கொல்கத்தா காளி ரொம்ப ஃபேமஸ் என்று நண்பர் சொன்னார். வேறு ஒன்றும் இல்லை. நான் அலுவலக விஷயமாய் கொல்கத்தா செல்வதாகச் சொன்னேன் அவரிடம். “போயிட்டு வாங்க. நாலு ஊருக்குப் போயிட்டு வந்தாத்தான் உங்களுக்கும் அனுபவம் கிடைக்கும்” என்றார்.
ஆகக் கிளம்பி வந்தாச்சு. அலுவலக வேலையும் சுலபமாய் முடிந்தது. என்ன.. எனக்கு ஹிந்தி தெரியாது. நான் போன அலுவலகத்தில் பெங்காலியும் ஹிந்தியும்தான் அதிகம். பாதி சைகையில், பாதி ஆங்கிலம். சமாளித்து விட்டேன். இனி ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். அரைநாள் மிச்சம். இரவு ரெயிலைப் பிடித்தால் போதும். அப்போதுதான் காளி கோயில் ஞாபகம் வந்தது. மினி பஸ்ஸில் ஏறி காளிகாட்டில் இறங்கி விட்டேன்.
“காளி மந்திர் கிதர் ஹை?”
“ஸீதா சலோ”
நடந்தேன். இருபுறமும் கடைகள். என்னைச் சிலர் துரத்த ஆரம்பித்தார்கள்.
“நீங்க வரிசையில காத்திருக்க வேணாம். நேரா மூலஸ்தானத்துக்குக் கூட்டிகிட்டு போறோம்” என்றார்கள் ஹிந்தியில். நான் பதிலே சொல்லவில்லை. நண்பர் முன்பே எச்சரித்து இருந்தார். என்னைத் துரத்தி அலுத்துப் போய் வேறு நபரைத் தேடி நகர்ந்தார்கள். கோவில் வாசலில் அர்ச்சனை சாமான்கள் விற்கும் கடை. ஒரு புறம் செருப்பு விட வசதி.
“ஆயியே..”
பெஞ்சில் அமர்ந்தேன். ஷூவைக் கழற்றி வைத்தேன். காளியைத் தரிசித்தால் போதும். கடைக்குள் நுழையும் முன்பே பார்த்து விட்டேன். ஏகக் கூட்டம். குனிந்த தலை நிமிராமல் – அர்ச்சனை சாமான் வாங்க வற்புறுத்துவார்களோ என்ற பயம் – வெளியே வந்தபோது கடைக்கார பெண்மணி ஹிந்தியில் வேகமாய் ஏதோ சொல்வது கேட்டது. நான் திரும்பவில்லை.
பின்னாலேயே துரத்தி வந்தார். அவர் கையில் தண்ணீர்ச் செம்பு. “கையைக் கழுவிக்குங்க.. ஷூவைக் கழற்றியதோட போறீங்களே”
பாஷை புரியாவிட்டாலும் அவள் சைகையின் அர்த்தம் புரிந்தது.
கையைக் கழுவிக் கொண்டேன். மனதையும் தான்!
- மே 2007
தொடர்புடைய சிறுகதைகள்
கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று.
சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் திகைப்பு.
"உள்ளே வரலாமா"
"வா..ங்க"
சுதாரித்துக் கொண்டு அழைத்தாள். உள்ளே புழுக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.
"தினு ஸ்கூலுக்குப் போயிருக்கானா"
தலையசைத்தாள். கூடவே குழப்பமும். நான் ...
மேலும் கதையை படிக்க...
எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ? சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்த்போது.
உண்மையில் சந்திராதான் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.
"பாலா.. நீதானே.. ஸ்ஸ்.. நீங்க"
என் கணிசமான தொந்தி.. மூக்குக் கண்ணாடி.. முன் வழுக்கை.. காதோரம் மட்டுமின்றி ...
மேலும் கதையை படிக்க...
வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.
"பார்த்து நடந்துக்குங்க! கோபப்பட்டுராதீங்க!" எனக்குள் சுள்ளென்றது.
"எனக்குத் தெரியாதா?" என்றேன் எரிச்சலுடன்.
கையில் கனத்துக் கொண்டிருந்த பை உள்ளே எவர்சில்வர் சம்படத்தில் இனிப்பும், முறுக்கும். அவ்வளவும் சித்தப்பா வீட்டுக்கு.
மூன்று நான்கு வருடங்களாய்ப் பேச்சு வார்த்தை அற்றுப் போன குடும்பங்கள். என்னவோ ...
மேலும் கதையை படிக்க...
தலைப்பே வினோதமாய் இருக்கிறதா? நாம்தானே பேசுவோம். தொலைபேசியே பேசுமா? எனக்கும் ஆச்சர்யம்.
ஒரு முக்கிய நண்பர். எழுத்தாளர். அவருக்கு ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு என்று முடிவகள் பார்த்ததும் நானே பரிசு வாங்கிய உற்சாகம். அழைத்துப் பாராட்டுவோமே என்று ரிசீவரைத் தொட... "ஹலோ.." ...
மேலும் கதையை படிக்க...
'உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்' ஒற்றை வரியில் ஒரு கார்டு. எழுதிய நபரின் பெயர் கீழே 'ரகு'.
'லெட்டர் ஏதாவது?' என்ற வழக்கமான கேள்விக்குப் பதிலாக இன்று ஒரு கார்டு.
"ஏம்பா வேற எதுவும் எழுதலே?" என்றாள் ராஜி.
"இன்னும் என்ன எழுதணும்?"
"நிறைய எழுதலாம்"
"என்னன்னு சொல்லேன்"
புவனா கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவன் மட்டும் இல்லாதிருந்தால்?