உள்ளத்தனனயது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,411 
 

“bhaavagraahii janaardanah’
Bhagavan Janaardana, sees only the Bhaava of the bhaktas. The Manobhaava of the bhakta towards Him.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுய நீர பிற _________ திருவள்ளுவர்

Bhakthi kim karoth yaho vana charo bhaktha vatam sahyathe
Sivanandalahari ____________SRIMATH Sankaracharya bhagavat padal

நம் கதைக்கு துரைராஜ் நிச்சயமாக கதாநாயகன் கிடையாது, ஆனால் அவர் இல்லாமல் கதையே கிடையாது. இவ்வளவு தூரம் சொல்லப்படும் அந்த துரைராஜ் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வருகிறதா? இதோ அவர்.

துரைராஜ் பெரிய அரசியல் புள்ளி. மந்திரி ஆவதற்கு வேண்டிய குணங்கள் அவ்வளவும் குறைவின்றி அவரிடம் இருந்தன. முரட்டுத்தனமான முகத்தோற்றம்;;; பார்பவரை அச்சுறுத்தும் அளவுக்கு அடர்தை மீசை இவற்றை ஈடு செய்யும் திடமான உடல்வாகு சென்னையில் 4 மதுக்கடைகள், ஒரு சினிமா தியேட்டர் அவருக்கு செந்தமாக உண்டு. மந்திரி சபையில் அவரை சேர்த்து கொள்ள எப்போதுமே தடை சொன்னதில்லை. மந்திரியாகிவிட்டால் குறைந்த பட்ச கட்டுப்பாடுகள் வந்து சேரும். துரைராஜிக்கு கட்டுப்பாடுகள் என்றால் அறவே பிடிக்காது. மந்திரி பதவி தன்னை தேடி வந்தும் அதை தவிர்தார். அரசியல் வட்டாரங்களில் அவருக்கு தியாகி பட்டம் வேறு சேர்ந்து விட்டது. அவர் பெரிய கோவில் ஒன்றில் தர்மகர்த்தா பதவி ஒன்றில் இருந்தார்.

வருடத்திற்கு இரண்டு தடைவ மட்டும் கோவிலுக்கு போவார். ஓன்று தன் தலைவர் பிறந்த நாளை ஒட்டி நடக்கும் சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்வதற்காக மற்றொன்று கோவிலில் நடக்கும் வருடாந்திர விழா நிகழ்ச்சியில். அவர் கோவில் சொத்துக்களை அனுபவிப்பதற்காக தர்மகர்தாவாக இருக்கிறாரா, இல்லை தர்மகர்தா ஆனதால் கோவில் சொத்துக்களை அனுபவித்து வருகிறாரா என்பது பட்டிமன்றத்தில் தலைப்பு பெறக் கூடிய ஒன்று.

அரசியலில் ஆட்சி மாறும், ஆளுங்கட்சி மாறும். ஆனால் துரைராஜ் மட்டும் மாறமாட்டார். அவர் ஆட்சி மாறியவுடன் செய்யும் ஒரு தடைபடாத நிகழ்ச்சி தனது சாராயக்கடை ஆட்கள் மற்றும் அவருக்காக கட்டைப்பஞ்சாயத்து ஏரியா பிரித்து கொண்டு செய்யும் 30 ஆட்களுடன் ஒரு பெரிய போஸ்டர் அடித்து கொண்டு ஆளுங்கட்சிக்கு முந்தைய கட்சியின் கொள்கை பிடிக்காததாலும் உழைப்பவருக்கு மரியாதை கிடைப்பதில்லை என்றும் அறிவித்து சேர்ந்து விடுவார்.

அரசியல் தலைவர்களுக்கு இது தெரியும், ஆனால் அரசியலில் இது சகஜமானதால் இதை யாரும் அவ்வளவு பொருட்படுத்துவதில்லை மேலும் இந்த கொள்கை பிடிப்புக்காக நடைபெறும் மாற்றம் சில லட்சங்களை தலைவருக்கு பரிசாக கூட வரும்போது தலைவர் மனமுவந்து தாய் வீட்டிற்கு திரும்பிவரும் வீரர்களை வரவேற்பார்.

ஒரு தடவை தலைவர் இது பற்றி கேட்டபோது “துரைராஜ் வருவது கட்சிக்கு நல்லது, மேலும் அவர் பணம் தருகிறார், அவர் சொன்னால் ஒட்டு போடுவதற்கு 50 பேராவது வருவார்கள். சின்ன விஷயத்திற்கெல்லாம் கட்சியிடம் உதவி கோட்டு நிற்க மாட்டார்.

இந்த துரைராஜ் புராணம் போதும் சார் கதைக்கு வாருங்கள்… நீங்கள் சொல்வது புரிகிறது.

ஆனால் என்ன செய்வது துரைராஜை சுற்றியே தானே கதையே நகர்கிறது.

இந்த துரைராஜிக்கு ஏதாவது சிறந்தது என்று மனதில் பட்டால் அதை தன் வசப்படுத்தி தயங்கவே மாட்டார். அப்படிப்பட்டவர் தான் சசிரேகா. கோவாவிற்கு டூர் போயிருந்த போது, ஒரு ஹோட்டலில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் அவளை சந்தித்தார். நாட்டியத்தில், பாடலில் எல்லாம் துரைராஜிக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஏனோ சசிரேகாவைப் பார்ததுமே அவருக்கு பிடித்து போய்விட்டது.

பேரம் பேசினார் ஹோட்டல்காரர்கள் துரைராஜின் வெயிட்டைப் பார்த்தார்கள், பணம் கை மாறியது. சசிரேகாவை சென்னைக்கு கூட்டிவந்து விட்டார். சசிரேகா ஏழை என்ற குறையை அவள் அழகில் ஈடு செய்திருந்தார் கடவுள்.

தினம் தினம் நடனத்தைப் பற்றி அறியாதவர்கள் முன்பு நடனமாடவேண்டும். அதுவும் பரத நாட்டியமா, இல்லை சினிமா பாடல்களுக்கு ஏற்ப தெலுங்கு கன்னட நடிகைகள் தமிழ் பாட்டுக்கு பாட்டு புரியாமல் அவர்கள் இஷ்டப்படி கை கால்களை ஆட்டுவார்களே அப்படி ஒரு நடனம். ஹோட்டல்காரர்களுக்கும் நிரந்தரமற்ற சொற்ப வருமானம். என்ன பத்மநாபஸ்வாமியை காலை மாலை தினம் பார்க்க முடியாது அவள் யோசனை செய்தாள். அதனால் என்ன தன் குடுப்பத்திற்கு ஒரு நல்ல வாழ்கையைத் தரமுடியும். குடுப்பத்திற்கு ஒரு வீடும், கணிசமான ரொக்கமும் ஈடாக கோட்கப்பட்டது. துரைராஜிக்கு ரொம்ப மகிழ்ச்சி, துரைராஜ் மனைவிக்கு இது ஒன்றும் புதிதில்லை, இருந்தாலும் சசிரேகாவின் கள்ளமற்ற அழகு, அவள் முகத்தில் இருந்த ஒரு தெய்வீகக்களை அவளை வேதனையில் ஆழ்த்தியது.

சசிரேகா சென்னை வந்து விட்டாள். அவளுக்கு தன் வசமிருந்த ஒரு அடுக்கு குடியிருப்பின் (pநவெ hழரளந) கடைசி மாடியை தயார் செய்து கொடுத்து விட்டார் அவளுக்கு றயடமiபெ போகவேண்டுமென்றால் மொட்டைமாடி. அவருடைய கடையில் வேலை செய்யும் ஒரு 12 வயது பையன் அவளுடைய தம்பியானான். அவனுக்கும் சந்தோஷம் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்தாலும் கிடைக்கிற சம்பளத்தை விட கூடுதல் சம்பளம், முதலாளியின் தனி கவனிப்பு.

துரைராஜிம் அவளை பாசம், பரிவு, மிகுந்த அக்கரையிடன் அவளை கவனித்துக் கொண்டார். சசிரேகாவும் மாதம் ஒரு முறை சொந்த ஊர் போய் பத்மநாபஸ்வாமியை கோவில் திறந்தவுடன் போய் கோவில் மூடும் வரை சேவித்தாள்.

குடும்பத்தோடு துரைராஜ் கர்நாடாவிற்கு டூர் சென்றார் உடுப்பி, தர்ம ஸ்தாலா, சுப்பிரமணியம், கொல்லூர், முருடேஸ்வர், சிருங்கேரி ஒரு வாரம் கோவில் கோவிலாகச் சென்றார், ஏன் சசிரேகாவிற்கு பிடிக்கும். அவள் அந்த கோவில்களெல்லாம் போய் அழுதழுது சேவித்தாள். அவள் பக்தியை கண்டு துரைராஜிக்கும் கூட பக்தி நெஞ்சில் ஒரு ஓரமாக கனிய ஆரம்பித்து விட்டது.

ஏதோ பேர் தெரியாத ஊரில் சென்றிருந்த கார் ரிப்பேர் ஆகிவிட்டது. டிரைவர் ஏதோ ரிப்பேர் செய்ய ஆரம்பித்தார், காலார நடந்து சென்று கொண்டிருந்த துரைராஜின் குடும்பத்தினருக்கு ஒரு பாழடைந்த கோவில் தென்பட்டது. சசிரேகா கோவில் கண்டதும் கை நீட்டினாள்.

புhழடைந்த கோவில், ஒரே ஒரு கிருஷ்ண விக்கிரகம் மட்டும் லஷ்ணமாக இருந்தது. ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பூஜை பண்ணிக்கொண்டிருந்தார்.

வணக்கம் சாமி! சசிரேகா தான் மௌனத்தை களைத்தாள். நீங்க மட்டும் தனியா கேள்வியோடு நிறுத்தினாள். வணக்கம், இந்த கோவிலுக்கு யாருமே வரமாட்டாங்க, இது ரொம்ப பழைய கோவில். இங்கு பக்கத்திலே ஒரு அணைக்கட்டு கட்டுவதற்காக இந்த கிராமத்தைக் காலி செய்ய செல்லி அரசாங்கம் வேறு கிராமத்தில் இடம் கொடுத்துட்டாங்க. அதனால் இந்த கிராம மக்கள் எல்லாரும் போயிட்டாங்க. அரசாங்கத்திலே இந்த கோவிலுக்கும் நிலம் தந்து கோவில் கட்டி தருகிறோம் என்று செல்லியிருக்காங்க வருஷம் 3 ஆகிறது ஒண்ணும் நடக்கவில்லை. எனது மனைவி, குழந்தைகள் எல்லாம் பேர் தெரியாத வியாதி வந்து இறந்து போனார்கள். நான் ஒருவன் மட்டும் வந்தால் என் கிருஷ்ணனோடு தான் வருவேன் என்று சொல்லி விட்டேன். ரொம்ப கஷ்ட ஜிவனம் தான். குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.

கிருஷ்ணன் ரொம்ப அழகாக இருக்கான். ஏன் சாமி சொன்னைக்கு வரக்கூடாது. கிருஷ்ணன், நீங்க இரண்டு பேரும் சென்னைக்கு வந்துடுங்க. சென்னையிலேயே நிறைய கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

எனக்கு என்று யாருமில்லை, நானும் கிருஷ்ணனும் தான்.

சசிரேகாவுக்கு சாமி, அவர் கிருஷ்ணனிடம் கொண்டிருந்த பிரேமை ரொம்ப பிடித்துவிட்டது.

சசிரேகாவுக்கு பிடித்துவிட்டால் அப்புறம் என்ன.

துரைராஜி தன் செயல் திறனைக் காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது. துரித கதியில் வேலைகள் நடந்தன.

ஒரு நல்ல நாளில் கிருஷ்ணன் துரைராஜி தர்மகர்த்தாவாக உள்ள கோவிலில் அமர்ந்தான். துரைராஜிக்கும் ரொம்ப பிடித்திருந்தது. கோவிலும் அடிக்;கடி சென்றார், மக்களும் துரைராஜிக்கு வந்த திடீர் கிருஷ்ண பக்தியைக் கண்டு வியந்தனர்.

துரைராஜ் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சசிரேகாவுக்கு எதிராக உள்ள குடயவ – ஜ காலியாக வைத்திருந்தார். கிருஷ்ணனோடு வந்த காமத்திற்கு அதை கொடுத்தார்.
நாட்கள் சென்றன, காமத் சென்னையில் ஒருவராகிவிட்டார். காலையில் 4 மணிக்கு எழுந்து விடுவார். பக்தி பாடல்கள் பாடுவார். அவர் பக்தியைப்
பார்த்து சென்னை மக்கள் பரவசப்பட்டனர். சசிரேகா அவர் பக்தியைப்பார்த்து பிரமித்து போய்விட்டாள்.

ஒரு நாள் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் காமத். அழைப்பு மணி ஒலித்தது வெளியே வந்து பார்த்தார். அவரால் நம்ப முடியவில்லை. சசிரேகா குளித்து அழகாக சேலை உடுத்தி வெளியில் அழகுப்பதுமையாக நின்றிருந்தாள்.

என்ன அம்மா, என்று கேட்டார்.

என்னை சசி என்றே நீங்கள் அழைக்கலாம் சாமி, என்றாள்.

நான் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டேன். தினமும் காலையில் உங்களை வணங்க வேண்டும், அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும், என்று சொல்லி காலில் விழுந்தாள்.

காமத் பேச்சின்றி திகைத்து நின்றார், நான் அவ்வளவு பெரிய மகான் இல்லையம்மா. ஏனக்கு நீங்க மகான் தான். வரேன் சாமி, தினமும் இதே நேரத்திற்கு வருவேன் என்று சொன்னாள்.
சசிக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. காமத் எவ்வளவு நல்லவர். எவ்வளவு அசையாக குழந்தையை குளிப்பாட்டுவது போன்று கிருஷ்ணனை நீராட்டுகிறார். கண்ணா நீராடவாராய் என்று எவ்வளவு அழகாக அழைக்கிறார். கண்ணனை அமுது சொல்வாங்க எவ்வளவு அந்தரங்கமாக அழைக்கிறார். அவள் உணர்ச்சியில் நெகிழ்ந்தாள்.

காமத்திற்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. என்னை எவ்வளவு மதிக்கிறாள், சசி என்றே அழைக்க உரிமை கொடுக்கிறாள், என்ன உடல்வாகு என்ன நேர்த்தி நடனமாடுவதற்காகவே செதுக்கப்பட்ட உடல். சிரித்தால் குழி விழும் கண்ணாடி கன்னங்கள். கருங்கூந்தல், துரைராஜ் ரொம்ப கொடுத்து வைத்தவர்.

காமத்தின் மனதில் நிழலாடினாள் நடனமாடினாள். அவ்வப்போது வந்து கன்னங்குழிய மோகன சிரிப்பு உதிர்த்தாள். துரைராஜிவையும் அவளையும் சேர்த்து பார்த்தவர், கற்பனைகளை வளர்த்து கொண்டார்.

இருவர் எண்ணத்திலும் கற்பனைகள் தினமும் வளர்ந்தன. அப்போது ஒரு நாள் பெரும் சத்தத்துடன் அந்த அடுக்குமாடி கட்டிடம் விழுந்துவிட்டது. பூகம்பம் என்றார்கள், மோசமான கட்டுவேலை என்றார்கள். காரணம் ஏதோ ஒன்று. கட்டிடம் விழுந்தது நிகழ்ச்சியாகி விட்டது. இறந்தவர்கள் பட்டியலில் சசிரேகா, காமத் இருவரும் இடம் பெற்றனர். துரைராஜ் ஒடிந்து போனார். அது சசிரேகாவுக்காகவா இல்லை காமத்துக்காகவா, இல்லை விபத்தில் இறந்த தன் மகனுக்காகவா, அவருக்கே புரியாத ஒன்று.

சசிரேகா கண் விழித்து பார்த்தாள். இரண்டு அழகு தேவதைகள், சசிரேகாவை உபசரித்தார்கள். சந்தனம், ரோஜா மலர்களால் நிரப்பப் பட்ட குளத்தில் குளிக்க வைத்தார்கள். புத்தாடை தந்தார்கள். வாசனை திரவியங்கள் வேறு, அவள் மின்னினாள், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் எங்கிருக்கிறேன், கட்டத்திலிருந்து விழுந்தது மட்டும் தெரியும், நான் பயந்து மூர்ச்சையாகி விட்டேன். எப்படி இதெல்லாம், வியப்போடு மான் போன்ற கண்கள் அகலக் கேட்டாள்.
தேவதைகள் சிரித்தார்கள். சசி நீ இறந்து விட்டாய். இப்போது சொர்க்கத்திற்கு வந்து விட்டாய். நீ மனத்தால் அந்த காமத் எப்படி கிருஷ்ணனை உபசாரம் செய்கிறார் என்று தினம் தினம் கற்பனை செய்ததால் மானசீகமாக தினம் நேர்த்தியான பூஜை செய்து வந்தாய். அதன் பலன்தான் நீ தற்போது சொர்க்கத்தில் இருக்கிறாய்.

ஓ! அப்படியா, நான் இறந்து விட்டேனா என் சாமி என்ன ஆனார்.

யாரைக் கோட்கிறாய், கிருஷ்ணனை பூஜை செய்து வந்தாரே காமத் சாமி.

ஆவரா, அவரும் செர்க்கத்தில் தான் இருக்கிறார்.

அவரை நான் பார்க்கலாமா? தூராளமாக, உனக்கு இங்கு எல்லா சுதந்திரமும் உண்டு. நீ அவரைப் பார்க்க வேண்டுமா?

ஆமாம், அவசியம் பார்க்க வேண்டும்.

தேவதைகள் சசிரேகாவை கூட்டிச் சென்றார்கள், அங்கே இரு அரக்கர்கள் அவரை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

சுசி பதறினாள். இது என்ன அக்கிரம்மம், அவர் எவ்வளவு நல்லவர்.

அவர் நல்லவர் என்பதால் தான் சொர்க்கத்திற்கு வந்திருக்கிறார். அவர் மனதால் சில தவறுகள் செய்தார். அதனால், சில நாட்கள் இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும்.
வணக்கம்! சாமி, குரல் கேட்டு காமத் தலை நிமிர்ந்தார். அரக்கர்கள் சற்று நிறுத்தினர்.

சுசி, எப்படி அம்மா இருக்கே, குரல் தழுதழுத்தது.

நீங்கள் ரொம்ப நேரம் பார்க்கக் கூடாது, ஏனென்றால் உங்களுக்கு மனம் வேதனைப்படும். நீங்கள் கொஞ்சம் கூட வேதனைப் படக்கூடாது.

சசியை கூட்டிக் கொண்டு தேவதைகள் சென்றனர்.

எனக்கு ஏதாவது வேண்டுமென்றால் நான் யாரிடம் கேட்க வேண்டும், தேவதைகளிடம் கேட்டாள்.

கடவுளிடம் கேட்கலாம், நீங்கள் நினைத்தாள் கடவுள் வருவார்.

உடனே கடவைள நினைத்தாள், கடவுள் வந்தார்.

என்னம்மா உனக்கு என்ன வேண்டும். கடவுள் புன்முறுவலுடன் கேட்டார்.

அந்த சாமியை துன்புறுத்தாதீர்கள், அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். கடவுள் சிரித்தார், அவர் மனது என்ன நினைக்கிறது என்பது தான் முக்கியம். அவர் கிருஷ்ணன் மேல் நல்ல பிரேமைக் கொண்டிருந்தார் அவரை இந்திரனாகவே ஆக்கலாம் என்றிருந்தேன். அதற்கு முன்பு ஒரு சோதனை வைக்கலாம் என்று எண்ணினேன், அந்த சோதனையில் அவர் தேரவில்லை. அதற்கான சிறிய தண்டனை தான்.

கண்ணப்பர் எச்சிலால் அபிஷேகம் செய்தான், செருப்பு காலால் மிதித்தான். ஆனால் கண்ணப்பன் மாதிரி ஒரு பக்தன் இது வரயில் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை.
நீ கேட்டுவிட்டாய், என் கூடவா, நீயே உணர்வாய்.

கடவுள் சசிக்கு வேறு உருவம் கொடுத்து காமத்திடம் கூட்டிச்சென்றார்.

நீயும் நிறைய பூஜைகள் செய்திருக்கிறாய். கண்ணனை ரொம்பவும் நேசித்திருக்கிறாய் உன் மனது கொஞ்சம் கெட்டதால் சில நாள் தண்டனை பெறவேண்டியதாயிற்று. இப்போது உனக்கு ஒரு வரம் தருகிறேன் கேள், என்றார்.

அதற்கு காமத், சசியுடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்றான்.

சசி விக்கித்து நின்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *