இதுதான்யா நெஜம்?

 

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

அரசியல் கட்சிகளின் பிரச்சார அலையில் ஊரே அமர்க்களப்பட்டது. பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன் பின்னால் வைத்துள்ள சூப்பர் ஹீரோ செல்வகுமாரை எப்படியோ வளைத்து சீட் கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கியிருந்த அந்தக் கட்சி பல நடிகர் நடிகையரை பிடித்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது.

பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டதில் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி மீடியாக்களும் செல்வக்குமாரின் வெற்றியை உறுதிப்படுத்திப் பேசத் துவங்கின.

சூப்பர் ஹீரோவுக்கு எதிராக களத்திலிருந்த பழுத்த அனுபவசாலியான அந்த மூத்த அரசியல்வாதி ஆரம்பத்திலிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்து விட்டு கிட்டத்தட்ட சித்த பிரமை பிடித்தவர் போல் ஆகிப் போனார்.

‘மிஸ்டர் செல்வகுமார்…! திஸ் ரிப்போர்ட்ஸ்…நேஷனல் மாடர்ன் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எடுத்த கருத்துக் கணிப்பு..நீங்க லட்சக் கணக்கான வாக்கு வித்தியாசத்துல ஜெயிப்பீங்கன்னு கணிச்சிருக்கு’

செல்வகுமார் சந்தோஷத்தில் மிதந்தான். ‘ரிசல்ட் வந்ததும் வெற்றி விழாவில் கலந்துட்டு மறுநாளே சுவிட்ஸர்லாந்து பறந்திடணும்…இப்பவே நடிகை சமீதாக்கு போன் பண்ணி அவளோட கால்ஷீட்டைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வைக்கச் சொல்லணும்…அப்பத்தானே அவளும் கூட வர முடியும்’ தாறுமாறாகச் சிந்தனை ஓடியது சூப்பர் ஹீரோவுக்கு.

இரவு 11.45.

அந்தப் புற நகர் பகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த செல்வகுமாருக்கு கண் எரிச்சல் தாளவில்லை. தூக்கம் வேறு. உடனிருந்த இரண்டு கைத்தடிகள் தூங்கியே விட்டனர்.

‘டிரைவர் வழில ஏதாவது டீக்கடை இருந்தா நிறுத்துப்பா…சூடா ஒரு டீ சாப்பிடலாம்…கூல் டிரிங்க்ஸ் சாப்பிட்டு சாப்பிட்டு தொண்டையே கரகரத்துப் போச்சு’ செல்வகுமார் சொல்ல,

மங்கலான விளக்கொளியில் மசமசவென்றிருந்த அந்த ஒற்றை டீக்கடை முன் கார் நின்றது.

டீக்கடைக்காரன் எட்டிப்பார்த்தான்.

இறங்கிச் சென்ற டிரைவர் ‘நாலு டீ ஸ்ட்ராங்கா’

‘நல்லவேளை இப்பத்தான் பாய்லரை இறக்கலாம்னு நெனச்சென்’ என்றபடி போடத் துவங்கியவன் காரிலிருந்து இறங்கி வெளியில் நிற்கும் சூப்பர் ஹீரோ செல்வகுமாரை அலட்சியமாகப் பார்த்து விட்டு தன் வேலையில் மூழ்கினான். அதைக் கண்ட டிரைவர்,

‘ஏம்பா..அங்க நிக்கறது யாருன்னு தெரியுதா?’ கேட்டான்.

‘தெரியம்..தெரியம்..தெரியாமென்ன?’

இதற்குள் அருகில் வந்த செல்வகுமார் ‘டிரைவர்..நான் எவ்வளவு ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்பேன்னு கேட்டுப் பாரு’என்றான்.

டிரைவர் கேட்க,

மெலிதாய் குறுஞ்சிரிப்பு சிரித்த அந்த டீக்கடைக்காரன் ‘ஜெயிச்சாத்தானே…வித்தியாசத்தைப் பத்திப் பேச?’

கோபமுற்ற செல்வகுமார் ‘இடியட்…எல்லா கருத்துக் கணிப்புக்களும் நான் ஜெயிக்கறது உறுதின்னு ஆணித்தரமாச் சொல்றப்ப..ஆப்டர்ஆல் ஒரு டீக்கடைக்காரன்..உனக்கென்னய்யா தெரியும் பாலிடிக்ஸ் பத்தி..!ஸ்டுப்பிட்’ கத்திவிட்டு டீயைக் கூடப் பருகாமல் வேகமாகச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டான் செல்வகுமார்.

டிரைவரும் பினனாலேயே ஓட்டமாய்ச் சென்று காரில் ஏறி ‘வெடுக்’ கென்று கிளப்ப,

‘சாவு கிராக்கிக’என்று தலையிலடித்துக் கொண்டான் டீக்கடைக்காரன்.

***************

தேர்தல் தோல்வியின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே தலைகாட்டாத செல்வகுமார் போதையின் தழுவலிலேயே கிடந்தான்.

நான்காம் நாள் காலை காரை எடுத்துக் கொண்டு நகருக்கு வெளியே இருந்த அந்த டீக்கடையை நோக்கிப் பறந்து. அந்த டீக்கடைக் காரனிடம் கேட்டான். ‘ஏம்பா…எல்லா பத்திரிக்கைகளும்…எல்லா சர்வே ரிப்போர்ட்டுகளும் நான்தான் ஜெயிப்பேன்னு அடிச்சுச் சொல்லுச்சுக…ஆனா நான் தோப்பேன்னு சொன்ன மொத ஆளு… ஒரே ஆளு நீதான்…எப்படிப்பா..எப்படி உன்னால மட்டும் கணிக்க முடிஞ்சுது’

‘சார்…உங்களுக்கு ரிப்போர்ட்ஸ் குடுத்தவங்கெல்லாம்…உங்ககிட்டயிருந்து ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து….உங்களால அவங்க பத்திரிக்கைக்கோ…டி.வி.க்கோ கெடைக்கற…இன்னும் கெடைக்கப் போற லாபத்துக்காக..பச்சையா சொல்லப் போனா உங்களைக் காக்கா பிடிக்கறதுக்காக…உண்மைக்குப் புறம்பா ரிப்போர்ட் குடுத்திருக்காங்க..ஆனா எனக்கு அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாததினால் நான் உண்மையைப் போட்டு உடைச்சேன் அவ்வளவுதான்…இனிமேலாவது கூட இருக்கறவங்களோட நெஜ முகம் என்னங்கறதைப் புரிஞ்சுக்கிட்டு புத்திசாலித்தனமா பொழைக்கப் பாருங்க சார்’ வெகு சாதாரணமாய் சொல்லிவிட்டு கஸ்டமர்களுக்கு டீ போட ஆரம்பித்த அந்த டீக்கடைக்காரனை ஆச்சரியமாய்த் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே காரில் ஏறினான் சூப்பர் ஹீரோ செல்வகுமார்.

மறுநாள் காலை செய்தித்தாளில் அந்தச் செய்தி முக்கியச் செய்தியாக இடம் பெற்றிருந்தது.

‘சூப்பர் ஹீரோ செல்வகுமார் அரசியலுக்கு முழுக்கு’ 

தொடர்புடைய சிறுகதைகள்
குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது. 'அது சரி குமார்… இன்னிக்கு என்ன த்ரில் வெச்சிருக்கே…? யாரைக் கலாய்க்கப் போறே?” 'ம்ம்ம்…” ஆட்காட்டி விரலைத் தாடையில் வைத்து யோசித்த குமாரின் பார்வை கீழே தெருவில் ...
மேலும் கதையை படிக்க...
எது நடக்கக் கூடாது என்று ஆனந்த் நினைத்திருந்தானோ… அது நடந்தே விட்டது. 'போச்சு… என் வாழ்க்கையே போச்சு… இப்படியெல்லாம் ஏடாகூடமா ஏதாச்சும் நடந்துடும்னுதான்… மூணு வருஷமா இந்தக் கிராமத்துப் பக்கமே வராம இருந்தேன்… இந்த அம்மாதான்…'பாட்டி ரொம்ப சீரியஸா இருக்குடா…உன் பேரைத்தான் ...
மேலும் கதையை படிக்க...
'கலி முத்திப் போச்சுங்க!… ச்சே;… இப்படியெல்லாமா ஒரு அக்கிரமம் நடக்கும்?… படிச்சவங்களே இப்படி இருக்காங்களே!” மருத்துவமனையின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்த உடல் தடித்த மனிதர் தன் கருத்தை உடனிருப்பவரிடம் சொல்ல, 'என்னத்தைப் பண்றது… இப்பத்தான் ஜனங்க புத்தியே சின்னப் புத்தியாவல்ல போச்சு…” அவர்களது பேச்சை ...
மேலும் கதையை படிக்க...
தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத் துரத்திய பிரபல நாட்டியத் தாரகை பத்மா ரகுநாதன் நேற்று மொட்டை மாடியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டபின் தன் வெறுப்பு மனத்தை ...
மேலும் கதையை படிக்க...
அறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான். 'ஆமாம் நீ யாரு?" 'நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் ...
மேலும் கதையை படிக்க...
யாரைக் கலாய்க்கலாம்?
மாமனோட மனசு!
ஞானோதயம்
கலையின் விலை?
நேரில் கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)