உயரதிகாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 10,677 
 

“.. அறிவில்ல உன்க்கு? ஏதாவது மோசமா திட்டீருவேன். ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல. வேற பேப்பர்ல திருப்பி எழுது. உன்னையெல்லாம் எவன் செலக்ட் பண்ணானோ! பாக்காத! சொல்றத கவனிச்சு ஒழுங்கா எழுது.” என்று கடுகு தாளிப்பதுபோல் தான் சொல்வதை எழுதுகையில் ஒரு சிறு பிழை செய்த அலுவலர் முரளியைத் திட்டினார் அந்த உயரதிகாரி.

வருத்தத்துடன் மீண்டும் எழுதினார் முரளி. சொன்னபடி எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை கிடைத்ததும் எழுந்து நின்று உயரதிகாரி கவனிக்காவிட்டாலும், சின்னதாக ஒரு சல்யூட் அடித்துவிட்டு கிளம்பினார். அது அந்த அலுவலகத்தில் பழக்கமான ஒன்றுதான். கட்டாயமில்லை என்றாலும் செம்மறிக்கூட்டம்போல எல்லோரும் சில கா¡¢யங்களை காரணமோ பயனோ இன்றி செய்துவந்தனர்.

அங்கிருந்து கிளம்பி நேரே வந்து தன் இருக்கையில் அமர்ந்து ப்யூன் சேகரை வரவைக்க ஒரு மணியடித்தார் முரளி. கடைசி மேசையருகில் இருந்த அவர் ஓட்டமும் நடையுமாக வருவதற்குள் நான்குமுறை மணியடித்தாயிற்று.

“வணக்கம் ஐயா!” என்றபடி ஆஜரானார் சேகர்.

வணக்கத்தைத் திரும்பத் தராமல், “என்ன தூங்கீட்டிருந்தியா? என் தலையெழுத்து. மொதல்ல இந்த ஆ·பீசவிட்டு ட்ரான்ஸ்·பர் வாங்கீட்டு cடனும். இந்தா! போயி இந்த ·ப்ளாஸ்க்ல ரெண்டு கா·பி வாங்கீட்டுவா.” என்றபடி ஒரு இருபது ரூபாய் நோட்டை சேகாரிடம் தந்து விரட்டினார்.

முரளி மேலதிகாரியிடம் திட்டு வாங்கியதைக் கேட்டுக்கொண்டிருந்த சேகர், “இவனுகளுக்கு வேற வேலையில்ல. அவனுக்கு வீட்ல பிரச்சனைன்னா இவனைத் திட்டுவான். இவனுக்கு ஆ·பீஸ்ல
பிரச்சனைன்னா நம்மளத் திட்டுவான். இவனுகளையெல்லாம் எவன் வேலைக்கு சேத்தானோ! அதுவும்
இந்தக் கழுதை நம்ம உயிரை எடுக்க முந்நூறு கிலோமீட்டர் தாண்டி வந்திருகான். அவன் சொன்னமாதிரி ட்ரான்ஸ்·பர் ஆயிட்டான்னா நிம்மதி. இவனுகளுக்கெல்லாம் மனசுல அப்பன் வீட்டு ஆ·பீஸ்னு நெனெப்பு. பொரிய பொரிய தொழிலதிபர்களே தட்டிக்கொடுத்து வேலை வாங்குற காலத்துல, சம்பளத்துக்கு வேலை செய்யிற இவனுங்களுக்கு நாடே கையில இருக்கிறமாதிரி திமிரு.” என்று முணுமுணுத்துக்கொண்டே கேன்டீனுக்குப் போய் சேர்ந்தார் சேகர்.

அங்கு சென்றமர்ந்து என்ன வேண்டுமென்று கேட்கவந்த இளைஞனிடம் இரண்டு கோப்பை கா·பியை ப்ளாஸ்க்கிலும் ஒன்றை டேபிளிலும் வைக்குமாறு கூறி, கூட பத்து ரூபாயைக் கொடுத்தார் சேகர்.

ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் ஆனது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருடம்போல கடினமாகக் கழிந்தது. ஒருவழியாக ப்ளாஸ்கையும் ஒரு கா·பியையும் கொண்டுவந்து வைத்தான் அந்த இளைஞன்.

‾டனே சேகர், “என்னயா இவ்வளவு நேரம்? என்ன பால் கறந்து வடிகட்டி காய்ச்சி கா·பி போடுறீங்களா?” என்று ஆரம்பித்தார்.

அவரை இடைமறித்த கேன்டீனின் ஒப்பந்தக்காரர், “என்ன கத்துறீங்க? அஞ்சு நிமிஷம் ‾ங்க ஊர்ல லேட்டா? சர்வர்னா அவ்வளவு கேவலமா போச்சா? பெருசா ஆ·பீஸ் பூராம் பொன்மொழியும் திருக்குறளும் எழுதிவெச்சிருக்கீங்க. செயல்ல ஒன்னும் இல்ல. வந்தமா, சாப்டமா, கிளம்புனமான்னு இருங்க!” என்றார்.
வாயடைத்துப்போன சேகர் முதலில் அலுவலகம் சென்றதும் வாசலில் இருந்த முதல் பொன்மொழியைப் பார்த்தார்.

“இங்கே பதவிகளில்லை. பொறுப்புகள்தான் உள்ளன. ஒருவரையொருவர் மதித்து குழுவாக செயல்படுவோம்.” என்ற அந்த பொன்மொழியைப் படித்ததும் வெட்கமாக இருந்தது.

அடுத்த நாள் முரளி அதட்டியபோது, வாசலில் இருக்கும் பொன்மொழியைப் படிக்கச்சொல்லிவிட்டு அமைதியாக வேலையை செய்தார் சேகர்.

அப்பொன்மொழியைப் படித்து திருந்திய முரளி தன் உயரதிகாரியிடம் தக்க தருணம் பார்த்து, “வாசலில் இருக்கும் பொன்மொழியைச் செயல்படுத்தினால் நல்லது.” என்று கூற, என்னவென்று புரியாமல் விழித்த அவரும் அதன்பிறகு குரலை உயர்த்தி யாரையும் திட்டுவதில்லை.

மீட்டிங்கின்போது, வேலைப்பளு அதிகமாக இருந்து எரிச்சல் வரும் சமயங்களில் அலுவலகத்தில் இருக்கும் பொன்மொழிகளை நினைவில் கொள்ளுமாறு கூறினார்.

அதன்பிறகு அந்த அலுவலகம் அமைதியாக செயல்பட்டது. அங்கே உயரதிகாரிகள் யாருமில்லை.
பொறுப்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *