மாடி போர்ஷனில் கணவன்-மனைவி சண்டை இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாகக் கேட்டது. தினமும் நடப்பதுதான். கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, வாய்க்கு வந்தபடி பேசுவது. பொறுக்க முடியாமல் மாடிக்குப் போனார் ஹவுஸ் ஓனர் மாணிக்கம்.
‘‘இங்க பாருங்க சிவா சார்… நீங்க பண்றது சரியில்லை. இப்படி தினமும் குடிச்சுட்டு கலாட்டா செய்தால் நாங்க எப்படி நிம்மதியா கீழே இருக்க முடியும்? குழந்தைங்க படிக்க வேண்டாமா…’’
ஒரு முறை சிவாவின் மனைவியைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்… ‘‘அழுதுக்கிட்டு இருக்காங்க பாருங்க. இப்படி அழ வைக்கவா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? குடி குடியைக் கெடுக்கும்னு நீங்க வாங்கற பாட்டிலில் போட்டிருக்கே… பார்க்கல?’’
‘‘ஸாரி சார்…’’ – தலையைத் தூக்காமல் பேசிய சிவாவை முறைத்துவிட்டுக் கீழே இறங்கினார். அவசர அவசரமாக மனைவி தந்த டிபனை சாப்பிட்டுவிட்டு பைக்கை உதைத்தார்.
கடைக்கு வந்ததும் பூட்டைத் திறந்து, அன்று வந்த சரக்குகளை ஷெல்பில் அடுக்கினார்.
‘‘என்ன மாணிக்கம்… லேட்டா கடையைத் திறக்கறீங்க?’’ – கேட்டவரைப் பார்த்து சிரித்து, ‘‘வீட்டிலே குடி இருக்கிறவன் குடிச்சுட்டு வந்து ஒரே கலாட்டா. புத்தி சொல்லிட்டு வர டைம் ஆயிடுச்சு. சரி.. உங்களுக்கு எவ்வளவு?’’ எனக் கேட்டார்.
‘‘அவங்களைத் திருத்த முடியாது அண்ணே… ஒரு குவாட்டர் குடுங்க…’’
பணத்தை கல்லாவில் போட்டு விட்டு, விஸ்கி பாட்டிலை எடுத்து நீட்டினார் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மாணிக்கம்.
- ஜூலை 2013
தொடர்புடைய சிறுகதைகள்
‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள் இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’
புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம் கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல் ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு போட்டோவாக பார்த்தான் ...
மேலும் கதையை படிக்க...
ரகுவோடு கல்யாணம் முடிந்து, உமா புகுந்த வீட்டுக்கு வந்தாயிற்று. புறப்படும் முன் அவள் அம்மா சொன்னதை மறுபடி நினைத்துக்கொண்டாள்.
‘‘முதலில் சாமி படத்துக்கு விளக்கு ஏத்தி நமஸ்காரம் பண்ணும்மா...’’ - மாமியார் பார்வதி சொன்னாள்.
உமா ஒரு நிமிடம் தயங்கி நின்று, ‘‘பழக்கம் இல்லேம்மா... ...
மேலும் கதையை படிக்க...
‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’
‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை... யார் சொன்னது?’’
‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி ஊத்துவாங்கன்னு கேள்விப்பட்டேன்...’’
‘‘அதெல்லாம் எப்போவோ நடந்தது... இப்போ அது மாதிரி இல்லை. ரொம்ப டிசிப்ளினா இருப்பாங்க...’’
‘‘பேப்பரை கிழிச்சு தலையில் போடுவாங்களாமே?’’
‘‘அப்படி எல்லாம் இல்லை!’’
‘‘ஜூனியர்ஸோட லன்ச் ...
மேலும் கதையை படிக்க...
மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் அவர் அண்ணனுக்கும் வெகு நாட்களாய் மனஸ்தாபம். ரவி செய்யும் எந்த வேலையிலும் தப்பு கண்டுபிடிப்பதே அவர் அண்ணனுக்கு வேலை. ...
மேலும் கதையை படிக்க...
ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் அவளுக்கு சரியாகப் படவில்லை.
அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஈகோ இடித்தது.
கணவன் ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள்.
“அது என்ன ...
மேலும் கதையை படிக்க...
மாற்றம் வரும் – ஒரு பக்க கதை