தரண் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மூன்று தாதா படங்களும் சில்வர் ஜூப்ளி கொண்டாடின.
இதோ, இன்று தனது அடுத்த படமான ‘அசல் தாதா’ பற்றி அறிவிக்கப் போகிறான்…
நிருபர்கள் கூட்டத்தில் தரண் சொன்னான்:
”இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டெல்லியில் மிகப் பெரிய மனிதர். அவருடைய மகன்தான் இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
நான் கதாநாயகனின் அடியாட்களில் ஒருவனாக நடிக்கிறேன்…புதுக் கதாநாயகன் நிச்சயம் நம்பர் ஒன் நடிகரா வருவார்!….
அவ்வளவுதான், ரசிகர்கள் கொதித்தார்கள். ‘என்ன இது அக்கிரமம்? எவனோ ஒரு புதுமுகம் கதாநாயகனாக நடிக்க நம்ம தலைவர் கேவலம் ஒரு அடியாளாக நடிப்பதா?
வீட்டில் தரணின் மனைவியும் கடாசினாள்: ”உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? நம்பர் ஒன் ஹீரோவான நீங்க எவனோ ஒரு சுண்டைக்காய் பையன் ஹீரோவா நடிக்கிற படத்தில அவனோட அடியாளாவா நடிக்கணும்?’
”உஷ்!” என அவளை அடக்கினான் தரண். ”அசல் தாதா படத்தோட தயாரிப்பாளர் யார்னு தெரியாமப் பேசாதே…தீர்த்துப்புடுவார் தீர்த்து! டெல்லியில் ஐநூறு அடியாள்களை வைச்சு ஒரு பயங்கர சாம்ராஜ்யத்தையே நடத்திக்கிட்டிருக்கிற ‘ஒரிஜினல் தாதா’ அவர்!
- சுபமி (மார்ச் 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா குஞ்சு பொறித்துவிடுமா? அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நான் வந்து சேர்ந்து இரண்டாவது முறையாக அது முட்டை இட்டு, வீணடித்துவிட்டது. ...
மேலும் கதையை படிக்க...
பொழுது லேசாய் மிக லேசாய் விடிந்து கொண்டிருந்தது. பால்காரர் சிகப்பு முண்டாசுடன் மணி அடித்துக் கொண்டு போனார். காக்கைகள் குரல் கொடுத்துக் கொண்டே தத்தித் தத்தி தாழ்வாகப் பறந்தன. குழாயடியில் பிளாஸ்டிக் குடங்கள் வரிசை பிடித்திருந்தன. தண்ணீர் பிடிக்க "நான் முந்தி ...
மேலும் கதையை படிக்க...
மார்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வேகமாய் போய்க் கொண்டிருந்தான் விமல்.
வழியில் குழித்துறை ஸ்டாப்பில் பஸ்ஸுக்கு காத்துநின்ற ஒருவன் லிஃப்ட் கேட்டு வழி மறித்தான். விமலின் கால்கள் பிரேக்கை தொடாமலேயே அவனைக் கடந்து போனது.
வீட்டில் வந்ததும் தனது மனைவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் ...
மேலும் கதையை படிக்க...
விமலாவின் உயிர் தோழி வத்சலாவை பெண் பார்த்து சென்றார்கள் . இரு பக்கமும் சம்மதம். அடுத்த மாதம் கல்யாணம் .....
ஏய் என்னடி இது..... ஜோடி பொருத்தமே சரி ....இல்லையே...... என்றாள் விமலா .
என்னடி சொல்லுற ? நானும் டிகிரி ; அவரும் ...
மேலும் கதையை படிக்க...