எண்ணமே வாழ்வு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 9,372 
 

காலை தினசரிகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலதிபர்; வேணுகோபாலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு தினசரியில் அவரது கம்பெனி உற்பத்தி திறனில் குறைந்த விட்டதாகவும், இதனால் பங்கு சந்தையில் கம்பெனி பங்குகளின் விலைகளும் சரியும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததே அதற்கு காரணம்.

மனதுக்குள் குறித்துக் கொண்டார்….. கம்பெனி போனவுடன் கம்பெனி செகரட்டியைக் கூப்பிட்டு, போர்டு மீட்டிங் போட ஏற்பாடு செய்ய சொன்னார் ஸார் “இப்ப என்ன அவசரம் போர்டு மீட்டிங்குக்கு…. என முடிப்பதற்குள் என்ன அவசரமா? பேப்பர்லாம் படிக்கிறதில்லையா… .. போய் முதல்ல ..அதப் படிங்க, நம்ம கம்பெனி பங்கு விலைகள் சரியும் போட்டிருக்கு அதுக்கு காரணம் உற்பத்தில ரொம்பவும் குறைஞ்சு போச்சாம்.. நான் சொன்னதை செய்யுங்க” என்றார்

போர்டு மீட்டிங்கில் ஆளுக்கொரு கருத்தைச் சொன்னார்கள். அதில் ஒன்று கம்பெனியின் குறிப்பிட்ட ஒரு பிரிவில் போர்மேன் இல்லாததால் சரியான கண்காணிப்பு இ.ல்லை அதனால் உற்பத்தி குறைந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்;.

இத சொல்றதுக்கு, ஒரு ஜி.எம், எச்.ஆர்; போஸ்டிங்கா….எல்லாம் ஏ.சி ரும்லேயெ இருங்க…. நல்லா விளங்கிடும் என அலுத்துக் கொண்டார். ஏன்ன செய்வீங்களோ தொpயாது அடுத்த மாசம் நம்ம கம்பெனி உற்பத்தி அதிகாpக்கணும்… இல்லேன்னா நீங்களாவே வீட்டுல இருந்திடுங்க இங்க வரவேண்டியதில்ல என கோபமாக பேசி….. மீட்டிங்கை இத்தோடு முடிச்சுடலாம் நான் பெங்களுh; கான்பிரன்ஸ் போய்ட்டு வந்து மீதியை பேசிக்கலாம்ன்னு முடித்துக் கொண்டார்

ஜி..எம்-மை கூப்பிட்டு ….ஒங்ககிட்ட ஒரு அட்டடெண்டர்; வேலை செய்யறானே அவனை என் கூட அனுப்பி வை என்றார். அவனை எதுக்கு ஸார்; கான்பிரன்}க்குஷல்லாம் கூப்பிட்டு போறீங்க அட்டடெண்டருக்கு கம்பெனிய பத்தி என்ன தெரியும் என்று சொல்ல ..

கம்பெனி பத்தி தெரியுதோ… இல்லியோ என் கூட துணைக்கு வரட்டும் என்றார்;. அதன்படியே அட்டடெண்டர் ; மருதமுத்து தொழிலதிபர்; கூடவே போனான்.

கார் ; புறப்பட்டு வேலூர்; தாண்டி ஒரு கிராமத்தை தாண்டி, சுற்றிலும் யாருமில்லா நடு ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் பொழுது “கடாமுடா “சத்தம் கேட்டது. டீரைவர்; காரை நிறுத்தினார்;. என்னப்பா ஆச்சு பாரு என்றார்; எம்.டி

டீரைவர்; காரில் இருந்து இறங்கி சுற்றி பார்க்க, காரின் முன் சக்கரத்தில் மூன்று நட்டுக்கள் கழன்றி விழுந்து விட்டிருந்தன. டிரைவர்; தலையைச் சொறிந்து கொண்டே விவரத்தை சொல்ல டென்ஷன் ஆனார் என்னவோ “போங்கப்பா பணம் போட்டு தொழில் பன்றதுக்கு ஒங்களை மாதிரியே வேலை செய்துட்டு போயிடலாம் என முணுமுணுத்தார்.

கவனித்துக் கொண்டிருந்த மருதமுத்து, டிரைவர்; அண்ணே என்னன்னு பார்க்கலாம் என்று காரில் இருந்து இறங்க போக. “டிரைவரே கையை பிசையும் போது அட்டடெண்டரான நீ என்னப்பா செய்வே நீ ஒக்காரு போன் பண்ணி யாராவது மெக்கானிக்கை வரச்சொல்லலாம்” என்றார்; எம்.டி மெக்கானிக் வேண்டாம் ஸார்; “நாமளே பார்த்து சரி பண்ணிடலாம் என கீழே இறங்கி டிரைவர் ; அண்ணே எத்தனை நட்டுக்கள் கழன்றி விழுந்திருக்குன்னு கேட்க … “நாலு நட்டுக்கள்-ப்பா” என்றாh;.

அண்ணே, முணு சக்கரத்துலேயேயும் ஒவ்வொரு நட்டுக்களை கழற்றிடுங்கோ. அதனால பிரச்னை ஆகாது. மீதி இருக்கிற போல்டு நட்டுக்களால அட்ஐஸ்ட் ஆயிடும். என முணு நட்டுக்களை கழற்றி முன்சக்கரத்தில் மாட்டி விட்டு காரில்ல் ஏறினார்கள் டிரைவரும், அட்டடெண்டர்; மருதமுத்துவும்..

என்னப்பா மருது…. யோசனையை சரியான நேரத்தில சொன்னே. அட்டடெண்ட; வேலைப் பாh;க்கிற ஒனக்கு இது எப்படி தோணியதுன்னு கேட்க…. ஸார்; ஒங்களுக்கு என்னை அட்டடெண்டராகத்தான் தொpயும்.. ஆனா உள்ளுக்குள்ளே மெக்கானிக்கல் என்ஐனியரிங் ஆசை ஓடிக்கிட்டே இருக்கு .. காலேஜில சேர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஒரு வருஷம் படிச்சேன். ஆனா குடும்ப வறுமைக் காரணமா பாதியிலேயே விட்டுவிட்டு கிடைத்த அட்டடெண்டர் வேலையை வைச்சு ஜீவனம் நடத்துறேன் ஸார் ” என்றான் மருதமுத்து. . பெங்களுர் கான்பிரன்ஸ் முடிந்து கம்பெனி திரும்பியபின்…..

ஜி..எம்-மை கூப்பிட்டு ….. மருதமுத்துவுக்கு போர்மேன் வேலைக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்க சொன்னார்;. ஸார்; “அட்டடெண்டருக்கு போய்….போர்;மேனா…? என கேட்க … அந்த அட்டடெண்டரைப் பத்தி எனக்கு தெரியும் நீங்க ஆர்டர் போட்டு கொண்டு வாங்க என சொன்னார்.;.

மறுமாதம், எந்த தினசரி உற்பத்தி திறனைப் பற்றி குறைகூறியதோ… அதுவே கம்பெனியின் உற்பத்தி திறன் திடிரென உயர்ந்திருப்பது ஆச்சரியமே…. பங்குச்சந்தையில் முண்ணனியில் உள்ளன என்றும் குறிப்பிட்டு இருந்ததைப் படித்த தொழிலதிபர்; வேணுகோபால்… கார் ரிப்பேர் ஆனது கூட “போர்மேனை” அடையாளம் காணத்தானோ என நினைத்து திருப்தியானார்

(நமது தொழில் உலகம் இதழ்- ஜீலை-2015 –ல் வெளியானது)

Print Friendly, PDF & Email

1 thought on “எண்ணமே வாழ்வு

  1. கதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. இதுதான் ஒரு படைப்பாளிக்கு ஊக்கமளிக்கும் உற்சாக பானம். இதைவிட வேறு எதுவும் கிடையாது நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *