“குருவே, நான் எந்த முடிவெடுத்தாலும் தப்பாகவே போய் விடுகிறது. இப்படி தப்பாய் முடிவெடுப்பதால் நிறைய இழந்து விட்டேன். ஏன் என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை?’
தன்னிடம் பதற்றமாய் சொன்னவனை அமைதியாகப் பார்த்தார் குரு.
“ஏன் இப்படி பதற்றப்படுகிறாய். அமைதியாய் இந்தச் சம்பவத்தைக் கேள்’ என்று ஒரு சம்பவத்தை அவனுக்குச் சொல்ல ஆரம்பித்தார் குரு.
ரயில் பெட்டி ஒன்றில் ஒரு இளைஞனும் அவனது தந்தையும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரே ஓர் ஆள் அமர்ந்திருந்தான். வந்ததிலிருந்தே அந்த இளைஞனின்
செய்கைகள் அந்த ஆளுக்கு வினோதமாகப்பட்டது.
அந்த இளைஞன் ஒவ்வொன்றையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். ரயில் கிளம்பியது. அந்த இளைஞன் இன்னும் உற்சாகமாகிவிட்டான். “அப்பா வயலைப் பாருங்க’, “அப்பா, மரத்தைப் பாருங்க’ என்று கண்ணில் படுவதையெல்லாம் அப்பாவிடம் காட்டி பரவசப்பட்டுக் கொண்டிருந்தான்.
பத்து வயது சிறுவன் இப்படி பரவசப்பட்டால் வித்தியாசமாகத் தெரியாது. ஆனால் ஒரு இருபது வயது இளைஞன் இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டாடுவது எதிர் சீட் ஆளுக்கு ரொம்பவே வினோதமாகப்பட்டது.
“பாவம் மனநிலை சரியில்லாத மகனை அழைத்துப் போகிறார்’ என்று மனதில் நினைத்துக் கொண்டார். நினைத்ததோடு நிற்கவில்லை. அந்தத் தந்தையுடன் பேச்சுக் கொடுத்தார்.
“பையனுக்கு ரொம்ப நாளா இப்படி இருக்கோ?’ என்று ஆரம்பித்தார்.
“எதை கேக்கிறீர்கள்?’ எதிர்க் கேள்வி கேட்டார் தந்தை.
“இல்லை, பையன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கானே. எனக்குத் தெரிஞ்ச மனோதத்துவ டாக்டர் இருக்கார். அவர் மனநோய்லாம் நல்லா பார்ப்பார்.’
“மனநோயா, யாருக்கு? என்ன சொல்றீங்க?’ தந்தை கொஞ்சம் சூடானார்.
“பையனுக்குத்தான். இந்த வயசுல அஞ்சாங் கிளாஸ் பையன் மாதிரி நடந்துக்கிறானே, அதான் டாக்டரைப் பார்க்கலாமேனு சொன்னேன்.’
“நீங்க தப்பா புரிஞ்சிக்கிடீங்க. அவனுக்கு மனநோய் இல்ல. என் பையனுக்கு பிறவில இருந்தே கண்ணு தெரியாது. போன வாரம்தான் ஆபரேஷன் செஞ்சு கண்ணை சரி பண்ணோம். இன்னைக்குதான் கட்டைப் பிரிச்சோம். இப்போதான் உலகத்தை முதல் தடவையா பாக்குறான்’ என்று தந்தை சொன்னபோது எதிர் சீட் ஆசாமிக்கு தன்னுடைய தவறான அவசர முடிவு புரிந்தது.
இந்தக் கதையைச் சொல்லி முடித்து, வந்தவனைப் பார்த்து, “புரிந்ததா, உன்னுடைய தவறு?’ என்று கேட்டார். வந்தவனுக்குப் புரிந்தது.
இப்போது அவனுக்கு குரு சொன்ன win மொழி: அவசரப்பட்டு முடிவெடுக்காதே. ஆராய்ந்து முடிவெடு.
- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)
தொடர்புடைய சிறுகதைகள்
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?”
ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.
அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள்.
ஒவ்வொரு இடத்தையும் வெகுவாய் ரசித்தாள் மனைவி.கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள்.
வீடு திரும்பும்போது விமானத்தில் ...
மேலும் கதையை படிக்க...
குருவே, எனக்கு எதுவுமே சரிப்பட மாட்டேன்கிறது என்று சொன்னவனை பார்த்தார் குரு. என்ன பிரச்னை? என்றார். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது. என்னால் சமாளிக்க சிரமமாக இருக்கிறது என்றான் வந்தவன்.
குரு சற்று சிந்தித்தார். அவனின் பிரச்னை அவருக்கு புரிந்ததது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
"குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"ஏன்! என்ன பிரச்னை?"
"என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னை ஏமாற்றி விடுகிறார்கள். நான் நம்புபவர்கள் காலை வாரிவிட்டு விடுகிறார்கள்” என்று சொன்னவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“”ஒரு ...
மேலும் கதையை படிக்க...
என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
என்ன பிரச்சனை?
எல்லோரும் என்னை நல்லவன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குது. எதுவும் சம்பாதிக்க முடியல என்று வருத்ததோடு சொன்னவனின் பிரச்னை குருவுக்கு புரிந்தது.அவனுக்கு ஒரு சம்பவத்தை ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு சில லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது எப்படி?” என்று ஆர்வமாய் கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“லட்சியங்களை அடைய நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்ன இளைஞனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு.
“என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“சொல்லுப்பா, என்ன ஆச்சு?”
“என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறேனாம். குறையிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் என்ன தப்பு?” என்று கோபமாய் கேட்டான் இளைஞன்.
அவன் ...
மேலும் கதையை படிக்க...
“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.
“ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை ...
மேலும் கதையை படிக்க...
“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.
“என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன்.
வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!
புத்தியை பயன்படுத்தினால்…
தீயவர்களை அடையாளம் காணுதல்…
நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது…
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!
குறைகளையே பெரிதுப்படுத்தினால்…
இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது