என்ன டிபன் சரோஜா..? – ஒரு பக்க கதை

 

இயக்குநரைப் பார்த்துக் கேட்டார் இசையமைப்பாளர் ராம், ‘’ஏன் சார், கண்டிப்பா ஒரு ரீமிக்ஸ் பாட்டு வேணுமா..?’’

‘’ஆமா..இப்ப ட்ரெண்ட் அதுதானே..? புரொடியூசரும் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாரே’’

‘சரி…போட்டாப் போச்சு’’ என்று வேண்டா வெறுப்பாக அந்தப் பாட்டை ரீ மிக்ஸ் செய்யத் துவங்கினான்.

‘’பழைய பாட்டும் இடையிடையே வர்ற மாதிரி பண்ணிடுங்க ராம்’’

‘’ஓ.கே’ என்று ரிக்கார்டிங்கில் இறங்கிய ராமுக்கு அந்தப் பாட்டு முடிய இரவு மணி ஒன்பதானது. பாட்டைக் கேட்ட டைரக்டரும், பிரமாதம் எனப் பாராட்டினார்.

ம்…புதுசா ஒரு பாட்டு போடுறதை விட்டுட்டு, பழைய பாட்டைப் போட்டு… மனம் சலித்தபடியே வீடு வந்து சேர்ந்த ராமை, அவன் மனைவி, ‘முதல்ல கை கழுவி விட்டு சாப்பிடுங்க’ என்றாள்.

‘என்ன டிபன் சரோஜா?’’

‘’காலையில் மீந்து போன இட்லியைப் பிச்சு உப்புமா பண்ணியிருக்கேன். இன்னைக்கு என்ன பாட்டு ரெக்காரடிங்?’’

‘’நீ பண்ணின அதே ரீமிக்ஸ்தான்’’ சிரித்தபடியே சாப்பிடத் துவங்கினான் ராம்.

- கா.பசும்பொன் இளங்கோ (2-1-2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
எழுதியவர்: அன்னதா சங்கர் ராய். வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும். இருபுறமும் ஆற்றங்கரைக் காட்சிகள்; முன்னால் ராங்கா மாட்டிப் பிரதேசத்தின் மலைவரிசை; கர்ணபூலி ஆற்றில் பயணம் தொடங்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம், போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம். அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்திற்கு பாட்டு என்றால் உயிர், ...
மேலும் கதையை படிக்க...
சைக்கிள் கேரியரில் மகன் சுரேஷுடன் பொருட்காட்சிக்குப் பயணமானார் ஆசிரியர் வேணுகோபால், வழியில் செடி கொடி மரங்களை பசுமையாய் கடந்தபடி. சாலையோரமாய் ஒரு பைக். சைக்கிளை கைகாட்டி, “ஏங்க…பைக் ரிப்பேராயிருச்சு. ஒர்க்ஷாப் வரைக்கும் தள்ளிட்டு வரணும். பணம் வேணா தர்றேன்’ என்றவரை மறுத்துவிட்டு சைக்கிளை ...
மேலும் கதையை படிக்க...
"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்" இந்த முறையாவது கிடைக்குமா... இது நம்முடைய மூன்றாவது முயற்சி... ஏன் இரண்டு முறை கிடைக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது.... ...
மேலும் கதையை படிக்க...
நாரைக்கிணறு, மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் தண்ணீர் வறட்சிக்குப் பிரபலம். நிஜமாகவே அந்த ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. ஒவ்வொரு பானைத் தண்ணீருக்கும் ஊரின் பெண்கள் குடத்தைத் தூக்கிக்கொண்டு நான்கு கிலோமீட்டர்கள் சென்று ...
மேலும் கதையை படிக்க...
ராணி பசந்த்
புரிந்துகொண்டவன் பிழை
உதவி – ஒரு பக்க கதை
மனசாட்சி சொன்னது
சாப வறட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)