எருமை – ஒரு பக்க கதை

 

”ஒரு எருமை வாங்கலாம்னு பார்க்கிறேன்…”

பலராமிடம் பேச்சை ஆரம்பித்தார் பூங்காவனம்.

”எதுக்கு எருமை? நல்லா யோசித்துதான் பேசறியா?”

”யோசிக்காம இருப்பேனா? கலப்படமில்லாத பால் கிடைக்குமே!”

”எனக்கென்னவோ சரியாப்படலே…எருமை யாருடைய வாகனம்? அதை வாங்கறேன்னு சொல்றியே…உனக்கோ வயசாச்சி…எருமை வந்த நேரம் ஏதாவது ஆயிட்டுதுன்னா…”

”அதில்லே பலராம்..நம்ம ராமசாமிகிட்டே ஒரு எருமை இருக்கு… அவனால பராமரிக்க முடியலயாம்…யாருக்காவது தானமா தள்ளிடலாம்னு பார்க்கிறான்..”

”அவனுக்கிருக்கற தொல்லைகள் தொலைய பரிகாரமா இருக்கும்…பயமாயிருக்கு… ஒண்ணுக்கு நாலு தடவையா யோசி…!”

சரிப்பா, நீ சொல்றதிலயும் நியாயம் இருக்கு. ‘பூங்காவனம் சென்டிமென்டா எருமையை வாங்கிக்கத் தயங்கறான்’னு நீயே என் சார்பில் ராமசாமிகிட்டே சொல்லிடேன்”

”இதைச் சொல்ல எனக்கும் தயக்கமாத்தான் இருக்கு…இருந்தாலும் உனக்காகச் செய்றேன்…” விடை பெற்றார் பலராம்.

சில நாள் கழித்துப் பூங்காவனம் ராமசாமியைச் சந்தித்தபோது எருமை பேச்சு எழுந்தது.

”அதை நம்ம பலராம் கேட்டான். கொடுத்து விட்டேன். அவனும் சந்தோஷமா ஓட்டிட்டுப் போயிட்டான். உன்னை மாதிரி சென்டிமென்ட் எதுவும் அவனுக்குக் கிடையாதாம்!”

பூங்காவனத்தால் பதில் பேசமுடியவில்லை.

அழுவதா இல்லை சிரிப்பதா? அல்லது எருமை மாதிரி கத்துவதா என்று புரியாமல் திகைத்து நின்றார்.

- பர்வதவர்த்தினி (12-10-09) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஓரிடத்தில் ஒரு முதியவள் இருந்தாள். அவளுக்கு ஆக மொத்தத்தில் ஒரே ஒரு பேரிக்காய் மரம் மட்டும்தான் சொத்தாக இருந்தது. குடிசையை ஒட்டி, நிறைய காய்களுடன் அது நின்றிருந்தது. ஆனால் ஒருபோதும் கிழவிக்கு ஒரு பழம் கூட கிடைக்கவில்லை. காய்கள் பழுக்கத் தொடங்கினால் ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல் தயாரித்துவிட்டு, பென்ஷன் பெற்று, திருச்செந்தூர் ஜில்லா போர்டு ரஸ்தாவில் பாளையங்கோட்டைக்கு எட்டாவது கல்லில் இருக்கும் அழகியநம்பியாபுரம் என்ற கிராமத்தில் குடியேறினார். ...
மேலும் கதையை படிக்க...
ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான். வைகாசி மாச அக்னி நட்சத்திர வெயில், தீயை அள்ளிக் கொட்டுகிறது. காற்றில்லாத வெயிலின் உக்கிரத்தில் முதுகுத் தோல் காந்துகிறது. இப்பவும்... எப்பவும் போலவே நீல ...
மேலும் கதையை படிக்க...
முதல்வாின் அலுவலக அறை திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ் உள்ளிட்ட பெரும் தலைகளின் முகங்களில் ஒன்றிலும் ஈயாடவில்லை.முதல்வர் பொாிந்துகொண்டிருந்தார்.'ஊர் உலகத்துலே நடக்காதது என்னய்யா இங்கே நடந்து போச்சின்னு இப்ப இவ்வளவு ஆர்ப்பாட்டமும் கலாட்டாவும் ? அப்பிடியே ஆட்சியைக் கவிழ்க்கப்போறாப்பலே! அங்கங்கே *தடுத்துநிறுத்தி/சுட்டுத்தள்ளி ...
மேலும் கதையை படிக்க...
எனது பைக் 98 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறது என்று ஸ்பீடோ மீட்டர் காட்டியது. அது ஒரு முன்னிரவுப் பொழுது, ரம்யமான இருள் எங்கும் பரவிகிடந்தது. நான் என்.ஹெச்(தேசிய நெடுஞ்சாலை) 7 பயணித்துக் கொண்டு இருந்தேன், நான் இவ்வளவு வேகமாக செல்வதற்கு ...
மேலும் கதையை படிக்க...
பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்
நாசகாரக் கும்பல்
மனித மனசு
கூனல்கள்
நீலத்தங்கமும் – காதலனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)