அத்தி வரதா! வரம் தா!

 

அப்போ வருடம் 2019ன்னு நினைக்கின்றேன், இப்போ இருக்கிறது போல ஊரு அமைதியாக இல்லே, பட்டித் தொட்டியெல்லாம் இதே பேச்சு,

பட்டித்தொட்டினா?

ஊரெல்லாம் இதே பேச்சுதான்.

அப்போ நான் எங்கே இருந்தேன்?

நீ சாமிகிட்டே இருந்து இருப்பாய். என தன் பத்து வயது பெயரன் பரத்திடம் கூறிக்கொண்டு இருந்தார் எழுபது வயது பாட்டி
அஞ்சலையம்மாள்.

நீங்கள் போய் பார்த்திங்களா? என கேட்டான்.

நான் போயிருந்தேன், ஆனா பார்க்க முடியலை.

ஏன் பாட்டி? என்றான் ஆர்வமாக.

அந்த சமயத்தில் நானும் உன் தாத்தாவும் மயிலாடுதுறை நகராட்சியிலேதான் துப்புரவு பணியாளாராக வேலைப் பார்த்தோம்.

உங்க ஆபீஸ் எங்க இருந்தது?

மயிலாடுதுறை – சீர்காழி ரோட்டிலே இப்போது ஒரு ஃப்ளைஓவர் இருக்கில்லே அது நடுவிலே கால்டாக்ஸ்னு ஒரு ஸ்டாப் இருக்கு, அதற்கு கீழே இருந்தது நகர துப்புரவாளர்களுக்கான ஆபீஸ்.

துப்புரவுன்னா? என்றான்.

அதான்டா செல்லம், தெருவெல்லாம் கூட்டறது, ஊரையே தூய்மையா வச்சுக்கிறதுதான் எங்கள் வேலை.

அதான் நிறைய ரோபோக்கள் இருக்கே! பாட்டி.

அது இப்பத்தானே வந்தது. அப்போவெல்லாம் கையாலேயே அள்ளிக்கிட்டு கிடந்தோம்.

ஒவ்வொரு நகராட்சியிலிருந்தும் முப்பது நபர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பினாங்க, நான் அப்போ உங்க அப்பாவை என் வயிற்றிலே சுமந்துகிட்டு இருந்தேன், உன் தாத்தாவும் இல்லாம தனியாக இருக்க பயமா இருந்திச்சா, அதனாலே அது கூடவே நானும் கிளம்பி போனேன்.

நீ அங்கே போன பின்பும் சாமியை பார்க்கலையா?

நாங்க போனது சுத்தம் பண்ற வேலைக்குத்தானே, நேரம் அதிலேயே போயிடுச்சு,ஒரு நாளைக்கு சுமார் ஆறு லட்சம் பேரு பார்க்க வந்தார்கள்.

அப்போதைய மந்திரிங்க, அரசியல்வாதிகள்,நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா
மற்றும் பல திரை நட்சத்திரங்கள் எல்லாம் வந்து காஞ்சிபுரமே பரபரப்பாக இருந்தது.

ரஜினிகாந்த், நயன்தாரா.. யாரு பாட்டி அவங்க?.

நீங்களாவது யார்னு கேட்கிறீங்களே!அதுவே பெரிய சந்தோஷமா இருக்குய்யா.

அப்புறம்..?

பாதுகாப்பு,தூய்மைப்பணிகள் செய்த எல்லாரும் கடைசி நாள் போய் தரிசனம் பண்ணலாம்னு சொன்னாங்க.

வாவ்!! போனீங்களா? என்றான் ஆர்வமாக..

எங்கே? மீதம் இரண்டு நாள் இருக்கையிலே உங்க அப்பா பிறந்திட்டாரு..அதனால பார்க்க முடியாம போயி, நாங்களும் ஊருக்கு திரும்ப வந்து விட்டோம்.

இப்பத்தான்,மெட்ரோ,புல்லட் ரயில், விமானம் எல்லாம் நம்ம ஊருக்கே வந்திடுச்சு, போய் ஒரு எட்டு பார்த்திட்டு வரவேண்டியதுதான் என்றாள் பாட்டி.

நாற்பத்தி எட்டு நாட்களுக்கு அனந்த சயனகோலத்திலும், நின்ற கோலத்திலுமாய் அத்திவரதர் பக்தர்களின் வழிபாட்டிற்காக
அனந்தஸரஸ் குளத்திலிருந்து வெளிவந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கிறார் என்றும்,

பக்தர்களின் வசதிக்காக அரசு பல ஏற்பாடுகளை தீவிர படுத்தியுள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு ஆட்சியராக திரு.அத்திவரதர் இந்திய ஆட்சிப்பணி அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்று போட்டோவுடன் தொலைக்காட்சியில் காண்பித்தவுடன்,
அய் அப்பா! என துள்ளிக் குதித்து தன் மகிழ்வை வெளிப்படுத்திய பரத்,

ஏன் பாட்டி? நம்ம ஊருக்கு கலெக்டரா அப்பா வரமாட்டாரா?

மாவட்டமா மாறினா வருவாருப்பா?

எப்ப பாட்டி மயிலாடுதுறை மாவட்டமாகும்?

தெரியலையேப்பா… என கையை விரித்தாள்.

குறிப்பு 18.08.2019

எட்டு வருட கோரிக்கையான மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை நிறைவேற ஒரு வருடம் காத்து இருக்குமாறு அமைசர் ஒ ஸ் மணியின் அறிவித்த வேளையில் எழுதியது . 

தொடர்புடைய சிறுகதைகள்
மாவட்ட நீதிமன்றம், காலை நேர பரபரப்பு,புதிய நீதிபதி திரு. ராமன், பதவியேற்று இன்று முதல் அமர்கிறார், வழக்கத்திற்கு மாறாக போலிஸ் பாதுகாப்பு,குழு குழு வாக வழக்கறிஞர்கள்,பல தாலுக்கா மாஜிஸ்ட்ரேட்கள்,முன்சீப்கள், வாழ்த்துச்சொல்ல கூடியிருந்தனர். நீதிபதி அவர்களின் சொந்த மாவட்டம் இது,இங்கேதான் பள்ளி ,மற்றும் இளங்கலை படிப்பை ...
மேலும் கதையை படிக்க...
அருண்! நிறைய இடம் பார்த்தாச்சு, நீயும் அதை இதை சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டே இருக்கே, நாங்களும் உனக்கு பெண் தேடி அலுத்திட்டோம். இன்றைக்கு பார்க்கப் போகிற இடத்திலாவது உனக்கு ஏற்றவளா அமையனும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. நான் சொல்கிறதை கேளு, கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
ஆச்சி நீ எங்கப் போக? என பேருந்து நடத்துனர் கேட்டார். நான் யன் போராண்டிய பாக்கப்போறேன்! நீ பேராண்டிய பாக்கத்தான் எங்கப்போறேன்னு கேக்கேன். என்றார் சிரித்தபடி.. பேராண்டிய பாக்க எங்கப்போவாக? மவன் வீட்டுக்குத்தான், கேக்கான் பாரு கோட்டியாட்டம்! எனத் திட்டினாள் . எங்கே ஏறினாவோ? எட்டாங்குளத்திலே என்றாள். எங்க இறங்கனும்? மானூர்லே! ...
மேலும் கதையை படிக்க...
வாசுகி கல்யாண மண்டபம்... அன்றைய கல்யாணப் பரபரப்பில்.. காலை நேரம். சமையல் கலைஞர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருக்க, அறுபது வயது மதிக்க தக்க ஒருவர் சாம்பார் கொதிக்கும் இடத்தில் வேலைசெய்து கொண்டு இருக்கிறார்.. அங்கே சாம்பார் மட்டும் கொதிக்கவில்லை. அவரது மனமும்.. விசும்பி விசும்பி ...
மேலும் கதையை படிக்க...
60 வயசு ஆச்சு, உங்களுக்கும், இன்னும் ஒழுங்கா சாப்பிடக் கூட தெரியலை, கீழே சிந்தாம சாப்பிடக் கூடாதா? என்னமோ? உங்க வளர்ப்பே சரியில்லை என முகம் இழுத்தாள், சீதா. நீயும் புலம்பின்டே இரு, சிந்தினா என்ன? சுத்தம் பண்ணினாப் போச்சு, எனக்கும் கை ...
மேலும் கதையை படிக்க...
ஒளஷதலாயம்
மாமனாரைப் பிடிக்கல…
எதிர் பார்த்த அன்பு
அத்தைக்கு கல்யாணம்
பிரியா வரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)