உள்ளும் புறமும்

 

உள்ளும் புறமும்“ஹலோ சார்…”

“சூரஜ்?”

“எஸ் சார்…”

“உட்காருங்க…”

“‘இங்க’ல்லாம் வேண்டாம் சார்…”

“சரி… டேக் யுவர் சீட்… யூ லைக் திஸ் ஆபீஸ்?’’

“ரொம்ப சார்…”

“எஞ்சினீரிங் முடிச்சது இந்தியாலதானே?”

“ஆமா சார்…”

“வேலைலாம் எப்படிப் போகுது?’’

“டைட்டா போகுது சார்…”

“அது ஓகே… பிடிச்சிருக்கா..?”

“ரொம்ப…”

“படிச்சது மெக்கானிக்கல் இல்ல?”

“ஆமா சார்…”

“செய்யற வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி இருக்கா?”

“…”

“என்னடா ஒரு எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் நம்ம லைனைப் பத்திப் பேசறானேனு பாக்கிறியா?”

“இல்லை சார்… சம்பந்தம் இருக்கற மாதிரிதான் தோணுது. போகப்போக படிச்சது நிறைய யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்…”

“ஓகே… நான் கேட்க வந்தது இது இல்ல… கொஞ்சம் பர்சனலா பேசலாமா?”

“சார்?”

“வேலைல சேர்ந்து ஒரு நாலு மாசம் இருக்குமா?”

“நாலரை மாசம் ஆச்சு…”

“ஊர்ல படிச்சு முடிச்ச உடனே இங்க அபுதாபி வேலைக்கு வந்துட்ட இல்லையா?’’

“எஸ் சார்… இதுதான் முதல் ஜாப்…”

“அபுதாபி பிடிச்சிருக்கா?”

“எஸ் சார்”

“ஹோம்சிக்லாம் ஒண்ணும் இல்லையே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே… ஏன் கேட்கிறீங்க..?”

“அப்புறம் ஏன் எந்த பார்ட்டிலயும் கலந்துக்க மாட்டேன்ற? போன வாரம் நடந்த உங்க டிபார்ட்மென்ட் பார்ட்டிலயும் கலந்துக்கலையாமே? இது மட்டுமில்ல… அபுதாபியில் இருக்கற எந்த மாலுக்கும் இதுவரை போனதே இல்லையாமே?”

“இதெல்லாம் உங்களுக்கு…”

“எப்படித் தெரியும்னு கேட்கறியா? அது முக்கியம் இல்லை. விசயத்துக்கு வா… ஏன் இப்படி விட்டேத்தியா இருக்க?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை சார்…”

“எதுவாயிருந்தாலும் சொல்லு. கூட வேலை செய்யற ஒரு ஒர்க்கரா கேட்கல… என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோ…”

“நிஜம்மா அப்படி எதுவும் இல்லை சார்…”

“சரி… முதல் சம்பளத்துல என்ன வாங்கின?”

“….”

“நான்லாம் உன்னோட வயசுல அதுவும் ஃபாரின் வேலைக்கு வந்து முதல் சம்பளம் வாங்கினதும் என்ன வாங்கலாம்னு எத்தனை அயிட்டம் லிஸ்ட் போட்டு வச்சிருந்தேன் தெரியுமா? இந்த வயசுல நீ இப்படி இருக்கறது ஆச்சரியமா இருக்கு. சரி முதல் சம்பளம் வாங்கினதும் என்னதான் செஞ்சே?’’

“எங்க அப்பாகிட்ட கொடுத்தேன்…”

“முழு சம்பளத்தையுமா?”

“சார்… இவ்வளோ அக்கறை எடுத்து கேட்கறதால உங்ககிட்ட சில விஷயங்களை சொல்றேன். உங்களோட வச்சுக்கோங்க… எங்க அப்பா இங்க அபுதாபியில் ஒரு பில்டிங்கில நாதூரா (வாட்ச்மன்) இருக்கார். சம்பளம் எவ்ளோ தெரியுமா? எண்ணூறு திர்ஹாம். அதை வச்சுதான், நாங்க மூணு பிரதர்ஸ், எங்களையெல்லாம் ஊர்ல படிக்க வச்சார்.

நானும் என் தம்பியும் இப்ப எஞ்சினியர்ஸ். இன்னொரு தம்பி எஞ்சினீரிங் படிச்சிட்டிருக்கான். நினச்சுப் பாருங்க… எண்ணூறு திர்ஹாம்ல எங்க காலேஜ் பீஸ் கட்டி, வீட்டு செலவுக்கு பணமும் அனுப்பி… மீந்த காசுல, அப்படி என்ன மீந்திருக்கும்னு எனக்குத் தெரியல, அவரும் சாப்பிட்டு… நல்ல வேளை… பில்டிங் நாதூர்ன்றதுனால தங்கற இடம் ஃப்ரீ… நானும் தம்பியும் வேலைக்குப் போனதும் முடிவு பண்ணோம். இனிமேலாவது அவரை நல்லா வச்சுக்கணும்னு…”

“உன் தம்பியும் அபுதாபியில் வேலை செய்றானா?”

“இல்லை சார், அவன் துபாய்ல இருக்கான்…”

“சரி…”“சம்பளம் வந்ததும் அப்படியே கொண்டு போய் எங்க அப்பாகிட்ட குடுத்துருவோம். எங்களை ஆளாக்க வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைக்க ஆரம்பிச்சிருக்கோம். ரொம்ப நாளா அவர் முகத்துல இருந்து காணாமப் போயிருந்த சிரிப்பும் நிம்மதியும் இப்பதான் கொஞ்சமா எட்டிப் பாக்க ஆரம்பிச்சிருக்கு. மால் பக்கம்லாம் ஏன் போறதில்லன்னு கேட்டிங்கல்ல.

காலேஜ்ல கடைசி வருஷம் படிச்சிட்டு இருக்கற எங்க தம்பியை ஒரு நல்ல வேலைல சேர்த்து விடணும். கடனை எல்லாம் முழுசா அடைக்கணும். ஏதாவது ஆசைப்பட்டு வாங்கிடு வோமோனு பயந்தே மால் பக்கமே போறதில்ல. அப்படியே வாங்கினாலும் அவர் ஒண்ணும் சொல்லப் போறதில்ல… அவர் என்னமோ எங்களை ஏதாவது வாங்கிக்குங்கடானுதான் சொல்லிட்டு இருக்கார். எங்களுக்குத்தான் மனசு வரல. இன்னும் கொஞ்ச காலம் இப்படியே ஓட்டிட்டோம்னா அப்புறம் மால் பக்கம் போயிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்…’’

“…”

“நீங்க வற்புறுத்தி கேட்டதாலதான் இதையெல்லாம் சொன்னேன். சாரி சார்…”

“இட்’ஸ் ஓகே சூரஜ்…”

“ஒரு டவுட் சார்… இப்படி டிபார்ட்மென்ட் பார்ட்டிக்கெல்லாம் போகாம இருக்கறது தப்பா சார்?”

“தப்பா… நீ தப்பே பண்ண முடியாது சூரஜ்… கவலைப்படாமே போய் உன் வேலையைப் பார்…”

“ஹலோ சூரஜ்…”

“ஸ்பீக்கிங்…”

“டேய் குணாடா… அரைமணி நேரமா ட்ரை பண்ணிட்டிருக்கேன். மொபைல் வேற ஆஃப் பண்ணி வச்சிருக்கே?”

“சார்ஜ் இல்லைடா… ஒரு மீட்டிங்கில் இருந்தேன். இப்ப சொல்லு…”

“நாளைக்கி வீக் எண்ட்… நம்ம சேகர் ரூம்ல பார்ட்டி… வந்துரு…”

“நான் இல்லாமலா?!”

- 13 Sep 2019 

தொடர்புடைய சிறுகதைகள்
வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் ...
மேலும் கதையை படிக்க...
சிரிப்பு
கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு மாதம் எங்களுடன் பணி புரிந்தவர். எங்கள் என்பதில் நானும் குமாரும் சேர்த்தி. பல்லடம் பக்கத்தில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக இருந்தாலும் முரளியின் நாட்கள்தொடங்குவது இப்படியே. பல் விளக்கி தேநீர் குடித்து முடிப்பதற்குள் செய்ய வேண்டியவை குறித்த ஒரு கால அட்டவணை மனதுக்குள் ...
மேலும் கதையை படிக்க...
நிறை மாத வயிறோடு அந்த பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிரேமா. அபுதாபியில் காலை வெயிலோடு நல்ல தூசுக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்து போன டாக்சி ஒன்றில் பயணிகள் நிறைந்து காணப்பட்டது. ஒன்பது மணிக்கு ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும். செல்பேசியில் ...
மேலும் கதையை படிக்க...
கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு மாதம் எங்களுடன் பணி புரிந்தவர். எங்கள் என்பதில் நானும் குமாரும் சேர்த்தி. பல்லடம் பக்கத்தில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அம்மா மாதிரி
சிரிப்பு
ஞாபகம்
பார்வைகள்
அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)