எல்லோருமே இண்டர்வியூ முடித்து காத்திருந்தனர்.
இவள் மட்டும் பாக்கி. வியர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்தாள் உமா.
இண்டர்வியூ முடிஞ்சிட்டது. செலக்ஷன் மட்டும் தான் பாக்கி.
டைமுக்கு வரமுடியாத உன்னால… வேலைக்கு எப்படி கரெக்டா வரமுடியும்? என்றார் டாக்டரில் ஒருவர். ஸ்டாப்பிங்ல ஒரு அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பிட்ஸ் வந்திடுத்து.
அந்தம்மாவுக்கு முதலுதவி செய்து… இதே ஹாஸ்பிட்டல்ல சேர்த்து வர்றேன். அதனால தான் லேட் என்றாள் உமா.
அப்போது காபி ட்ரேயுடன் வந்த ஒரு பெண்ணை பார்த்து அதிர்ந்தாள் உமா. அவள் பிட்ஸ் வந்து உமாவினால் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்ட அதே பெண்.
இவுங்க இந்த ஹாஸ்பிட்டலோட ஸ்டாப் தான். ஸ்வீப்பரா வேலை பார்க்குறாங்க. இண்டர்வியூக்கு வந்த ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொரு விதமா டெஸ்ட் பண்ணினோம்.
எல்லோருமே நோயாளிக்கு உதவி செய்றதை ஒரு வேலையாதான் நினைச்சு செயல்பட்டாங்க. நீங்க மட்டும் தான் கடமையும், மனித நேயமும் கலந்த சேவையா நெனைச்சு செயல்பட்டு இந்த பெண்ணை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தீங்க..
அதனால நர்ஸ் போஸ்ட்டுக்கு உங்களையே அப்பாயிண்ட்மென்ட் பண்ணியாச்சி. பெஸ்ட் ஆப் லக் என்றார் தலைமை டாக்டர்.
உமா ஆனந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
அன்று அந்த உடன் வேலை செய்யும் மலாய் நண்பனிடம் உதவி கேட்காமல் போனதானது இப்போது எண்ணி வேதனை படவேண்டியதாகி விட்டது. ‘பர்சை’ எத்தனையோ தடவை வீட்டில் விட்டு விட்டு வந்த போதெல்லாம் மனம் கோணாது சாப்பாட்டு நேரத்தில் பணம் கொடுத்து உதவி ...
மேலும் கதையை படிக்க...
இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய் தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’ என்பதைப் பார்த்ததும் தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் சாந்தி
இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்
எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மரத்தைக் கடந்து போகும் போது உனக்குள்ளேயே ஹலோ சொல்லிக் கொள்ளத் தவறாதே. அதைக் கரிசனத்தோடு பார்க்காமல் போகாதே. இதில் செலவு ஏதுமில்லை. நீ மரத்தை சந்தோசப் படுத்தினால் மரம் உன்னை சந்தோசப்படுத்தும். மரத்தை வசப்படுத்துவது அவ்வளவு சுலபலமல்ல. மனிதர்கள் மிக ...
மேலும் கதையை படிக்க...
நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது. கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை ...
மேலும் கதையை படிக்க...
தேவ இறக்கம் நாடார் - அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ, எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த 'டமிலில்' எழுதுவது போலவே எழுதி விடுவோம். நல்ல ...
மேலும் கதையை படிக்க...
கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது.
கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி - அவள் ஜப்பானிய உடை அணிந்திருந்தாள், அப்புறம் ஒரு அம்மா. பக்கத்து அறையில் சின்ன வாலிபக் கூட்டணி, என்னவோ வார்த்தையாடியபடி இருக்கிறார்கள். பத்திரிகைக்காரரும், காரியும் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு அடர்ந்த காடு, அதில் புன்னை மரங்கள் அதிகம். பலவகையான மா மரங்கள் நிறைந்திருந்தன, வரிசையாக நெட்டிலிங்க மரங்கள் உயர்ந்திருந்தன எங்கும் கண்டிராத செயலை மரங்களே அந்தக் காட்டின் அடையாளம். வில்வ மரங்கள், ஆங்காங்கே செம்மரங்கள் மிகவும் பெரிதாக ...
மேலும் கதையை படிக்க...
அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் ...
மேலும் கதையை படிக்க...
நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது.
வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன்.
பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது.
ஒருநாள் சோறு ...
மேலும் கதையை படிக்க...
வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான ...
மேலும் கதையை படிக்க...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!