வெற்றி பெற்று தோற்றவன்

 

இந்த கதை நடைபெற்ற காலம் 1975 லிருந்து 1985க்குள்

நாயர் கடையில் கூட்டம் அலை மோதியது, அவர் கடையில் காலையில் போடும் போண்டா, வடை,பஜ்ஜி, போன்றவகைகளை வாங்க போட்டா போட்டி இருக்கும். அதே போல் நாயர் டீ ஆற்றும் அழகே தனி! எத்தனை பேர் வந்தாலும் ஒரே மாதி¡¢ முகத்தை வைத்துக்கொண்டு (மகிழ்ச்சியாக இருக்கிறாரா கவலையாக இருக்கிறாரா என கண்டே பிடிக்க முடியாது) அன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இரண்டாவதாக டீ குடிக்க ஆசைப்பட்டு நாயரே கொஞ்சம் டிகாசன் ஊத்துங்க என்று கேட்டு, பின் கொஞ்சம் பாலையும் வாங்கி கொஞ்சூண்டு சர்க்கரை என்று மீண்டும் டம்ளரை நிறைத்து குடித்து விடுவோம், நாங்கள் அவரை ஏமாற்றுவது தொ¢ந்தாலும், தொ¢யாதது போலவே முகத்தை வைத்துக்கொள்வார். நாங்கள் மலையாளம் கற்றுக்கொள்ள அவா¢டம் மலையாளத்தில் பேச முயற்சி செய்தாலும் தமிழில் தான் பேசுவார். அவருக்கு மூன்று பெண்கள். என்றாலும் அவர் கவலைப்பட்டது
கிடையாது, மூத்த பெண் கல்லாவில் உட்கார்ந்து இருப்பாள். மற்ற இருவரும் கடைக்கு கூட மாட உதவிகள் செய்துவிட்டு பள்ளிக்கு சென்றுவிடுவர்.

இந்த ஊர் தமிழ்நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள அணைக்க்ட்டு பகுதி என்றாலும், நிலப்பரப்பில் கேரள எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இரு மாநில மக்களும் கலந்துதான் காணப்படுவர்.ஏறக்குறைய பத்தாயிரம் தொழிலாளர்கள் இந்த பகுதியில் வசித்து வந்தனர். இந்த பக்கம் அரசு ஊழியர்கள், அதிகா¡¢கள் குடியிருப்பும் இருந்தது. இருந்தாலும் இவை அனைத்துமே வனத்துறைக்கு உட்பட்டது, அணைக்கட்டு வேலை முடிந்தவுடன் மின்வா¡¢யத்துக்கு உட்பட்ட பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு
மற்ற பகுதிகளை வனத்துறையிடமே மீண்டும் ஒப்படைத்துவிட வேண்டும்.

வழக்கம் போல நாயர் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது, உண்ணி பிரமாண்டமான மரக்கட்டை ஒன்றை தோளில் சுமந்து கடைவாசலில் நின்றான். கல்லாவில் இருந்த நாயா¢ன் மூத்த பெண் அடா உண்ணி இந்த கட்டைய கொண்டு போய் பின்னாடி
போடு, பாரஸ்ட்காரங்க பார்த்தா நமக்குத்தான் தொல்லை, என்று மலையாளத்தில் சத்தம் போட்டாள்.உண்ணி எதுவும் பேசாமல் கட்டையை பின்புறம் கொண்டு போய் போட்டவன், தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அதற்குள் நாயா¢ன் இரண்டாவது பெண் ஒரு தட்டில் நான்கைந்து போண்டாவையும், டீயையும் கையில் கொண்டு வந்து கொடுத்து கட்டையை பிளந்து போட்டுடு உண்ணி என்று சொல்லிவிட்டு சென்றாள்.

இவனும் சா¢ என்று தலையாட்டினான்.உண்ணி யாருமில்லாத அனாதையாக வந்தவன் இவர் கடைப்பக்கம் ஒதுங்க நாயர் இவனை தன் மகனைப்போல பார்த்துக்கொண்டார்.

பீமனைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் எப்படி இருப்பான் என்பது நமக்கு தொ¢யாது, ஆனால் உண்ணியை பார்க்கும் போது இவனைப்போல பீமன் இருக்கலாம் என தோன்றும் தோற்றம் கொண்டவன், மீசையை முறுக்கி விட்டிருப்பான், ஒரு விதத்தில் நாயர் குடும்பத்துக்கு பாதுகாவலன் என்றும் சொல்லலாம், நாயா¢ன் மூன்று பெண்களுக்கும் இவன் மூத்த சகோதரன் போல
இருந்தான்.

நல்ல மழை பெய்துகொண்டிருந்தது, ஒரு மின வா¡¢ய அதிகா¡¢ தன் ஜீப்பை நிறுத்தி, டிரைவருடன் கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது உண்ணி பொ¢ய மரக்கட்டையை சுமந்து கடைக்கு பின்புறம் கொண்டு செலவதை பார்த்தவர், ஏன் நாயரே இந்த உண்ணிய என் கூட அனுப்புங்க டெலிபோன் லைன்ல மரம் விழுந்துடுச்சு வெட்டி எடுக்கணும் என்றார், நாயர் சிறிது யோசித்தவர் பின் அடா உண்ணி என்று அழைத்தார். உண்ணி உள்ளே வந்தான். ஏண்டா உண்ணி சாருக்கு ஏதோ வேலயாகணுமாம் போய்ட்டு வர்றியா? என்று மலையாளத்தில் கேட்க அவனும் தலையாட்டினான் வெற்றி என்னும் தேவதை தன்னை பார்க்கத்தொடங்கிவிட்டாள் என்பதை அறியாமலே !.

இவன் வேலை செய்த விதமும், வேகத்தையும் பார்த்த அதிகா¡¢ உண்ணி இனி இந்த ஏ¡¢யாவுல டெலிபோன் லைன், க்ரண்ட் லைன், இருக்கற எல்லாத்துக்கும் மரம் வெட்டறது, செடி வெட்டறது, எல்லாத்தயும் காண்ட் ராக்டா எடுத்துக்க என்று சொல்லி விறகுடைப்பவனாக இருந்த அவனை மர காண்ட் ராக்டர் என்ற பதவியை ஒரு வாரத்தில் பெற்றுத்தந்துவிட்டார்.

சாரே ! “எண்டை யிடத்து” பத்து ஆளுக்காரு உண்டு, இ ஆளுகளுக்கு தின கூலி கொடுக்கானெங்கில் இ மர காண்ட் ராக்டா¢ல் எங்கன சாரே முடியும்?” என்று ஒரு நாள் உடலை வளைத்து கும்பிடுவது போல கேட்ட உண்ணியை வியப்புடன் பார்த்த அதிகா¡¢ என்ன செய்யலாம் உண்ணி என அவனிடமே கேட்டார். அதை எதிர்பார்த்தவன் போல் இருந்த உண்ணி சாரே ஒரு சிவில் வொர்க் கொடு சாரே மக்களுக்கு புண்ணியமாயிருக்கும் என்று கும்பிட்டான்.

இப்பொழுது சிவில் வொர்க் அதாவது அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பை கட்ட சிமெண்ட், மணல் கொண்டு அன்றைய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காண்ட் ராக்ட்டை பெற்றுக்கொண்டான் உண்ணி.

இப்பொழுது உண்ணி பொ¢ய காண்ட் ராக்டர் ஆகிவிட்டான்,அதன் படி அவன் தோரணையும் மாற்றிக்கொண்டான், வெளேர் என சட்டை வேட்டிக்கு மாறிவிட்டான்.

தன்னைச்சுற்றி உதவியாளர்களை வைத்துக்கொண்டான், ஒரு அம்பாசிடர் ஒன்று வாங்கிக்கொண்டான். அரசாங்க குடியிருப்பு ஒன்றை வாடகை அடிப்படையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டான்.

நாயர் அவன் வீடு சென்று (இப்பொழுதெல்லாம் உண்ணி நாயர் கடைக்கு வருவதில்லை) உண்ணி உனக்கு ஊ¡¢ல் ஒரு பெண் பார்த்துள்ளேன், ஏற்பாடு செய்து விடலாமா? என கேட்க சிறிது யோசித்தவன் சா¢ என்றான்.

உண்ணியின் நட்பு வட்டாரம் பொ¢யதானது, இவனோடு பொ¢ய காண்ட் ராக்டர்கள், பொ¢ய அரசு அதிகா¡¢கள், போன்றவர்களோடு தொடர்பு ஏற்பட்டது, தினமும் அவர்களை திருப்திபடுத்த எல்லா வழிகளையும் கையாண்டான். இதனால் அவன் திருமணம் செய்து
வந்த பெண் இவனோடு வாழமுடியாமல் நாயர் எவ்வளவு சொல்லியும் அவனை விட்டுவிட்டு போய்விட்டாள். இவனும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நாளொரு பெண், குடி, போன்ற பழக்கங்கள் அவனை வந்து அணைத்துக்கொண்டது.அவனைப்பற்றி
கவலைப்பட்ட ஆத்மா ‘நாயர்’ மட்டுமே.

பல்லாயிரம் தொழிலாளர்கள் கொண்ட அந்தப்பகுதியில் சாராயக்கடை ஏலம் எடுக்க போட்டி ஏற்பட்டது, யாரோ தூண்டி விட இவன் ஆள்,படை,அம்பு போன்றவைகளுடன் கடைகளை ஏலம் எடுத்தான். இதனால் இவனுக்கு விரோதிகள் அதிகமாக் ஆரம்பித்தனர்.
நாயர் எவ்வளவு கெஞ்சியும் இவன் சாராயக்கடை ஏலம் எடுப்பதை தடுக்கமுடியவில்லை.

சாராயக்க்டை வருமானம் அமோகாமாக இருந்தது, தினமும் வசூலாகும் பணத்தை அவன் கட்டிலின் மேல் கொட்டி அதன் மீது படுத்து உருளுவான்.அடியாட்களை எப்பொழுதும் அருகில் வைத்துக்கொண்டான்.

இவன் சாராயக்க்டையையே பார்த்தால் காண்ட் ராக்டர் வேலைகள் நின்றன, அவனது இரு காண்ட் ராக்டுகளும் ரத்து செய்யப்பட்டன. அவனை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டிருந்த பலா¢ல் சிலர் அவனது வேலைகளை கைப்பற்றினர்.இதனால் இவன் சாராய வருமானத்தை மட்டுமே நம்ப வேண்டியிருந்தது.

இரண்டு வருடங்களில் சாராயம் ஏலம் எடுக்கும் முறைகள் மாற்றப்பட்டன. இவனைவிட பொ¢ய ஆள் போட்டி போட, இவன் காணாமல் போனான்.

சாராயக்கடைகளும் இவன் கையை விட்டு போயிற்று. தன் நிலை உணர்ந்தான் உண்ணி, ஆனால் என்ன பயன்? உடல் நலிவடைய ஆரம்பித்தது, சுற்றியுள்ளவர்கள் காணாமல் போயினர். அரசு வீடு வாடகை பாக்கியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான்.
நாயர் அங்கும் இங்கும் அலைந்து ஒரு சிமிண்ட் கூரை போட்ட வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவனால் எழுந்து வெளியே வரமுடியாத அளவில் உடல் நிலை சீர் கெட்டது, நாயரும் அவர் குடும்பமும் அவர்களால் முடிந்த அளவுக்கு அவனுக்கு
உதவிகள் செய்தனர்.பயனில்லாமல் போயிற்று.

அவன் உடல் புதைப்பதற்காக எடுத்துச்செல்ல வேண்டும், நாயரும் அவர் குடும்பம் மட்டுமே அவன் அருகில் நின்றது. இளைஞர்களாகிய நாங்கள் நாயருக்காக அவனை புதைப்பதற்கு எடுத்துச்செல்ல தயாராக நின்றோம். 

தொடர்புடைய சிறுகதைகள்
உருகி உருகி காதலித்துக்கொண்டிருந்தான் தினேஷ். கயல்விழி அவனது காதல் மொழிகளை முகம் சிவக்க இரசித்துக்கொண்டிருந்தாள்.”கட்” டைரக்டர் சொன்னதும், இதுவரை இவர்கள் இருவரின் காதல் பேச்சுக்களை உற்று கவனித்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் மூச்சு விட்டு “அப்பாடி” என்றனர். அதுவரை அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாயிற்று”. ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஆரஞ்சுப்பழம் என்னப்பா விலை? கிலோ நாற்பது ரூபா சார். சரி அதுல அரை கிலோ கொடு, பர்ஸில் இருந்து பணம் எடுத்து கொடுத்து பழத்தை வாங்கியவன், மிகுந்த எச்சரிக்கையுடன் இரு புறமும் பார்த்து வாகனங்கள் வராத நேரம் பாதையை தாண்டி எதிரில் ...
மேலும் கதையை படிக்க...
அரச்சலூர் என்னும் கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தில் ஏராளமான வீடுகள் இருந்தன.அங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் அந்த ஊரில்,ஆறுகளோ குட்டைகளோ இல்லை. கிணற்றை தோண்டித்தான் நீர் எடுத்து குடி நீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவர். வசதியற்ற ...
மேலும் கதையை படிக்க...
அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க வரலை, அப்படி இருந்துச்சு அவர் முகம். யாரு போய் பேசறதுன்னு, பம்மிகிட்டு அந்தா இந்தான்னு மிரளுறானுங்க. என்னாச்சு இந்த அண்ணாச்சிக்கு? விசயம் ...
மேலும் கதையை படிக்க...
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மகாதேவனின் இறப்புக்கு உறவினர்கள் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. நிறைய முகங்களில் உண்மையான சோகம் காணப்பட்டது. அவரின் நண்பர்கள் தள்ளி உட்கார்ந்திருந்த அவரது மனைவி சாருமதியிடம் வந்து வணக்கம் சொல்லி உண்மையான வருத்தத்தை ...
மேலும் கதையை படிக்க...
டைரக்டர்
முகவரி தேவை
கூட்டுறவே நாட்டுயர்வு
தனக்கு மட்டும்
வாழ்க்கை வாழ்வதற்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)