இட்லி, சட்னி, வேட்டி சட்டை
1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம் ஆக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு முழுதும் கொதித்து எழுந்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பெரியார் பல்லாரிச் சிறையில் இருந்தார். அதை நடத்தவேண்டிய முழுப் பொறுப்பும் நான் ஏற்கவேண்டி நேர்ந்தது.
சட்டசபையில், ராஜாஜி ஒருநாள். ‘தமிழ் என்றால் இட்லி; இந்தி என்றால் சட்னி; இரண்டையும் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது’ என்றார்.
மற்றொருநாள், “தமிழ் என்றால் வேட்டி; இந்தி என்றால் சட்டை இரண்டையும் போட்டுக் கொள்வது தான் தமிழ் மக்களுக்கு நல்லது” என்றும் கூறுனார்.
அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் பெரிய கூட்டம் – மக்கள் திரண்டு நின்றனர்.
அந்த உவமைகளைப் பற்றி
மேடையில் நான் எழுந்து,
“சட்னி இல்லாமலே இட்லியைச் சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இட்லியே இல்லாத போது சட்னியை எப்படி, சாப்பிடுவது?” – என்றும்
“சட்டை இல்லாமல் வேட்டியைக் கட்டிக்கொண்டு வீதியில் போகலாம்; ஆனால் வேட்டி இல்லாமல் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு விதியில் எப்படி நடப்பது? – என்றும் கூறினேன்.
அதன் பிறகு -
அதிலிருந்து ராஜாஜி அவர்கள் இந்த உவமைகள் கூறுவதை விட்டுவிட்டார்,
அந்த ராஜாஜி அவர்களே -
1965 – திருச்சிராப்பள்ளியில் நான் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வந்து கலந்துகொண்டு, பலமாக இந்தியை எதிர்த்துப் பேசினார். அது நாட்டில் பெரும் வியப்பை உண்டாக்கியது.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
தலைத் தீபாவளிக்கு மகளையும் மாப்பிள்ளையையும் அழைக்கவந்த சம்பந்தியிடம். “உங்கள் மகளை மட்டும் இப்போது அழைத்துப் போங்கள். மாப்பிள்ளையைப் பிறகு அனுப்பிவைக்கிறோம்” என்றார் பையனின் தந்தை அவரும், தன் மகளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.
பிறகு ஒருநாள். தந்தை தன் மகனை அழைத்து, “இப்போது ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான்.
அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை ...
மேலும் கதையை படிக்க...
பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார்.
அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? ...
மேலும் கதையை படிக்க...
வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும்.
ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து ...
மேலும் கதையை படிக்க...
ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர்.
வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது—திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே ...
மேலும் கதையை படிக்க...
அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர்.
அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் ...
மேலும் கதையை படிக்க...
அடுத்த ஊரில் நிகழும் தம் உறவினர் திருமணத்துக்கு அவசியம் போக வேண்டியிருந்தது முதலாளிக்கு. வேலைக் காரனிடம் வண்டியைக் கட்டச் சொன்னார். இரவு 10 மணிக்கு வண்டியும் புறப்பட்டது. வண்டியோட்டியும் உறங்கிவிட்டான். முதலாளியும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் உறங்கிவிட்டார். வண்டி ஒடிக்கொண்டே இருந்தது ...
மேலும் கதையை படிக்க...
பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.
‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.
இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர். அவ்வூரினர் திரண்டு வந்து இரண்டு பிணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரிக்கச் செய்தனர், இரண்டு சடலங்களும் தனித்தனியே ...
மேலும் கதையை படிக்க...
சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் -
ஆம்,ஆம், , யானை விலை குதிரை
குதிரை விலை மாடு
மாட்டின் விலை ஆடு
ஆடு விலை கோழி
கோழி விலை குஞ்சு
குஞ்சு விலை முட்டை
முட்டை ...
மேலும் கதையை படிக்க...