வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது.
கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் பிடித்துக் கரை சேர்த்துக் காப்பாற்றிய பிறகு கேட்டான். ‘உலகத்துக்கு என்ன ஆபத்து?” என்று.
அதற்கு நரி சொன்னது, ‘ஆமாம் நீ என்னைத் தூக்காவிட்டால் நான் இறந்திருப்பேன். எனக்கு உலகம் போச்சு அல்லவா? அதனால்தான் அப்படிக் கூவினேன்’ என்றது.
அதுகேட்ட குடியானவன். ஒரு தனிமனிதன் தன் நலம் கருதி எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுவானோ, அப்படிப் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொண்டதே இந்தப் பொல்லாத நரி என்று மனதுக்குள் எண்ணி வியந்துகொண்டே சென்றான்.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு, தேங்காய்களை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பினான்.
தோப்பிலே எங்குப் பார்த்தாலும் ஒரே தேங்காய் நார்த் தூசியாகக் கிடந்தது.
மேல்தூசி, கீழ்தூசி இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது. ...
மேலும் கதையை படிக்க...
தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.
புத்தர் என்ன செய்வார்? அவரால் எழுப்பிக் கொடுக்க முடியும். இருந்தாலும் பிணத்தைத் தூக்கிக் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. மறுபடியும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர்.
மனம் வெதும்பிய தந்தை ஒரு நாள், ‘கரும்புக்கட்டு’ ஒன்றை வாங்கிவரச் ...
மேலும் கதையை படிக்க...
சுவாமி சச்சிதானந்தா என்ற தமிழகத்துத் துறவி, அமெரிக்காவில் ‘யோகிராஜ்’ என்ற சிறப்புடன் அமெரிக்க மக்களுக்கு ‘யோகாசனப் பயிற்சி’ அளித்துவருகிறார். இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர் அவருக்குச் சீடராக இருந்து யோகப் பயிற்சி பெறுகின்றனர். அந்த ஆசிரமத்திற்கு அமெரிக்க அரசாங்கமே அருந் துணையாக இருந்து ...
மேலும் கதையை படிக்க...
பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.
‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.
இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் ...
மேலும் கதையை படிக்க...
அண்மையில் வந்த திரைப்படத்தில் ஒரு காட்சி, வில்லன் ஒருவன் பதக்கத்தைப் பறித்துக்கொண்டு ஒடுகிறான். பறிகொடுத்த நாயகன் எப்படி மீட்பது என்று யோசித்தான அன்று இரவு வில்லன் வீட்டில் சன்னல் வழியே கம்பியைவிட்டுத் தொங்கிய சட்டையை இழுத்தான். அதில் பதக்கம் இருந்தது; மகிழ்ச்சியாக ...
மேலும் கதையை படிக்க...
50 ஆண்டுகட்கு முன்பு.
தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா.
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.
முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. ...
மேலும் கதையை படிக்க...
‘வேதாந்தம் பெரிதா? சித்தாந்தம் பெரிதா?’ என்று வாதிட்டு வேதாந்திகளும், சித்தாந்திகளும் போரிட்டுக் கொண்டிருந்தனர் இறுதியில் பகவான் இராம. கிருஷ்ணரை அணுகி, இருதிறத்தாரும் தத்தம் கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அவர் சொல்லும் முடிக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்தனர்.
அவர் மேற்கொண்டு வேறு எதையும் விசாரிக்காமல், “நான் ...
மேலும் கதையை படிக்க...
நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது.
வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன்.
பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது.
ஒருநாள் சோறு ...
மேலும் கதையை படிக்க...
சித்தாந்தமும் வேதாந்தமும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!