ஒரு காலத்துல… – ஒரு பக்க கதை

 

பழைய திரைப்படம் ஒன்றை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.

படத்தில் தீடீர் பணக்காரனான கதாநாயகன் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்கிப் பாடி மகிழ்வது போல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.

பாடலில் லயித்திருந்த பார்வதி எதைச்சையாக வாசலைத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே…ஒரு பிச்சைக்காரன் நின்று கொண்டு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தான்.

‘என்ன தைரியம் இருந்தா கேட்டைத் திறந்து வந்து டி.வி. பார்த்துக் கொண்டிருப்பே? முதல்ல வெளியே போ…’ சுட்டெரிக்கும் வாரத்தைகளில் கத்தினாள்.

‘’அப்படியெல்லாம் சொல்லாதீங்க அம்மா….நான் இப்ப வேணும்னா பிச்சைக்காரனா இருக்கலாம். ஆனால் ஒரு காலத்திலே படத்தாயாரிப்பாளரா இருந்தேன்.

அந்தக் காலத்தில் இந்தப்படத்தை தயாரிச்சவனே நான்தாம்மா….ஏதோ என் நேரம்…இப்படி ஆயிட்டேன். சரி …சரி…அந்தக் கதையெல்லாம் எதுக்கு?….ஏதாவது பழசு இருந்தா போடுங்கம்மா’’ – பரிதாபமாக் கேட்டான் பிச்சைக்காரன்.

- செல்வராஜா (20-10-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். ...
மேலும் கதையை படிக்க...
மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண் மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றேன், பக்கத்திலிருந்த என் மனைவி கற்பூர ஆரத்தியை எடுக்க என்னை தட்டியவுடன் நான் கண்விழித்து ...
மேலும் கதையை படிக்க...
ரமணி படிக்கிற காலத்திலேயே ஒரு தனிப் போக்கு படிப்பிலே மனம் செல்லாமல் உடல் மாயையாய் வருகின்ற விழுக்காடு கொண்டு அலைகிற மந்தமான துருப்பிடித்த சிந்தனை மனம் அவளுடையது கலாவிற்கு அவளோடு நெருக்கமான பழக்கமுண்டு இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படிக்கிற காரணத்தினால் ரமணியை ...
மேலும் கதையை படிக்க...
அது பெரிய இடத்து குழந்தைகள் படிக்கும் ஒரு தனியார் பள்ளி. அங்கு காலை நேரத்தில் வித விதமான கார்களில் பள்ளி மாணவர்கள் வந்து இறங்கும் காட்சியே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்! அந்த பத்தே நிமிடத்தில் இந்தியாவில் எத்தனை வகை கார்கள் இருக்கிறது ...
மேலும் கதையை படிக்க...
மாடு கத்தும் சத்தம் அவருக்குக் கேட்டது. அது சாதாரண கத்தல்ல. அவலக்குரல். அது மாட்டின் கதறலா அல்லது பிரமையா என அஸீஸ் டொக்டருக்குக் குழப்பமாயிருந்தது. மோட்டார் சைக்கிளை அந்த இடத்தை நோக்கி இன்னும் விரைவுபடுத்தினார். முஸ்தபா சொன்ன தகவல்கள் அவரை உந்தித தள்ளியது. 'நல்லதொரு ...
மேலும் கதையை படிக்க...
2060 தேர்தல்
தமிழ் மொழிநண்பர்கள்
வேரோடு கழன்று வீழ்ந்த பெரு நிலை விருட்சங்கள்
பள்ளி வகுப்பறையிலுமா அரசியல்வாதிகள்?…..
மாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)