ஊழல் ஒழிப்பு

 

தாசில்தார் அலுவலகம்.
காலை,

ஐயா,என் பெயர் நாகம்மாள், நான் ஆதரவற்றவங்க,எனக்கு உதவித்தொகை கிடைக்கும்னு எங்க டாக்டர் ஐயா சொன்னாருங்க! ஐயாதான் பார்த்து உதவி செஞ்சு எனக்குப் பணம் கிடைக்க வழி செய்யனும், எடுத்து வந்த ஆவணங்களை அவரிடம் அளித்தார்.

நாகம்மாள்,
துணைக்கு யாரும் இல்லாத, வருமானத்திற்குச் சிலர் வீட்டில் சமையல் வேலை செய்து ஜீவனம் நடத்தும் 65 வயது விதவை ,கணவனை இழந்து இரு வருடமாகிறது, கணவன் இருந்தவரை பசிக்கு உணவும் பேச்சுக்குத் துணையும் பஞ்சமில்லாமல் இருந்தது ,தற்பொழுது இரண்டுமே விலகிப்போனது. காய்ச்சிய கைகள், வயதுக்கு மீறிய தோல் சுருக்கம், தற்போதைய ஏழ்மை நிலையைக் காட்டியது, சமையல் வேலை செய்யும் பல வீட்டில் ஒரு வீடு,பிரபல டாக்டர். ராமநாதன் வீடு,

அவர் இவர் மேல் இரக்கப்பட்டு OAP எனப்படும் முதியோர் உதவித்தொகை ரூ.1000/- பிரதி மாதம் கிடைக்க ஏற்பாடு செய்ததன் பேரில் இன்று நாகம்மாள் தாசில்தார் அலுவலகம் முதல் முறையாக வந்துள்ளார்.

இந்தாம்மா! போய் RI யை பாருங்க! என்றார்,
அவங்க எங்க இருக்காங்க?

எல்லாம் இங்கேயே கேளுங்க! அங்க இருப்பாங்க போய் பாருங்க!
என வழக்கம் போல் எரிந்து விழுந்தார்
அதுக்கு மேல் நின்றால் மரியாதையாக இருக்காது என நினைத்து,வெளியே வந்தாள்.

RI அலுவலகம், ஏக கூட்டம் ,இவரைப் போலவே நிறைய பேர் வந்துள்ளனர். வாசலில் விசாரித்தாள்,
RI யைப் பாக்கனும், மனு கொடுக்கனும்,என்றாள்.

எதுக்காக ,என்ன ஊர்?,நீங்க யாரு? என்றார்,அநேகமா விசாரிப்பா இருக்கனும்,

என்ன வேணும்,- இது RI ராகவன்
இந்தாங்க! உதவித்தொகைக்காக மனு.

யாருக்கு?
நீங்க யாரு?என்ன பன்றீங்க?

நாகம்மாள்,
சும்மாத்தான் இருக்கேன்,என்றார்.
வீட்ல அவங்க எப்ப இறந்தாங்க? எப்படி இறந்தாங்க?

உடம்பு சரியில்லாம இருந்தாங்க ,இறந்துட்டாங்க!
என்ன வேலைல இருந்தாங்க?
சமையல் வேலைதான்!

நல்ல வேலை!
வீடு சொந்த வீடா?
ஆமாம்,பூர்வீகத்து வீடு,

நல்ல மெயின் இடத்திலதான் இருக்கு. அப்புறம் என்ன?
வாரிசு உண்டா?

இல்லை,என சொல்லுவதற்குள், குரல் தழுதழுத்தது.

அதற்கு நடுவே,
என்ன ஒன்றியம்? எப்படி இந்த பக்கம் , இது RI ராகவன்.

ஒரு OAP மனு உங்ககிட்ட இருக்கு அதை கொஞ்சம் ஓகே பண்ணி அனுப்புங்க! நம்ம கட்சி ஆளு. ஆனையிட்டார், ஆளும் கட்சி ஒன்றிய செயலாலர்,

இன்றைக்கே அனுப்பிடறேன்.நான் சொன்னது ஞாபகம் இருக்கா?
அதை முடிச்சு கொடுங்க,

சரி,சரி,செஞ்சிடலாம்,என கிளம்பினார்.ஒன்றியம்.

அம்மா,நான் பார்த்துட்டேன் ,ஓகே பன்றதுக்கு கொஞ்சம் செலவாகும்,

என்ன பண்ணணும்?

ஒரு 3000 ரூபாய் ஆகும்,கொடுத்துட்டு போங்க! நான் பார்த்து வைக்கிறேன்,என்றார்

சார், என்னால இதெல்லாம் முடியாது, என்றாள்.

நான் எனக்கா கேட்கிறேன்? என்னோட மேலதிகாரி வரைக்கும் போகனும்,என்று அவருக்கும் சேர்ந்து பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.

மாசா மாதம் ஆயிரம் ரூபா, நீ சாகிற வரைக்கும் வாங்க போற,
ஒரு மூவாயிரம் பெரிய தொகையா?

அதுவும் சொந்த வீடு இருக்கு ,பிராமண ஜாதி வேற, உனக்கெல்லாம் கிடைக்கவிடாம செய்வது ரொம்ப சுலபம்.என்ன சொல்றிங்க? என கேட்டு விட்டு அதோடு எழுந்து போனவர்தான்,

பசி வேறு என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயே உட்கார்ந்து விட்டார். பசியோடு கேட்ட கேள்வியின் தாக்கம் அதிகம் பாதித்தது.

RI ராகவன் மூத்த அண்ணன், கல்லீரல் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சீரியசாக இருப்பதாக தகவல் வந்ததால் அவர் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் தவறினால் பிழைப்பது கடினம் என பெரிய மருத்துவர் கூறியதாக அவரின் அண்ணி கூறினார்,அண்ணனுக்கோ வயது 40 ,பசங்க இரண்டும் சின்னஞ்சிறுசுகள், வேலையும் நிரந்தரமில்லை,
இவர் குடும்பத்தில் ராகவனுக்கு மட்டும் தான் அரசு வேலை,இவர்தான் இதையும் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. என்ன செய்வது என்றே தோன்றவில்லை, யாரைக் கூப்பிடுவது ஒன்றும் புரியாமல் தடுமாறினான்,.ஒன்றியத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்,நீண்ட அழைப்பிற்க்குப் பின் எடுத்தார்,
அதான் சொல்றேன்ல!

முடிச்சித் தரேன்னு ,சும்மா,சும்மா போன் பண்ணாதே என எரிந்து விழுந்தான்.

இவர் சொல்ல வந்ததை என்னன்னு கேட்க கூட இல்லை.

முதல் முறையாக தனது கையாலாகத் தனத்தை உணர்ந்தான்.

இறைவா! என்ன செய்வேன்! என அழுகை அடைத்தது.

அப்பொழுது, 108 ல் ஒருவரைக் கிடத்தி அவசர சிகிச்சைக்கு எடுத்து வந்தனர்.
விரைந்து வந்த டாக்டர் பரிசோதித்து மூளைச் சாவு அடைந்து விட்டதாக கூறினார். பெரிய டாக்டர் வருகைக்காக காத்திருந்தனர்.

பெரியமருத்துவர்,பார்த்தார், மூளை சாவை உறுதி செய்தார்.

ஓ காட்,இவங்களா? என்னாச்சு?
எங்க ஆச்சு ? என விசாரித்தார்,

தாலுகா ஆபிஸ் வாசலில் மயங்கி கிடந்ததாக கூறினர்,
அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, அவர் போகச்சொன்னது.

டாக்டர், எங்க அண்ணனுக்குக் கல்லீரல் மாற்று செய்யனும் சொன்னிங்களாம்,என்ன செய்றது ஒன்னுமே புரியல,ஐயா,பார்த்து என்ன செய்யனும் சொல்லுங்க, என்றார் ராகவன்.

நம்ம சக்திக்கு மேல ஒரு சக்தி இருக்கு. அதை நம்புவோம். எல்லாம்
நல்ல படியா முடியும். தைரியமா இருங்க என தேற்றினார்.

டாக்டர் தன்னுடைய மனைவிக்கு தகவல் சொல்லி், உடன் கிளம்பி வரச்சொன்னார்.

மனைவியிடம் பேசி உடல் உறுப்பைத் தானம் செய்துவிடலாம் எனவும்,
வாரிசு யாரும் இல்லாததால் சாஸ்த்திர சம்பிரதாயப்படி நாமலே தகனம் செய்துவிடலாம் எனவும் தீர்மானித்தனர்.

இதை ராகவனிடம் தெரிவித்த டாக்டர்,
கவலை வேண்டாம்! கல்லீரல் கிடைத்துவிட்டது!
உங்க அதிர்ஷ்டம் ரத்த ஒற்றுமையும் இருந்ததுதான்.
அதோட அந்தம்மா நம்ம வீட்ல சமையல் வேலை பார்க்கிறவங்க!
அவங்க பூர்வீக சொத்தாக இருக்கும் வீட்டையும் அனாதை இல்லம் நடத்த அரசிடம் ஒப்படைத்தவர், நான்தான் நிரந்தர வருமானத்திற்காக அவங்கள என் நண்பர் தாசில்தார் இருக்கிறார்,அவர்கிட்ட OAP மனு கொடுங்கன்னு காலையிலே அனுப்பினேன்,என்றார்.

அவங்களை நாங்க பாரக்கலாமா டாக்டர்,
ஒய் நாட்! பாருங்க ! என்றார்.
அனைவரும் சென்று பார்த்தனர்.
ராகவன் மட்டும் அதிர்ச்சியடைந்தார்,
இவங்களா?
ஐயோ! அம்மா! என்றான்,

யார்கிட்டே 3000 ரூபாய் லஞ்சமாக கேட்டேனோ, அவங்க தனது கல்லீரல என் அண்ணனுக்கு இனாமா தராங்க, ஆண்டவா! என்ன இது?
என உடல் குறுகினான்.

நாகம்மாள் உடலிலிருந்து உறுப்புகள் அகற்றும் பணி தெடங்கியது.

அதிலே ,கல்லீரல் எடுத்து ராகவன் அண்ணனுக்குப் பொருத்த ஏற்பாடானது. மற்ற அனைத்து உறுப்புகளும் வேறு வேறு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய ,வெளியே வந்தார் டாக்டர்,
தற்பொழுது நல்லாயிருகாங்க!

கொஞ்சம் நாள் இங்க இருக்கட்டும்,
நீங்க அப்புறமா போய் பார்க்கலாம்,எனக்கூறி,

நாகம்மாள் உடலை மருத்துவமனயிலிருந்து வாங்கி நல்லடக்கம் செய்ய தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார் டாக்டர்.

மறு நாள் அலுவலகம் வந்தார். ராகவன்,அனைத்து கோப்புகளயும் உடனடியாக பார்த்து ஓகே செய்தார். அவன் முன்னே நாகம்மாளின் மனு ஆவணங்கள் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

அதில் இருந்த அந்த அம்மாவின் போட்டோவை எடுத்து தன் மேஜைக்கு மேலே கண்ணாடிக்கு கீழே வைத்தார்.

அழுகையால் தன் மனதில் உள்ள கறையைக் கழுவிய ராகவன். 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர். யோசிக்க ஒன்றுமில்லை! தாத்தாவின் முடிவே என் முடிவும் என திட்டவட்டமாக கூறினாள். லக்ஷ்மி. லக்ஷ்மி, ஒரே பெயர்த்தி, அரசு என்கிற திருவரசு தாத்தாவுக்கு. அப்போது லக்ஷ்மிக்கு பத்து வயதேயிருக்கும்! ஐந்தாம் வகுப்பு ...
மேலும் கதையை படிக்க...
என்ன கேசு ஏட்டையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆய்வாளர் ஆறுமுகம். ஐயா, ஒரு வயதான பொம்பளைகிட்ட பணம் திருட முயல, அவங்க கீழே விழுந்து மக்கள் எல்லாம் சேர்ந்து அட்மிட் செய்துட்டாங்க. இவனை அள்ளிகிட்டு வந்து விசாரிச்சா 2000 ரூபா நோட்டா நிறைய ...
மேலும் கதையை படிக்க...
டேய், ஓடாதீங்கடா, விழுந்திடுவீங்க, நடந்து போங்க! எனக் கெஞ்சினார், கேட்காமல் கருமமே கண்ணாக ஓடினார்கள் பெயரனும் அவன் நண்பர்களும். அடிக்கிற வெயிலுக்கே இங்க வந்து இருக்கானுக போல, புலம்பினார் தாத்தா ராமன் ஆமா, உங்க பேச்சை உங்க பசங்களே கேட்க மாட்டாங்க. பெயரப் பிள்ளைகிட்ட கெஞ்சுறீங்க, ...
மேலும் கதையை படிக்க...
ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க அத்தையே அப்படி சொல்றாங்க, அப்புறம் நீ ஏன் கவலைப்படுகிறாய்? என அறிவுறுத்திக் கொண்டு இருந்தாள் மாலா. மாலா ராதாவின் பள்ளிக்காலத் தோழி, ...
மேலும் கதையை படிக்க...
அருண்! நிறைய இடம் பார்த்தாச்சு, நீயும் அதை இதை சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டே இருக்கே, நாங்களும் உனக்கு பெண் தேடி அலுத்திட்டோம். இன்றைக்கு பார்க்கப் போகிற இடத்திலாவது உனக்கு ஏற்றவளா அமையனும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. நான் சொல்கிறதை கேளு, கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
விவசாயி மகள்
ஆறாத சினம்
இனிக்கும் வேப்பம் பழம்
விடியாத இரவுகள்
மாமனாரைப் பிடிக்கல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)