வேப்பமரம் – ஒரு பக்க கதை

 

‘‘ஏங்க, இன்னிக்காவது இந்த வேப்ப மரத்தை வெட்டச் சொல்லப் போறீங்களா இல்லையா?’’ – காலையிலேயே ஆரம்பித்தாள் என் மனைவி ஜமுனா.

‘‘சொல்றேன்!’’

‘‘ஆமா, ஆறு மாசமா இதையேதான் சொல்றீங்க… மரம் வளக்குறது பக்கத்து வீட்டுக்காரங்கன்னுதான் பேரு. ஆனா, வேர் மட்டும்தான் அவங்க வீட்ல இருக்கு. மீதியெல்லாம் காம்பவுண்டு சுவர் தாண்டி நம்ம பக்கம்தான் இருக்கு. தினமும் நம்ம வீட்டு வாசல்ல காஞ்சு விழுற இலையெல்லாம் பெருக்கித் தள்றதுக்குள்ள உயிரே போகுது. அவங்ககிட்ட பேசுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் காதுல போட்டுக்க மாட்டேங்கறீங்க!’’ என்று ஜமுனா புலம்ப, ஊரில் இருந்து வந்திருந்த என் மாமியார் குறுக்கிட்டார்.

‘‘மாப்பிள்ளை, இவ பேச்சைக் கேட்டு அந்த மரத்தை வெட்டச் சொல்லாதீங்க. இந்த நகரத்துல மரங்களைப் பார்க்கிறதே அபூர்வமா இருக்கு. இவ ஆரோக்கியமா இருக்கறதுக்கு இந்த வேப்ப மரமும் ஒரு காரணம். தினமும் குனிஞ்சி பெருக்கறதுனால குண்டாகாம இருக்கா. வேப்பமரக் காத்து உடம்புக்கு ஆரோக்கியம். பசங்களுக்கு படிக்கறதுக்கும் விளையாடறதுக்கும் நிழலா இருக்கு’’ என்றார் அவர் அக்கறையாக! அதன்பிறகு ஜமுனா அதுபற்றி வாயே திறப்பதில்லை.

- நா.கோகிலன் (பெப்ரவரி 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
“நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்” “நீ விசயத்தை பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும் எயிதிப்புட்டு படிச்சிக் காட்டுறன். ஏதாச்சும் வுட்டுப் போயிருந்தா படிச்சிக் காட்டும்போது சொல்லு, சேத்து எயிதிப்புடுறன்” “இல்லெ தம்பி. மொதல்லெ ‘என்னோட ஆச மவனுக்கு, ...
மேலும் கதையை படிக்க...
அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத சோகம்? ஆறுபோல் ஓடுகிறதே கண்ணீர். உருண்டோடும் நீலவிழிகளுக்குள் இத்தனை கண்ணீர் துளிகளா? உறைபனிகாலத்தில் கூட வெப்பத்தால் உறையாத கண்ணீர் நூல்கோத்த முத்தாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது ...
மேலும் கதையை படிக்க...
மழைகாலத்தில் ஒரு நாள் காலையில் சார்லஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியன் எழுந்து தன் வேலையை தொடங்காமல் கருப்பு கம்பளி போர்வையினுள் காலை எட்டு மணி ஆகியும் தூங்கிக்கொண்டிருந்தது. ரோட்டை ஒட்டிய டீக்கடையில் மாஸ்டர் பாலை ஆத்திக் கொண்டிருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். ...
மேலும் கதையை படிக்க...
எப்படியோ ஒரு கசகசப்பு மரணம் நிகழ்ந்த வீட்டில் புகுந்துவிடுகிறது. சம்பூரணத்தாச்சிக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. படிக்கட்டிலிருந்து விழுந்த அதிர்ச்சியில் இறைவனடி சேர்ந்துவிட்டார். மல்லிகாதான் முதலில் அவரது மரணத்தை உணர்ந்தவள் பின்பு பிரகடனப்படுத்தியவளும் அவளே... மரணம் பற்றிய செய்தி மனிதர் விட்டு மனிதர் ...
மேலும் கதையை படிக்க...
நிஜமும் பொய்யும்
தனிமரம்
சங்கமம்
சென்னையில் ஒரு சின்ன வீடு
போட்டுத்தள்ளு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)