அந்த மலையின் சரிவில் இறங்கிக்கொண்டிருந்த ஜானுக்கும் ரவிக்கும் குளத்தில் தண்ணீரில் தத்தளித்துக்கொடிருந்த அந்தச் சின்ன நாய்க்குட்டியை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. சரிவான குளத்தின் விளிம்பில் படிந்திருந்த பாசி வழுக்கியதால் அதனால் ஏறமுடியவில்லை. ஊட்டியின் கடும் குளிர் அதனை மேலும் வாட்டியது.
“ஜான் எப்பவும் நீதான ஐடியா சொல்லுவ இப்போவும் எதாவது சொல்லேன்.”
“ரவி நான் என் பெல்ட்டை கழட்டி ஒரு எண்டை பிடிச்சிக்கிறேன் இன்னொரு எண்டை பிடிச்சிட்டு நீ ஜாக்கிரதையா குளத்தில இறங்கி பப்பியை வெளிய எடுக்குறையா?.” என்று சொல்லிக்கோண்டே ஜான் பெல்ட்டை கழற்ற “ஒ.கே” என்ற ரவி அதன் ஒரு நுனியை பிடித்துக்கோண்டு மெல்லக் குளத்தினுள் இரங்கினான். மெல்ல மெல்ல அந்த செல்ல நாஇகுட்டியை கை கொடுத்து தூக்கியபோது ஐஸ்கட்டியை தொடுவது போலவே உணர்ந்தான்.
இருவர் முகத்திலும் பெருமிதம் ஜொலித்தது.
“ கட் கட் கட்… “ராஜேஷ், அந்த நாய்க்குட்டியை வாங்கி தண்ணில போடுய்யா” – இயக்குனர்
“தாங்காது சார், காலைலேர்ந்து ரெண்டு நாய்க்குட்டி செத்துபோச்சு சார்”. – உ. இயக்குனர்
அதப்பாத்தா முடியுமா? 45 செகன்ட் ஷார்ட் ஃபில்ம் 32 செகண்ட் கூட வரலை. ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’னு மெஸேஜ் பப்ளிக்ல ரீச் ஆவணும்ல. – இயக்குனர்.
தொடர்புடைய சிறுகதைகள்
“அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று ஸ்கூல்லிருந்து வந்ததும் வராததுமாக அவரசரப்படுத்தினாள் ரேகா.
அவள் கவலையெல்லாம் அடுத்தவள் ராக்கி மூன்று வயதாகியும் வாய் திறந்து பேசாதது தான். மருத்துவரை ...
மேலும் கதையை படிக்க...
சின்ன தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள், சிறு வயதிலிருந்தே அழகான படிமங்களாக சேர்ந்திருந்தது. நான் என் அண்ணா, பக்கத்து வீடுகளிலிருந்த எங்கள் நண்பர்கள் என அனைவரும் அவரை ஒரு அழகான கதை சொல்லியாகவே அறிந்திருந்தோம்.
விசாலமான முற்றத்தை கொண்ட மர வேலைப்பாடுகள் நிறைந்த ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிற்றுக்கிழமை
புது வீட்டுக்கு மாறியிருந்தார்கள், ரங்கநாதன், மாலினி தம்பதியினர். கூடவே, மாமனார், மாமியார், மைத்துனன் ராகவ்மற்றும் குழந்தை ப்ரியா.
கடந்த வெள்ளிக்கிழமைதான் கிருஹப்ரவேசம் முடிந்திருந்தது.
வீடு ஒரே களேபரமாக இருந்தது. நடுக் கூடத்தில் மொத்தமாக பெட், ஸோபா செட், பீரோ என்று பரப்பியிருந்தார்கள். இன்னமும் எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட நாட்களாக மனைவி ஜானகிக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தாலும், ரேஷன் கார்டில் இன்னமும் பெயர் சேர்க்கப்படாத காரணாத்தாலும், பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. (பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை, அது வேறு விஷயம்!)
இன்னிலையில் ஒரு நாள் செய்தித்தாளில் இனி அனைவரும் தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில், வயதான அப்பாவும், பேச்சிலர் தம்பியும் கஷ்டப்படுகிறார்களென்று எனக்கும் அப்பாவுக்கும் சுவையாக சமைத்துப் போட ஒவ்வொரு முறையும் அக்கா உமா ஏதாவது காரணம் வைத்துக்கொண்டு மும்பையிலிருந்து மகன் கௌதமுடன் வந்துவிடுவாள். பிரச்சினை என்னவென்றால் எங்களால் வீட்டில் பாத்திர பண்டங்களை ஒழுங்காக பராமரிக்க ...
மேலும் கதையை படிக்க...