Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இளைப்பாறும் ஓட்டங்கள்…

 

”சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு”என அவர் சொன்னபோது மணியைப் பார்க்க எத்தனித்து எட்டிப்பார்க்க முடியாமல் இவன் அமர்ந்திருந்தஇடத்திலிந்து இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்த வரிடம் கேட்கிறான், பணி ரெண்டரை என்கிறார் அவர்.

நல்லாப்பாருங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கேட்டப்பயும் இதே பணிரெண்டரையத்தான் சொன்னீங்க,இப்பயும் அதத்தான் சொல்றீங்க, இப்பவரைக்கும்அதேபணிரெண்டரையிலயேபிடிவாதம்காட்டிநிக்குதா, கடிகாரம்? இல்லை கடிகாரத்துக்குள்ள இருக்குற முள்ளுக பேரீட்சம் பழக்கடைக்கு போயிருச்சா என இவன் சொன்ன போது படக்கென சிரித்து விட்டார் இரண்டாவது இருக் கைக்காரர்/

அடேயப்பா மனதை அள்ளுகிற சிரிப்பு,இன்னும் பால் மணம் மாறாத பையனாக இருப்பான் போலிருக்கிறது,அல்லது கள்ளம் கபடம் ஏறாத மனதினனாய் இருக்க வேண்டும், பொது வெளியில் இது போலான வர் களைப் பார்ப்பது அரிது, அதுவும் இது போலான ஒரு அலுவலகத்தி ல்,,,?

ஒன்றை ஒன்பதாகவும் ஒன்பதை ஒன்றாகவும் ஆக்கி குளிர் காய்கிறவர்களுக்கு மத்தியில் இவர் மட்டும் எப்படி,,,?அவனைக் கேட்டால் சிரித்துக் கொண் டே சொல்கிறான்,

“சார் இதுனால எனக்கு ஒண்ணும் நஷ்டமில்லை சார்,என்னைய பாக்குறவுங்களும்பேசுறவுங்களும் என்னைய அம்மாஞ்சி,இளிச்சவாயன், அப்புராணி ன்னு வேணுமுன்னா சொல்லுவாங்க,சொல்லீட்டுத்தான் போகட்டுமே, இப்ப என்ன அதுனாலநான் ஒண்ணும் கெட்டுப் போயிற லையே ,நல்லாத்தான இருக்கேன்” என்பார்,

இன்னும் தெளிவா சொல்லணுமுன்னா என்னைய அப்பிடி பாக்குறவு ங்களுக் கும் நினைக்கிறவுங்களுக்கும் தானே நஷ்டமே தவிர்த்து எனக்கு ஒண்ணும் பெரிசா நஷ்டமில்ல” என்பார்,

”என்னயப்பத்தியும் ஏன் வாழ்நிலை பத்தியும் ஏங் அப்பாவித் தனத்தையும் நெனைச்சிக்கிட்டு இருக்குறவுங்க என்னையப்பத்தி நெனைக்கிற நேரத்துல அவங்களப்பத்திநெனைக்கலாம்ல ”அதுனால ஒரு பிரயோஜனமாவதுஇருக்கும், அத விட்டு என்னையப்போயி நெனைச்சிக்கிட்டு இவனெல்லாம் நம்ம தகுதி க்கு ஒரு ஆளா, இவனப் பத்தி தெரியாதா,வைக்காதா, இவன் பொழச்ச பொழப்பு எப்பிடின்னு தெரியாதாக்கும்,என்ன பெரிய இவனா இவன் அப்பிடின்னு இன்னும் என்னனென்னவோ நெனைச்சிக்கிட்டும் மனசுக்குள்ள யே என்னய ஒரு எதிரியா நெனைச்சி வரைஞ்சிக்கிட்டு சண்டைபோட்டு வீரா வசனம் பேசி கடிச்சி காறித்துப்பி நாறிப்போயி ஒரு முளு நீள சண்டை போடு முடிச்சிட்டு கடைசியில நேர்ல பாக்கும் போது வாங்க சார்ன்னு சொல்லி ஒரு மொழ நீளத்துக்கு சிரிச்சி வழியிற கொடுமையத்தவுர வேறென்னஇருந்துறமுடியும்சொல்லுங்க”இது மாதிரியான எண்ணத்த வளத்துக்குறவங்களால…? என்பவர் மேலும் சொல்வார்,

“ஆனா எனக்கு அந்த வம்பெல்லாம் பெரிசா ஒண்ணும் கெடையாது, நான் அப்புராணி ,இளிச்சவாயன், பொழைக்கத் தெரியாதவங்குற பேரோட நல்லா இருந்துக்கிட்டு இருப்பேன்,ஆனா அவுங்களப் போல மனசு பூரா ஒட்டடை மூடிப் போயி இருக்காம கிளீன் மனசா இருப்பேன், என்னையப்பொருத்த அளவுக்கும் நான் இப்பிடித்தான் இருக்கேன், அவுங்களப் பொறுத்த அளவுக்கு அவுங்க அப்பிடித்தான் இருக்காங்க வாழ்நாள் பூராவும்,,,” எனச்சொல்லும் போது அதே வெள்ளந்தி சிரிப்பும் கள்ளம் கபடமற்ற பழக்கமும் அவரிடம் பளிச்சிடுவது தவிர்க்க இயலாமல்/

மணியைப்பார்க்கிறான்,இவனாகப் பார்க்க வேண்டும் என்றால் சீட்டை விட்டு எழுந்து வந்து பார்க்க வேண்டும்,இவன் அமர்ந்திருந்த இடத் திலிருந்து ஒரு நான்கடி தூரத்தில் எட்டிப்பிடிக்க முடியா உயரம் கொண்ட சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது கடிகாரம்,

கண்ணைஉறுத்தாத கலரில் சுவருக்குபூசப்பட்டிருந்தகலர்பார்ப்பதற்கு குளிர் ச்சியாகவும்,அழகாகவும்/

என்னென்னவோ நிறங்களில் பெயிண்ட்கள் வந்து விட்ட பொழுதும் இன்னும் அந்த ஊதாக்கலர் தன் இருப்பு காட்டியும் பொழிவு இழக்காம லுமாய்/

சமீபத்தில்தான் பெயிண்ட் அடித்திருப்பார்கள் போலிருக்கிறது, பூசபட் டிருந் த பெயிண்டின் வாசமும் புதுக்கருக்கும் மங்காமல் தெரிந்தது,

ரூமிற்கு ஒரு கலர்,ஹாலிற்கு ஒரு கலர்,வராண்டாவிற்கு ஒரு கலர் என பிரித்துப்பிரித்தும் இனம் காட்டியுமாய் அடிக்கிற இந்தக்காலத்தில் ஆபீஸ் முழுவதிற்குமாய் ஒரே கலரை அடித்திருந்தது ஆச்சரியமாய் இருந்தது.

ஆனால் பூசியிருந்த கலரை உள் வாங்கியிருந்தது போல் க்சுவரில் தொங்கிய கடிகாரம் பார்ப்பதற்கு அழகாய்த் தெரிந்தது.

எப்பொழுதுவாங்கிய கடிகாரம் எனத் தெரியவில்லை.பார்ப்பதற்கு புதிது போல வும் மாரடனாகவும் தெரிந்தது,

முக்கோண வடிவம் தொங்கிய கடிகாரத்தின் கீழ் ஆடிய பெண்டுலம் அதை ஆமோதித்து தல்லையாட்டியது போல் ஆடிக் கொண்டிருந்தது.

பார்ப்பதற்கு சில பொருட்கள் அப்பிடியாய் இருக்கிற பாக்கிய வாய்க்க பெற்ற தாகிப் போகிறது.அதில் இந்தக் கடிகாரமும் ஒன்று போலும்/

மதியம் மணி ஒன்னறை என்கிற தன் முன்னறிவிப்பை எட்டிச் சொல்லிச் செல்கிறது கடிகாரம் பார்க்கிற கண்களும் நோகாமல் மணி காட்டுகிற கடிகார காரத்திற்கும் வலி தெரியாமல்/

கூடு கட்டி வாழலாம் தப்பில்லை ,ஆனால் குருவிக்கூட்டில் போய் வாழ்வதென்பது கொஞ்சமல்ல, நிறையவே சிரமமேற்படுத்தி விடும்., அதுபோலவே தான் ஆகிப் போகிறது பலசமயங்களில் பலவிஷயங் கள் என்கிற இவனது நினைவிற்கேற்ப கடிகாரத்தில் மணியும் தலையாட்டிய பெண்டுலமுமாய்/

பசிக்க ஆரம்பித்து விட்டது ,வேகம் கொண்ட பசியின் கரங்கள் வயிற்றின் மூலையெங்கும் பரவி பிராண்ட ஆரம்பித்து விட்டது,

முன்பெல்லாம் இப்படியில்லை,பசி எடுக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் வரைக்கும் கூட பொறுத்துக்கொள்ள முடியும்,சமயத்தில் சாப்பிடாமல் கூட விட்டு விடுவான் ,பெரிய அளவிற்காய் சாப்பாட்டின் இழப்பு தெரியாது, வேலையின் வேகத்தில் சாப்பிடவில்லை என்பது கூட பின்னால் போய் விடும்.

காலையில்பெரும்பாலுமாய்சாப்பாட்டைஎதிர்பார்ப்பதில்லை.நேரம்கிடைத்தால் சாப்பிடுவான்,இல்லை யென்றால் அதுவும் கிடையாது.

“ஏங் இப்பிடி சாப்புடாம திரியிறீங்க,என்ன ஒரு பத்து நிமிஷம் ஆகுமா சாப்புடு றதுக்கு,அதுவும் நீங்க சாப்புடுற வேகத்துக்கு அஞ்சு நிமிஷம் கூட ஆகாது, நீங்க கையால சாப்பாட்ட அள்ளுற அளவுக்கும் வாயைத்தெறக்குற அகலத் துக்கும் சாப்புடுற வேகத்துக்கும் நீங்க சாப்புடுற சாப்பாட்டுக்கு அஞ்சி நிமிஷ மே அதிகம்.அவ்வளவு வேகமா எங்க யாரலையும் சாப்புட முடியாது பாத்துக் கங்க,அப்பிடி சாப்புடவும் கூடாதுன்னு நான் நெனைக்கிறேன்”எனச்சொல்வாள் மனைவி,

”வாஸ்தவம்தான் அவள் சொல்வதும். வீட்டில் சாப்பாடு ஏற்பாடு என இருந் தாலும் கூட ஆனந்தி ஹோட்டலில் வைத்திருந்த கணக்கிலும் அந்தக் கடையின் ருசியிலும் பெரும்பாலுமாய் காலை டிபன் ஓடி விடும்,

காலையில் கூட ஆம்ப்லேட் கேட்டு வாங்கிச்சாப்பிடுவான், ஹோட் டலின் உரிமையாளர் கூடச் சொல்வார் சிரித்துக் கொண்டே,”காலை டிபனோட ஆம்ப் ளேட்சாப்புடுறது நீங்க ஒரு ஆளாத்தான்இருப்பீங்க என, இப்பஎன்ன அதுனால எனச்சொல்லிக் கொண்டிருந்த நாட்களி லும் அவர் கேலி பேசிக் கொண்டிருந்த நாட்களிலும் இவனைப்போல இன்னும் இரண்டு ஒருவர் காலை டிபன் நேரத்தில் ஆம்ளேட் பிரியர்களாக இவனுடன் கைகோர்க்க ஆரம்பித்து விட்டார்கள்,

கோர்த்த கையின் பலமும் அசைவும் அசைகளுமாய் சேர்ந்து கொடுத்த சப்தம் அந்தக் கடையை காலை நேர ஆம்ப்ளேட் ஸ்பெசலி ஸ்டாக ஆக்கி விட்டிரு ந்தது.சிறிது நாட்களில்/

அப்புறமென்ன உற்சாகம் கொண்ட கடைகாரர். முட்டையில் போடும் ஆம்ப் ளேட்டில் ஏதேதோ வித்தை செய்து காண்பித்தார் செய்த வித்தையின் மகிமை எல்லைகளைத்தாண்டி எட்டிப் பரவ காலை நேர ஆம்லேட் சாப்பிட மட்டுமாய் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்,

கடையின் உரிமையாளருக்கு அளவில்லா மகிழ்ச்சியாகிப் போனது, ஒரு நாளில் சாப்பிடப்போன தினத்தன்று சொல்லி மகிழ்ந்து புளகாங் கிதபட்டுப் போனார்.

இதுக்கெல்லாம் துவக்கப்புள்ளி நீங்கதான்னு சொல்லாம்.நீங்க ஆம்ப்ளேட் கேட்டு வாங்கி சாப்புட்ட நேரத்தோட ராசியோ இல்ல, இல்லஒங்ககால் இந்தக்கடையில் பட்ட ராசியோஎன்னன்னு தெரியல, இன்னைக்கி கடைக்கி பேரேஆம்ப்ளேட்டுக் கடைன்னு ஆகிப் போற அளவுக்குபேமஸ்ஆகிப்போச்சி, காலையில கஷ்டமர்க வந்து கேக்குற அந்த நேரத்துல எங்களாலஆம்ப்ளேட்டு போட்டுக் குடுக்க முடிய லைன்னா பாத்துக்கங்களேன்,

காலையில ஆம்ப்ளேட்டுக்குன்னு தனியா ஒரு மாஸ்டரும் மத்த டிபனுக் கெல்லாம் ஒரு மாஸ்டருங்குற மாதிரி ஆகிப் போச்சி என்பார்/

அவ்வளவுதூரத்துக்குஹோட்டலில்ஆம்ப்ளேட்டைபேமஸ் செய்தவன் இன்று சொந்த வீட்டில் காலையில் சாப்பிட முடியாமலும் நேரமில்லாமலுமாய் போய்விடுகிறான் அலுவலகத்திற்கு/

அங்கு போனதும் வழக்கம் போல டீ சாப்பிட்டு விட்டு அலுவலக வேலையில் அமர்ந்து விட்ட பின் இரண்டு மணி நேரத்தில் பசி எடுக்க ஆரம்பித்து விடும் ,அப்படியாய் எடுக்கிற பசிக்கு சோளப்பொறியாய் ஏதாவது அப்போதைக்கு போடுவதுண்டு,

ஆனால்எல்லாநாட்களிலும்எல்லா வேளைகளிலும் சோளப் பொறிகள் கிடை த்து விடுவதில்லை,

கிடைக்காத வேளைகளில் வயிறே தன் பசிக்கு இரையாகி விடுவதுண்டு. அப்படியாய் இரையாகி இரையாகித்தான் இன்று அல்சரில் வந்து பிள்ளையார் சுழியிட்டிருக்கிறது,

இட்ட சுழியின் ஆழமும் நீளமும் அகலமும் வயிற்றினுள் சூழ்க் கொண்டிருந்த நாட்களின் நகர்வுகளை தாங்கித்தான் இப்பொழுது பயணப்பட வேண்டியிருக் கிறது,

இவனிடம் சொன்னவரின் அருகில் நின்றவர் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும்,

இந்த உறவு எனத்தெரியாமல் கேட்டு விட முடியாது,கேட்டு விடவும் கூடாது, போன வாரத்தின் ஒரு நாளில் அப்பாவும் பிள்ளையுமாக வந்திருந்தார்கள் அலுவகலத்திற்கு,

பார்ப்பதற்கு அப்படித்தெரியவில்லை.பெண் பிள்ளை ,அப்பாவை மீறி நிற்கிறாள்வளர்ந்து,பார்த்தால்மகள்போலத்தெரியவில்லை,அப்பாவும் ஓங்கு தாங்காகநிற்காமல்சின்னதாய் பூஞ்சை பட்டுக்காணப்பட்டார். அப்பொழுதான் கல்லூரியின் கடைசி வருடப் படிப்பை முடித்து வெளியில் வந்திருந்தவர் போலவும்/

இதைவைத்துஎப்படிநிர்ணயிப்பது அவர்களது உறவை,என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களது உறவை தெரிந்து கொள்ளும் ஆவல் அவனில் மிகவும் அதிகமாகிக்கொண்டே வந்தது.

அதை அறிந்தவராகவோ,அவதானித்தவறாகவோ என்னவோ ”சார் இவ ஏங் பொண்ணு, பிளஸ் டூ படிக்கிறா பதினேழு வயசாகுது,பாக்க ஆளு வயசு கூடுன பொம்பள போல இருப்பா, அவுங்க அம்மா சாயலு அவ,சாயலுமட்டுமில்லாம அவ வளத்தியும் சேந்துக்கிச்சி. அதுனாலத் தான் பாக்குறவுங்க ளுக்கு இப்பிடித் தோணுது,அதுக்குத் தோதா நானும் பாக்க சின்னப்பையன் மாதிரி இருக்கேனா, அது வேற கேக்கு றவுங்களுக்கு தோதாப் போச்சி.”

”தோதுப்பட்டா இந்த வருஷம் கல்யாணத்த முடிச்சிறாலம்ன்னு இருக்கேன்,ஆனாஅவதான்மாட்டேங்குறா,மாப்பிள்ளைரெடியாகாத்துக் கிட்டு இருக்கான், அவன் எப்ப வேணுமுன்னாலும் சொல்லுங்க,நான் கட்டிக்கிறதுக்கு ரெடியா இருக்கேங்குறான், இந்த வருசம் பதினேழு முடியுது,அடுத்த வருஷம் வரும் போது ரெட்டைப் படை வயசாகித் தெரியும்,ஒத்தைப்படைவயசுலகல்யாணம்முடிச்சாநல்லதுன்னுவாங் க, இன்னும் பத்தம்போது வயசு வரைக்கும் காத்தி ருக்கணும். பையனப்பத்தி ஒண்ணும் பிரச்சனையில்லை,அவன் காத்துக்கிட்டு இருப்பான் ஏங் மகளுக்காக எத்தனை வருஷம் வேணுமின்னாலும், ஆனா அவன் வீட்டுல அவன் அம்மா கொஞ்சம் அவசரப்புத்திக்காரி, காசுக்கு ஆசைப் பட்டு வேற எங்கிட்டாவது பாய்ஞ்சிருவா, அதுக்குத் தான் யோசிக்க வேண்டிய திருக்கு” என்றார்.

அவரிடம் மன ரீதியாகவும் நேரிடையாகவும் மன்னிப்புக்கேட்டுக் கொண்ட இவன் “நீங்க அப்பா மகன்னு சத்தியமா தெரியாது எனக்கு, பாக்குறதுக்கு அப் பிடி ஒரு தோற்றமும் தரலையா ,அதுனால,,,,, எனத் தயங்கிய போது ”அட விடுங்க சார்,ஒங்களோட சேர்ந்து இது மாதிரி நெனைச்சவுங்க நூறு பேருக்கு மேலயாவது இருக்கும், இந்த நூறுல நேரா கேட்டவுங்க அம்பது பேராவது இருக்கும், இதுல ஒருத்தர்ன்னா இது ஒங்க ரெண்டாவது சம்சாரமான்னு கேட்டுட்டாரு பஜாருக்குப்போயிருந்தஒருநாளையில,எனக்குன்னாசரிகோவம், ஏங் மக அதுக்கு மேல கொதிச்சிப்போயி நிக்குறா ”தனல்ல பட்ட மெழுகு மாதிரி,”,விட்டாகேட்டவற அடி பிச்சிருவா போல இருந்துச்சி/

கேட்டவருக்கிட்ட அவ மகங்குறதச்சொன்னதும் கால்ல விழுகாத கொறையா மன்னிப்புக்கேட்டுக்கிட்டாரு என்றார்.

அப்படியாய் ஏதும் தவறாக நினைத்துவிடக்கூடாது இவன் முன் நின்று பேசியவர்கள் இருவரையும் என நினைத்தவன் அவர்களது பேச்சிலி ருந்து தெரிந்து கொண்டான் அவர்கள் இருவரும் கணவன் மனைவி தான் என/

சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு எனச்சொன்னவர் மனைவியுடன் கைகோர்த்து நின்ற போது சொல்கிறான் இவன்.

எதுக்கு சார் சண்டைக்கு வரப்போறாரு அவரு பாவம்,ரெண்டாவது சண்டை ங்குறது என்ன சார்,திட்டம் போட்டுட்டு வர்றது இல்லையே சார்.திடீர்ன்னு வெடிக்கிற பட்டாசு மாதிரிதான”

“அவரு வீட்ட விட்டு ஆபீஸீக்கு கெளம்பும்போது நீங்க இன்னைக்கி ஆபீஸீக்குவருவீங்க ,ஒங்களோட சண்டை போடணுமுன்னு நெனைச் சா வர்றாரு ,இல்ல நீங்க வீட்ட விட்டுக்கெளம்பும் போது அவருகூட இன்னைக்கி சண்ட போடணுமுன்னுநெனைச்சா வர்றீங்களா இல்லை யில்ல,வர்றயெடத்துல நீங்க ரெண்டு பேசுறதுதான்,நாங்க ரெண்டு பேசுறதுதான்,இதெல்லாம் தற்செயலா நடக்குற ஒரு கெட்ட விபத்து.

”இதுக்குபோயி காரணம் காரியமுன்னு ஆராய்ஞ்சிக்கிட்டு இருந்தோம் ன்னா இயல்பா நடக்குற விஷயம் கூட தப்பாகித் தெரியும் சார்,

”விடுங்க இதெல்லாம் ஒரு கெட்ட கனவு போலதான்,இதையே நெனைச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா தீர்வு கெடையாது, தினமும் போற வர்றயெடங்கள்லஎத்தனையோவிஷயங்களப்பாக்குறோம்,பேசுறோம், அதுல ஏற்ற தாழ்வான பேச்சு செய்கைகள்ன்னு எத்தனையோ வருது போகுது, அதையெல்லாம் கணக்குலஎடுத்தமுன்னு வையிங்க, விடை கெடைக்காது,அது போலத் தான் இதுவும்,விடுங்க,விட்டுட்டு லேசான மனசாயிருங்க சரியாகிப் போகும் என சொன்னபோது ஏறிட்ட கணவ னும் மனைவியும் இவனை இணக்கமாய்ப் பார்த்து விட்டுக் கிளம்பி யதும் சாப்பிடக் கிளம்பினான்.

மணக்கிற சமையல் சாதமும் பிரமாத காய்கறிகளும்,,,,” என சொல்ல முடியா விட்டாலும் கூட மனைவி கட்டிக் கொடுத்த விட்ட சாப்பாடு அதற்கும் மேலாய் அன்பும், பிரியமும் கலந்து,,,/ 

தொடர்புடைய சிறுகதைகள்
இடதுக்குத்தெரியாமல் வலது கையில் ஒட்டிக்கிடக்கிற மண் துகள்கள்உதிர்ந்துவிடுகின்றன,கையில்மெலிதாயும்அடர்ந்துமாய்இருக்கிறபூனை முடிகளிலிருந்தும்அதுஅல்லாத வெற்று இடங்களில் இருந்து மாய்/ கையில்அடர்ந்து நிற்கிற மென் முடிகளை எடுத்துவிடலாம் ஷேவிங் பண்ணும்போதுஎனநினைப்பதுண்டு வெயில் நேரங் களிலும் அதிகமாய் வியர்த்து உப்புப்படிந்து விடுகிற பொழு துகளிலுமாய்/ஆனால்என்ன தான்கறாராகமுடிவெடுத்தாலும் அதை அமுல் செய்ய ...
மேலும் கதையை படிக்க...
இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம் நுகர்ந்தவாறுமாய்/ கெட்டிப்பட்டமண்அல்ல,தூசியாகவே இருந்தாலும் காற்றில் பறந்து கலந்து திரிந்த போதிலும் பயணிக்கிற வேகத்தில் தன் மணம் மாறாமல் அப்படியே வந்து செல்கிறதாய்/ காடுதோட்டம்வீட்டுமனைஎதிலுமாய்பறந்துபாவியிருக்கிறமண்ணின்மணத்தைஅன்றாடங்களின்நகர்வில்நுகரக்கொடுத்துவைத்தவனாயும்நுகர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
முன் இரவு வரும் நேரம் மறைந்த சூரியன் ஒவ்வொன்றாய் காட்சிப்படுத்துகிறான் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தவனின் முன்னே. காட்சிகள் வீதிகளாக,கடைகளாக,அலுவகங்களாக கோயில்களாக,டீக்கடை களாக,ஹோட்டல்களாக நகர்ந்து, நகர்ந்து கொண்டு வந்து சேர்த்தஇடம் டுடோரியல் கல்லூரியாய் இருந்தது. இடதுபுறம்நூலகம்,வலதுபுறம் அலுவலகம் உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் என நெசவோடியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன், அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/ அப்படி என்ன காட்சிப்படுகிறது அவரிடம் என கேட்ட நாட்களில் ரகசியம் காத்த நினைவாகவும் பூதம் காத்த உயிராகவும் அதிசயம் காட்டி நிகழ்வொ ன்றை அவிழ்த்துவிட்டுச் செல்வார், அவிழ்த்து ...
மேலும் கதையை படிக்க...
பார்க்கப் போன இடமும் பார்க்கச் சென்ற நபரும் முக்கியப்பட்டுப் போகிறார். அள்ளிச் சிதறிச் சிரித்த விண்மீன்களின் கைபிடித்தும்,அதனுடன் பேசியும் சிரித்தும், உறவாடியுமாய் போய்க் கொண்டிருந்தவன் அமர் ந்திருந்த இரு சக்கர வாகனம் காற்று செல்லும் திசையில் பறந்து கொண்டிருக்கிறது. பறக்கட்டும், பறக்கட்டும் அப்படியே கனம் ...
மேலும் கதையை படிக்க...
இடம் வலம்…
காலடி மண்
விதைப்பு உழவு
நவாப்பழக்கலருக்காரர்…
பூப்பூத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)