ஊனம்

 

விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு எதிரில் வேகமாக ஒருவர் ஒடி வந்தார். பேருத்தை நிறுத்துவதில்லை என்ற முடிவுடன் ஒட்டுனர் ஒட்டும் பொழுது ஒருகணம் நிதானித்தார்.
ஊனமாகி சூம்பி போன கால்தொடையில் கையை வைத்து அழுத்தி தரையில் அதை ஊன்ற செய்து ஓடிவருபவர் ஊனமுற்றவர் என்பதை அவர் உணர்ந்தார். பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அவர் வண்டியில் ஏறுவதற்கு ஒருவர் உதவி செய்தார்.

”கால் சரியில்லாதவர்ப்பா…… யாராவது எழுந்து சீட் கொடுங்க.”
எறியவர் தடுமாற்றத்துடன் நகர்ந்து பிடிமானத்திற்கான கம்பியில் சாய்ந்து அதை இறுக்கி பிடித்து கொண்டு நின்றார்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஒரு நாடகமே நடந்து முடிந்தது.

சீட்டில் உட்கார்ந்திருந்த இரு பயணிகள் கண்களை இறுக மூடி தூங்கி வழிவதாக பாசாங்கு செய்தனர்! இன்னும் இரு ஜன்மங்கள் சன்னலுக்கு வெளியே எதோ காணாத அதிசயத்தை காண்பது போல் எறியவரைப் பார்க்காமல் வெளியில் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்!!

”உடம்பே இரண்டு நாளாக சரியில்லப்பா”

இன்னொரு சடம் தனக்குள் உரக்க முணுமுணுத்துக் கொண்டு தலையை தொங்க போட்டது!
அத்திப்பூத்தாப் போல் எப்பொழுதுதாவது தான் எனக்கே இடம் கிடைக்கும் அதையும் விட்டு தரணுமா என்று சங்கடத்தில் இன்னொன்று நெளித்தது. இருந்தும் எழுந்து இடம் தரவில்லை.

பேருந்து ஒட்டத்தில் சரியாக நிற்க முடியாமல் வந்தவர் தத்தளித்தார். யாராவது தனக்கு இடம் தரமாட்டார்களா என்று பரிதாபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்த சீட்டை கவனித்தார். ஒரு சீட்டில் ஊன்று கோல்களுடன் ஒருவர் அமர்ந்து இருந்தார்.

அவர் பக்கத்தில் சன்னல் ஒரமாய் அமர்ந்து இருந்தவர் சன்னலில் தலையை சாய்ந்து அயர்ந்து தூங்குவதாக பாசாங்கு செய்து நடித்தார். யாராவது எழுந்திருக்க சொல்லி விடுவார்களோ என்று காதைத் அவர் தீட்டி கொண்டிருந்தது பார்ப்பதற்கு கேவலமாக இருந்தது.. யார் சொன்னாலும் எழுந்திருப்பதில்லை என்று முடிவுடன் அது தூங்கியே விட்டது!

அடுத்த பேருந்து நிறுத்தம் வந்தவுடன் பிரேக் அடித்து வண்டியை ஓட்டுநர் நிறுத்தினார். ஒரு குலுங்கி குலுங்கி பல்லவன் நின்றது. கைப்பிடி நழுவ அந்த ஊனமுற்றவர் கீழே விழப் பார்த்தார். தன் மேல் அவர் சரிந்து விட்டார் என்று பக்கத்து பயணி எரிச்சலுடன் நகர்ந்து கொண்டார்.

”யாரைவது கேட்டு உட்கார வேண்டியது தானே. மேல மேல விழுந்தா…இதுங்கல்லாம் வீட்ல சும்மா உட்கார வேண்டியது தானே” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தார்.

வந்தவருக்கு சங்கடமாக இருந்தது. யாராவது இடம் தந்தால் தானே உட்காருவதற்கு என்று நினைத்தார்.

”எஸ்கீயூஸ் மீ…. இங்கே உட்காருங்க”. இரண்டு சீட்டுகள் தள்ளி இளைஞர் ஒருவர் எழுந்து இடம் தந்தார்.

“தேங் ஸ்……”

பக்கத்து கம்பியை பிடித்து சென்று இருக்கையில் அமர்ந்த அந்த ஊனமுற்றவர் நன்றி பெருக்குடன் அந்த இளைஞரை பார்த்தார்.

அதற்குள் கண்ணாடி அணிந்த அந்த இளைஞர் பேருந்தின் முன்னாள் நகர்ந்து விட்டார்.. சில நிறுத்தங்களை பேருந்து கடந்து சென்றது.

அழகிய கறுப்பு கூலிங்கிளால் அணிந்திருந்த அந்த இளைஞர் பேருந்தை விட்டு இறங்கினார். பேண்ட் பாக்கட்டில் கையை விட்டு மூன்றாக் மடித்து வைத்திருந்த இரும்பு ஸ்டிக்கை உதறி நீட்டினார்.
நிமிர்ந்த நடையுடன், நேர் கொண்ட பார்வையுடன் கண் தெரியாத அந்த இளைஞர் நடந்து போவதை பயணிகள் கவனித்தனர். ”ஊனமுற்றோர்க்கு ஒதுக்கப்பட்ட இடம்” வாசகம் அவர்கள் எல்லாரையும் பார்த்து பல் இளித்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும் தனது கவிதைக்காக இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு மூளையைக் கசக்கி கொண்டிருந்தான். ஊற்றெடுத்து பிரவாகமாகப் பொங்கி ...
மேலும் கதையை படிக்க...
குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி மேன்சன் பேச்சலர் வாழ்க்கையை ஒருமுறை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட மனசு இடம் தராது. சாம்பாரில் மிதக்கும் ...
மேலும் கதையை படிக்க...
'மாடர்ன் டைம்ஸ்' திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை நகரின் மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளாய் இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் ரோபோட்கள் அதன் உள்ளும் புறமும் இருந்து கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
“இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட அழகிய கண்கள் வேறு எங்கோ நோக்கின. இருளப்பன் அந்த பணத்தை வாங்காமல் கைகளைப் பின்னுக்கு இழுத்து கொண்டு பிகு செய்தான். அவன் ...
மேலும் கதையை படிக்க...
தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல் விளக்குகளால் சீவி சிங்காரித்து மினுக்கி குலுக்கிக் கொண்டிருந்தது. அந்த குலுக்கலும், மினுக்கலும் அதிகாலை கதிரவன் வெளிச்சம் பரப்பிய பின்பும் கூட ...
மேலும் கதையை படிக்க...
துள்ளும் கவிதை
பய – பக்தி
ஆன்மாக்களின் கல்லறை
தீச்சுவை பலா
ஒய்யாரச் சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)