‘பின்’ குறிப்பு!

 

அன்புள்ள அத்தானுக்கு,

உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக்கொண்டது. நான் நலம். நீங்கள் நலமா?

இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு நாற்பது நாளாகிறது. இதுவரை உங்களிடமிருந்து ஒரு போன்கால் கூட வரவில்லை. ‘எப்படி இருக்கிறாய் மீனு?’ என்று விசாரித்து ஒரு கடிதம் கூட நீங்கள் எழுதவில்லை.

எப்படி எழுதுவீர்கள்? எங்கள் அப்பா, அம்மா செய்ததென்ன மன்னிக்கக்கூடிய குற்றமா? ‘என் மகனுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது. 12,000 ரூபாயிலிருந்து ஒரே ஜம்ப்பில் 20,000 ரூபாயாக சம்பளம் உயர்ந்திருக்கிறது. எனவே, மாப்பிள்ளைக்கு இப்போதைய அவன் அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் ஒரு கார் வாங்கிக் கொடுங்கள்’ என்று உங்கள் பெற்றோர் கேட்டபோது, ‘ஆகட்டும்! என் தலையை அடமானம் வைத்தாவது பணம் புரட்டி கார் வாங்கித் தந்துவிடுகிறேன்’ என்று என் அப்பா சொன்னாரே, சொன்னது போல் செய்தாரா? கவலைப்பட்டுப் பட்டே முடியெல்லாம் கொட்டி வழுக்கை விழுந்த தன் தலை பத்து பைசாவாவது பெறுமா என்று இவர் யோசித்திருக்க வேண்டாமா?

சரி, நீங்களும்தான் கார் வரும், வரும் என்று எத்தனைக் காலம் பொறுமையாக இருப்பீர்கள்? நீங்கள் என்ன இளிச்சவாயரா? வேறு வழியில்லாமல்தானே ‘வந்தால் காருடன் வா!’ என்று என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்!

அப்பாவின் 3,000 ரூபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து, பத்து வருஷமோ இருபது வருஷமோ, அவரால் என்றைக்குக் கார் வாங்கித் தர முடிகிறதோ, அன்றைக்கு நான் வருகிறேன். அல்லது, அடுத்த ஜென்மத்தில்தான் நாம் ஒன்று சேர முடியுமென்றாலும் சரி, வேறு வழியில்லை; நான் காத்திருக்கத்தானே வேண்டும்?

அன்புடன், மீனாட்சி.

பின்குறிப்பு: அநேகமாக இதுவே என் கடைசி கடிதமாக இருக்கும். இங்கே, சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ரூ.35,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அதனால், இனிமேல் உங்களுக்குக் கடிதம் எழுதக்கூட எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

- 28th நவம்பர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!
ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ், தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது. எண்ணை அழுத்தி, சபேஷை செல்லில் பிடித்தான். சபேஷின் குரலில் உற்சாகம் கொட்டிற்று, ''மெயில் பார்த்தியா? சந்தோஷம் பேயா அறைஞ்சிருக்குமே? ரொம்ப நாளா நீ குறிவெச்ச போஸ்டிங் ...
மேலும் கதையை படிக்க...
தயங்கித் தயங்கிப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் வந்தார்கள் விபின் தம்பதி. ‘‘மறுபடி மறுபடி உங்க ளுக்குச் சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிக்கணும். ரேவதிக்கு இன்னிக்கு ஒரு இன்டர்வியூ. அதான், குழந்தையைக் கொஞ்ச நேரம் உங்ககிட்ட விட்டுட்டுப் போக லாம்னு... ஃபீடிங் பாட்டில், நாப்கின், வெந்நீர் ...
மேலும் கதையை படிக்க...
மூன்று கண்கள் !
மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை... நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம், ஆண்களுக்கு மட்டும் தான். கணினியின் வெண்திரையில், லதிகாவின், "இ-மெயில்' அவளைப் ...
மேலும் கதையை படிக்க...
அவள் ஒரு பெண்!
என் எத்தனையோ கதைகளில் ஏதாவது ஒரு கேரக்டர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு தவித்து நிற்பதைப் பத்திபத்தியாக விவரித்திருக்கிறேன். ஆனால், இப்போது நானே ஒரு சேதியை வைத்துக்கொண்டு தவித்த தவிப்பைப் பார்க்கும்போது, இதில் பாதியையாவது என் கேரக்டர்கள் அனுபவித்திருப்-பார்களா என்று தோன்றியது. கட்டிலில் ...
மேலும் கதையை படிக்க...
சிக்கல்
ஓவியம்: சேகர் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது சுகந்தன் மாமா வீட்டுக்குதான். அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாகச் சிக்கல் பிரித்துக்கொண்டு இருந்தார் ...
மேலும் கதையை படிக்க...
உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!
பாறாங்கல்லும் ஒரு பனிக்கட்டியும்!
மூன்று கண்கள் !
அவள் ஒரு பெண்!
சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)