ஒத்த ரூபாய்

 

சாலையோர குடிசை வாசலில் வலிகனைசிங் கடை. என்னையும், இன்னொரு ஆளையும் தவிர வேறு யாருமில்லை. என்றாலும் சாமுவேல் பிசியாக இருந்தான்.

பத்தடி தூரத்தில் பெரிய பெரிய இரும்பு குழாய்கள் ஏற்றிய லாரி ஒன்று ஜாக்கியில் நின்றது. அதன் பின் இரண்டு சக்கரங்களைக் கழற்றி சாமுவேல் பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றை ஓடிவிட்டான். இன்னொன்றிற்கு ஆயத்தமாகி விட்டான்.

இது முடிந்ததும் நான் அவனைக் கொத்திக்கொண்டு போக வேண்டும்.!

காலையில் நான் கிராமத்திற்குச் சென்றபோது என் அங்கு இரு சக்கர வாகனம் பஞ்சர். இவனை அழைத்துச் சென்று சக்கரத்தைக் கழற்றி வந்து, இங்கே பஞ்சர் ஒட்டி, திரும்ப போய் மாட்டி, நான் சாமுவேலைக் கடைக்கு அழைத்து வந்து விட வேண்டும். இதற்காக கிராமத்திலேயே ஒரு மோட்டார் சைக்கிள் இரவல் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். மோட்டார் தொழில் தொடர்பாய் இருக்கும் சாமுவேலுவிற்கு ஆச்சரியமாய் சைக்கிளைத் தவிர வேறு வாகனங்ககள் ஓட்டத் தெரியாது.!!

தெரிந்திருந்தால் போதும். அவனே ஒட்டி எடுத்து வந்துவிடுவான். தெரியாததினால் வாடிக்கையாளர்களுக்கு கஷ்டம். பலர் அப்படிப்பட்டவர்களைத் தேடி போய் விடுவதால் இவனுக்கும் நஷ்டம்.

“ஏன் சாமுவேல் இப்படி..?” ஒருநாள் இரக்கப்பட்டு கேட்டேன்.

“சைக்கிளைத் தவிர வேற எதையும் ஓட்ட விருப்பமில்லை சார். விழுந்து கை, கால் முறிஞ்சு போச்சுன்னா குடும்பத்துக்கு யார் சம்பாதிச்சுப் போடுறது”. சொன்னான்.

அன்றிலிருந்து அந்தப் பேச்சை விட்டேன்.

சாமுவேலை எனக்குச் சிறு வயது முதலே தெரியும். அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பா இறந்து போனார். இவன் தலையெடுப்பதற்கு முன்பாகவே விழுந்தது சுமை.!

ஒரு அக்காள், இரண்டு தங்கைகள் , தம்பி, அம்மா…. என்று பெருங்குடும்பம். எல்லோரையும் தாங்கும் சுமை இவன் தலையில். அதனால் படிப்பை விட்டு பக்கத்து நகரத்தில் வால்கனைசிங் கடைக்குச் சென்றான். கூடிய சீக்கிரமே ஊக்கமாய் வேலையைக் கற்றுக் கொண்டு ஒரு பழைய கம்பரசரை விலைக்கு வாங்கி வாசலிலேயே கடை வைத்துவிட்டான்.

ஆரம்பத்தில் நிறைய வேலை. மடமடவென்று பெண்களுக்கெல்லாம் திருமணம் முடித்தான். தானும் ஒரு பெண்ணைப் பார்த்து முடித்தான். கடை என்ன அமுதசுரபியா எடுக்க எடுக்க குறையாமலிருக்க.?!.. காலப்போக்கில் கைக்கு வந்த வருமானம் வாய்க்கும் வயிறுக்கும் சரியாகப் போனது .

போதாதற்கு. ..சுவற்றிலடித்த பந்தாய் அக்கா விதவையாக வந்தாள். ஒரு தங்கை வாழாவெட்டியாக திரும்பினாள். தாயும்… திடீரென்று படுக்கையில் விழுந்தாள். தம்பி கை கொடுப்பான் என்று எதிர்பார்த்த சாமுவேலுக்கு ஏமாற்றம். அவன் குடும்பத்தைப் பார்த்துக் குடியில் விழுந்தான். கஷ்டமோ…. ..கஷ்டம் !

தற்போது சாமுவேல் நேரம் காலமும் சரியில்லை போல. குடிசையைப் பார்த்து எந்த வண்டியும் காற்றடிக்கக்கூட நிறுத்துவதில்லை. இன்றைக்கு என்னவோ சுக்கிர திசை!.

நான் வரும்போது சாமுவேல் லாரி வேலை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வேலைகளும் நிலுவையில் இல்லை.

நான் விபரம் சொல்ல….”லாரி முடித்து செல்வோம்!” சொன்னான்.

ஓட்டை நாற்காலியில் அமர்ந்தேன்.

ஐந்து நிமிடம் கழித்து அடுத்த ஆள் வந்துதான் எனக்கான வேலையைத் தள்ளி வைத்தான்.

“சாமுவேல் ! இதோ பக்கத்துலதான் என் மோட்டார் சைக்கிள் பஞ்சர்” என்றான்.

நாங்கள் கிராமம் சென்று திரும்ப ஒரு மணி நேரமாகும். இது பக்கமென்பதால் நான் அவனைப் பார்க்க அவன் என்னைப் பார்க்க. ..நான் ஒன்றும் சொல்லவில்லை. கடைசி ! தீர்மானித்து பேசாமலிருந்தேன். அவனும் என் பக்கத்தில் ஒரு உடைந்த நாற்காலியில் அமர்ந்தான்.

எங்களை இம்சிப்பது மாதிரி சாமுவேலுக்கு லாரி வேலையிலும் தொந்தரவு. ஒரு மாருதி, இரண்டு மாட்டு வண்டிகள், ஒரு ஸ்குட்டர், ஒரு டி . வி. எஸ். 50 என்று ஒன்று ஒன்றாக வர. .. இவன்தான் எழுந்து எழுந்து போய் அவைகளுக்குக் காற்றுப் பிடித்து கொடுத்து தன் வேலையைத் தொடர்ந்தான்.

அப்போது. ..

“அண்ணே ! அரிசி வாங்கனும்…” தங்கை குடிசையை விட்டு வெளியே வந்தாள்.

சாமுவேல் தன் அழுக்கு மேல் சட்டைப் பையைத் துழாவினான். கிடைத்த எல்லா சில்லறைகளையும் அள்ளினான். எண்ணாமல் அவளிடம் கொடுத்து. ..

“போ..!” சொன்னான்.

அவள் நின்று எண்ணி. ..

“அண்ணா ! பதினெட்டு ரூபாய் இருக்கு. ரெண்டு கிலோ அரிசிக்குச் சரியா இருக்கு.” சொன்னாள்.

“காய்கறிக்கு..ராத்திரி உன்கிட்ட கொடுத்ததை வைச்சுக்கோ” சொல்லி வேலையைப் பார்த்தான்.

அவள் அகன்றாள்.

வீட்டிலிருந்து மஞ்சள் துணிப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

அடுத்த நிமிடம் ஒரு யமஹா காற்றுக்காக ஒரு இரண்டு ரூபாய் துட்டைக் கொடுத்துச் சென்றான். அடுத்து வந்தவர்தான் டி. வி. எஸ். 50.

எனக்குத் தெரிந்த முகம். பெரிய பணக்காரர். பக்கத்துக்கு கிராமமே சொந்தம். அது இல்லாமல் அருகிலுள்ள நகரில் பெரிய ரைஸ் மில். அங்கு நெல் எப்போதும் கொள்முதல். அவியல், அறவை வேறு. கிராமம் சென்று திரும்பினார் போல.

என்ஜினை நிறுத்தி, இறங்கி ஸ்டான்ட் போட்டு. ..

“தம்பி ! காத்து !” என்றார்.

சாமுவேல் வழக்கம் போல தொட்ட வேலையை விட்டு ஓடிப்போய் இரண்டு சக்கரங்களுக்கு காற்றுப் பிடித்தான்.

அவர் மேல் சட்டைப்பையிலிருந்து பழந்தாட்களை போல கத்தையாய்ப் பணத்தை வெளியே எடுத்தார். எல்லாம் 50, 100, 10, 20 கலவை. காலியான பையை த் துழாவி ஒரு முழு ஐந்து ரூபாய்த் துட்டை காற்றுப்பிடித்து முடித்த சாமுவேலுவிடம் நீட்டினார்.

வாங்கிய சாமுவேல் தன் பையிலிருந்து இரண்டு ரூபாய் துட்டை எடுத்துக் கொடுத்தான்.

வாங்கிய அவர், துட்டை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்தார்.

“தம்பி ! வீலுக்கு ஒரு ரூபாய்தானே. .? ” கேட்டார்.

“ஆமாம் சார். !”

“மீதி. .?”

“ஒரு ரூபாய் தர்றேன் சார்.” சொன்னான்.

அவன் சொல்லி முடிக்கவும் ஒரு ஹீரோ ஹோண்டா வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

சாமுவேல் உடனே. .

“காத்தா சார். .? ” என்றான்.

அவன் , “ஆமாம் ! ” சொல்ல. .. உடனே இரண்டு சக்கரங்களுக்கும் காற்றுப் பிடித்து முடிக்க. ..அவர் ஐந்து ரூபாய் தாளை நீட்டினான் .

“சில்லறை இல்லே சார் !”என்றான்.

“சரி. மாத்தி வர்றேன். !”உடனே அவன் வண்டியை கிளப்பிக் சென்றான் .

பணக்காரர் உடனே தன் வண்டியில் அமர்ந்துவிட்டார்.

‘அட நாயே. .! பையில் அவ்வளவு பணம் இருக்கும்போது ஒரு ரூபாய்க்காக உட்கார்ந்து இருக்கானே பிச்சைக்காரன் !’ எனக்குள் எரிந்தது.

‘பணக்காரராய் இருந்தாலென்ன ! ஒரு ரூபாய் அவருக்குப் பெரிசு. நிற்கட்டும் ! ‘ மனதைச் சமாதானப்படுத்தினேன்.

சாமுவேல் லாரியின் இரண்டாவது சக்கரத்தையும் முடித்தான். சில்லறை மாற்றச் சென்ற ஆள் திரும்பவில்லை. போய்விட்டான் போல. இல்லை, அடுத்தமுறை வரும்போது திரும்புவான். திருப்பாமலேயே போவான். எனக்குப்பட்டது.

பணக்காரர் சில்லறைத்தனமாய் அவன் சென்ற வழியையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அரிசி வாங்கச் சென்ற சாமுவேல் தங்கைதான் திரும்பினாள்.

“தங்கச்சி ! ஒரு ரூபாய் இருக்கா. .?” இவர் கடனை அடைக்க சாமுவேல்அவளிடம் கேட்டான்.

“இல்லேண்ணே. கருவாடு நான் கடன் ! ” சொன்னாள்.

“சரி போ” சாமுவேல் லாரி சக்கரங்களை உருட்டிச் சென்றான்.

அவன் அவைகளை மாட்டி முடிக்க அரைமணி நேரம் ஆனது.

பணக்காரர் இன்னும் எழவில்லைநகரவில்லை.

என்னிடம் சில்லறை ஒரு ரூபாய் இருந்தது.!

‘இந்த நாயே ! பிடிச்சுப் போ. பிச்சையாய்த் தூக்கிப் போட்டு ஆளை அனுப்பலாமா. .?’ யோசனை வந்தது.

‘அவருக்கு ஒரு ரூபாய் பெரிதென்றால் நமக்கும் பெரிசு. ஆள் விட்டுச் செல்லட்டும். இல்லை, அடுத்தமுறை வாங்கிக் கொள்கிறேன். கழித்துக் கொள்கிறேன்! கூறிச் சொல்லட்டும் ! ‘ இருந்தேன்.

ஒரு வழியாக ஹீரோ ஹோண்டா ஆள் ஏமாற்றாமல் திரும்பினான்.

பணக்காரனின் வாடிய விழுந்த முகம் பளிச் வெளிச்சம்.

அவனும் சோதனையாக ஒரு இரண்டு ரூபாய் துட்டைக் கொடுத்து தன் கடனை அடைத்துச் சென்றான்.

சாமுவேல் யோசிக்கவே இல்லை.

“இந்தாங்க சார். நீங்க ஒரு ரூபாய் தாங்க.” சொல்லி அந்த இரன்டு ரூபாய் துட்டை நீட்டினான்.

பெற்றுக்கொண்ட பணக்காரர் பேசவே இல்லை. வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டு பதில் பேசாமல் சென்றார்.

அவருக்கு ஒத்த ரூபாய் பெரிசென்றால் மற்றவர்களுக்கு??

சாமுவேல் உட்பட எங்கள் இரண்டு பேருக்கும் அதிர்ச்சி!! 

தொடர்புடைய சிறுகதைகள்
கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்த சேகர் முகத்தில் பிரகாசம். மாலதி.! தலைப் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றவள். வீட்டை விட்டு வெளியே வந்து.... ''சொல்லு மாலதி ? '' குசுகுசுத்தான். ''உன் பிள்ளை வயித்தை விட்டு சீக்கிரம் வெளியே வர பாடாய்ப் படுத்துது.'' ''சந்தோசம். உன் புருசன் வந்து ...
மேலும் கதையை படிக்க...
இன்றைக்கு வேலைக்கு சேர்ந்து முதன் முதலாக புதுக் கம்பெனி முதலாளியை வைத்து இனோவா காரை ஓட்டிக்கொண்டிருந்த கணேசனுக்கு ஹாரனில் கை வைக்கவே நடுக்கமாய் இருந்தது. அதிலும்.... 'கம்பெனி அருகில் செல்லும்போது கண்டிப்பாய் ஹாரன் அடிக்கும் சந்தர்ப்பம் வரவேக் கூடாது !' என்று வேண்டிக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
"எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க...? "கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில் பேசாமல் இருந்தான் சந்திரன். "தாய் மொழி பாசமா..?" "ம்ம்ம்ம்......'' "எனக்கும் தாய் மொழி பாசம், தமிழ் மேல விருப்பம் இருக்கு. ஆனாலும்....கால நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ''சார்!'' நீட்டவில்லை. எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து ...
மேலும் கதையை படிக்க...
சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும் வந்திருந்தார். அந்த குடும்பத்திற்குப் பெரியப்பாவான தர்மராசாவும் வந்திருந்தார். பாகப்பிரிவினைக்கு உள்ளான சோமு, ராமு, பாலு, அவரவர் மனைவி மக்கள், முத்து இருந்தார்கள். சிக்கல்.... ...
மேலும் கதையை படிக்க...
நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது. எடுத்தேன். "அண்ணே..."- என் உடன் பிறந்த தங்கை. "என்ன அருணா..?" "அங்கே என் மாமியார் வாதங்களா...?" "எங்கே...?" "உன் வீட்டுக்கு ..." "என் வீட்டுக்கா...?!" "ஆமாம் !" "ஏன்..?" "கோபம். உன் வீட்டுக்கு வர்றேன்னு கிளம்பினாங்க...'' "யார்கிட்ட கோபம்...?" "சட்டைத் துவைச்சுப் போடலைன்னு காலையில மாமா என்னைத் திட்டுச்சி. இவங்க ...
மேலும் கதையை படிக்க...
இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும் அது தானாய் நடக்குதுன்னா.... மனசுல மகிழ்ச்சியும், புத்தியில பூரிப்பும் வராம என்ன செய்யும் ? விசயத்துக்கு வர்றேன். எனக்கு ஆத்மார்த்தமான நண்பன் ஒருத்தன். ...
மேலும் கதையை படிக்க...
புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். '' எதுடா... இது...? '' - அன்னபூரணி குரலில் லேசான பதற்றம். '' அலுவலகத்துல லோன் போட்டு வாங்கினேன். '' - அமர்ந்தான். '' ஏன்...? ...
மேலும் கதையை படிக்க...
பூங்காவின் ஓரத்தில் தன் மூன்று சக்கர வாகனத்தை விட்டு இறங்காமல் தூரத்தை வெறித்தான் தினகரன். அருகில் உள்ள சிமெண்ட் இருக்கையில் மாதவி. அதிக நேர வெறிப்பிற்குப் பின்....... ''நீ உன் முடிவை மாத்திக்கோ மாதவி..! "மெல்ல சொன்னான். "ஏன்...??...." "சரிப்படாது !" "அதான் ஏன்னு கேட்கிறேன்..!" "உன் காதலை என்னால் ஏத்துக்க ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் அறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சாவித்திரியிடம் அவள் தாய் சிவகாமி தயக்கத்துடன் போய் அமர்ந்தாள். '' என்னம்மா..? '' என்றவாறு தாயின் முகத்தைப் பார்த்தாள் அவள். '' ஓ.... ஒண்ணுமில்லேம்மா... '' தாயின் தடுமாற்றம் தயக்கத்தைப் பார்த்த சாவித்திரி... '' சும்மா ...
மேலும் கதையை படிக்க...
கண்டிப்பு..!! – ஒரு பக்க கதை
முதலாளிகள்..!!
பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை
மனிதன்..!
சோடைக்குச் சொத்து..!
அத்தை..!
எனக்கு எப்படி……?
விபத்து..!
காதல் ..?!!
உயிரில் கலந்த உறவு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)