Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இது கூட அரசியல்தான்

 

குமார் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மனைவி அவனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் போச்சு என்ற வார்த்தைகள் மட்டும் அவன் வாயில் இருந்து வந்ததை கேட்டாள். “ப்ளீஸ்” போனது போகட்டும் சும்மா கவலைப்பட்டு உட்கார்ந்திருக்காதீர்கள், ம்..என்று நிமிர்ந்தவன் கண்களில் நீர்த்திவலைகள் திரண்டிருந்தன.

“குமாருக்கு தற்போது நேரம் சரியில்லை என தெரிகிறது. அவன் தனியாக தொழில் தொடங்க தந்தையிடம் சண்டையிட்டு பங்கை பிரித்து வந்தவன், முதலில் ஒரு ஏஜன்ஸி ஆரம்பித்தான், அது ஆறு மாதம் கூட நடக்கவில்லை, ஓரளவு நட்டத்துடன் மூடி விட்டான், அதன் பின் ஒரு டிபார்ட்மெண்டல் கடை ஒன்று ஆரம்பித்தான், அதுவும் அவன் காலை வாரிவிட்டது.கை கையிருப்பு கரைந்து கடன் ஏற ஆரம்பித்தது, ஒரு பெரும் தொகை கடனாக வாங்கி நிலத்தின் மீது போட்டு ரியல் எஸ்டேட் ஒன்றை ஆரம்பித்தான், அது அரசியல் சூழ்நிலையில் அப்படியே நின்று விட்டது. மனைவி வீட்டாரும் ஓரளவு வசதியுடன் தான் உள்ளனர். அவர்களிடமோ, அல்லது மாமனாரிடமோ ஆலோசனை கேட்கலாம் என்று யோசனை கூறிய மனைவிக்கு உடனே மறுப்பு தெரிவித்துவிட்டான்.தன்மானம் போய்விடுமாம், இது அவன் மனைவியிடம் சொன்ன பதில். இதனால் இவனுக்கு நேர்ந்த விளைவுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான்.

அங்கண்ணன் கடை பிரியாணியை சாப்பிட்டுவிட்டு, வெளியே நின்று சவாரசியமாய் பல் குத்திக்கொண்டிருந்த என் அருகே சர்ரென்று ஒரு கார் நின்றது, ஏறு வண்டியில், அறிமுகமான அதிகாரக்குரலுக்கு அடிபணிந்து காரில் ஏறிக்கொண்டேன். என்னைப்பற்றி ஒரு சில வார்த்தைகள், நான் சமுதாய மக்களால் வெறுக்கப்படும், தொழிலை செய்துகொண்டிருப்பவன். இந்தக்காரை ஓட்டி வந்தவன் போல பலருக்கு கை கட்டி அடியாள் வேலை செய்பவன். அடியாட்களையும் சப்ளையும் செய்து கொண்டிருப்பவன்.

காரில் ஏறியதும், ஒன்றும் பேசாமல் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தவன்,திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த காரை பார்த்து “முன்னால் போறவன் யாருன்னு தெரியுதா?நான் சற்று உற்றுப்பார்த்து ஏஜன்ஸி குமார் மாதிரி இருக்கு, என்றேன், அவனேதான், இப்ப அவன் கூட நாம் கொஞ்சம் விளையாடனும். சொன்னவன் காரை சிறிது வேகப்படுத்தினான், குமாரின் காரை முந்தி சென்று ஒரு வளைவில் சடாரென எந்த சிக்னலும் தராமல் வண்டியை திருப்பினான். பின்னால் வந்த குமார் இதனால் சற்று தடுமாறி “பிரேக்” கை அழுத்தி வேகத்தை மட்டுப்படுத்தினாலும் அது அவனை மீறி நான் சென்று கொண்டிருந்த காரின் மீது உரசி நின்று விட்டது.

நான் சென்ற காரை ஓட்டி வந்தவன் சடாரென இறங்கி மோதி நின்ற குமாரிடம் வந்து இறங்கு கீழே என்று குமாரை வலுக்கட்டாயமாக இறக்கினான். குமார் நீ சிக்னல் காட்டாததால்தான், வண்டியை போத வேண்டியதாகிவிட்டது, என்று சொன்னதை காதில் வாங்காதவன் போல் அதெல்லாம் தெரியாது, என் வண்டிக்கு நீ பதில் சொல்லிட்டு போ, உறுதியாக நின்று கொண்டான். இப்பொழுதே போலீசுக்கு போன் போடறேன் என்று கைபேசியில் யாரிடமோ பேசினான்.நான் வழக்கம் போல அடியாளாக அவன் அருகில் நின்று கொண்டேன். எனக்கு இவன் செய்தது அநியாயம் என்று தெரிந்தாலும்.

பின்னால் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது, அதற்குள் ஒரு கான்ஸ்டபிள் அங்கு வந்து இருவரையும் ஒரங்கட்ட வைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த பொழுது இன்ஸ்பெகடர் அங்கு வந்து விட்டார். வந்தவர் ஏன் சார் இப்படி வேகமா ஓட்டறீங்க, பின்னாடி இப்படி மோதி வம்பை விலைக்கு வாங்கிக்கறீங்க, என்று சொன்னவரிடம் “சார் இவர் சிக்னல் காட்டியிருந்தா கண்டிப்பா நான் மோதியிருக்க மாட்டேன், என்று சொன்னதை இவரும் காதில் வாங்க மறுத்துவிட்டார். நான் வந்த காரை ஓட்டி வந்த அரசியல் புள்ளி “சார் ஸ்டேசனுக்கு” போயிடலாம் என்று சொல்லவும் இரு கார்களும் ஸ்டேசனுக்கு சென்றன. குமார் ஸ்டேசனுக்குள் உட்காரவைக்கப்பட்டான். குமாரிடம் “சார்” உங்க வீட்டு நம்பரை கொடுங்க என்று பதவிசாக கேட்க, எதற்கு என்று குமார் எதிர் கேள்வி கேட்டான். இந்த விசயத்தை உங்க வீட்டுல சொல்லி அவங்க பொறுப்பு எடுத்துட்டா
இந்த பிரச்னைய இன்ஸ்பெக்டர் சாரிடம் சொல்லி விட்டுடலாம் என்றவனிடம், எதிர்ப்பு தெரிவித்த குமார் வீட்டுல எல்லாம் போலீஸ் ஸ்டேசன் வரமாட்டாங்க, அதுவுமில்லாம நானே உறுதிமொழி கொடுக்கறேன், “உங்க வண்டியை சரி பண்ணித்தாரேன்” இன்ஸ்பெக்டர் சார் இதிலென்ன தயக்கம் உங்க மனைவி இல்லாட்டி உங்க நண்பர்கள் யாரையாவது வரச்சொல்லுங்க, குமார் யோசித்தான் யாரை கூப்பிடுவது? என்று, அதற்குள்

போலீஸ் ஸ்டேசனுக்குள் குமாரின் மனைவி, மற்றும் குமாரின் அப்பா, அவன் மனைவியின் அப்பா அனைவரும் உள்ளே பிரவேசித்தார்கள். அவர்களை பார்த்ததும் குமாருக்கு உயிர் வந்தது போல் இருந்தது.

குமார் மனைவியின் அப்பா “அரசியல் புள்ளியை பார்த்தும் என்ன மணி என் மருமகன் கிட்ட என்ன பிரச்சனை, சார் இவர் உங்க மருமகனா? அடடா இது தெரியாம போச்சே, இன்ஸ்பெக்டர் சார் தயவு செய்து இந்த பிரச்சனையை இப்படியே விட்டுடலாம்,என்றதும் “இன்ஸ்பெக்டர்” உங்க ப்ராப்ளம் சரியாடுச்சின்னா அது போதும் என்றவர் சரி கிளம்புங்க என்றார். அரசியல் புள்ளி தனியாக இன்ஸ்பெக்டா¢டம் எதோ சென்று பேசிவிட்டு வந்தான்.

அதற்குள் குமாரின் மனைவி குமாரை அணைத்தாற்போல நின்று கொண்டாள், அருகில் அவள் தந்தையும் நிற்க, குமாரின் அப்பா இப்ப எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அவர்கள் அனைவரையும், அவர் வந்த காருக்கு,அழைத்துக்கொண்டு கிளம்பினார்.இதைப்பார்த்தும் பாராதது போல அரசியல் புள்ளி என்னை அழைத்துகொண்டு “வா போகலாம்” என்று என்னை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.

காரில் இருவரும் மெளனமாய் உட்கார்ந்திருந்தோம். எனக்கு இதெல்லாம் பிடிக்கவேயில்லை, எதற்கு இந்த நாடகம்? என்னைப்பொருத்தவரை முடிவு “காயங்கள்”"கை கால்கள் உடைதல்’ இவை மூலமே முடிவு செய்யப்படும். நான் அவரிடம் என்ன சார் நீங்க எதுக்கு இந்த ட்ராமா?அதுவும் போலீஸ் வரைக்கும் கொண்டு போய், இந்த இன்ஸ்பெக்டர் வேற இதுக்கு உடந்தை மாதிரி, குமார் இதுவரைக்கும் நமக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லையே.

மெளனமாய் சிரித்துக்கொண்டு, ஒரு மணி நேரம் எங்கூட இரு அப்புறம் தெரியும் என்று சொன்னவர், உனக்கு பிரியாணி செரிச்சிருக்கும், வா ஏதோ ஒரு ஓட்டல்ல போய் சாப்பிடலாம்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு அவர் வீட்டில் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம், ஒரு கார் வெளியே வந்து நிற்க யாரென எட்டிப்பார்த்த எனக்கு திகைப்பாயிருந்த்து. குமாரின் அப்பாவும், அவர் சம்பந்தியும் வந்துகொண்டிருந்தனர். கூடவே அந்த இன்ஸ்பெக்டரும்.

வந்தவர்கள் அரசியல் புள்ளியின் கையை பிடித்துக்கொண்டு மணி ரொம்ப நன்றி, நீயும் இன்ஸ்பெக்டரும் இல்லையின்னா குமாரை உயிரோட எங்களால பார்த்திருக்கமுடியாது என்றனர்.குமார் இப்ப என்ன பண்றான்? நீங்க போட்ட போடுல கொஞ்சம் பயந்தாலும், நாங்க கூட இருக்கற ¨தா¢யத்துல இப்ப தெளிவா இருக்கான். எங்களால முடிஞ்சதை செஞ்சோம், என்று இன்ஸ்பெக்டரும், அரசியல் புள்ளியும் சொன்னார்கள். சிறிது நேரத்தில் மூவரும் விடைபெற்று சென்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, கேள்விக்குறியுடன் அரசியல் புள்ளியின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நான் தொட்டது எல்லாம் தோல்வியில் முடிவதால் இனி நான் உயிரோடு இருந்து பிரயோசனமில்லை” நான் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்திவிட்டு காரை எடுத்து கிளம்பிவிட்டான். நல்ல வேளை அவன் மனைவி அந்த கடிதத்தை பார்த்துட்டாங்க. உடனே அவள் அப்பாவிற்கு போன் செய்து சொல்ல அவர் என்னிடம் சொன்னார், நான் உடனே இன்ஸ்பெக்டா¢டம் யோசனை கேட்க, அவர்தான் எந்த வழியாக சென்றான் என விசாரித்து அவனை நிறுத்திவைக்கும்படி யோசனை சொன்னார்கள், அதன்படியே நான் செய்தேன்.அவ்வளவுதான்.

அரசியல் செய்வது என்றால் நல்ல விசயங்களே இல்லை என நான் நினைத்துக்கொண்டிருந்தபொழுது இப்படி கூட அரசியல் செய்து, நல்லது செய்யமுடியும் என்பதை உணர்ந்துகொண்டேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம், போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம். அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்திற்கு பாட்டு என்றால் உயிர், ...
மேலும் கதையை படிக்க...
'ஏய்" மூதேவி எங்கே போய் தொலைஞ்சே ! கர்ண கடூர குரல் அங்கு வா¢சையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது. பக்கத்து வீட்டு ஜெயா தன் கணவனிடம் போச்சு காலையிலேயே ஆரம்பிச்சாச்சு இவரோட அட்டகாசத்தை, பாவம் அந்தக்கா என்னதான் பண்ணும் இவர் பண்ற ...
மேலும் கதையை படிக்க...
மதியத்துக்கு மேல் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா போகலாம் என கடைசி பெஞ்ச மாணவர்கள் குழு முடிவு செய்தது. இந்த யோசனையை சொன்ன சாமியப்பனும், அவன் அருகில் உட்கார்ந்திருக்கும் கார்த்தி, சரவணன், இந்த மூவரும் திட்டமிட்டபடி மதிய உணவை நண்பர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி, தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார்.அதேபோல்தான் அவர் மனைவியும், இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் இப்பொழுது கணபதியப்பன் அமைதி இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார், அவரது பிள்ளைகளால் கோடி கணக்கில் பணம் அவரது நிலத்துக்கு கிடைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அகல்யாவிடம் தேவி சொல்லிவிட்டாள். அம்மா இந்த காலத்துக்கு வீட்டுக்கு வந்து பெண் பார்க்கறதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது கோயிலுக்கு வரச்சொல், பிடிச்சிருந்தா "ஓகே" இல்லையின்னா அப்படியே விட்டுடலாம் என்ன சொல்றே? அம்மா பிரமிப்புடம் பார்த்தாள். 'இந்த காலத்தில்தான் எவ்வளவு விவேகமாக இருக்கிறார்கள். சரி என்னைக்குன்னு சொல்றது? ...
மேலும் கதையை படிக்க...
புரிந்துகொண்டவன் பிழை
துன்பம் கொஞ்ச காலம்தான்
சினிமா பார்க்க சென்றவர்கள் மனதுக்குள் ஒரு சினிமா
நிலம் விற்பனைக்கு அல்ல
தேவியின் ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)