எட்டாப் புத்தகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 5,937 
 

பொன்னம்பி, அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்.”நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!”என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை..

மனோவும் ,சதிஸும் …கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாய் விட் டிருந்தன‌.

.மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒரு த்தன். ரமேஸினுடைய‌ அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான்.சதிஸ்,கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்தவ‌ன்.மனோவிற்கு நண்பன். அதனால் இவனுக்கும் பழக்கம் .பிறகு,வேற வேற பள்ளிக்கூடங்களிற்கு படிக்கப் போய் ….இப்ப காலமும் எவ்வளவு மாறி… விட்டிருக்கிறது சதீஸ் பட்டப்படிப்புக்கு தெரிவாகி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவன்.

முதல் நாள் அமைப்புத் தோழர்களான பொன்னம்பியும்,ரகுவும் வ‌ந்திருந்தவர்களின் புனைப்பேரின் கீழ் (விபரங்களை)சிறு குறிப்புக்களை திரட்டிக் கொண்டிருந்தார்கள்.பொன்னம்பிக்கு இவனை ஏனோ பிடித்திருந்தது. நண்பனாகி …இந்த கேள்வியை எழுப்புகிறான்.

இவனுக்கு எப்படி ஒரு விடுதலை அமைப்பு இயங்கிறது என்பதே தெரி யாதவன். ஏழவே, ‘போராளிகள்’ என்பவர்கள் ஆயுதம் தூக்கியவர்கள் என்ற படிமாணமே அவன் மனதில் இருந்தது. எனவே,விடுதலையைப்பற்றி தெரிவதற்காகவும்…கூட‌ இங்கே வீட்டை விட்டு ஓடி வருகிறான். ஆமா, விடுதலை என்றால் என்ன?,இப்படி எழுந்த ஊர்ப்பட்ட கேள்விகளிற்கு விடைகளை தேடிய பயணம் தான் இது.

விடுதலைப் பற்றி தெரியாத மாதிரி…., படிக்கிற காலத்திலேயும் விளையாட்டின் அவசியமும் அவனுக்கு அவ்வளவாக‌ தெரியாமல் இருந்திருக்கிறது.

கிராமத்தான் . கிராமப் பள்ளிக்கூடதிற்கு மாற்றாத் தாய்யின் பிள்ளைகள் போன்ற புறக்கணிப்புக்கள் வேற அதிகம் ‌, ஆசிரியர்களிற்குப் பஞ்சம்.சுகாதாரம்,கணிதம்,விஞ்ஞானம்…என எடுக்கிற லிங்கம் மாஸ்ர ரை… தமிழ்ப்பாட திற்குப் போட்டிருக்கிறார்கள். இவர் பத்திரிகையில் எழுதுகிற பிறவி,அதிபர், அவ ருடன் பேசி ஒருமாதிரி சாதித்து விட்டார்.

அதிபருக்கு ‘உடற் பயிற்சிப் பாடத்திற்கு முறையாகப் பயின்ற ஆசிரயர் தேவை என்ற சிந்தனை இருக்கவில்லை.இதை அவசியமற்றப் பிரச்சனையில்… ஒதுக்கி விட்டார்..எனவே,அங்கே மற்றைய பள்ளிக்கூடங்களைப் போல கால்பந்து,கிரிகெட்(கொக் போலில் வேறு விளையாட வேண்டும், கிராமத்தில் நினைத்துப் பார்க்கவே வேண்டாம்),எல்லே.. என …விளையாட்டுக் குழுக்களில் ஒன்றிரண்டு கூட‌ எழ வாய்ப்பு இல்லாமல் போய் விட்டிருந்தது.

கைத்தொழில் பேட்டைகள் இருந்தால் அதில் வேலை செய்பவர்கள் இருப்பார்கள் போல, இங்கேயும் …கணிசமாக .மாணவர்கள் பங்கு பற்றியிருப்பார்கள்.

இவற்றை விட சாரணர்,பொலிஸ்,ஆமிக்கடேஸ்…என அமைப்புகளும் நகரப் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றன.கிராமங்களில் அவற்றைக் கனவு தான் காண வேண்டும். இவற்றை விட வும் அங்கே இலக்கியக்குழுக்கள்….என கலை விழாக்களை நடத்துறவையும் இருக்கின்றன. கிராமத்து மாணவர்களிற்குக் கதைப்புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் குறையுறதுக்கு இதுவும் ஒரு காரணம். தாமரை இயக்கம் ,கிராமங்களை பட்டினசபையாக(ஏர்பன்)தர முயர்த்த விரும்பின.இச்சபை உறுப்பினர்கள் தேர்த்தல் முறைகளிலே தெரிவாக வேண்டும்.அவர்கள் ,எல்லாவற்றையும் சம நிலைக்கு தரம் உயர்த்த முயல்வார்கள்.இவை மாகாணவரசுடம் தொடர்புடையதாக இயங்கும்.

இனவாதச் சிறிலங்காவிலும் ஜனாதிபதியாக தெரிவாகியவர்களில் ஒருவரான பிரேமதாசா,ஆச்சரியப்படும் வகையில் இந்த முறைகளில் மாற்றங்களைச் ஏற்படுத்திக் கொண்டு வந்தார்.தமிழ் தரப்பில் போராடிய ஒரு குழுவான கழுகு,அவரை அவச‌ரப்பட்டு அநியாயமாகப் படுகொலை செய்து விட்டது.ஓரணியாகத் தெரியாத விடுதலைக் குழுக்கள்,இப்படித் தன்னிச்சையாக செயல்படுவதால்…நம் விடுதலையும் எத்தனை தூரம் பாதிக்கப் பட்டு விடுகின்றது.

அவன் பள்ளியை விட்டு விலகிய பிறகு,உப அதிபராக புதிதாக‌ வந்த டாஸ் மாஸ்ரர், (நகரத்து மாஸ்ரராக இருந்தவர்) “என்ன,சேர்,நீங்களும் படிப்பு, படிப்பு என் று மாணவர்களைச் சாகடிக்கிறீர்கள்,படிப்பைப் போல மாண‌வர்களிற்கு விளையாட்டும் முக்கியம் அல்லவா “என தானே பொறுபெடுத்து, கணித ஆசிரியர் வெளிய உள்ள விஜய்க் கழகத்தில் விளையாடுற சிறந்த‌ கால்பந்து வீரர், இதைப் போல வேற சில ஆசிரியர்களும் பாடங்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்,அவர்களை எல்லாம் சேர்த்துக் ஒரு குழுவாக்கிக் கொண்டு மாணவர்கள் மத்தியில் ஒரு கால்பந்துக் குழுவை கட்டி எழுபினார் .

உப அதிபர் என்பதால் அவர்க்கு பாடங்கள் குறைவாக இருந்தன.நேரத்தை,ஒதுக்கிக் கொ ள்ள முடிந்தது. கிடைத்த ஒய்வு நேரத்தையும் கூட இதற்குச் செலவிட்டிருந்தார்.அவர் ஒரு பட்டதாரி ஆசிரியர் வேற ‌,தவிர,கிரிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் எ ன்பதால் மேலும் பலரைத் தெரிந்திருந்தன‌. தனிநாயகம் அடிகளைப் போல‌ அவரிடமும் ஒர் விரிந்தப் பார்வை கிடந்தது.

தற்போது அந்த பள்ளிக் கூடமும் வே ற்று ஊர்களிற்குச் சென்று விளையாடி ….’வெற்றிகளைக் குவித்து கலக்கிக் கொண்டிருக்கின்றது..

மாணவர்கள் டாஸ் மாஸ்ரையே நன்றியுடன் போற்றுகிறார்கள் !

அவர் புதிதாக வந்து ஒரு வருசம் கூட ஆகவில்லை, ஆசிரியர்கள் ஸ்மார்ட்டாக இருந்தால் சிலவற்றை சாதிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக் காட்டு.

இவருக்கு கிருஸ்தவ வட்டம்,மற்றும் கொழும்பில் இருக்கிற‌ சிலரிடம் கூட பரிச்சயம் இருக்கிறது.அதனாலும் ….. பள்ளிக்கூடத்திற்கு உதவிகள் கிடைக்க வழிகோ லுகிறார். “வெளிநாடுகளிலிருக்கிற பழைய மாணவர்களிடமிருந்தும் உதவிகளைப் பெறப் பாருங்கள் சேர்”என அதிபரையும் தட்டி தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார் .

ஆனால்,

….. அதற்கு முதலே இந்த‌ விளையாட்டுக் குறைப்பாட்டை கிராமம் வெளியே .ஓரள‌வு சீர் செய்தே வைத்திருந்தது.ஆனால்,சாதிப் வேலிகளால் அவை எல்லா மாணவர் களையும் சென்றடைந்திருக்கவில்லை.

கிராமத்தில் பிரபலமான விஜய கழகம் இருக்கிறது உங்களிற்குத் தெரியும்,அதைப் பார்த்து கிளியண்ணையால் கட்டப்பட்ட வள்ளுவர் கழகமும் இருந்தது, அந்தளவிற்கு இல்லா விட்டாலும் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த குலம் மணமுடித்து இங்கே ஒரு பகுதியில் குடியேறி ய போது கட்டிய வீரா கழகம்,தவிர அவ்வளவாக உறுதியற்ற ராமன்,சூரன் என்ற கழகங்கள் என்பன இருக்கவே செய்தன. கடைசி இரண்டும் மச்சுக்கென தீடீர் என ஆட்களைச் சேர்த்து விளையாடுற கழகங்கள்.தொடர்ச்சியாக விளையாடுபவை அல்ல.தவிர சங்கானை உப அரசாங்கப் பிரிவில் பதிந்து எல்லாம் மோதுறவையும் இல்லை.

வீரா தொய்வு கண்டாலும் பெரும்பாலும் பங்கு பற்ற பிரத்தனமாவது செய்யும்.விஜயமும் ,வள்ளுவரும் கட்டாயம் பங்கு பற்றுகிறவை.பழையவர்கள் கழற,புதியவர்களைச் சேர்த்துக் கொண்டு வளர்கிறவை!

அவற்றின் அமைப்பில் இளைஞர்கள் அல்ல, பெரும்பாலும் கல்யாணம் கட்டிய பல்வேறு வேலைகளில் இருந்தவர்களே இருந்தார்கள்முன்னாள் விளையாட்டு வீரர்களான அவர்கள் ….வழி நடத்திச் சென்றார்கள். இரண்டு மூன்று தடவைகள் ரமேஸுக்கு படிப்பித்த கணித ஆசிரியரே அதன் தலைவராக இருந்திருக்கிறார்.

பலமான வேர் விட்ட‌ கழகங்கள்.

யார்?, இந்த விஜய்யைக் உறுதியாக கட்டுவித்தார்கள்? என சரிவர தெரியவில்லை. அங்கே, மணமுடிக்க வந்த வட்டுக்கோட்டையாட்க ளே அத்திவாரத்தைப் போட்டவர்கள் எனக் கேள்வி.வட்டுக்கோட்டையும் வடமராட்சியைப் போன்ற படிப்பில் எழுச்சியுறுகிற ஊர்.

அங்கே,சேமலாப நிதி,ஆயுள் காப்புறுதி,கோவில் நலக்குழுக்கள்,மார்க்சிசம் பக்கம் கவரப்பட்டவர்கள்,நிறைய டியூசன் மாஸ்ரர்கள்,அதனால் பல்கலைக்கழகத்திற்குச் கணிசமாக செல்கிறவர்கள்… பண்டித பரீட்சைகளில் … தேறிய தமிழ் மொழியில் மாற்றம் செய்பவர்களை எதிர்த்துப் போராடுற மரபுக்குழுக்கள் என …அணியே பரந்து கிடக்கின்றன‌.

.எனவே அங்கே இருந்து வந்தவர்கள் இங்கே வந்து சட்டக் கோர்வை களை தயாரித்துக் கொண்டு உறுதியாக கட்டியிருப்பார்கள் என்பது நம்பக் கூடியது தான்.

பிறகு, தெற்கராலியில் இருக்கிற‌’வாலையம்மன் கோவிலடி’க்கும் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் இவர்களைப் போல அதிகமாக படித்தவர்களாக‌ இல்லா விட்டாலும் அத்தன்மைகளிலே இருந்தார்கள். அராலியில் கடற்றொழில் செய்பவர்கள் குறைவாக இருக்க, செய்பவர்கள் அதிகமாக‌ கடற்கரைப் பகுதியான வாலையம்மன் கோவிலடியில் இருந்தார்கள்.

இங்கிருந்து நாவாந்துறைக்கும் மணமுடித்துச் சென்றவர்கள் (அண்ணன்,தம்பி,மச்சான்,மாமா…என உறவுகள்)அங்கும் பலமான விளையாட்டுக் கழகங்கள் எழக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு அங்கே விளையாட்டு மைதானங்கள் அவ்வளவாக கிடைக்கவில்லை போலவே படுகிறது.கத்தோலிக்க மதக்குருக்கள் தம் சேர்ச் வளவுகளை மைதானமாக பாவிக்க விட கிருஸ்தவ மததிற்கு மாறி இருக்கலா ம்.அல்லது கடற்றோழிலில் துயரங்களைப் பெற்ற போது அவர்களது மனதிற்கு கிட்டவாக‌ வந்த குருமார்களால் கவரப்பட்டு…மாறினார்களா?தெரியவில்லை.எல்லாம் சாத்தியம் தான். நாவாந்துறை ஒரு கிருஸ்தவ வலையம்.

இன்றும் அங்கிருக்கும் ஒரு தாய்க்கழகம்(கால்பந்து )தீபாவளித் தினமன்று இங்கு வந்து விஜய கழகத்துடன் நட்பு ரீதியாக மோதுகிறது … தொடர்கிறது. அந்த மச்சைக் காண இரண்டு கண்கள் பத்தாது. ஆட்டத்தை விட்டு கண்கள் இமைக்க மறந்து விடும். சென்றல் ,சென் .ஜோன்னைப் (கல்லூரிகளைப் )போல விளையாடினாலும் வெற்றி தோல்விகளை இரு பகுதிகளுமே பொறுட்படுத்துவதில்லை. இதெல்லாம் சிறுவயதிருந்தே நடைபெறுகின்றன தான் .

ரமேஸ், அறியாதவனாக இருந்திருக்கிறான். பிறகு, பார்க்கிற போதே “எத்தனை ‘ சுப்பரான மச்சுக்களை’ எல்லாம் தவற விட்டிருக்கிறேனே” என‌ நிரம்ப‌ கவலைப்பட்டிருக்கிறான். அவனுடைய பிராய்ய காலத்தில், வீடு,பள்ளி,திருவிழாக்காலங்களில் கள்ள இளளீர்(ஒரு,இரு தடவைகள் மட்டுமே) பறிக்கிறது…எனவே அயல் பெடியள்களுடனே கழிந்திருக்கின்றன.சிலவேளை கேணீகளில் நீச்சல் அடித்திருக்கிறான். அவ்வளவு தான். அதுவும் உண்மையில் நீச்சல் இல்லை.தவளைத் தனமான வெறும் மிதப்பு தான்.

இவை…கூட வெகு குறைவான தடவைகள் தாம். இவற்றை.. எல்லாம் பயிற்சிகள் எனச் சொல்ல முடியாது.

ஒரு விளையாட்டில் அல்லது ஓட்டத்தில் எல்லாம் ஒரு துருவ நட்சத்திரமாக‌ பிரகாசிக்கவில்லை.

விளையாட்டுக்கள்… எல்லாமே பலவித நுட்பங்க‌களைக் கொண்டவை அவற்றுக்குள் நுழையாத வரைக்கும் எதுவுமே தெரிய வராது.உடலில் ஒருவித கடிகாரம் இயங்கிறது ,நெளிந்து வளையக் கூடைய லாவகம் எல்லாம் இருக்கின்றன‌.எந்த பெடியளுமே விடாமுயற்சியாக,முறையாக, பயின்றால்…வெற்றியை அடையக் கூடியயவர்களே.

எல்லாருக்குமே இ டைப் பகுதியிலிருந்து குண்டலம் என்கிற சக்தி மேலெழுகிறது என சித்தர்கள் கூறுகிறார்கள். முறையான‌ உடற்பயிற்சிகள் உடலை கட்டுமஸ்சாக்கிறது.யோகா,மனதைக் கெட்டிப்படுத்துகிறது. எவருமே கழுதை,சனியர்‌,சுட்டுப் போட்டாலும் வராது என்பவ ரில்லை.

ஒரு காலத்தில் கிரீக் தேசம் அனைத்து ஆண்களையுமே மாவீரர்களாக வளர்த்தெடுத்திருக்கின்றது.அது ஒரு அறிவுசார் முயற்சி.

ஆனால் ,அவர்களும் கூட‌ இயக்க மோதல்களைப் போல ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு குழப்ப நிலையிலேயே கிடந்தார்கள் என்பது வேற விசயம். அவர்கள் நம்மவர்களைப் போல் முழுமையாக ஒற்றுமையற்றவர்களாக இராது சில குழுக்களிற்கிடையில் ஐக்கியப்பட்டு,ஜனநாயகக் கட்டமைப்புக்களாக விரிந்து முறையான அரசுகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். சங்க காலத்திற்குப் முதலே முதலில் ஜனநாயகக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியவர்கள் கிரேக்கர்கள் தான்.

பல நாடுகளில் பரவலாக மன்னராட்சி மாறி,ஜனநாயக அரசாக மலர பிரான்சு நாடு ஊக்கியாக இருந்தது.மார்க்ஸ் கண்டு பிடித்த கொள்கைகளை லெனின் ரஸ்சியாவில் நடைமுறைப் படுத்தியது போல, இருந்த பிரான்சு, .பிறகு தன் முற்போக்குப் பாத்திரத்தைக் கை விட்டு விட்டது, ஓர் துர்ப்பாக்கியம்!

ரமேஸே, எ.லெவல் சறுக்கிய பிறகே, ஞானம் வரப் பெற்று மிக தாமதமாக வே விளையாட்டின் அருமையை உணர்ந்து…மாலையில் மைதானத்தில் கூடப் படித்த விஜய விளையாட்டுக்கழகப் பெடியள்களுடம் சேர்ந்து கால்பந்து … தட்ட போய்யிருக்கிறான். படிக்கிற போதே தட்டியிருக்கலாம் அப்ப,அவனுக்கு யாருமே விளையாட்டின் அருமையை வலியுறுத்தி சொல்லிக் கொடுத்திருக்கவில்லை எத்தனை புத்தகங்களை வாசித்திருக்கிறான்,அவ னே அறிந்திருக்க வேண்டும், தவறி விட்டான். தவறுகள் எப்பவும் கடிக்கவேச் செய்யும்.

எப்பவும் நிலவுற ஆசிரியையின் மகன் என்கிற கெளரவம் இருக்கிறது கழக நண்பர்களும் சேர்த்திருப்பார்கள் தாம். அறிவாந்த சமூகமாக இருப்பது எத்தனைத் தூரம் தேவை என்பது பெற்றோரிற்கு ஏன் தான் புரிவதில்லை

அவ‌னுக்கு, அப்படி விளையாட்டுக்கழகங்கள் சூழ இருக்கின்றன என்ப தே தெரியாத படு முட்டாளாக இருந்திருக்கிறான். நினைத்துப் பார்க்க ….வெறுப்பாக சலிப்பாக இருக்கிறது. நகரப்பள்ளிக் கூடத்திற்கு செல்ல வெளிக்கிட்ட பிறகே தீபாவளிக்கு,.தீபாவளிக்கு நடைபெறுகின்றன என அறிந்து ….நடைபெ ற்ற பெரிய மட்சுகளைப் போய் பார்த்திருக்கிறான். அருமை தெரிந்த பிறகு மாலையில் நடைபெறுகிற பயிற்சி ஆட்டத்தில் போய், கலக்க ‌முடியவில்லைவில்லை ..எ.லெவலில் போய் என்ன ஆட்டம்? என்ற குழப்பம்.

பரீட்சைகளில் சறுக்கி விழுந்து தேவதாசாகி நைந்து நூலாகி,நாலைந்து கோல்ட் லீவ் சிகரட்டுகள் எல்லாம் ஓரேயடியாய் புகைக்கிறது ஏற்பட்ட பிறகே, பயிற்சி எடுக்க‌ ஆடுறதைப் பார்த்துக் கொண்டு ஒரு சோகப்பிறவியாய் நிற்கிற போதே,”ஏண்டா பார்த்துக் கொண்டு சும்மா நிற்கி றே,இறங்கி ஆடன்”என கருணானந்தம் அழைக்கா விட்டால்..அவன் எங்கே இந்த‌ கால்பந்தை ஆட போறான் ? , வொலிபோலின் விதிமுறைகள் கொஞ்சம் ‌ தெரிய வர‌ப் போகின்றன‌ .

அவனைப் போன்றவர்களிற்கெல்லாம் பள்ளிக்கூடங்கள், வாய்யிலே வாழைப்பழத்தை வைக்கிற மாதிரி தான் விளையாட்டுத்துறையிலும் தள்ளி விட வேண்டும்…கை விரல்கள் 5ம் வேறு பட்டிருப்பது போல பெடியள்களும் ஏற்றத் தாழ்வுகளில் வேறு பட்டே கிடக்கிறார்கள் . சிலர் படுகுழியில் கிடக்கிறார்கள்.

சுகாதாரப்பாடங்களிலும், பற்களை பிரஸ் கொண்டு (விலை காரணமாக ..எந்த வீடுகளிலும் சிறுவர்கள் பாவித்ததாக …தெரியவில்லை)விளக்கிறதும்,பல் நூல் பாவித்து பல் இடுக்குகளில் இருப்பதை அகற்றுவதையும் பழக்கத்தில் கொண்டு வராததால்..(. சொல்லிக் கொடுக்காததால்)பிற்காலத்தில் சூத்தை,பற்சிதை வுகள் என ஈழத்தில் நிறைய பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளியிலேயே கவனிப்புக்களைச் செய்து விடுகிறார்கள். அங்கே,வீடற்ற பிச்சைக்காரரின் பற்கள் கூட வெள்ளை வெளேர் என .. உறுதியாக பளீச்சிடுகின்றன.

மாகாணவரசுகள்,பெரிய விசயங்களில் மட்டுமில்லாமல் பல பல சிறிய சிறிய விசயங்களையும் கூட‌ பூதக் கண்ணாடியை வைத்து வைத்துப் பார்க்கப் பழகவும் வேண்டும்.

சில பகுதிகளில் கோவில்த் திருவிழாக்களில் சிலம்பாட்டம் எல்லாம் நிகழ்கின்றன.இங்கே,திருவிழாக்களில் சூரன்போர் ஆட்டத் த்தோட சரி, வேற‌ எந்த ஆட்டமும் நடைபெறுவதில்லை. ஒருகாலத்தில் சுன்னாகத்தில் ஜல்லிக்கட்டுகள் நடை பெறா விட்டாலும் கூட மாட்டு வண்டி ஓட்டங்கள் புளுதியைக் கிளப்பின.

இந்தியாவின் நிலத்துண்டான இலங்கை வெடிப்புக்குள்ளாகி விலகிய தீவாகியதால் அங்கத்தைய கலாச்சாரமும் தொடர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது தான் . இங்கே,.தொடக்கத்தில் எல்லா மே ……நிகழ்ந்திருக்கலாம். மனநோய்க்குள்ளாகிய சிங்கள‌ (மக்கள்) கூட்டம் , இவர்களுடைய.காலாச்சாரத்தை அடக்கி அழிக்க முனைகிற‌ போது மெல்ல மெல்ல நின்று போய் இருக்கலாம் இதை ‘தலைவிதி’யே, என விட்டு விடுவதா? அது அறிவியல் இல்லை.

அவன் உண்மையான அராலியான் இல்லை தான்.அம்மாவிற்கு மாற்றம் கிடைத்ததால் …வந்தவன் .சிலவேளை,வேற கிராமத்திற்கு கிடைத்திருந்தால்…அங்கேயும் போய்யிருப்பான். வேற கிராமத்தவனாய் இருந்திருப்பான்.

படிக்கிற காலத்திலே, மனோவிற்கு கோபம் வந்து விட்டால் அவனை ஏடா கூடாமாய் ” நீ வந்தான் வரத்தான் தானே” என ஏகத்திற்கு ஏசி விடுவான்.பிறகு”மறந்து விடு, நண்பா, நாமவெல்லாம் ஓரே சாதி அது ‘ரீச்சர்ர சாதி’ தான் “என்று சுயத்திற்கும் வந்து விடுவான்.அவர்களிற்கிடையில் இருந்த நட்பு உடையவே இல்லை.” அவனுகு குசி பிறந்து விட்டால், “ஆதித் தமிழன் நம்ம சாதி ஆள்ளடா “என்று புளுகி “தமிழா ,தமிழா…”என வேறு அந்த…. பேரையும் சேர்த்து உல்லாசமாகவும் பாடுவான்.

இந்தியாவிற்குப் போறதிற்கு முதல், மனோவும், அவனும் , கொஞ்ச‌ நாட்களிற்கு முதல் நடந்த‌ ரஞ்சன்ர அக்காட கல்யாண வீட்டில்…. இருந்து “வேலையும் (வாய்ப்பு )இல்லை,படிப்பும் இல்லை…”என்று என்னென்னவோ எல்லாம்…. நீண்ட நேர மாக‌ பேசிக் கொண்டிருந்தார்கள்.

அச்சமயம் அவன் ரஸ்யமொழியிலிருந்து தமிழில் வெளியான‌ “தாய்”நாவலை யும் வாசித்திருந்தான்.விடுதலைப் போராட்டத்திற்கு போக வேண்டிய அவசியமும் தெரிந்தே இருந்த‌து.ஒரு வேலையைப் பெறுவதற்குரிய தகமை(குவாலிகேசன்) இல்லையே என்ற மனக்குரல் பல‌ மாக‌ இருந்தது.

பல‌ விடுதலைக் குழுக்கள் இயங்கின்றன எனத் தெரிந் திருந்தும் ஒரு தகமையை பெறுவதற்காகவே தொழினுற்பக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். படிச்சதிலேயும் கண்றாவியாக‌ இரண்டு பாடங்கள் வேற‌ ‘ரிவேர்ட்’டுடன் தேற . மனசும் சலிச்சுப் போய்யிருந்தது. மனோ, ‘டெக்ப்’ ப‌க்கம் போகவே விருப்பவில்லை.வெளியிலே ஏதாவதொரு நாடுக்கு போகவே விரும்பிக் கொண்டிருந்தான். ‌. அவர்களுடைய‌ இந்த கல்யாண வீட்டு நண்பனான ரஞ்சனும் கூட ஆசிரியர் தியாகரின் மகன், ஆசிரியர் காலமாக…. வெளிநாடு போய் விட்டிருந்தான், அவன் உழைத்து….சிறப்பாக நடத்துகிறான். அகதியாய் போனவனால் சுலபமாக எல்லாம் திரும்பி வர முடியாது.அக்கா சந்தோசமாக …இருந்தால் போதும் தானே.

ஊர்ப்பட்ட பிரிவினைகளை வைத்துக் கொண்டிருக்கிற இவர்களிற்கு ‘ஒரு கம்யுனிச சமூகம், அடிப்படை வேலை வாய்ப்புக்களைக் கட்டிக் கொண்டு …மேலதிக வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டு போகிறது என்ற விசயம்’தெரிந்திருக்கவில்லை.முதலாளித்துவ சமூகத்தில்,பெரும்பான்மை இனத்தவர்கள் பேராசையால் பிரதேசத்திற்கு பிரதேசம் இருக்கிற வேலை வாய்ப்புக்களையும் வஞ்சக வலை விரித்து தம்மவர்களிற்கே பறித்துக் கொண்டு மற்றைய இனத்தவர்களைகளை எல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் என்ற விபரங்களும் புரிந்தும் புரியாத நிலை. கம்யூன்களாக வாழ்வது….. எல்லாம் லேசிலே புரியிற விசயங்களும் இல்லை தான்.

தமிழ‌ர்களுடைய சமூகம் கட்டுற வர்த்தக பொருளாதார கட்டுமானங்களையும் கூட‌ எரித்தும்,அழித்தும், உயிர்களைப் பறித்தும் நொண்டியாக்கிக் கொண்டே இருக்கிற முட்டாள் ஆட்சியாளர்களைத் தான் வாய்க்கப் பட்டிருக்கிறோம் என்றதும்… புரிந்தும் புரியாத நிலை தான்.

மனிதன் ஒரு வேலையை தேடி எடுக்க, தகுதியை, எய்ய எல்லாமே போராட வேண்டியிருக்கிறது.இதற்கிடையில் விடுதலைப் போராட்டம் வேண்டாதப் பிரச்சனை. பெரும்பாலனவர்கள் ‘குடும்பம் குட்டிகள்’ என வாழ விரும்பி (யூ (U) டேர்ன் அடித்து), இந்த அரசியல் போராட்டத்தை விலத்திப் போகவே விரும்புகிறார்கள். நழுவுகிறார்கள்.

ஆனால், நிலப்பசி அடங்காத சிறிலங்கா அர சோ, காலகாலமாக ஒரு‌ அரக்கனைப் போல கொடூரமாக இனப்படுகொலைகளை புரிந்து கொண்டே வருகிறது.அதன் அகோரமும் குறைந்த பாடில்லாமல் வளர் ந்து கொண்டே இருக்கின்றது ‌,.முந்தி கொழும்பில் நடந்தது, பிறகு சிங்களப்பகுதிகளில் நடந்தது, இப்ப‌, தமிழர்களின் சொந்த‌ மண்ணிற்கே ….வந்து விட்டது.

இவர்களுடைய நல்லெண்ண ங்கள் தீர்வை எட்ட முடியாதளவிற்கு வஞ்சங்களும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கின்றன‌ இங்கே‌, ஒரு போதுமே அதிசயங்கள் நிகழப் போவதில்லை., தமிழருக் கான…தீ மிதிப்புகளும் ஒழியப் போவதில்லை.

எனவே, வெட்டி முயற்சிகள் வெறும் பேச்சாக… வழமை போல‌வே உயிரை விடவே போகின்றன.

தமிழ்நாடு, தான் (இயற்கையால்) பிரிந்த துண்டை, சேய்யைக் காப்பாற்ற விரைவாக‌ பாலங்களை கட்டி முயல வேண்டும். தவிர தமிழ் நாட்டிலும் ஈழத்தமிழர்களிற்கும் மட்டுப்பட்ட 2 ம் பிரஜாவுரிமையையும் அளித்து , சிங்கள நெருப்பில் திறமைகளை எரிய விடாது பளிச்சிட வைக்க வேண்டும்.கைதூக்கி விட வேண்டும்.. கெட்ட எண்ணமுள்ளவர்கள் எப்பவும் வீழ்வார்கள் என சரித்திரம் தர்மங்களை எழுதட்டும்.

ஒருநாடாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாருக்கும் தெரியும் . தான் ஆனால், நிச்சியமாக‌ இவர்கள் சொல்கிற மாதிரியான‌ சர்வாதிகார ஒற்றையாட்சி முறையில் அல்ல‌. இங்கே,ஜனநாயம் கேலிக்கூத்தாகப் படுகிறது .

இவர்க ளோடு சேர்ந்து நாமும் ஏன் கர்மக்காரர்களாக வாழ‌ வேண்டும்.

மனிதர்கள் கூட மற்றைய உயிரினங்களைப் போன்ற‌ நிலையாமை உடையவர்களே .இறந்த பிறகு, எவருமே எவருடைய பிச்சாப் பாத்திரங்களையும் அள்ளிக் கொண்டுப் போக மாட்டார்கள். ஏன், இவர்களிற்கு நல்ல‌ சிந்தனைகளே எழ மாட்டேன் என்கிறது?

ஆயுதங்களை ,வைத்திருப்பவர்கள் எல்லாருமே கொலைக்காரர்கள் தானே .அவர்களுடைய‌ புத்த கலாச்சாரத்தையே அழித்து பொய்க் கலாச்சாரமாக்கி விட்டார்களே..

தமை கெட்ட சிந்தனைகளால் நம்மையும் …ஆயுதங்கள் தூக்க தூக்க வைக்கிறார்களே.

நாமும் …வைத்திருந்தால் பிறகு கொலைகளை தானே செய்யப் போகிறோம்.

இவர்கள் ஒட்டு மொத்த‌தமிழினத்தையே அவமானப்படுத்துகிறார்கள்

முட்டாள்தனமாக‌ நாகரீகத்தை அழித்து, ஆயுத வழிபாடு செய்வது ஒன்றும் நல்ல பண்பு, கிடையாது .

விடுதலைப் போராட்டம், தோல்வி, தோல்வியையே தழுவிக் கொண்டிருந்தாலும் கூடவே முகிழ்ந்து கொண்டே இருக்கப் போறதொன்று.

ஜனநாயக ஆட்சி முறையே போராட்டங்களினால் கிடைக்கப் பெற்ற . ஒன்றே.

மனிதர்கள்,ஜனநாயகக் கட்டில் ஏறின பிறகு, பழையபடி குரங்குகளாகி வி டுகிறதாலே தற்போது தொடர்கிற அவலங்கள்.பழைய விலங்குகளின் ,டி.என்.ஏ. மரபுகளும்,கூறுகளும் விடாது தொடர்கின்றன போலும் .

மனோ வீட்டிலே ,அண்ணர் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிகிறவர்கள்.படியாத இவனுக்கு “கழுதை,சனியனே…”என அர்ச்சனைகள் விழ தொடங்கியிருந்தன.அப்பரான சதாசிவம் மாஸ்ரருக்கு மகாபாரத்தில் கிறுக்கு இருந்தது.தமிழ்ப் பாடத்தில் ஏன் பாரதக்கதைகள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.தவறு செய்கிறார்கள் என்ற‌ அரற்றலை உடையவர்.தமிழ்ப்பாடவேளையில் சொற்பமாக பாரதக்கதைகள் தெரிந்திருக்க வேண்டும் எனச் சொல்கிறவர்.அதிலே கண்ணன்,எப்பவும் “வெற்றி, வெற்றி தான், தோல்வி,தோல்வி தான்”எனச் சொல்வதால்,மனோ தோற்றுப் போன மகன் என்ற ஆதங்கம் கோபமாக ஏச்சாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அதற்கு அவன் என்ன செய்வான்? தொழினுட்பக்கல்லூரிக்கு அப்ளை பண்ணித் தான் படிக்க வேண்டுமா? .வேற வலத்தில் வேலைக்கு இடமில்லையா?.அப்படி படித்தாலும்… இங்கே வேலை கிடைக்கவா போகிறது,?சே!,என்ன நாடு !”என்ற வெறுப்பில்.பகல் நேரத்தில், சைக்கிள்ளை எடுத்துக் கொண்டு வட்டுக்கோட்டையில் இருக்கிற அத்தை வீட்டுக்கு,மாமா வீட்டுக்கு எனப் போய் விடுவான்.அத்தையும் பிள்ளைகளும் அவனில் அன்பாக இருந்தார்கள்.அத்தை அப்பரின் தங்கச்சி.அவரிடம் தனது மனக்குறையைக் கொட்டுவான்.”நீ ஏன் வெளிநாடு போகக் கூடாது.அண்ணையோட நான் கதைத்து பார்க்கவா?”என்று கேட்டிருக்கிறார்.”வீட்டிலேயோ நிறைய பேர்கள்.வயல்க் காணியாலே வயிறார சாப்பிடுகிறோம்.அதையும் விற்று விட்டால்,அப்பர்ர சம்பளத்திலே பட்டினி தான் கிடக்க வேண்டும்.வேண்டாம் அத்தை “என மறுத்து விடுவான். அவர் என்ன செய்வார்.மனதுக்குள் “பொறுப்பை உணர்ந்தவனாக இருக்கிறானே”என்று மறுகுவார்.இங்கே இவன் ஒரு சகோதரன்போல பழகி விட்டதாலே,”மாமாட்ட(அவர் அம்மாவின் அண்ணர்)கேட்டுப் பாரேன்.அவர் ஒருவேளை சீதாவைகட்டுறதுக்காக(அவரின் கடைசி மகள்)வெளியில் அனுப்பினாலும் அனுப்புவார்”என்று எடுத்துச் சொல்லிப் பார்த்தார்.” பிறகு ,அவர்களோடு பழகிறது குழம்பி விடும்,வேண்டாம் அத்தை”என அதையும் மறுத்து விட்டான். ‘இரண்டு வருசம் ஏதாவது மாற்றம் வருகிறதா? எனப் பார்ப்போம்.பிறகு யோசிப்போம்’ என இருந்தான்.

மாலையில் கோயில் மைதானத்திற்குத் திரும்பி வந்து ‘பந்தை’ தட்டுவான்.எல்லா வீட்டிலேயும் குமைக்கிற குமைச்சல் தானே..பல்கலைக்கழகத்தில், அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர்,வெறும் துண்டுப் பிரசுரம் வைத்திருந்தாலும் கூட பயங்கரவாதச்சட்டத்தில் பிடித்துச் சென்று கொன்டிருந்தார்கள்.ஒருநாள் சதிஸ் அறையையும் வந்து குடைந்திருக்கிறார்கள்.அவன் தான் உண்டு,படிப்பு உண்டு என கிடப்பவன்.அவன் ரூம்மெற் குலமே விடுதலை அமைப்புகளைப் பற்றி அறியிற ஆவலுடையவன்.தவிர ரஸ்ய நாவல்களை படிக்கிற பழக்கமும் வேறு அவனுகிருந்தது.ஏற்கனவே 2 பல்கலைக்கழக மாணவர்களையும் ஒரு தொழினுட்பக்கல்லூரி (திருமலை) மாணவனையும் பிடித்துக் கொண்டுப் போய் 50 நாட்களாகி விட்டிருந்தன.இப்ப தான் அங்கே மெல்ல மெல்ல எதிர்ப்புப் போராட்ட உணர்வெல்லாம் வரத் தொடங்கிறது.”ஆனாலும் அவர்கள் ஏதாவது தவறு செய்திருப்பார்கள்;இல்லாவிட்டால் பிடிப்பார்களா” என்று பேசுகிர றவர்களிற்கும் குறைவில்லை.சதிஸ்ஸை பயம் பிடித்தது.குலம் தலை மறைவாகி விட்டான். 6,7 மாசங்கள் படிப்பை விட்டு (வகுப்பிற்கு வராமல்) இருந்து விட்டு வகுப்பை தொடர்வது தான் நல்லம் போலப் பட்டது.அண்ணன் முறையான கருணாவிடம் கதைத்துக் கொண்டிருக்க(அவன் தாமரை விடுதலைக்குழுவின் உறுப்பினன்)”நீ வெளிய போய் பயிற்சி எடன்.ஒரு நிலையிலே எல்லாருமே பயிற்சி எடுக்கத்தானே வேண்டும்.உனக்கு இங்கே இருக்கிறதும் இராது.பயிற்சியும் கிடைக்கிறது.என்ன சொல்லுறே,போக விருப்பமா?”எனக் கேட்டான்.அவன் வள்ளத்திலே ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கிற கரைப் பொறுப்பாளன்.

“ஒரு கிழமை டைம் தா!யோசிக்க வேண்டும்”என்றவன் கிராமத்திற்கு வந்தான்.மனோ அயல் வீட்டுக்காரன்.விளையாட்டு மைதானத்தில் அவனிடம் ‘இப்படி “அண்ணன் சொல்கிறான்.என்ன செய்யிறது”எனக் கேட்டான். அவன் என்ன பதில் சொல்வான்?

மறுநாள், குலத்தையும் பொலிஸ் பிடித்து….ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டது.ராணுவமோ,மாணவர் என்றால் மாசக்கணக்கில்,வருடக்கணக்கில் விசாரிக்கிறேன்’என இழுத்து…சும்மா ஒரு மூலையில் அவர்களை அடைத்து விடும்.விடுதலை உறுப்பினர் என்றால் சித்திரவதைகள் செய்து மற்றவர்களின் விபரங்களைத் திரட்டும்.சிலவேளை எல்லை மீறிப் போய் விடுற போது இறந்து விடுறதும் நிகழும்.உடம்பை கசோரீனா கடற்கரையில்,வெள்ளைக்கடற்கரையில் எறிந்தி விட்டு , தெரியாத மாதிரி இருந்து விடுவார்கள்.உற‌வுகள் கேட்டால்”விசாரித்து விட்டு வெளிய அப்பவே விட்டு விட்டோமே,இவர்களிற்கு ஊர்ப்பகைகள் இருக்கிறதா?”என திருப்பி வேறு கேட்பார்கள்.

இவர்களிற்கு தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பற்றி ஒரு பொருட்டேயில்லை.

சதிஸ்,”மனோ நான் வள்ளம் ஏற முடிவெடுத்து விட்டேன்.நான் போன பிறகு வீட்டிலே சொல்”என்றான்.மனோ “நானும் வருகிறேன்.இங்கே என்னாலும் இருக்க முடியவில்லை.கதிர்ர சொல்லி இருவர் வீட்டிலேயும் சொல்லலாம்”என்றான்.”உனக்குத் தான் பிரச்சனை இல்லையே?”என சதிஸ் இழுக்க‌ ” அப்பா திட்டுறது அதிகமாய்ச்சுடா,வீட்ட போகவே மனமில்லை”என அழுகிற மாதிரி பதிலளித்தான்.” சரி,சரி கருணாவிடம் கேட்கிறேன் “என்றான்.அடுத்த நாளே,”அடுத்த கிழமை போல‌ ஒரு வள்ளம் போகிறதாம்.உன்னையும் கூட்டி வரச் சொன்னான்”என்றான்.

இருவரும், வள்ளம் ஏறிய செய்தி கிராமத்தையே அல்லோகப்படுத்தியது. இவர்களோட ரமேஸுக்குத் தெரியாத சின்ன பெடியள் செட்டிலிருந்து கலாவும் போய் இருக்கிறான்.அவனும் பின்னாடி…. ஒரு எழுத்தாளப் பிறவியா ய் கதைகள் எல்லாம் எழுதப் போறான் என யாருக்கு தெரியப் போகிறது?

இன்னமும் கூட‌ நான் ஒற்றை இரட்டை பிடித்துக் கொண்டு போறதா,இல்லையா? என‌ நிற்க்கிறேனே,எட்டாத வேலையில் ஒரு ஆசை,அதற்கொரு தகமை…மண்ணாங்கட்டி,விவசாயம்,கடற்றொழில்…என எல்லாத்திற்கும் தீர்வான இன்னொரு பகுதி விரிந்து இருந்தும் அங்கே செல்வதற்குத் தடையாக கிடக்கிற சமூகத்தின் குணாவம்சங்களும்,இனவாதியின் தரப்படுத்தல் (வஞ்சத் தடைகளும்) கொள்கைகளும்…சே,எல்லாத்திற்கும் ஒரு முடிவு கட்டத் தான் வேண்டும்!, என மனசு கிளர்வு றுகிற‌து. ரமேஸ், தன்னில் இருக்கிற (விளையாட்டுக்) குறைபாடுக ளை இப்படி பயிற்சிக்குப் போறதால்..ஓரளவு சீராக்கி விடலாம் என்றும் கூட ‌நினைத்தான்..

ராணுவ லொரிக்கு அம்புஸ் வைத்து 13 பேர்கள் ….இறந்த பிறகு பொலிஸ், ,நிலையத்தை விட்டு வெளிய வாரதில்லை.இராணுவம் கூட இரவில் நடமாட்டத்தைக் குறைத்து விட்டிருந்தது.பகலில், முந்திய மாதிரி ராணுவமும் விச்சிராந்தியாக தனியாக நடமாட முடிவ‌தில்லை.ஒரு கடைக்குப் போறதாக இருந்தாலும் கூட‌ படையாக‌வே … போகிறது விடுதலைப் பெடியள்கள் பகலில் தாக்குதல் எதையும் .. செய்வ‌ தில்லை.தெரிய நடமாடுவதும் கூட‌ குறைவு.தீடீர் திடீரென கூட்டங்கள் நடக்கும்.சிலவேளை பிரசுரங்கள் கூட‌ வினியோகிப்பார்கள். எல்லாம் இரவு நேரங்களில் தான்.

பெற்றோர், வீட்டிலே அவற்றை வைத்திருக்க விரும்பவில்லை.ஒளித்து ஒளித்து வாசிப்பதும், கூரையில் ஓட்டோடு கூடிய சீலிங் இருந்தால் கூரை ஓட்டுக்கு கீழே பொலித்தீன் பைகளில் பத்திரமாகக் கட்டி ஒளித்து வைப்பதும்…என பெடியள்க ளே அலையுண்டு இருந்தார்கள்.பகிடி என்னவென்றால்… சமய சந்தர்ப்பம் தெரியாமல் இவர்கள் ஒளிக்கிறதை எலிகள் வேற,வேற இடத்திற்கு மாற்றி வைத்து விடுகிறது .பிறகு, ஜேம்ஸ் பொன்ட் கணக்கில் தான் தேட வேண்டி இருக்கிறது. வீட்டிலும் ஓடுகள் எல்லாவற்றையும் கழற்றி ,கழற்றி தேட பெற்றோரின் கையில் கிடக்கிற தாலே தப்பாமல் பூசையும் கிடைக்கின்றது.

உடனடியாக‌ கிராமத்துப் பொறுப்பாளர் ராஜனைப் போய்ச் சந்தித்தான். அவர்களுடைய பிரதேச அமைப்பு, வள்ளத்திற்கு ஒவ்வொரு கிராமப் அமைப்பையும் இரண்டு இரண்டு ஆட்களை அனுப்பச் சொல்லி ….அறிவித்திருந்தது.ராஜன்,இவனோடு மகேஸையும் சேர்த்து அனுப்பி வைத்தான். அப்படி 15 ,20 பேர்களாக சேர்ந்திருந்தார்கள்.

வீட்டிலே இருக்கிற போதே ஒரு காரியத்தைச் செய்யிறது கஸ்டமாக கிடக்கிறது.இங்கேயும் …இவர்களிற்கு இலகுவாக….. ஒப்பேறுவதில்லை. அனுபவங்கள் மூலமாகத் தான் மெல்ல மெல்லத் தான் உறுதி அடைகிறார்கள்.

அவன் போற எந்தப்பாதை தான் சரி வருகிறது? திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பான அலைகளால் ஓட்டிகள் அவர்களுடைய வள்ள ஓட்டத்தை ‌ பின் தள்ளிப் போட்டு வி ட்டதால், உளவாளிகள் திரிவததால்,இரவு நேரங்களில் ஓரிடத்தில் என்று வைத்திருக்க முடியாமல்அடிக்கடி இடம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைப்பைச் சேர்ந்தவர்களிற்குப் “கல்யாணத்தைக் கட்டிப் பார்,இயக்கத்தில் இருந்து பார்” என்பது போல கிடக்கிறது. அதனால் ஒன்றுக்கு இரண்டு கல்யாணம் வேண்டாமப்பா,என்று காதலிப்பவர்களை,கட்டியவர்களை எல்லாம் இயக்கங்கள் அனேகமாக அங்கத்துவர்களாகச் சேர்த்துக் கொள்வதில்லை தான்.

ஆரம்பத்தில்,கல்யாணம் கட்டிய சிலரும் இருந்தார்கள்.ஆனால், சட்ட விதிகள் காரணமாக ஏற்காதவர்கள் அதிகமாகி இருப்பதால்…குழப்பகரமான நிலையே நிலவியது. இப்பவும், நிலவுகிறது புதியவர்களில் அறவே அனுமதிகப்படாத நிலை தான்.

இவர்களை சமூக விரோதிகள்,பயங்கரவாதிகள்…என அரசு அறிவித்து , பயங்கரவாதச் சட்டங்களையும் இயற்றி,படையினரைக் கொண்டு வேட்டையாடிக் கொண்டிருந்தது.

அவர்களால் ,குடும்ப உறவுகளும் வேறு பாதிக்கப் பட்டார்கள்.பலிவாங்கப்படுகிறார்கள். பெடியள்களிற்கு இப்ப, எல்லாம் பெட்டைகள் கனவுகளில் வாராள்கள் இல்லை .

ஆனால், போராட்டத்தில் எல்லார்ர உதவிகளும் தேவை.எனவே, அந்தப் பிரிவில் இருப்பவர்களை ஆதரவாளர்க‌ளாக‌ மட்டும் சேர்த்துக் கொள்கிறார்கள். மொத்தத்தில், இயக்கங்கள் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் மூச்சுத் திணறுகின்றன.

வீட்டை விட்டு வெளிய வந்த இவர்களிற்கும் பாழடைந்த கோயில்கள்(பூஜைகள் கைவிடப்பட்ட ஊர்ப்பட்ட சிறு கோவில்கள் இருக்கின்றன), இங்கே, பாம்புகள் கிடக்கலாம் என்ற பயம் இருக்கிறது,வாசிகசாலைகள்,குடியிருக்காத பூட்டிய வீடுகள்….என ஒரே ஓட்டம் தான்.முக‌ம் கழுவுறது,காலைக்கடன்கள்….எல்லாமே பெரிய பிரச்சனைகளாக இருந்தன‌.. ஒரு வீடற்றவர்கள் வாழ்க்கையே வாழ வேண்டியிருந்தது.பழைய கிணறு,கேணி,குளம் குட்டை எல்லாவற்றின் தண்ணீரையும் பயன்படுத்தினார்கள்.அதை விட பசியை சமாளிக்க …வேண்டும். அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்படியாவது ஒருநாளில் இரண்டு வேளைக்காகவாது சாப்பாட்டுக்கு ஒழுங்கு பண்ணி விடுவார்கள்.”தாக்குதல்கள் ஒன்றும் செய்யாமல் வெறும் சாப்பாட்டுப் பாசல்கள் எடுக்கிறார்கள்” என்ற, ஏச்சுக்கள், பேச்சுக்கள் மத்தியில் எடுக்கிறார்கள்.

சில‌ கூட்டணிக் குடும்பத்தினர்,கல்யாணவீடு, சாமர்த்திய வீடு,ஏன்,’சா ‘ வீட்டுச் செலவுகள் போதிலும்..கூட பெடியளிற்கு… ஏழ் எட்டுப் பேர்களிற்கான சாப்பாட்டைக் முகம் கோணாமல் கொடுக்கிறார்கள். அவசரத்திற்கு வீட்டு வளவிலே தோட்டம் செய்கிற‌ கமக்காரர்கள் வீட்டினரும் கொடுத்தனர் .

ஒருநாள்,வாசிகசாலையில் பள்ளிக்கூடத்திற்கு கொடுபதற்கு கொடுக்கப்பட்டிருந்த திரிபோசா மாவில் தண்ணியை ஊத்திப் போட்டு சாப்பிட்டார்கள்.”பரவாய்யில்லை, இனிப்பாக சாப்பிடக் கூடியதாகவே இருந்தது.”. மாணவர்களிற்கு கொடுக்கிறதிற்கு இருந்த மாவில் கை வைத்ததும் கொள்ளை தான். ஆனால் ,அப்படியே மாவாக சாப்பிட முடியாது.பிஸ்கட் போல செய்யப்பட வேண்டும்.அதுவும் வாசிகசாலைக்கு எப்படி வந்தது?

இய‌க்கப் பெடியள்கள் எல்லாவித பிரச்சனைகளையும் சாரணர் போல வும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்

.பெடியளிற்கு உடம்பெல்லாம் கடிக்கிறது என சொரியிறதெல்லாம் இருந்தன.”அடிக்கடி கறுவாட்டுக் குழப்போட சாப்பிடுறதால் தான் கடிக்கிறது”என்று சொல்லிச் சிரிப்பார்கள். இதோ…,பொன்னம்பியைச் சந்தித்த , பிறகு,ஒரிரவு போல பழைய வீடொன்றிலும் வந்து தங்கி இருக்கிறான். பின் வளவு முழுதும் மரவள்ளிச் செடிகள் செழிப்பாக வளர்ந்திருந்தன.இங்கிருந்தவர்கள், சிறிய வீடாக இருக்கிறதென சிறிது தள்ளி புதிய வீடொன்றைக் கட்டிக் கொண்டு போய்யிருக்கிறார்கள்.இந்த வீட்டை வெங்காயம் கட்டி காய விட ,தோட்டத்துச் சாமான்கள் வைக்க பயன்படுத்துறார்கள்.வீட்டுக்காரர்,இயக்கப் பெடியன் ஒருத்தனுக்கு மாமா முறையானவர். அவன் மூலமாக‌ 2,3 நாட்கள் தங்குவதற்கு கிடைத்திருக்கிறது. பழைய வீட்டின் காலக்கடன் கட்டிடம் நீண்டகாலமாகி விட்டது என உடைத்து மண் போட்டு நிரப்பி தரை மட்டமாக்கி விட்டார்கள். உடைக்காமல் இருப்பதற்கு இப்படி பெடியள் அலையப் போறார்கள் என அவர்களிற்கு என்ன தெரியவா போகிறது.? இவர்களிற்கு போற இடமெல்லாம் பிரச்சனை தான்.இயக்கப்பெடியன் காலக்கடன் பிரச்சனையை யும் அவரோட கதைத்திருக்கிறான்.”வேலியோரமாக கழியுங்கடா.அதை பிறகு,தண்ணி பாய்ச்சி கழுவி விடலாம்”என்றிருக்கிறார். மரவள்ளிக்குப் பாய்ச்சப்பட்டு விடும் என புரிந்தது. பாய்ச்சப்பட்டாலும்,மரவள்ளி,வடிகட்டி,பசளையாக எடுத்து சத்தாகப் தரப் போகிறது.அறியாமையில் உழல்கிற மனம் அரிகண்டம்…,அது இது என பார்க்கிறது. நம் மண்ணிலே, எத்தனையோ வகையான தாவரங்களே உணவாக பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன.சீனர்களை ஒரு வருசம் இங்கே குடியமர்த்தினால்… பலதைக் கண்டு பிடித்து விடுவார்கள். எல்லாம் இயல்பாக நடைபெற வேண்டும்.நிலப்பசி அரசியலுடன் எதுவுமே நடைபெறக் கூடாது.அவர்களால் முடிகிறது ஏன் நம்மால் முடியவதில்லை?

இந்த நேரத்தில், மனிதன் பத்திரிகை ஆசிரியரை நினைக்காமல் இருக்க முடியவில்லை.உமி அடுப்பு,இயற்கை எரி வாயு பாவிப்பு,நன்னீர் மீன் வளர்ப்பு(பழைய குளங்களை மீள பாவனைக்கு கொண்டு வந்து),காளான் வளர்ப்பு…என சுய பொருளாதாரச் சிந்தனைகளில் ஆய்வுக் கட்டுரைகளை தனிப் போராளியாக இருந்து பத்திரிகையில் வெளி வர வைத்துக் கொண்டிருந்தவன்.கொலை ஆயுதங்களில்லாது, விவசாய ஆயுதங்களில் நம்பிக்கை கொண்டிருந்தவன்.தமிழ்ப் பகுதிகளில் தமிழருடைய ஆட்சிக் கட்டமைப்புக்களை எழ விடாது ஆட்சி நடைபெறுகிறதே என அதைக் கண்டித்தும் எழுதிக் கொண்டிருந்தவன் .

“மத்தியானத்திற்கு மரவள்ளிக் கறியோட சோறு தருகிறேன்.2,3 பெடியள்ளை அனுப்பி எடு”என்று சொல்லி இருந்தார்.

அமைப்பைச் சேர்ந்த கீர்த்தி,தில்லை,போய் இப்ப‌ செல்வம் அவர்களோட இருந்தான். இரவு போல வந்ததால்.. கடையில் வாங்கிய‌ பாணும் ,கையில் தொட்டுக் கொள்ள‌கொஞ்ச சீனியும்,தேனீரும் தான் சாப்பாடு.நல்ல காலத்திற்கு கிணறு அருகில் இருந்தது, புது வீடு கட்டிய போது அதை நிரப்பி விட‌வில்லை. நீர் சுமார் தான்.

அவர்கள் புது வீட்டிற்கு புதுசாய் வேற‌ ஒரு கிணறும் வெட்டியே இரு ந்தார்கள்.

முதல் இருள் பிரிய முதலே…காலக்கடனை முடித்து இலையால் துடைத்துக் கொண்டு ரமேஸும்,மகேஸும் பூவரசம் குச்சியை சப்பி பிரஸ்ஸாக்கி விளக்கி முகம் கழுவிக் கொள்ள ந டக்கிற‌ போது சுற்றிவர ஒரு கண்ணோட்டம் விட்டார்கள்.பெரிதாய்’மா’மரம் ஒன்று கிளை பரப்பி இருந்தது. காய்த்துக் கொட்டும் போல இருக்கிறது .அதிலிருந்த குருவிகள் எழுப்பிய நானாவித கானங்கள் தான் அவர்களை துயில் எழுப்பி இருந்தன‌ வேலியில் இருக்கிற கிளுவை வளவிலும் ஒன்று நெடுநெடுவென வளர்ந்திருந்தது.வளர்ந்த‌ முருங்கை மரம் இருப்பது ஆச்சரியமில்லை தான். அந்த வளவு ஒன்றை ஏக்கருக்கு மேலே இருக்கலாம் என அவனுக்குத் தோன்றியது.

ஒருமாதிரி கழுவிக் கொண்டு சுத்தமா னார்கள்.

ரவியும் ,சுமனும் போய் தேத்தண்ணிப் பானையைக் கொண்டு வந்திருந்தார்கள்.தோட்டக்காரர் குடும்பத்தின் மனமும் விரிந்ததாய் இருந்தது.சீனி போட்டு தேனீர் …ருசியாக இருந்தது.நாலைஞ்சு கிளாசுகள் பழைய வீட்டிலே இருந்தன.அவற்றிலே மாறி, மாறி …வார்த்துக் குடித்தார்கள். மகேஸ் கார்ட்ஸ்காரர்களுடன் சேர,இவன் கிடைத்த பழைய குமுதம் சஞ்சிகையை எடுத்து வாசிக்க தொடங்கினான்.பிறகு இவனும் இவர்களோட வந்து ஆட்டத்தைப் பார்த்தான்.இவனுக்கு ஆடுறதெல்லாம் தெரியாது.இனி தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

செல்வன்,மத்தியானம் போல‌ இவனையும்,மகேஸையும், சின்னப் பெடியனான சுமனையும் கூட சாப்பாடு வாங்க‌ அனுப்பினான்.

புதிய‌ வீட்டு முன் விராந்தையில் ஈசிச்சேயரில் தொ ங்கிக் கொண்டு கமக்காரரின் மகள் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் அவனை விட 2,3 வயசு கூடியவளாகவே இருப்பாள் .அவன் ஏதேச்சையாகவே புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தான். அவனுள் ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமில்லை”குருதி மலை”என்ற ஞானசேகரன் எழுதிய வீரகேசரி வெளியீடு,மலையகத்தில் போராடிய சிவனு லட்சுமணனை பொலிஸ் சுட்டுக் கொன்ற (உண்மைச்) சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்

அவள் அவர்களை அசட்டையாக‌ பார்த்து “அம்மா, வந்திட்டார்கள்”என்று குரல் கொடுத்து விட்டு, புத்தகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் ,”உள்ளே போய் எடுங்கள்”என்றாள். இரண்டு பானைகளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.மரவள்ளிப் பொறியல்ளையும் செய்திருந்தார்.அதை ஓலைப் பெட்டியில் பேப்பரை வைத்து சுமனிடம் கொடுத்திருந்தார்.

அவன் தொழினுட்பக்கல்லூரியில் படிக்கிற காலத்தில் அங்கே வந்து சந்திக்க வார ஈழவர்கள்…. வேற பிரேக் டைம்மிலே,டெக் விட்ட பிறகு… எல்லாம் வகுப்புகள் வைப்பார்கள் அவன்ர வகுப்பிலிருந்து அவனோடு 4,5 பேரும் …கலந்து கொள்வார்கள்.. ‘நவீனக்கால அடிமைகள்”என்றொரு புத்தகத்தை அவனிட மும் வாசிக்கக் கொடுத்திருந்தார்கள். “இதிலே வார ‘சிவனு லட்சுமணனை வைத்து எழுதிய‌ குருதிமலை என்ற நல்ல நாவல் ஒன்றும் இருக்கிறது. எங்களிடம் இல்லை,எங்கையாச்சும் கிடைச்சால் கட்டாயம் எடுத்து வாசிக்கப் பாருங்கள்”என சொல்லி இருந்தார்கள். அவனுக்கு இது வரையில் கிடைக்கவே இல்லை.இந்த நிலையிலேயே கண்ணில் படுகிறது.

ரமேஸ் வாசிக்க தேடிக் கொண்டிருக்கிற நாவல்!

பானையை கீழே வைத்து விட்டு “அக்கா,ஒரு நாள் வந்து இரவலாக இந்த புத்தகத்தை வாசிக்கக் கேட்டால் தருவீர்களா?”என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஆச்சரியமாய் “அம்மா,நம்ம கனகு போல இருக்கிறான் “என உள்ளுக்க குரல் கொடுத்தாள்.தாய்க்காரியும் வெளிய வந்தாள்.”அட, நானும் வடிவாய் கவனிக்கவில்லை.கனகு போல தான்ரி இருக்கிறான்”என்றவரின் கண்கள் கலங்கின.

அவள்”உனக்குத் தெரியுமா?மானிப்பாய் வீதியிலே பஸ்ஸை விட்டு இறக்கி நேவி சுட்டது”எனக் கேட்டாள். ரமேஸுக்கு தெரிந்தே இருந்தது.13 ராணுவம் சாக,சகோதரியின் கல்யாணச் சாமான்கள் வாங்க டவுனுக்கு வந்த “மனிதன்”பத்திரிகையின் ஆசிரியர் விமலதாசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர்களிற்கு கிட்ட, நவாலியிலாக இருக்க வேண்டும், மானிப்பாய் வீதியிலே, காரைநகர் நேவி, சி.ரி.பி பஸ்ஸிலிருந்து இறக்கி பள்ளிகூடப் பெடியள்கள் உட்பட ஒன்பது இளைஞர்களிற்கு மேலே நிறைக்கு நிற்க வைத்து நாய்களை சுடுவது போல‌ சுட்டுக் கொன்றது . இந்த இடத்தில் ராணுவம் இருந்திருந்தால்…பஸ்ஸிருக்கிறவர்கள் இன்னும் சிலரையும் கண்டமேனிக்குச் சுட்டிருப்பார்கள். மேலும் சிலர் வானுலகம் பார்த்திருப்பார்கள்.

அதற்குப் பிறகும் நேவி கொடூரமாக குமுதினிப் படகு கொலைகளையும் புரிந்தது…. எல்லாப் படையினருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இச்சம்பவங்களிற்குமுதல், காரைநகர் நேவிக்கு நல்லப் பேரே நிலவியிருந்தது .படைகளிலேயே …‌ படித்தவர்கள்,டீசன்டானவர்கள்.கடைசி பஸ்ஸில் எல்லாம் சினிமா பார்த்து விட்டு சனங்களுடன் நல்ல மாதிரி பழகிற‌வர்கள் என காரைநகர்வாசிகள், அயலவர்கள் உள்ளங்களை எல்லாம் கவர்ந்திருந்தவர்கள்.அந்த மரியாதைகளை எல்லாம் காற்றிலே ஓரேயடியாய் பறக்க‌ விட்டு விட்டார்கள்.

அவர்களோட சிறுவன் ஒருத்தனும் செத்து விழுகிறவர்களோட சேர்ந்து விழுந்து பக்கத்தில் கிடந்தவனின் ரத்தத்தை, தன் உடைமேல் பிரட்டி மரக்கட்டை போல‌ கிடந்து …உயிர் தப்பி இருக்கிறான்.ஈழநாடு பத்திரிகையில் அச்செய்திகள் வெளியாகி இருந்தன.

“தெரியும் “என்றான்

.”அதிலே நம்ம கனகுவும் ஒருத்தன்.அவனும் உன்னைப் போல தான் கையிலே எடுக்கிறதை எல்லாம் வாசிக்கக் கேட்பான். சரியான ‌புத்தகப் பூச்சி.மானிப்பாய் இந்துக்கல்லூரியில் படித்தவன்.நல்லாய் படிப்பான். இப்ப இருந்தால் கம்பஸ் நிச்சியமாய் எண்டர் பண்ணியிருப்பான்.அநியாயமாய்ச் செத்துப் போனான்”அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

“என்ர தங்கச்சிட மகன்.எப்பவும் இங்கே தான் இருப்பான், தம்பி”.என்று தாய்யும் கரைந்தார்.

அவள் அவனைப் பார்த்து “,நீ வா கட்டாயம் தருவேன்”என்றாள்.

பிறகு, சுளிபுர செக்கிங் நடைபெறப் போகிறது எனச் செய்திகள் வர, வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.பயிற்சிக்கு அனுப்புறதும் அதோடு நின்று போய் விட்டது.

ரமேஸ்,எல்லாம் அடங்க , அந்த‌ வீட்டை ஞாபகம் வைத்துப் போய் “குருதிமலை”நாவலை வாசிக்கக் கேட்டான்.அந்த பெண்ணும் தயங்காமல் புத்தகத்தை இரவலாகக் கொடுத்தாள்.

அவனும் ஒரு கிழமையிலே வாசித்து விட்டு மறக்காமல் திருப்பியும் கொடுத்திருக்கிறான்.

கிடைக்காதவற்றை புளிப்பன என்று சொல் லுற பழமொழிகளும் …..பிழையானவை தாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *