“அது” க்காக தான்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 13,252 
 

ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங் பீல்டில் இருக்கும் பொழுதே நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு, கூலிப் பிரச்சனையால் நான் வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். அதன் பிறகு எப்போதாவது ஒரு முறை ட்ராபிக்கில் சிந்திப்போம் ஒரு தலையசைவோடு சந்திப்பு முடிந்துவிடும். அவள் நீண்ட நாட்களாய் என் கண்ணுக்குள்ளேயே இருந்ததால் மீண்டும் நட்பு வைத்துக் கொள்ள அவள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நானும் வேலைக்கு சேர்ந்தேன்.

வேலைக்கு சேர்ந்த சில நாட்கள் அவளிடம் அதிகம் பேசாமல் அவளுடைய மாற்றங்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் அழகு கூடியிருந்தது. முன்பெல்லாம் சுடிதார் மட்டுமே அணிபவள் இப்போதெல்லாம் புடவை மட்டுமே கட்டி வருகிறாள். அதுவும் அவள் புடவை கட்டி இருக்கும் ‘முறை’ பார்ப்பவர்களை நிச்சயம் கிறங்கடிக்கும். அவள் “ஒரு மாதிரி” என்று கூட வேலை செய்யும் சக தோழர்கள் கூறினார்கள். அந்த “மாதிரி” என்பதன் அர்த்தம் எனக்கு முழுவதும் புரிந்தது. முன்பெல்லாம் அவள் அப்படி இல்லையே.! எதனால் இப்படி மாறினால் என்பதை அறிய அவளிடம் நெருங்கி பழக ஆரம்பித்தேன். சத்தியமாக அவளை அறிந்துக் கொள்வதற்காகத் தான் பழகினேன்.

இரவில் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவது, டீ ப்ரெக்ல பஜ்ஜி வாங்கி தருவது, மத்தியானம் லஞ்ச் வாங்கிதரதுன்னு அவளுக்கு ஒத்தாசையாக இருந்தேன். எல்லோரும் நான் அவளை அணைக்க துடிப்பதாகவும், தினமும் அவளோடு இரவை களிப்பதாகவும் கருதினார்கள். அவ்வளவு ஏன் அவள் கூட அப்படிதான் நினைத்திருக்கிறாள். நான் “அது” க்காக தான் அவளிடம் ஆவலுடன் பழகுகிறேன் என்று.

அன்று ஆயுத பூஜை எல்லோரும் அவரவர் மிஷினை சுத்தம் செய்துவிட்டு பூஜைக்காக தயாராக இருந்தோம். அவள் வருவதற்கு தாமதமானதால் அவளுடைய மிசினையும் நானே சுத்தம் செய்து வைத்தேன். எல்லோரும் என்னை மேலும் கீழுமாக பார்த்து நகைத்துக் கொண்டார்கள். ஒருவர் என்னை புகழ ஆரம்பித்துவிட்டார். இந்த வயசுல இதெல்லாம் சகஜம் தான் சும்மா ஜமாய்… அப்பிடியே அண்ணனையும் நியாபகத்துல வெச்சுக்கோ..? மறந்துடாதே..!எதற்காக அவர் என்னிடம் இப்படி கூறினார் என அப்போது புரியவில்லை. அன்று அவள் பட்டுபுடவை உடுத்தி வந்திருந்தாள். தாமதமாக வந்ததற்கு காரணம் அப்போது தான் எனக்கு புரிந்தது அவளை பார்ப்பதற்கு தேவதைகளின் இளவரசி போல் காட்சியளித்தாள். பூஜை முடிந்தவுடன் எல்லோரும் படத்திற்கு போகலாம் என பேசிக் கொண்டிருந்தார்கள். அவள், தான் வரவில்லை என கூறிக் கொண்டிருந்தாள். என் தோழர்கள் அவளை சம்மதிக்க வைத்து எப்படியாவது படத்திற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென திட்டமிட்டு கொண்டிருந்தார்கள். இது தான் சமயம்; அவள் வேறு “மாதிரி” ஆனதற்கான காரணத்தை இன்று கேட்டுவிடலாம் என முடிவு செய்து அவர்களுக்கு முன் நான் முந்திக்கொண்டேன். அவளிடம் நேரடியாக இன்னைக்கு படத்துக்கு போலாமா என கேட்டு விட்டேன். முதலில் தயங்கி பிறகு சரி என ஒப்புக்கொண்டாள். சத்தியமாக அவளை பற்றி தெரிந்து கொள்வதற்காக தான் படத்திற்கு அழைத்து சென்றேன்.

ஈரோட்டிலுள்ள பிரதான தியேட்டரில் மெரீனா திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. பால்கனி டிக்கெட் வாங்குவதற்காக டிக்கெட் கவுன்டரில் நின்று கொண்டிருந்தோம். அடிக்கடி என்னை பார்த்து சிரித்துக் கொண்டாள். எதோ கேட்க வேண்டும் என்பதை போல் என்னை பார்த்தாள். அவளிடம் நானே கேட்டேன்.

திவ்யா உன்கிட்ட ஒன்னு கேட்கணும். என்ன? என்பது போல் புருவத்தை உயர்த்தி பார்த்தாள்.
நீ முன்பு மாதிரி இல்ல, உன் பேச்சுல, நடைவடிக்கையில நிறைய மாற்றம் இருக்கு. அது ஏன்? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. ஆனா, உன் கழுத்துல தாலி இல்ல. உன் புருஷன் உன்ன விட்டு ஓடிட்டான்னும் பேசிக்குறாங்க. உன் வாழ்க்கையில என்ன தான் நடந்துச்சு சொல்லு. இரண்டு நிமிடங்கள் மௌனமாக இருந்தாள்.

உனக்கு புடிக்கலேன்னா சொல்ல வேணாம். நான்,

அப்படியெல்லாம் இல்லடா, ஏன் கல்யாணத்தை நினைச்சாலே அருவருப்பா இருக்கு. என் அப்பாதான் எனக்கு மாப்பிளை பார்த்தார். அவனும் ஒரு டைலர் தான் திருப்பூர்ல வேலை செஞ்சுட்டு இருக்கான். ஒரு நாளைக்கு ஐநூறு ருபாய் சம்பாதிக்குறான். எந்த கேட்ட பழக்கமும் இல்ல. பையனுக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான் அவங்களுக்கும் ஆஸ்துமா ப்ராப்ளம் இருக்கறதால அவங்களால வேலைக்கெல்லாம் போக முடியல பையனோட சம்பாதியத்துல தான் குடும்பமே நடக்குது. அவனுக்கு ஒரு தங்கச்சி மட்டும் தான். B.S.C செகண்ட் இயர் படிக்கிறா. பையனுக்கு கல்யாணம் முடிஞ்சவுடனே பெண்ணுக்கும் ஒரு நல்ல பையனா பார்த்து சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெச்சுருவாங்க. அதுக்கப்புறம் அந்த குடும்பத்தை நீதான் கவனிசுகனும். இந்த மாதிரி நல்ல பையன் நூத்துக்கு ஒரு பொண்ணுக்கு தான் அமையும் நீ அவன கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சுருக்கணும். அது,இது-அப்பிடி, இப்பிடின்னு அளந்து விட்டாங்க. நானும் நம்புனேன்.

கவுண்டர் திறந்து கூட்டம் நகர்ந்தது. டிக்கெட்டை வாங்கிகொண்டு பால்கனிக்குள் ஓரத்தில் உள்ள சீட்டில் அமர்ந்தோம். அவளது மல்லிகையின் மனம் உடலுக்குள் புகுந்து எதோ செய்தது. படம் ஆரம்பித்தது. அந்த பேரிரைச்சலிலும் எங்களுடைய சங்கீதம் ஒலித்துக்கொண்டிருந்தது.
ம்ம்ம்…அப்புறம் என்னாச்சு சொல்லு, மீண்டும் நான்.

நிச்சியதார்த்தம் முடிந்ததும் அடுத்தவாரமே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. நானும் புருஷன் வீட்டுக்கு வாழ தான் போனேன். ஆனால், அங்க நடந்ததே வேற. அவன் கூட பொறந்தவளையே வெச்சிருந்தான் . அங்க போன ஒருவாரம் எனக்கு எதுவும் தெரியல. எப்பவும் போல சராசரி அண்ணன், தங்கச்சி தான்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ரெண்டு பெரும் சோபாவுல உட்காரும் பொது ஒட்டிகிட்டு தான் உட்காருவாங்க. அவ எங்க போனாலும் இவன் தான் கூட்டிட்டு போவான். அவ தோளை புடிக்காம இடுப்ப தான் புடிச்சுட்டு தான் உக்கார்ந்துட்டு போவா.

கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரமா வீட்டுக்குள்ளயே இருந்ததால எதோ ஒரு மாதிரி இருந்தது. ஒரு செஞ்சாக இருக்கட்டுமேன்னு ஏதாவது படத்துக்கு போலாமான்னு அவன்கிட்ட கேட்டேன். எனக்கு தலைவலிக்குது நான் வரல நீயும் அம்மாவும் போயிட்டு வாங்கன்னு சொன்னான். அவளும் காலேஜ் போயிருந்தாள். சரின்னு நானும் மாமியாரும் படத்துக்கு போனோம். படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தோம். என் புருஷன் கட்டில்ல படுத்துருந்தான். அவன் இடுப்பு மேல இவ உக்காந்துக்கிட்டு இருந்தா. என் மாமியார் பாத்துட்டு பாக்காதது மாதிரி சமையல் ரூமுக்குள்ள புகுந்துகிச்சு. அவனும் அவளும் எனக்கு தெரிஞ்சுருச்சென்னு கூட பதட்டம் ஆகாம ரொம்ப அலட்சியமா இருந்தாங்க. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. அவளை மசுர புடிச்சு இழுத்து கீழ தள்ளினேன். வாசலுக்கு போயி செருப்ப எடுத்துட்டு வந்து அவனையும் அடிச்சேன். அப்புறம், என்னை இழுத்து ரூமுக்குள்ள போட்டு அடைக்க பார்த்தான். நான் கைய உதறிவிட்டு நேரா ஈரோட்டுக்கு பஸ் ஏறிட்டேன்.
மறுபடியும் என்னை கூட்டிட்டு போக ஈரோட்டுக்கு வந்தான். எங்கப்பாவுக்கும் அவனுக்கும் பெரிய சண்டையே வந்துருச்சு. அப்புறம் விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். இவன் நம்மள விவாகரத்து பண்ணிட்டு வேற ஒருத்தி வாழ்க்கையை கெடுத்துருவான்னு விவாகரத்து குடுக்க மாட்டேன். அப்படின்னா, என் கூட வந்து வாழுன்னான். அதுவும் முடியாதுன்னு அடம் புடிச்சேன். அப்புறம், அப்பாவும் அம்மாவும் அந்த தருதல எப்பிடி போனா நமக்கு என்ன? அவன விவாகரத்து பண்ணிட்டு உனக்குன்னு வாழ்கையை தேடிக்கொன்னு சொன்னாங்க. சரி இனி இந்த சனியன இனிமேல் பார்க்கவே கூடாதுன்னு விவாகரத்து பண்ணிட்டேன்.

ஆனால், அவனை விவாகரத்து பண்ணது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது. அவன் என்னவேணாலும் பண்ணிட்டு போகட்டும்னு நான் அவன்கூடவே இருந்துருந்தா இப்படி எல்லோரும் என்கிட்டே வித்தியாசமா நடந்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். குரலில் எதோ வாட்டம் தெரிந்தது.

ஏன் திவ்யா என்ன ஆச்சு?

நம்ம கம்பெனியில் என்னை தப்பா பாக்காத ஆளுங்களே இல்ல. முதலாளி தொழிலாளி வித்தியாசம் இல்லாம எல்லோரும் ஒரே மாதிரி தான் பாக்குறீங்க. இவள எப்புடி மடகுறதுன்னு..? நீயும் அதுக்காக தானே என்னை படத்துக்கு கூப்பிட்டு வந்தே?

இடைவேளைக்கான மணி அடித்தது. முற்றத்தில் மின்விளக்குகளின் ஒளி பரப்பியது. நான் கேண்டீனுக்கு சென்று குச்சி கிழங்கு சிப்ஸும் இரண்டு பப்ஸும் வாங்கிவந்தேன்.

சிப்ஸை படம் ஓடும் பொது தின்னுக்கலாம் இப்ப பப்ஸை சாப்பிடலாம், என்றேன். பப்ஸ் சாப்பிட்டால் தண்ணி தாகம் எடுக்கும் தண்ணி வேண்டும் என்றாள். மீண்டும் சென்று இரண்டு பாட்டில் குளிர்பானமும் ஒரு தண்ணி பாட்டிலும் வாங்கி வந்தேன். சரி, இப்ப சொல்லு எதுக்காக நீ என்னை படத்துக்கு கூட்டிட்டு வந்தே என வினவினாள்.

உன்கிட்ட நிறைய பேசணும் தோனுச்சு அதான் கூட்டிட்டு வந்தேன், நான்.

நிஜமாலுமே இதுக்குதான் கூட்டிட்டு வந்தியா, திவ்யா.

ஆம் என்ற முறையில் தலையசைத்தேன். என் தோளோடு ஒட்டி அமர்ந்தாள். இதுவரை எந்த பெண்ணும் என்னை இந்த அளவு நெருங்கியதில்லை. என் நடு வயிற்றில் எதோ செய்தது. அவளது கையை என் கையோடு இணைத்துக்கொண்டேன். மீண்டும் மணி ஒலித்தது. மின்விளக்குகளின் ஒளி மறைந்தது. இடைவேளை முடிந்து படம் ஓடத் துவங்கியது. அந்த பேரிரைச்சலில் எங்களிடம் மிஞ்சியது மௌனமும் மூச்சுக் காற்றும் தான்.

அந்த இருள் சூழ்ந்த பகுதியில் மீண்டும் என்னை பார்த்துக் கேட்டாள் நிஜமாவே பேசணும்னு மட்டும் தான் கூப்பிட்டு வந்தியா?

இல்லை.! என்றேன்.

என் தோளில் சாய்ந்து கொண்டாள். அந்த இருட்டில் அவள் முக மாற்றத்தை பார்க்க முடியவில்லை. அவளின் அக மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. அவள் தோளில் என் கையை போட்டேன். தலை நிமிர்ந்தாள். உதட்டோடு உதடு ஒரு முத்தம் பதித்தேன். பின் மார்பில் முகம் புதைத்தேன். இப்படியான நிலையில் படம் முடிந்தது எல்லோரும் எங்களை பார்த்துக்கொண்டே வெளியேறினார்கள். அவள் என்னையும், நான் அவளையும் மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தோம். எல்லோரும் சென்ற பிறகு என் புதியவளோடு கைகளை கோர்த்துக் கொண்டு வெளியேறினேன்.

– 25 ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

1 thought on ““அது” க்காக தான்

  1. கணவரை விட்டு பிரிந்து வாழும் பெண்களை இந்த சமூகம் இப்படி தான் பார்க்கிறது. இந்த நிலை என்று மாறுமோ???

    Good story anyway.
    Selvamuthu
    Bangalore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *