பிரபு, உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையைச் சொல்லித்தருவதில்லையாம்!
ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித் தருகிறாராம்” என்று கேட்டார் பொதுமேலாளர்.
“மன்னிக்கனும் சார். ஏதாவது ஒரு புதிய வேலையை எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு சொல்லித்
தருகிறோம். அடுத்தவாரம் அதே போல வேலையை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்து நீங்களே நேரடியாக கண்காணியுங்கள் என்றான் பிரபு.
அதேபோல ரகுவுக்கு பிரபுக்கும் புதுவேலையைக் கொடுத்தார் பொதுமேலாளர். ரகுவின் ஆள் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில் பிரபுவின் ஆள் வேலையை முடித்துவிட்டான். ரகுவின் ஆள் மூன்று முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான்.
ஒரு வழியாக 5 மணிநேரத்தில் முடித்தான்.
பொதுமேலாளர் பிரபுவை அழைத்து, எப்படி முடிந்தது? என்று கேட்டார் பொதுமேலாளர்.
“சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லி கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது. அதனால் விளைவுகளை
மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ என்று நேரம் கொடுத்து விட்டுடணும்.
தேடிப்பிடிச்சு கத்துக்கிட்டா, கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு அதிகம்” என்றான் பிரபு,
“நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைப்படுகிறேன் என்றார் பொதுமேலாளர்.
தொடர்புடைய சிறுகதைகள்
ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால் முதல் முறையாக அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட, அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு தெரியாமல்
படாத பாடு பட்டுவிட்டான்.
சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது ரதியின் டைரி. ...
மேலும் கதையை படிக்க...
“ஏங்க நம்ம குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு. அப்புறம் ஆபீஸ் போங்க” என்று சொன்னாள் நீலா.
“போடி எனக்கு ஆபீஸ்ல அவசரமான வேலை இருக்கு டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா’ என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜன்.
ஆமாம் ...
மேலும் கதையை படிக்க...
தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம். காலைக் கதிரவன் மெல்ல எழக், கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழக், கதிர் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாய் அரைக் ...
மேலும் கதையை படிக்க...
“பளார்” எனக் கன்னத்தில் மேலாளர் சந்தானம் அறைந்ததும், ஒரு நிமிடம் கலங்கிப் போனான் சங்கர். அப்படியே வெளியே வந்து தன் இடத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்துச்சுயநினைவுக்கு வந்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகம் வரவில்லை. மேலிடத்தில் புகார் செய்யலாமா என்று யோசித்தான் ...
மேலும் கதையை படிக்க...
“என்ன சிம்லா, நீ வாங்கனுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, 42 இன்ச் எல்.இ.டி. டிவியை உனக்காக சஸ்பென்சாக வாங்கி வந்து மாட்டினா, சந்தோசத்துல கட்டிபிடிச்சிக்குவேன்னு பார்த்தா, இப்படி கோவப்படுற?” என்று கேட்டான் முத்துச் சோழன்.
“என்னையும் கேட்டிருக்கலாமில்ல. ஏன்டா கேட்காம வாங்கின?” என்றாள் சிம்லா.
“உனக்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்பு அதிர்ச்சி! – ஒரு பக்க கதை