ஆபீஸ் பாய்

 

கமல் வீடு ,காலை அலுவலகம் கிளம்பும் பரபரப்பு, இருவரிடமும், கமல் தனியார் பேங்க் வேலை. ப்ரியாவும் பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை, திருமணமாகி 9 மதங்கள் ஆகிறது,

ப்ரியா என்னோட ஷர்ட் அயர்ன் பண்ணினியா?, என்னத்தான் பண்ற வீட்லே, எனக் கூறிக்கொண்டே எடுத்து அயர்ன் பண்ண ஆரம்பித்தான்.

நானே எல்லாமும், செய்யனுமா? கூட மாட ஏதாவது செஞ்சாதானே. வர வேண்டியது செல்ல நோன்ட வேன்டியது, டிவி பார்க்க வேண்டியது அதுவும் பதினொன்று மணி வரை, காலையில என் உயிரை எடுக்கவேண்டியது, என்று சொன்னதுதான் தாமதம் கமலுக்கு ஆத்திரம் வந்தது,

ஏய், என்ன வேலைக்கு போற திமிரா? முடிஞ்சா செய், இல்லைனா சும்மா இரு, நாங்க பார்த்துக்குறோம், நீ ஒன்னும் எனக்காக செய்யவேண்டாம், என எல்லா ஆண்கள் போலவே கர்ஜித்தான். ப்ரியவுக்கோ நேரமில்லை ,சரிங்க விடுங்க நான் கிளம்பனும், உங்க பாக்ஸ் ரெடி, என கூறினாள்.

ஆமாம் சீக்கிரம் போ அங்கே உனக்காகத்தான் எல்லோரும் வெயிட் பண்ணறாங்க, உங்க ஆபீஸ் பாய் அதான் உன் பாய் friend காத்துக்கிட்டு இருப்பான் அவன் கூட வண்டிலே போறதுக்குத்தானே ஓடறே, என்று கூறவும் அழுகை வந்தது அவளுக்கு, அடக்கிக் கொண்டு கிளம்பினாள்.

அவனுக்கு எப்படி தெரியும்?, சங்கர் கூட வண்டியில் அன்றைக்கு போகலைன்னா பின்னால் வரும் மேனேஜர் காரில் ஏறும்படி ஆகி இருக்கும் என்று, அதை தவிர்க்கவே அன்று சங்கர் உடன் சென்றாள்.

பேருந்தில் சிரமப்பட்டு ஏறினாள். எல்லா ஆண்களும் வீசும் இறுதி அஸ்திரம் இந்த கேவலமான சந்தேகம் தான். இதுதான் அவர்களுக்கு வசதி போலே என நினைத்தபடி ஆபீஸ் வந்து சேர்ந்தாள். ஆபீசில் தான் எத்தனை சோதனை பெண்களுக்கு,

அதுவும் இவள் பின்னே இருக்கையில் மேனேஜர் , அருகில் வேலை பார்க்கும் வயதில் முதியவர், அன்பாக பேசும் மேனேஜர் சில சமயங்களில் வேறு மாதிரி பேசுவர் ,உடையில் கவனமாக இருக்கனும், பேச்சில் கவனம், சிரிக்கும்போது கூட கவனமாக இருக்கனும் இதெல்லாம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சுதந்திரம்.. தனியாக பெண் ஒருத்தி என்ன படித்திருந்தலும் அலுவலகத்தில் பணி புரிவது சிரமம்தான்,

இவர்களில் ஆபீஸ் பாய் ஆக பணிபுரியும் சங்கர் , +2 வரை படித்தவன், இவளை நன்கு தெரிந்தவன் ,இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் ,இவளை விட பெரியவன். அவள் மனைவி நன்கு படித்து தனியார் வேலை என்று சொல்லுவார், இவளின் அலுவலக கஷ்டம் நன்கு புரிந்தவன். அன்று ஆபீஸ்க்கு மேனேஜர் மகள் சந்தியா தனது அப்பாவை சந்திக்க வந்து இருந்தாள்.

அப்பா எங்க என கேட்க, மீட்டிங் நடைபெறுகிறது சற்று காத்திருங்கள் என கூறி பிரியா இருக்கையில் அமர்த்தி, குடிப்பதற்கு டீ கொடுத்தான் சங்கர்.

மீட்டிங் முடிந்து வந்த ப்ரியாவை சற்று நேரம் வெளியே செல்ல சொன்னான். ஏன் எனக் கேட்ட ப்ரியாவை விஷயமாகத்தான் சொல்றேன் போங்க என்றான்.

அவளும் வெளியே சென்றுவிட்டாள். மீட்டிங் முடித்து வெளியே வந்த மேனேஜர் , என்ன பிரியா, மீட்டிங்க்லே அசத்திட்டிங்க, என கூறிக்கொண்டே கன்னம் கிள்ளக் கையைக் கொண்டு வந்தார்,

அப்பா, என் வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது அதான் உங்க கூட வீட்டுக்கு போகலாம்னு இங்க வந்தேன், போகலாமா இன்னும் டைம் ஆகுமா? எனக் கேட்டாள். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை, கன்னம் கிள்ளபட்டிருந்தால் என்ன ஆகிருக்கும், என் மகள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள், என வெட்கி தனது இருக்கைக்கு திரும்பினான்.

அதை கண்ட சங்கர் ப்ரியாவை உள்ள செல்லுமாறு கூறினான், தனது சமயோசித புத்தியை வைத்து மேனேஜர் மகள், ப்ரியாவைப் போல் புடவை அணிந்து வந்ததைக் கண்டு அவளை ப்ரியாவின் இருக்கையில் அமரவைத்து மேனேஜருக்குப் பாடம் புகட்டினான்.

மேடம், இனி கவலை இன்றி நீங்கள் அலுவலகம் வரலாம் என் சங்கர் கூற , நட்புக்கு நன்றிக் கூறினாள் பிரியா. 

தொடர்புடைய சிறுகதைகள்
யோவ்..இங்க வாய்யா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர். ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும், இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும், அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார்! என்று விரட்டினர். மருத்துவர் வந்த பின் அவரது உடல் முழு பரிசோதனை ...
மேலும் கதையை படிக்க...
பிரியா பெயருக்கேற்ற அழகும், வயதுகேற்ற வாளிப்பும் உடைய அழகு தேவதை. கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆயிற்று, வேலைக்குச் செல்ல அனுமதியில்லை வீட்டில் ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நல்ல வரன் வந்தால்,திருமணம் செய்துவிடலாம் என்பது பெற்றோரின் விருப்பம். ப்ரியாவின், அப்பா பாங்கில் ...
மேலும் கதையை படிக்க...
பாரு...காபி கொண்டு வாம்மா! என்றார் ராமன். ராமன், இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று சிறிதாக டவுனில் வைத்துள்ளார். நிலபுலங்கள் கிராமத்தில் இருந்தும் படிப்புக்காக புறநகர் வந்து வீடு கட்டி குடியேறிய நடுத்தர குடும்பம். இதோ அப்பா, அம்மா கலந்துண்டுருக்கா! ...
மேலும் கதையை படிக்க...
என்ன கேசு ஏட்டையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆய்வாளர் ஆறுமுகம். ஐயா, ஒரு வயதான பொம்பளைகிட்ட பணம் திருட முயல, அவங்க கீழே விழுந்து மக்கள் எல்லாம் சேர்ந்து அட்மிட் செய்துட்டாங்க. இவனை அள்ளிகிட்டு வந்து விசாரிச்சா 2000 ரூபா நோட்டா நிறைய ...
மேலும் கதையை படிக்க...
துரையும்,மணியும் ஒன்றாக தனியார் பேரூந்தில் வேலைபார்க்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர், நண்பர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்தும் வருகின்றனர். இதில் மணி துரையை விட 5 வயது மூத்தவர், இருவரும் ஒன்றாக தினமும் வேலைக்குச் சென்று திரும்புவர், இவர்களுக்குள் நேற்று வரை ...
மேலும் கதையை படிக்க...
கைதி எண் 202
இனிய தோழா!
அனுபந்தம்
ஆறாத சினம்
சுமைத் தாங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)