Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

அந்த இனம்… – ஒரு பக்க கதை

 

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டிருந்தது…. எங்கு பார்த்தாலும் பலவித கட்சிகளின் கொடிகள்…. வண்ணங்கள்…. பிரச்சார பொன்மொழிகள்…. வாக்குறுதிகள்….

ஒரு கட்சியின் தலைவர் (பெயர், மற்றும் ஆணா பெண்ணா என்பதை அவரவர் கற்பனைக்கு!!) ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

தலைவர் என்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது…. எங்கு சென்றாலும் முன்னும் பின்னும் நான்கு படை வீரர்கள், இயந்திரத் துப்பாக்கியுடன் அவரை சூழ்ந்து காவல் காத்தனர்….. அவர் நடந்தாலும்…. உட்கார்ந்தாலும்…. பொதுவாக ஒருத்தருக்கு ஒரு நிழல் தான் என்றால்…. இந்த தலைவருக்கு மட்டும் நான்கைந்து நிழல்களாக பாதுகாவலர்கள்!!

அவ்வளவு பலத்த காவல் இருந்தும்…. அன்று…. காரைவிட்டு இறங்கி…. கூட்டத்தைப் பார்த்து…… கை கூப்பியவாறு மேடையை நோக்கி அவர் நடந்து கொண்டிருக்கையில்…,. அந்தக் கூட்டத்திலிருந்து….. எங்கிருந்தோ பறந்து வந்து…. அவர் முகத்தில் அப்பியது அந்த ‘அசிங்கம்’…

‘என்னது அது?’ என்று கையில் துடைத்து பார்த்தவர் ‘உவேக்க்க்’ என்று வயிறுமுட்ட தின்ற பிரியாணியை அப்படியே வாந்தி எடுத்தார்.

அதைக்கண்ட கூட்டத்தினர்…. ஆதரவாளர்கள்…’த்ச்சூ….த்ச்சூ’ என்று வருத்தம் காட்டினர்…. எதிர்க்கட்சி மக்களோ ‘ஆஹா…. ஓஹோ!’ என்று கைகொட்டி சிரித்தனர்.

அன்றைய சம்பவம் கேலிக்கூத்தாக தினசரியில் வெளிவர…. கோபமும் வெட்கமும் ஒன்று சேர்ந்து தலைவரை தாக்கியது.

அடுத்த நாள்..

“ஐயா… ஐயா…. இன்னிக்கி பிரச்சாரம் போக..…..” பி.ஏ ஆரம்பிக்க….

“பிரச்சாரம் இல்லை….. மண்ணும் இல்லை…. இவ்வளவு பேர் இருந்து என்னய்யா மயிரு புடுங்கினீங்க?… அதை தடுக்க முடிந்ததா??…. என்னை தலைகுனிய வைத்த அந்த இனத்தையே ஒழித்துக் கட்டணும்….. அப்பத்தான் இனிமே என்னால நிம்மதியா வெளியே வரமுடியும்….. போங்கய்யா….ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க” தலைவர் சீறினார்.

மறுநாளே தலைவர் முன் நான்கு பேரை கொண்டு வந்து நிறுத்தினார் அவருடைய பி.ஏ.

அந்த நால்வரிடமும் ஒரு வித்தியாசம்….. அவர்கள் உடையில்…. அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியில்…..

“யார் இவங்க?” தலைவர் கடுகடுத்தார்.

“நேரிலேயே பாருங்க இவங்க சாமர்த்தியத்தை” என்று கூறிய பி.ஏ அனைவரையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

சின்னச்சின்ன பிளாஸ்டிக் தட்டுகளை வானத்தில் வீசி எறிய…. அவர்களை அந்த நால்வரும் குறி தவறாமல் சைலன்ஸர் பொருத்தப்பட்ட அந்த வினோத துப்பாக்கியால் ‘வ்ஸ்க்க்…ப்ஸ்க்க்’ என சுட்டு வீழ்த்தினர்.

“இயந்திரத் துப்பாக்கியால் கண்மண் தெரியாமல் இஷ்டத்துக்கு சுடலாம்…. ஆனால் இவங்க…. அமைதியாக…. வேண்டியதை மட்டும்…. அந்த இனத்தை…. உங்களை தலைகுனிய வைத்த அந்த எதிரிகளை மட்டும்…. பதட்டம் ஏற்படாமல்…. சுட்டுத் தள்ளுவார்கள்! ….இப்பவே கிளம்புங்க…. நீங்க இன்னும் போக வேண்டிய இடம்…. பிரச்சாரம் செய்ய வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு” பி.ஏ பேச…..

இப்பொழுது அந்த நால்வரும் தலைவர் போக வேண்டிய இடத்திற்கு முதலில் சென்று காவல் காத்தனர்.

ஊர் வந்ததும் பிரச்சார மேடை அருகே (ஏன் வீணாக நடந்து… வம்பில் மாட்ட வேண்டும்!?) காரிலிருந்து இறங்கினார் தலைவர்….

அந்த நால்வரும் இப்போது அவரை சூழ்ந்து கொண்டனர்…. சுற்றும் முற்றும் கூட்டத்தையும் வானத்தையும் பார்த்து காவல் காத்தனர்….

திடீரென்று ஒரு காக்கை எங்கிருந்தோ பறந்து வர…. அதை குறி தவறாமல் நால்வரும் ‘விஷ்க்க்… ப்ஷ்க்க்’ என்று சுட…. அந்த காக்கை உயிர் துறந்து பொத் என்று கீழே விழுந்தது!

அதை பார்த்த தலைவர் “சபாஷ்…. சபாஷ்… ஜோர்….இனி ஒன்று கூட விடாமல்…. அந்த காக்கை இனத்தையே ஒழித்துக் கட்டுங்க!” என்று உற்சாகமாக மெச்சினார்.

கூட்டத்தில் பலர் “அடக் கடவுளே!” என்றனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
(நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை) தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர் (கற்பனை பெயர்). குரங்குகள் அதிகம் வசிக்கும் காட்டுப் பகுதி. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றின் முயற்சியால் ...
மேலும் கதையை படிக்க...
'சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி!.....' சினிமா பாட்டு வரிகள் கேட்கும் போதெல்லாம் முகந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடும். ‘அடி தாங்கும் உள்ளம் இனி இடி தாங்குமா?....இடி போல பிள்ளை வந்தால் அடி தாங்குமா?......ஒரு நாளும் நான் இது போல் அழுதவன் ...
மேலும் கதையை படிக்க...
பால்ராஜ் லிப்ட் வழியாக கீழே இறங்குகையில் கைத்தொலைபேசி ஒலித்தது. ஜப்பானிலிருந்து அவர் முதலாளி தான், "ஹை பால்ராஜ், குட் நியூஸ், உங்களை நான் ப்ராஜெக்ட் டைரக்டராக ப்ரமோஷன் செய்துள்ளேன். அதோடு, நீங்கள் கூடிய சீக்கிரம் இலங்கைக்கு, கொழும்புவுக்கு சென்று நமக்கு கிடைத்துள்ள ...
மேலும் கதையை படிக்க...
50 வயதில் ரவிக்குமாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான்.... ஆனால் என்ன செய்வது?... உலகத்தில் நாகரீகம் வெகுவாகத்தான் மாறிப் போயிருந்தது. வாலிபத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் மருந்து ஒன்றை இந்தியாவில் ஒரு சித்த வைத்தியர் கண்டுபிடிக்க…. அம்மருந்து உடனேயே ...
மேலும் கதையை படிக்க...
மதிய சாப்பாட்டிற்கு பின் வெற்றிலை பாக்கை வாயில் மென்றவாறு வாசலில் வந்தமர்ந்த சுந்தரேசன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டார். பின்பு வீட்டிற்குள் இருந்த சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அருகில் வந்து நின்ற மனைவி திலகவதியிடம் "என்ன இன்னும் நம்ம ஜோசியரை காணலியே?" ...
மேலும் கதையை படிக்க...
(நகர நரக வாழ்க்கையில் நகர்வது கடினமே!..) திருமணமான புதிதிலேயே சுரேஷ் தன் மனைவி கலாவை கவனித்தான்... காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றுக்கு அவள் அருந்துவது காப்பி தானா? அல்லது ஒரு 1% காப்பியோடு 99% சர்க்கரை தண்ணீரா??... காப்பியில் அவ்வளவு சர்க்கரை கலந்து ...
மேலும் கதையை படிக்க...
இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கப் போகிற சந்தோஷமும் இல்லை. மனம் நிறைய கவலையே நிறைந்து இருந்தது. அவசரப் பயணம் ...
மேலும் கதையை படிக்க...
‘காலங்கள் மாறும்……கோலங்கள் மாறும்.. ஆனால் இந்த சென்னையின் குப்பை கூளம் மாறாதா?’ சிங்கப்பூரில் இருந்து, பல வருடங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்ற வாசுதேவனுக்கு முதலில் தோன்றியது இதுதான். ஆனால் பிறகு தான் தெரிந்தது…. சில மனிதர்களும் மாறவில்லை என்று….. சுமதியும் மாறியிருக்கவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
திரு.பாலா ஹாலில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். இயற்கையான காற்று,… நல்ல தூக்கம். சுமார் பன்னிரண்டு மணியளவில், அவரது மகன் சிவா வீட்டிற்குள் நுழைந்து, நேராக தனது அறைக்கு நடந்து சென்று கதவை மூடினான்… .இந்த வீடு நீண்ட ...
மேலும் கதையை படிக்க...
'அந்த மாலைப் பொழுதில், என்னோமோ கொஞ்சம் எகிறிப் பாய்ந்தால் அந்த சூரியனை தொட்டுவிடலாம் என்பது போல்... மண் சாலையின் மறுகோடியில் சூரியன் ஆரஞ்சுப் பழ வடிவில் பிரகாசமாக தெரிந்தபோது, கணேஷ் தன் சைக்கிளை முழுப்பலம் கொண்டு மிதித்தான் ....மிதிக்க மிதிக்க சைக்கிள் ...
மேலும் கதையை படிக்க...
கொரோனாபோய்…கொ(கு)ரங்குவந்த கதை!
உள்ளுக்குள் உள் உள்ளேன்!
என் உயிர் நீ தானே!
நடக்காதென்பார்… நடந்துவிடும்!
விதியோ விதி!
மனிதா!…மனிதா!!
கணக்கர் கடவுள்!
முதலா?…முடிவா?…
நம் வீடு..நம் நாடு..நம் பூமி!
எதிர்விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)