ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது.
ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்.
எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன்.
“அண்ணா அண்ணா” என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன்.
அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் இடதுகை நொறுங்கி கூழாகிப்போனது.
அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர் ரமேஷின் இடதுகையை.
நேற்றுதான் மருத்துவமனைவிட்டு வீடு வந்திருக்கிறான் .
“ரமேஷ்….அண்ணா வந்திருக்கார் பாருடா” அரைத்தூக்கத்திலிருந்தவனை மெதுவாய் எழுப்பினார் அவன் அம்மா .
“அண்ணா இனி என்னால மத்த பசங்க மாதிரி விளையாட முடியாதாண்ணா?”
என்னைக்கண்டவுடன் கண்ணில் நீர்மல்க கேட்டான் ரமேஷ.
“உனக்கு ஒண்ணுமில்லடா நீ முன்ன மாதிரியே விளையாடலாம், உன் பிரண்ட்ஸ்கூட வெளியே போகலாம்,எல்லாம் பண்ணலாம்டா”
நான் சொன்னதை கேட்காமல் அழத்துவங்கிவிட்டான் ரமேஷ்.
என் ஆறுதல் வார்த்தைகளால் அவனை சமாதானப்படுத்த இயலவில்லை
ஊனம்தந்தவலியை அவன் கண்களில் உணர்ந்தவனாய் வீடுநோக்கி திருப்பினேன் என் சக்கரநாற்காலியை.
தொடர்புடைய சிறுகதைகள்
1.
புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும் நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை அழைப்பது போலிருந்தது அவளுக்கு.
ரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த நிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்? விழியோரம் ஒருதுளி நீர் கசிந்து காற்றில் கரைந்தது...
மலர்விழியை சுற்றிலும் தலைவிரிக்கோலமாக அழுது கொண்டிருந்தனர் பெண்கள்.
மனத்திரையில் மலர்விழியை முதன்முதலாய் சந்தித்த நாட்கள் ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி இரண்டு.
வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
"சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.
அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது...
"அப்பா ...
மேலும் கதையை படிக்க...
என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள் டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே சில்லென்ற காற்றும், ஏதோவொரு பூவின் வாசமும் மிதந்து வந்தது. நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். இரண்டு நாட்களாய் மண்டைக்குள் குடைச்சல். என் ...
மேலும் கதையை படிக்க...
குளிச்சு ரெண்டு வாரமாச்சு...பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும்.
அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம்.
போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்...
என் நேரம் அப்பவும் சாவு ...
மேலும் கதையை படிக்க...
பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்
மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்
போனோமா வந்தோமான்னு இருக்கணும்