ஆண்டவன் அசட்டையா

 

ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள்

ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான் ஜெயராமன். தன்னை சுற்றி நோக்கியவன் வேட்டியை சரி செய்தவாரே டீ கடையில் நுழைந்து ஒரு டீ என்றான். டீக்கடைக்காரன் தேநீரை அவன் முன் நீட்டினான். டீ குடித்தவன் மீண்டும் குளக்கரையை அடைந்தான். யாருமற்றவனாக இருந்தான் ஜெயராமன். வீடு அற்று தொழில் அற்று தோன்றிய வாறு தொழில் செய்வது காசு கிடைத்தால் தேவையானவற்றை உண்பது கிடைக்காத போது பட்டினியாக இருப்பது இப்படிதான் நடந்தது கொண்டிருந்தது அவனது வாழ்க்கை.

குளக்கரை சுற்றி உள்ள வணிகர்கள் ஜெயராமனை பார்த்து ஒரிருவர் சில நேரங்களில் உணவு பொட்டலங்களை கடைகளிலிருந்து வாங்கியும் தருவார்கள்.; எதுவும் மறுப்பற்று எற்பான்.; ஜாதிமதம் அற்று எல்லா வியாபாரிகளும் தன்னால் ஆன உதவியை செய்வர் அதையும் ஏற்பான் ஜெயராமன் இந்நிலையில் தான் அன்வர் என்ற பரிசு சீட்டு வியாபாரி இவனுக்கு உதவி செய்ய தோன்ற “ஜெயராமா இன்னிக்கு நான் விற்ற பரிசீட்டில் கடைசி சீட்டு இருக்க நீ எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடு போதும்” என்றான். ஜெயராமன கையில் இருக்கும் 5ரூபாய் தாளையும் 2ரூபாய் காசையும் அவனிடம் கொடுத்தான். பரிசு சீட்டை ஜெயராமனிடம் கொடுத்த அன்வர் இதை எங்கே வைக்கப்போறே என்ற கேள்வியை எழுப்ப “எல்லாம் என் துணிப்பையிலே வை ” என்றான் அன்வரும் அவன் கூறிய துணிமூட்டையிலே வைத்தான்.

நாட்கள் நகர்ந்தன மாலை முடிவுகள் செய்தித்தாளில் வர அன்வர் அதை பார்க்க ஜெயராமனின் எண் கொண்ட பரிசு சீட்டுக்குத்தான் முதல் பரிசு என்பதை தெரிந்து கொண்டான். பரிசுத்தொகை ஒரு கோடி என்றும் இருந்தது தரையில் கால் பாவாமல் அன்வர் பறந்து வந்தான் என்றே கூறவேண்டும்.

ஜெயராமா! ஜெயராமா! என்று கூவிக்கொண்டே குளக்கரை முழுவதும் சுற்றினான் கடைசியில் டீக்கடையில் அவனை கண்டு கொண்டான் ஜெயராமனை இறுக அணைத்தான் உனக்கு தான் முதல் பரிசு ஒரு கோடி என்றான் பரிசு சீட்டு எங்கே என்றான்.

நீ தானேடா துணிமூட்டைக்குள்ளே வைச்சே என்றான் ஜெயராமன்.

துணிப்பையை அவசரமாக பிரிக்க அதிலிருந்து துணிகள் ஈரத்துடன் வந்து விழுந்தன அத்துடன் பரிசு சீட்டும் நயந்து கிழிந்து சுக்கு நூறாக வந்து தரையை தொட்டது. தலையில் கையை வைத்த அமர்ந்த அன்வர் எழவேயில்லை.

ஜெயராமன் எழுந்து சென்று தான் குளக்கரையை அடைந்து தூங்கவும் தொடங்கினான்.

ஆண்டவனின் அசட்டையான நேரத்தில் இவனது பிறப்பு நிகழ்ந்ததோ?.  

தொடர்புடைய சிறுகதைகள்
ஆதிகேசவா நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் அப்பா உன் வீட்ட பார்த்துட்டு வந்ததில் இருந்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லார் வீட்டிலேயும் மாமியாரும் மருமகள் சண்டை போட்டுத் தான் நான் பார்த்திருக்கேன் உன் வீட்டிலே அந்த மாதிரி எதையும் காணோமே ...
மேலும் கதையை படிக்க...
ரமணா: என்னடா ஐயப்பா ராகினி மேடம் இல்லத்திற்குள்ளே இல்லையா என்றார். இல்லைன்னு நினைக்கிறேன் சுதாவை கூட்டிண்டு வெளியே போனா என்றார் ஐயாகண்ணு நீ பார்த்தியோ என்றார் ராகினி அம்மா கிராமத்துக்குள்ளே போயிருக்கிறாங்க என்றான் கவிதாவை கூட்டிட்டு வரத்துக்கா என்றார் ஆமாங்க ஐயா என்றார் ஐய்யாகண்ணு அங்க பசங்க உட்கார இடத்தை ...
மேலும் கதையை படிக்க...
"ஏண்டி காயத்ரி, எவ்வளவு வரன் வந்துண்டே இருக்கு. எதுக்கும் ஒத்துவரமாட்டேன்கிற", என்று அலுத்துக்கொண்டாள் மாலினி. "என்ன அம்மா, எனக்கு பிடிச்சாப்புல வரன் எங்கே இருக்கு. பையன் ஆள் அழகா இருந்தா இங்கிலிஷ் பேச வரதில்லை, நல்ல சம்பளம் என்று பார்த்தா சுத்தி அம்மா ...
மேலும் கதையை படிக்க...
பங்கஜம் மாமி: “என்னடி வீடு வாசல் எல்லாம் தொறந்து போட்டு எங்கே போனா புஷ்பா மாலதி சரளா எல்லா எங்கேடி போனிங்க பெரியாவா வீட்டிலே இருந்தா இப்படி இருக்குமா? எல்லாம் ஒன்னும் தெரியாத பெண்ணுங்க” என்று நவராத்திரிக்கு பட்சனம் வாங்க வந்த ...
மேலும் கதையை படிக்க...
தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார். நேரம் நகர்ந்தன பேத்தியை காணாத தாத்தா முகம் சுழித்தார் அங்கு வந்த அவரின் மருமகள் உமா “என்ன மாமா ஏதோ ரொம்ப யோசனையில் ...
மேலும் கதையை படிக்க...
மாமியாரின் ஸ்தானம்
கற்பகம் முதியோர் இல்லம்
காதலின் மகிமை
நவராத்திரி கொலு
ஓலைச்சுவடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)