அக்கால இசையறிவு

 

ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்

காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,
இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது – அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு முன்பும். அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் அமைந்ததில்லை.

அத்தகைய இசையரங்கு நிகழ்ச்சி – நாமக்கல்லிலிருந்து மோகனூர்க்குப் போகும் நெடுஞ்சாலையிலே, மாலை 6 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. பெரிய மண்டபம்; மேடையில் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது

அதுநெடுஞ்சாலை வழி -

அந்த ஊர்ப் பக்கத்து – பணக்காரர் ஒருவர் – சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.

கையெழுத்து மறையும் மாலை நேரம் – சாலையில் ஒரே கூட்டம். அவர் பயந்து, தன் வண்டிக்காரனை, அது என்ன கூட்டம்? பார்த்து வா’ என்று அனுப்பினார். அவன் போய் விசாரித்து வந்து,

‘எஜமான், எஜமான் – ’ என்று கத்திக்கொண்டே ஒன்றும் சொல்லாமல் மாட்டைத் தட்டி விரைவாக ஒட்டிக் கொண்டிருந்தான்.

செல்வந்தர் ‘என்னடா?’ – என்று அதட்டிக் கேட்கவும்,

வண்டிக்காரன் – மிகவும் – பயந்து -

எஜமான், அது பெரிய கொள்ளைக்கூட்டம் -

‘”யாரோ’, காஞ்சிபுரம் நயினாவாம் – மீசையும் தொந்தியும் பார்த்தால் பயங்கரமாயிருக்குது அகப்பட்டுக்கொண்டு அலறு அலறு என்று அலறுகிறார்.

‘யாரோ’ கோவிந்தசாமியாம், அவன் விடலிங்களா -

‘யாரோ’ புதுக்கோட்டை தக்ஷணா மூர்த்தியாம் கெஞ்சு கெஞ்சு கெஞ்செனு கெஞ்சிராறாம் -

‘யாரோ’ மன்னார்க்குடி பக்கிரியாம் – அந்த ஆள் கன்னக்கோல் வைச்சிருக்கிறாரு -

அப்படியே கூட்டம் அவங்களை அமுக்கிக்கிட்டிருக்குங்க.

போலீஸ் சப்வீஸ் எல்லாம் அவங்களை வளைச்சு சுற்றிக்கிச்சுங்க -

நாம் இருட்டு முன்னே தப்பி ஊர் போய்ச் சேரனும்” என்று சொல்லிக்கொண்டே மாட்டைத் தட்டி விரட்டி ஓட்டுகிறான்.

- என்னே இசையறிவு!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, தமிழர் தோன்றித் தமிழ்தோன்றி தமிழ்இசை தோன்றிய இசைக்கடல் இன்பத்தைச் சுவைக்கும் தமிழ்மக்கள் நடுவிலே – இப்படியும் சிலர் இருந்தனர் என்று தெரிகிறது.

- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம். ‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற ...
மேலும் கதையை படிக்க...
அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை. அவர்களிடம் அத் ...
மேலும் கதையை படிக்க...
மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா - நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது. போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த ...
மேலும் கதையை படிக்க...
சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் - ‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், ...
மேலும் கதையை படிக்க...
தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் ...
மேலும் கதையை படிக்க...
ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு பெண் துறவி இந்தியாவுக்கு வந்தாள். ஒரு பெருந்துறவியைக் கண்டு அவருடைய ஆசிரமத்திலேயே அவரிடம் மாணவியாக இருந்து வந்தாள். அந்தத் துறவியிடம் அவள் விரும்பிய ஞானம் பூரணமாக கிடைக்கவில்லை என்று எண்ணிணாள். ஆகவே அங்கிருந்து புறப்பட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒருபேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான். பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான். அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து. திடீரென ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது. சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் ...
மேலும் கதையை படிக்க...
கரூர் திருச்சிப் புலவர்கள்
சங்ககால நூல்களில் ஒரு காட்சி
மோட்சமும் நரகமும்!
சுருட்டும் திருட்டும்!
சிந்தனை செல்லும் வழி
அமைச்சர் பதவி
வைரமும் கூழாங்கல்லும்
கடுக்காய் வைத்தியர்
பொன்னும் பொரி விளங்காயும்
நரியும் பூனையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)