வீட்டுப்பாடம்

 

“காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு
பின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை”

“எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுற இல்ல, அப்புறம் எப்படி பிடிக்கும்?”

“எங்க அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிடக்கூடாதே உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்”

“அதென்னடி மாசாமாசம் அம்மாவீட்டுக்கு போறது? அதுவும் சென்னைல இருந்து திருச்சிக்கு! போறதுக்கும் வர்றதுக்கும் செலவு கணக்குப்பாருடி…அப்புறம் போற எண்ணமே வராது!”

“அப்பப்பா! எப்போ பார்த்தாலும் கணக்கு பார்த்துகிட்டே இருக்கீங்களே! போன பிறவில கணக்கு வாத்தியாரா இருந்தீங்களோ! சே! வெறுப்பா இருக்கு”

“இப்படி கணக்கு பார்க்கலன்னா அப்புறம் எப்படி நான் குடும்பம் நடத்தறது. மளிகை கடைக்காரன்ல இருந்து பால்காரன்வரைக்கும் யார் பதில் சொல்றது? நம்மகிட்ட பணம்காய்கிற மரமெல்லாம் இல்ல”

“நீங்க ரெண்டுபேரும் இப்படி மோதிகிட்டு இருக்கறத உங்க பொண்ணு பார்த்துட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சுட்டா” சொல்லிப்போனார் அப்பா.

இருவருமாய் சென்று மகள்முன்பு அமர்ந்தோம்.

செல்லமகள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தாள்.

“செல்லம் எங்கள பார்த்தவுடனே ஓடிவந்து ஏதோ எழுதினியாமே,தாத்தா சொன்னார்…என்னமா எழுதின?”

“எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல அடிக்கடி மோதிக்கொள்ளும் உயிரினம் பற்றி எழுதுகன்னு வீட்டுப்பாடம் கொடுத்தாங்கப்பா அதுக்கு பதில் எழுதினேன்பா” என்றாள் பிஞ்சுமகள்.

“என்னடா எழுதினே” ஆர்வமுடன் கேட்டோம் நானும் என் மனைவியும்.

“அப்பாவும் – அம்மாவும்” ன்னு எழுதினேன்மா என்றாள் முத்துப்பல்காட்டி.

வீட்டின்பாடத்தை வீட்டுப்பாடம் மூலமாய் உணர்ந்து வெட்கித் தவறுணர்ந்து நின்றோம்.

- Friday, November 30, 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். போன வருட கோடைவிடுமுறையில் நடந்த போட்டியில் என்னை ஜெயித்து முதல் பரிசான மூன்று "தேன்மிட்டாய்" பாக்கெட்டுகளை வென்றவன் ...
மேலும் கதையை படிக்க...
"சொன்னா புரிஞ்சுக்கடா" கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி. "முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்..." "நீ மட்டும் அவளுக்கு முத்தம் கொடுத்து பாரு அப்புறம் உன்ன பார்க்க வரவே மாட்டா" "சே சே அவளுக்கு எம்மேல ஆசை அதிகம்...என்னை காதலிக்கிறது அவ கண்ணுலயே தெரியுதுடா" "ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு வெளியே பெய்கின்ற மழை கண்மணியின் மனதை உறுத்தியபடியே இருந்தது. முதல் முறையாக சென்னைக்கு இந்த பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் வந்திருக்கிறாள். ...
மேலும் கதையை படிக்க...
புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம். ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு ...
மேலும் கதையை படிக்க...
1. மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால் நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய ...
மேலும் கதையை படிக்க...
சைக்கிள்
முத்தே முத்தம்மா….
கண்மணி,இரவு,மற்றும் மழை
அத்தமக செம்பருத்தி….
நான்கு தோழிகளின் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)