டில் எத்தனையோ மாறுதல்கள் கடந்திருக்கின்றன. ஆனால் எழுத்தாள னின்-பொருளாதார நிலைமை மட்டும், என்னைப் போன்றவர்களுக்கு, கான் எழுத ஆரம்பித்த காலத்தி லிருந்து இன்னும் மாறவில்லை.

‘புத்தகங்களின் விலைவாசி. என்று முனகல் கேட் கிறது. தம்பி திருப்பிக் கேட்கிறேன், இக்நாளில் எந்தப் பண்டம் விலை அதிகரிக்காமல் இருக்கிறது?

ஹோட்டல், சினிமா டிக்கட்-House full காய்கறிவிலை கொடுத்தாலும் கறிவேப்பிலை கிடைக்கவில்லை; இந்த ஜே ஜே’யில், புத்தகம் ஒன்றுதான் பழிக்கு ஆச்சா?

தம்பி புத்தகம், இலக்கியம், கலைகள் யாவுமே சொகுசு தான்.

ஒரு நல்ல புத்தகம் தாண்டி, உன்னை ஆழ்த்தும் சிக்தனையும் சொகுசு தான்.

படிக்கும் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்திலோ
அதில் ஒரு வாக்யத்திலோ,
சொற்றொடரிலோ பதத்திலோ -
அல்லது இரு பதங்களினிடையே தொக்கி
உன்னுள்ளேயே சின்று கொண்டு
உன்னை இடறி கிறுத்தும்
அணு கேர மோனத்திலோ
நீண்ட பெருமூச்சிலோ
உன் கண்ணில் பனிக்கும் கண்ணிர்த் துளியிலோ
அந்தத் தருணத்தோடு நீ ஒன்றிப்போய் உன்னை
அடையாளம் கண்டு கொள்வது, அதுவே சொகுசுதான், பெரிய சொகுசு”.

தடத்திலிருந்து தடம்மாற்றும் சொல் மந்திரத்தால் ஊடுருவப் படுவதே சொகுசு தான் (luxury).

சரி, இதெல்லாம் உவமை பாஷை, சமத்காரம் என்று விட்டுத் தள்ளினாலும் தெள்ளும் உண்மையென்ன? விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆர்வம் மக்களிடமில்லை. அவர்களைப் பற்றி, அவர்களின் பெருமைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.

பின் என்ன, யாரைப் பற்றி எதைப் பற்றி எழுதுகிறேன்? இந்தப் பக்கங்களிலும் இதுவரையிலும் இனி மேலும், எப்பவும் மனித குல மாண்பைத்தான் பாடு கிறேன். எனக்குத் தெரிந்ததே அதுதான்.

நீயும் நானும் உறவின் பரஸ்பரம் தானே. மனித பரம்பரையே! அந்தப் பரம்பரையின் பெருமையை, நீ வந்த வழியின் பெருமை, உன் பெருமையை தெரிந்து கொள் வதில், அதில் திளைப்பதில் உனக்கு ஆசையில்லையா?

உன்னை ஒன்று கேட்கிறேன். இப்போது நீ எனக்கு ஆயிரம் பேர்களின் பிரதிநிதி.

நீ (அட அது நீயோ, நீங்களோ?) பதிப்பாளர்களிடம் கேட்க வேண்டும்; நீங்கள் நெடுநாட்களாகத் தேடிக் கொண் டிருக்கும், ஆனால் அச்சில் இல்லாத புத்தகங்களை வெளிக் கொணர வற்புறுத்த வேண்டும்.

‘புத்ர எங்கே? ஜனனி என்னவாயிற்று? அதே போல் ‘அலைகள்’ தயா’ மீனோட்டம் த்வனி’ ‘இதழ்கள்’ ‘கங்கா’” இன்னும் என்னென்ன? அஞ்சலி’ என்கிற தலைப்பில், பஞ்சபூதக் கதைகளாமே! அதாவது கடைகாலப் பாத்திரங்களாக ஒரு ஒரு element ஐயும்தண்ணிர், கெருப்பு, பூமி, காற்று, ஆகாசம்-உருவகப் படுத்தித் தனித்தனிச் சோதனைக் கதைகளாமே! இவை களைப் பற்றி காங்கள் கேள்விப் பட்டிருக்கிறோமே ஒழிய எங்கள் கைக்கு வந்து சேரவில்லையே! மறுபதிப்புக்கள் தானே என்று நீங்கள் தயங்கினாலும் எங்கள் தலைமுறை இவைசொல்லும் விஷயங்கள் அத்தனையும் புதிது. ‘கொண்டுவாருங்கள், கொடுங்கள்’ என்றுப் பன்னித் தட்டி னால் தான், கதவு திறக்கப்படும். உங்கள் பசியை நீங்கள் தெரிவிக்காமல் அவர்கள் எப்படித் தெரிந்து கொள்வது? அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும்.

‘கடைவிரித்தேன் கொள்வோர் யாருமில்லையே” என்னும் நிலை இனிமேலாயினும் நமக்குள் வேண்டாம். என் வழக்கின் ஆரம்பத்திலேயே Spartacus எனும் புத்தகத்தின் கதையைச் சொன்னதே இதற்குத்தான்.

- புற்று சிறுகதைகள் – ஐந்திணைப் பதிப்பகம் – மார்ச் 1989 

தொடர்புடைய சிறுகதைகள்
“என் தாயே! என் தாயே!” கண்களிலில் நீர் துளும்ப, தரங்கிணி, ஜலத்தை அப்படியே ஆலிங்கனம் செய்துவிடுபவள் போன்று, இரு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றாள். நல்லவேளை, வேறெவரும் அங்கில்லை. அவள் கணவன் மார்மேல் கட்டிய கைகளுடன் அவள் முகத்திலாடும் நிழல்களைக் கண்டு அதிசயித்து நின்றான். தரங்கிணி ...
மேலும் கதையை படிக்க...
பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள். "என்னம்மா பண்ணப்போறே?" "கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ." திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள். "என்னம்மா சொல்றே? ஐயா ...
மேலும் கதையை படிக்க...
நினைவு திரும்பியபோது அது தூக்கத்திலிருந்து விழிப்பா, மூர்ச்சையினின்று மீண்ட தெளிவா நிச்சயமாய்ப் புரியவில்லை. மரங்களின் இலைகளிலிருந்து இருண்ட ரகசியங்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. நிலவின் செங்கோளம் வானை உதைத்து எழும்பிக் கொண்டிருந்தது. மாஞ்சி கண்களைத் தேய்த்துக்கொண்டாள். இமையின் உள்புறம் மின்னல்கள் வெட்டின. அவைகளின் ‘ ...
மேலும் கதையை படிக்க...
[ஓம் ' பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.] பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத்திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ரஸமி புகுந்ததும், அது இளகிப் புளகித்தது. நடைவழியிலேயே, அவனது சிருஷ்டியின் சிறப்பு ...
மேலும் கதையை படிக்க...
வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் ...
மேலும் கதையை படிக்க...
தரங்கிணி
கொட்டு மேளம்
ஜமதக்னி
நெற்றிக்கண்
ரயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW