வேலைக்கு போக விரும்பிய மனைவி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 14,130 
 

காலையில் மாணவர்களின் கூட்டம் அதிகம் இருந்தது, நானும் என் மனைவி, பையன் மூவரும் மாறி மாறி மாணவர்கள் கேட்டதை எடுத்துக்-கொடுத்து களைத்து போய்விட்டோம். மணி ஒன்பது ஆகும்போது பள்ளி மணி அடித்து விடும், அதற்குள் நோட்டு புத்தகம், பேனா போன்ற பல பொருட்கள் வாங்க வேண்டும் அதற்காக காலில் இறக்கை கட்டிக்கொண்டு மாணவர்கள் பறப்பார்கள், அதற்குத்தகுந்தவாறு நாங்கள் மூவரும் வேகமாக பொருட்களை எடுத்துக்கொடுத்து காசையும் வாங்கி போடவேண்டும். அப்பாடா ஒரு வழியாக பள்ளி மணி அடிக்க மாணவர்கள் கூட்டம் ஓய்ந்தது, பையனும் காலேஜுக்கு நேரமாகிவிட்டது என்று கிளம்பி விட்டான். அவனுக்கு ஒன்பதரைக்கு காலேஜ், வண்டியில் போவதால் போய் சேர்ந்துவிட முடியும்.மனைவியும் வீட்டில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பிவிட்டாள். கடைக்கு பின்புறம்தான் வீடு, அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் கடைக்கு வந்து போகலாம்.கடையில் நான் மட்டுமே !. இது வரை வியாபாரத்துக்கு தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து ஒதுங்கி நின்றிருந்த பொ¢யவர் என் எதிரே வந்து வணக்கம் என்றார். நான் முகம் முழுக்க சந்தோசத்துடன் வாங்க வாங்க சார்…எப்படியும் எனக்கு அரை மணி நேரம் பேச்சுத்துணையாக இருப்பார்.

என்ன சார் சம்சாரத்தை ஸ்கூல்ல விட்டுட்டீங்களா? ஓ அப்பவே விட்டுட்டேன், சா¢ உங்களை பார்க்கலாம்னு வந்தேன், நீங்க மூணு பேருமே ரொம்ப பிசியா இருந்தீங்க, அதான் கொஞ்ச நேரம் காத்துகிட்டு இருந்தேன்.

ஸ்கூல் ஆரம்பித்துவிட்டபடியால் வியாபாரம் அப்படி ஒன்றும் இந்த நேரத்தில் இருக்காது, இனி ப்தினோரு மணிக்குத்தான் மறுபடி வியாபாரம் சூடு பிடிக்கும்.அப்பொழுது மனைவியும் துணைக்கு வந்து விடுவாள். ஆகவே
சாருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்போம் என முடிவு செய்து உட்காருங்க சார் என்று எதி¡¢ல் ஒரு ஸ்டூலை போட்டேன்.உங்க மிஸஸ் இதுக்கு முன்னாடி வேற ஸ்கூல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தாங்களா சார்?

அவ இருபது வருசத்துக்கு முன்னாடி வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க! இருபது வருசத்துக்கு முன்னாடியா? இத்தனை வருசம் கழிச்சு மறுபடி எதுக்கு சார் வேலைக்கு வரணும்? அது ஒரு பொ¢ய கதை!

சொல்ல ஆரம்பித்தார்.

குமாருக்கு கல்யாணம் ஆன முதல் இரவிலேயே அவன் மனைவி கேட்டுக்கொண்டது நான் வேலைக்கு தொடர்ந்து போவேன் என்று, அவனும் கண்டிப்பா போய்த்தான் ஆகணும் ஏண்ணா நான் வாங்கற சம்பளம் ரொம்ப குறைவுதான், அதனால இரண்டு பேர் வேலைக்கு போனா குடும்பத்துக்கு உதவியாகத்தான் இருக்கும், அவன் மனைவி ஒரு பள்ளியில் இரண்டாவ்து மூன்றாவது வகுப்புகளுக்கு ஆசி¡¢யையாக இருந்தாள்.எல்லாம் ஒழுங்காகத்தான் ஓடிக்கொண்டிருந்தது அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை அதன் பின் குமா¡¢ன் தாய் தந்தையர்கள் வா¢சையாக மேலோகம் போய்ச்சேர குழந்தைகளை கவனிக்க தடுமாறிவிட்டனர்.இருவருமே உட்கார்ந்து பேசி அவள் வேலையை விட்டு விடுவது என முடிவு எடுத்தனர்.

அவள் வேலைக்கு போவதை நிறுத்தி விட்டதால் பொருளாதாரத்தில் ஐந்து,ஆறு மாதங்கள் மிகவும் தடுமாறிவிட்டனர், அதன் பின்னர் அதுவே அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது.இல்லாமையை அவர்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டனர்.

வீடு சிறியதாக இருந்தாலும் அவர்கள் சொந்த வீடாகையால் வாடகை செலவு மிச்சமானது.

கொஞ்ச காலம் ஓடியது பொ¢யவனுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர்க்கவும், இரண்டாமவனை ஆறாம் வகுப்பில் சேர்க்கவும் பள்ளி கட்டணம் கட்டச்சொல்லி தகவல் வந்துள்ளதால் பணத்தை புரட்ட படாத பாடுபட்டான் குமார், அவன் மனைவி அப்பொழுது நான் வேண்டுமென்றால் வேலைக்கு போகிறேன் இப்பவே நம்மனால பீஸ் கட்ட முடியல, இனி இவனுங்க காலேஜ் போகறப்ப என்ன பண்ணமுடியும்? வற்புறுத்திய மனைவியை சமாதானப்படுத்திய குமார் நாளைக்கு எப்படியும் பணம் ரெடியாயிடும் கொண்டு போய் கட்டிடு, அப்புறம் நீ வேலைக்கு போறதப்பத்தி பேசலாம் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

காலங்கள் வேகமாக உருண்டோடியது, எப்படித்தான் சமாளித்தார்களோ தொ¢யாது பொ¢யவன் காலேஜ் படிப்பை முடித்து விட்டான். அவனுக்கு ஒரு வேலை தேட தொ¢ந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்து ஆறு மாதம் அல்லாடி ஒரு வழியாக அவனை ஒரு வேலையில சேர்த்துவிட்டான். அதன் பின்னரே அவர்கள் பார்வை இரண்டாமவன் மேல் விழ அவனுக்கு அந்தளவுக்கு படிப்பு வரவில்லை என்றாலும் தட்டுத்தடுமாறி மேல் வகுப்பில் பாஸ் செய்து விட்டான். எப்படியோ பாஸ் செய்துவிட்டானே என்ற சந்தோசத்தில் பட்டப்படிப்பில் சேர்த்துவிட அவனும் கஷ்டப்பட்டு மூன்று வருடங்களை மட்டும் முழுங்கிவிட்டு பட்டம் வாங்காமல் வெளியே வந்தான்.குமாருக்கும் அவன் மனைவிக்கும் ஒரே வருத்தமாகிவிட்டது. படிப்பு மட்டும்தாம் இவனுக்கு வரவில்லையே தவிர அரசு வேலை ஒன்று அவனை தேடி வந்தது.ஆனால் அதற்கு பல லட்சங்கள் தேவைப்பட்டன, என்ன செய்வது என யோசிக்கும்போது இந்த வீடுதான் அவர்கள் கண்களுக்கு தென்பட்டது. வீட்டை வீட்டை விற்க பொ¢யவன் ஒத்துக்கொள்ளாமல் அவனை சமாதானப்படுத்தி வீட்டை விற்று பணத்தை இரு பங்காக பி¡¢த்து சின்னவனின் பங்கில் அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.

பொ¢யவன் அந்த பணத்தை அவன் போ¢ல் டெபாசிட் செய்துவிட்டான்.

இப்பொழுது இருவரும் நடுத்தெருவில், நல்ல வேளை குமாருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருந்தது. அவர்கள் சுமாரான வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்க்கையை ஆரம்பித்தனர்.சின்னவன் அரசாங்க உத்தியோகமாதலால் வெளியூ¡¢ல் போஸ்டிங் ஆகி அங்கேயே தங்கிவிட்டான். அடுத்து முதலாமவனுக்கு பெண் தேட ஆரம்பித்து எப்படியாவது ஓய்வு பெறுவதற்குள் இவனுக்கு கல்யாணம் முடித்துவிடவேண்டுமென்று அலைந்து தி¡¢ந்து கல்யாணத்தை முடித்துவைத்தனர்.

கல்யாணம் முடிந்து இரண்டே மாதத்தில் வீடு சின்னதாக் இருக்கிறது என்று காரணம் சொல்லி தனிக்குடித்தனத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டான் முதலாமவன். அவனுடைய கல்யாணம் என்பதால் குமார் வீட்டை விற்று பெற்ற தன் பங்கிற்கான பணத்தில் கொஞ்சம் எடுத்து குமா¡¢டம் கொடுத்தான்.

பொ¢யவன் கல்யாணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் சிறியவன் ஒரு குண்டைத்தூக்கி போட்டான். அவனுக்கு ஒரு பெண்ணிடம் பழக்கமாகி விட்டதால் அந்த பெண்ணையே மணம் முடிக்க நாள் குறித்துவிட்டதாகவும் தாங்கள் விருப்பமிருந்தால் கல்யாணத்திற்கு வந்து அவர்களை ஆசிர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டான். இவர்களும் தலைவிதியே என அவன் கலியாணத்துக்கு போய் அட்சதை தூவிவிட்டு வந்தனர்.

தனி ஜோடி மரங்களாகினர் இருவரும், நல்ல வேலை குமார் ஓய்வுக்கு பின் வந்த பணத்தை பாங்கியில் போட்டனர். பென்சன் கொஞ்சம் வரும் என்றாலும் அதிகப்படியான் மாதாந்திர செலவுக்கு என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்த பொழுது குமார் மனைவி மெல்ல இழுத்தால் என்னங்க.. இவன் என்ன்வென்று பார்க்க பக்கத்து ஸ்கூல்ல டீச்சர் வேலைக்கு கூப்பிடுறாங்க, என்னால இன்னும் பத்து வருசமாவது வேலை செய்ய முடியும், நடந்தே போயிட்டு சாயங்காலம் நாலரைக்கெல்லாம் வந்துவிடுவேன் என்ன சொல்றீங்க?

இத்தனை வருடங்கள் நம் குடும்பத்திற்காகவும் எனக்காகவும் இவள் லட்சியத்தை தியாகம் செய்திருக்கிறாள், இனிமேலாவது இவளுக்காக இவள் வாழட்டும். என்று முடிவு செய்த குமார் எல்லாம் சா¢ ஆனா ஒரு கண்டிசன் என்று இழுத்தான்..என்ன என்று இவள் பார்வையில் வினவ காலையில நானும் உன் கூட நடந்து வந்து ஸ்கூல்ல விட்டுட்டு மறுபடி சாயங்காலம் வந்து உங்கூடயே நானும் நடந்து வருவேன் சம்மதமா ! எனக்கும் வாக்கிங் போன மாதி¡¢ இருக்கும்.

இதுதான் சார் எங்களோட கதை என்று கூறி முடித்த பொ¢யவர் அடடா நேரம் பத்தரை ஆயிடுச்சே, கடைக்கு போய் உருளைக்கிழங்கு வாங்கி வைக்க்ச் சொன்னா இராத்தி¡¢க்கு சப்பாத்தி செய்யனும்னு, நான் வரட்டா,என்று விடைபெற்றார்.

நான் அந்த ஆதர்சன தம்பதிகளை எண்ணி வியந்து போனேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “வேலைக்கு போக விரும்பிய மனைவி

  1. இன்றைய நிலையை எடுத்து காட்டுகிறது
    நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *