எல்லாம் அவன் செயல் – ஒரு பக்க கதை

 

சுப்புவின் சுறு சுறுப்பைக் கண்டு வியந்தார் விநோதன்.

வழக்கமாய் இங்குதான் லிஸ்ட்டைக் கொடுத்து ஸடேஷனரி பொருட்களை வாங்குவார்.

அங்கு பார்த்ததுதான் அவனை. ஏன்தம்பி இதைவிட அதிக சம்பளத்துல வேலை தர்றேன் வர்றியா? என்றார்.

சரி என்றான் சுப்பு. விநோதன் ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றின் மேனேஜர். பணம் வசூல் பண்ண, பணத்தை பேங்கில் கட்ட நேர்மையான சுறுசுறுப்பான பையன் தேவைப்பட்டான்.

சுப்புவைப் பார்த்ததுமே முடிவு செய்துவிட்டார். வேலை தருவது என்று. அடுத்த வாரம் பணியில் சேர்ந்து விடுவான். அந்த விஷயத்தை சொல்லிவிட்டு, ஸ்டேஷனரி வாங்கிப் போக வந்தார் விநோதன்.

நானூற்று ஐம்பது ரூபாய் பில். ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். மீதி முந்நூற்று ஐம்பது ரூபாயைக் கொடுத்தான் சுப்பு.

மீதிப் பணம் அதிகமா கொடுத்திருக்கியே தம்பி! என்றார்.

ஆமா சார்! முதலாளி இல்லை. எனக்கு உதவப்போகும் உங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை இது. வச்சுக்கங்க என்றான் சுப்பு.

அவன் மீது வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாமே நொறுங்கிச் சிதறியது.

சாரி தம்பி! அந்த வேலை உனக்கு கிடைக்காது என்ற விநோதன், அவனை திரும்பிப் பாராமல் நடந்தார்.

- தமழ்நாயகி (4-1-2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
நீர்கொழும்பு நகரத்தைத் தாண்டி ஒரு ஒதுக்குப்புறமான அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த கிறிஸ்தவ பாடசாலை. அது கிறிஸ்தவர்கள் செறிந்து வாழும் பிரதேச மாதலால் அந்த பாடசாலையிலும் கிறிஸ்தவ பிள்ளைகளே அதிகம் படித்தனர். அன்று பாடசாலை ஆரம்பமாகி முதலாவது நாள். நான்காம் தரம் பூர்த்தி ...
மேலும் கதையை படிக்க...
ஆங்கில மூலம்: சீமமாண்டா என்கோஸி அடீச்சி தமிழில்: ஜி. குப்புசாமி நைஜீரியாவின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முதன்மையானவர். நைஜீரிய இலக்கியவாதிகளின் பிதாமகரான சினுவா ஆச்சிபீ, நோபல் பரிசு பெற்ற வொலே சொயிங்கா, மிகப்பிரபலமான பென் ஓக்ரி போன்ற மகத்தான கலைஞர்களை 1977இல் பிறந்த அடிச்சீ ...
மேலும் கதையை படிக்க...
தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இன்றைக்குத்தான் சார்ஜ் எடுத்தேன். . சார்ஜ்.. எடுக்கும்போதே நான் சமாளிக்க வேண்டிய சவால்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்தியா முழுக்க விஸ்வரூபம் எடுத்திருக்கும் வறட்சியின் கோர தாண்டவம் தமிழகத்தையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரம் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா. செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக் கணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாள். தன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு. கலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு. தன் ஆபீஸ் நண்பர்களின் மனைவிகள் ...
மேலும் கதையை படிக்க...
மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது. ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். " தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை ...
மேலும் கதையை படிக்க...
ஜேன் டீச்சர் ஒரு தேவதைதான்
தனிச்சிறை
தண்ணீர் விட்டோம்
மெசேஜ் – ஒரு பக்க கதை
ஸார், நாம போயாகணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)