ஒரு துளி விஷம் போதுமடி!
இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா.
இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.
என் சூழ்நிலை தெரிந்தும் ஏன் உன்னால் எனக்காக இறங்கி வர முடியவில்லை?
இத்தனை நாட்கள் உனக்காக விட்டு வைத்த உயிர் இன்று பிரிய போகிறது.
நீ அழுவாய் என்று தெரியும். நீ துடிதுடிப்பாய் என்றும் தெரியும்.
ஆனால் என்னால் முடியாது. முடியவே முடியாது சந்தியா.
இதோ என் கைகளில் இருக்கிறது விஷ பாட்டில்.
விஷத்தின் கசப்பு தெரியாமலிருக்க நேற்று நீ செய்த இனிப்புடன் கலக்கிறேன்.
விஷம் கலந்த இனிப்பை படுக்கை அறையின் கட்டிலுக்கடியில் வைத்துவிட்டேன்.
இன்றுடன் முடிந்தது அந்த சுண்டெலியின் கதை.
இத்துடன் முடிந்தது இக்கதை!
- Thursday, February 7, 2008
தொடர்புடைய சிறுகதைகள்
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க..."காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு
பின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை"
"எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுற இல்ல, அப்புறம் எப்படி பிடிக்கும்?"
"எங்க அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிடக்கூடாதே உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்"
"அதென்னடி மாசாமாசம் ...
மேலும் கதையை படிக்க..."சொன்னா புரிஞ்சுக்கடா" கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி.
"முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்..."
"நீ மட்டும் அவளுக்கு முத்தம் கொடுத்து பாரு அப்புறம் உன்ன பார்க்க வரவே மாட்டா"
"சே சே அவளுக்கு எம்மேல ஆசை அதிகம்...என்னை காதலிக்கிறது அவ கண்ணுலயே தெரியுதுடா"
"ஒரு ...
மேலும் கதையை படிக்க...கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு வெளியே பெய்கின்ற மழை கண்மணியின் மனதை உறுத்தியபடியே இருந்தது. முதல் முறையாக சென்னைக்கு இந்த பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் வந்திருக்கிறாள். ...
மேலும் கதையை படிக்க...விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.
இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.
முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன் பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினான் முனியசாமி.
முனியசாமி வீட்டிற்கு ...
மேலும் கதையை படிக்க...பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
“ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
"நான் எதுக்கு போகணும்" ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
“அப்பாவ இன்னுங் ...
மேலும் கதையை படிக்க..."அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்" நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன்.
"சொல் நரசிம்மா"
"நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில்
ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று ...
மேலும் கதையை படிக்க...கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது.
அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத்.
"என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே பேசாம கடலையே பாக்குற?" பொறுமையிழந்து கேட்டான் சேகர்.
பெருமூச்சு ஒன்றை பலமாய் வெளியிட்டு பேசத்தொடங்கினான் வினோத்.
"சேகர், உனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் காதலுக்கும் ஒத்தே ...
மேலும் கதையை படிக்க...வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்? விழியோரம் ஒருதுளி நீர் கசிந்து காற்றில் கரைந்தது...
மலர்விழியை சுற்றிலும் தலைவிரிக்கோலமாக அழுது கொண்டிருந்தனர் பெண்கள்.
மனத்திரையில் மலர்விழியை முதன்முதலாய் சந்தித்த நாட்கள் ...
மேலும் கதையை படிக்க...கால்சட்டை பை நிறைய கோலிக்காய்கள் ஜெயித்த சந்தோசத்துடன் வேகமாய் வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தேன். கோலிக்காய்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் சத்தம் சந்தோஷம் தருவதாய் இருந்தது.வீட்டை நெருங்கும்போதுதான் வேதக்கோவில் மணிச்சத்தம் ஆறுமுறை கேட்டது. ஆறுமணி தாண்டிய பின் வீட்டிற்குள் நுழைந்தால் அடி பின்னிவிடுவார் ...
மேலும் கதையை படிக்க...