அந்தோனியாரின் ஆசீர்வாதம்

 

என் பெயர் கந்தசாமி .என் அப்பா பெயர் சுப்பிரமணியம் என் அப்பப்பா பெயர் வேலாயுதம் அப்பப்பாவின் அப்பா பெயர் கந்தர். இந்தப் பெயர்களைக் கேட்டவுடனே என் பூர்வீகம் இந்துமதத்தைச் சேர்ந்தது என்று உங்களுக்குப் புரியும். என் அப்பப்பா, போர்துகேயரின் கத்தோலிக்க மதமாற்றத்தில் இருந்து எப்படித் தப்பினர் என்று இனி என்னைக் கேட்க வேண்டாம். என் அப்பாவின் அப்பா கந்தர் உயிரோடு இருந்தால் அந்த கதையைச் சொல்லுவார் அவரின் பிறப்பிடம் அனலை தீவு கந்தரின் பாட்டனார் ராமேஸ்வரத்திலிருந்து அனலைதீவுக்கு வந்தவர் என்று என் அப்பா சொல்லுவார் அத் தீவில் போர்த்துகேயர தம் கை வரிசையைக் காட்ட முடியவில்லை என்பது உங்களுக்குப் புரியும். என் அப்பாவும் அப்பப்பாவும் படித்தது யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில். நான் அதக்கு விதி விலக்கு. நான் சிறு வயதில் குழப்படி என்ற படியால் கட்டுப்பாடு உள்ள யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் (St Patricks College) என் அப்பா சேர்த்தார் .அது உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம் . அந்த கல்லூரியில் படித்த இந்து மாணவர்களை விரல் விட்டு எண்ணலாம் . அதில் நானும் ஒருவன் என்றால் உங்களுக்குப் புரியும். அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா என்ற பிரபல எழுத்தாளர் எனது ஆங்கில ஆசிரியராக இருந்தவர் அந்த காலத்தில் 1936 முதல் 1954 வரை ப்ரின்சிப்பல் ரெக்டராக (Rector) இருந்தவர் லோங் என்ற பாதிரியார்

என் பூர்வீக வீடு யாழ்ப்பாணம் பறங்கித் தெருவுக்கு அருகில் உள்ள ஆறாம் குறுக்குத் தெருவில் இருந்தது . கல்லூரிக்கு நடந்து போகும் தூரத்தில் எங்கள் வீடு இருந்ததால் அதுவும் நான் ஒரு கத்தோலிக் கல்லூரியில் படிக்கக் காரணமாக இருந்தது

நான் படித்து பட்டம் பெற்று அரசில் நல்ல உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு வியாழனும் சிறிய ரொட்டி வகையான பன்கள் ஏழைகளுக்கு கொடுத்து அதன் பின் அந்தோனியாராய் வணங்கி வருவது என் வழக்கம் . கேட்டதை அந்தோனியார் தருவார் என்ற எனக்கு ஒரு நம்பிக்கை. என்னை கொட்டாஞ்சேனையில் இருந்து என்னை தேவாலயத்துக்கு அழைத்து செல்வது த்ரீ வீலர் வைத்திருக்கும் என் வீட்டுக்கு அருகில் உள்ள பண்டார என்பவன் . அவன் பௌத்தன் ஆனாலும் என்னோடு அந்தோனியார் தேவாலயத்து வந்து வணங்குவான் காரணம் கேட்டால் அப்படி வணங்கிச் சென்றால் தனக்கு நல்ல சவாரி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு, சில சமயம் என் வீட்டுக்கு அருகில் வாழும் கத்தோலிக்கரான எமானுவேல் என்பவரும் என்னோடு தேவாலயத்துக்கு வருவதுண்டு

அன்று ஈஸ்டர் தினம் அன்று கொச்சிக்கடை அந்தோனியாரா தேவாலயத்துக்குச் சென்று காலை நடக்க இருக்கும் பூசையில் பங்கு கொள்ள எம்மானுவேல் திட்டம் போட்டிருந்தார் . என்னையும், வரும்படி கேட்டார். நான் மறுக்கவில்லை . அன்று பகல் போசனம் எம்மானுவேல் வீட்டில் . பண்டாரவின் த்ரீ வீலரில் தேவாலயத்துக்குப் பயணமானோம் சுமார் மூன்று கி மீ தூரப் பயணம் . த்ரீ வீலரில் போகும் பொது ஈஸ்டர் திருநாளின் தத்துவத்தை எம்மானுவேலிடம் கேட்டேன்.

“சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நாள் `பாஸ்கா பண்டிகை’ (Pascha) எனப்படும் `ஈஸ்டர் திருநாள்’.
ஈஸ்டர் பெருநாளில் நம்மிடம் நல்ல சிந்தனைகள் உள்ள உயிர்ப்பு உணர்வுகள் புலப்பட வேண்டும்,. தனிமனித வாழ்வில், சமூக வாழ்வில் மனித நேயம் உயிர்பெற வேண்டும். மற்றைய உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்க கூடாது “

“ அப்போ ஈஸ்டர் முட்டையின் தத்துவம் என்ன “

“ முட்டையிலிருந்து உயிர் உருவாகிறது . அதே போல் புது நல்ல சிந்தனைகள் தோன்ற வேண்டும் என்பதைச் சொல்கிறது .

`ஈஸ்டர் திருவிழா’ என்றவுடன் `ஈஸ்டர் முட்டை’ நமக்கு நினைவுக்கு வரும்.இன்று என் வீட்டில் ஈஸ்டர் முட்டை நிட்சயம் பகல் போசனத்துக்கு இருக்கும்” என்றார் எம்மானுவேல்.
சிறிது தூரம் சென்ற பின், கிரிஸ்டி பெரேரா. – சங்கமித்த வீதி சந்திக்கு அருகே பண்டாரவின் த்ரீ வீலரின் இடக்கு கொடுக்க துவங்கி மேலும் போகமுடியாமல் நின்றது த்ரீ வீலரை பாதை ஓரத்தில் நிறுத்தி விட்டு என்ன பிரச்சனை என்று பண்டார பழுது பார்க்கத் தொடங்கினான்

“பண்டார ரிப்பேர் செய்ய அதிக நேரம் எடுக்குமா ”? நான் பண்டாரவை கேட்டேன் .

“எவ்வளவு நேரம் திருத்த எடுக்கும் என்று சொல்ல முடியாது ஐயா. பூஜைக்கு நேரமாகிறது என்றால் இன்னொரு த்ரீ வீலரில் நீங்கள் இருவரும் செல்ல ஒழுங்கு செய்யவா” ?பண்டார கேட்டான்

நான் எம்மானுவலைப் பார்த்தேன்.

“யேசுவுக்கு எங்கள் ஆராதனை தேவை என்றால் நிட்சயம் பூஜை நேரத்துக்கு முன் போய்ச் சேர வழி கிடைக்கும் “ என்றார்; எம்மானுவேல் .

நான் பண்டார விடம்” பண்டார நீ த்ரீ வீலரைத் திருத்தி முடிக்கும் மட்டும் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்” என்றேன்

நான் பண்டாரவுக்கு சொல்லி வாய் மூட முன் அந்த நேரம் ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது

”என்ன பண்டார கிட்டடியில் குண்டு வெடித்த சத்தம் போல் கேட்டதே எங்கே இருந்து அந்த சத்தம் வந்தது ”?எம்மானுவேல் பதட்டத்தோடு கேட்டார்

“எனக்கும் அந்த சத்தம் கேட்டது . என்னவாய் இருக்கும்”? நான் சொன்னேன்

பண்டார அந்தோனியார் தேவாலயம் இருந்த திசையைக காட்டி : : யாரோ அந்தோனியார் தேவாலயத்துக்குக் குண்டு வைத்து இருக்கிறார்கள் போல தெரியுது . குண்டு வெடித்துப் புகை வருகிறதைப் பாருங்கள் சனங்கள் பதறி ஓட்டுவதையும் பாருங்கள் “

“என் ஏசு எங்களை ஆசீர்வதித்து வீட்டார் நல்ல காலம் நாங்கள் பூஜை நேரத்துக்கு த்ரீ வீலர் பழுதாகாமல் போய் இருந்தால் நாங்களும் பலியாகி இருப்போம்” என்றார் தன் நெஞ்சில் எம்மானுவெல் சிலுவைக் குறி போட்டபடி

(யாவும் உண்மை கலந்த புனைவு) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது ...
மேலும் கதையை படிக்க...
பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள். கிறனி (Granny) என்ற ஆங்கில வார்த்தை பாட்டியைக் குறிக்கும் அவளுக்கும் அது பிடிக்கும். நான் ஆரம்பத்தில் கொழும்பில் அவள் இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் ...
மேலும் கதையை படிக்க...
இறைவனால் படைத்த மனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் விலை மதிக்க முடியாதது. கனடா ஒன்றரியோ மாகாணத்தில் மிசிசாகா நகரில் வாழும் ஜோன் தம்பதிகளுக்கு ஒரே மகன் பீட்டர் . ஜோன் ப்ளூ ஜெய்ஸ் (Blue Jays) பேஸ் பந்து விளையாட்டு அணியில் ...
மேலும் கதையை படிக்க...
யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன் பின் ஓய்வு பெற்று சொந்தத்தில் தனது ஊரில் ஒரு கிளினிக் நடத்தியவர் டாக்டர் சுப்பிரமணிம். அவர் மகன் டாக்டர் ராஜா ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராதது
கிறனி (Granny) கண்மணி
சதிராட்டக்காரி சந்திரவதனி
உறுப்புத் தானம்
புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)