விழிப்பு

 

தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது.

வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த
நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் நுழைந்த நாய்கள் அவன் கவனத்தை ஈர்த்தன.

தெரு நாய்கள்தாம். ஒன்று கறுப்பு. அடுத்தது பழுப்பு …முன்னால் வந்தது கொஞ்சம் சோனியாக “ஙே” என்று இருந்தது. பின்னால் வந்த பழுப்பு நாய். சைஸில் பெரிசு – ஆனால் கறுப்பு நாய் கம்பீரமாய். ஒருவித அதிகார முகபாவத்துடன் நடக்க. பின்னால் வந்த பெரிசு குழைந்துகொண்டு. லேசாக அசடு வழிய வருகிற மாதிரி கைலாசத்துக்குப் பட்டது.

உதடுகள் சுணுங்க. பற்கள் விகாரமாய் வெளிப்பட்ட கறுப்பு நாய் பின்னதைப் பார்த்து வள் என்று விழுந்ததையும் லட்சியம் பண்ணாமல் அவ்வப்போது நெருங்கி வந்து முதலாவதை முகரவும்
ஸ்பர்சிக்கவும் இரண்டாவது முனைய…

ஓ! பெண்ணும். ஆணுமா? கே-யும் எரிச்சலும் கலந்த சிரிப்பு கைலாசத்தின் உதடுகளை உட்புறமாய்க் கீறியது. அவன் வீட்டுக்கு எதிர் சாரியிலிருந்து குப்பைத் தொட்டியின் அருகே வந்ததும் பெண் நாய் டபக்கென்று ஏறி சற்றுமுன் யாரோ விசிறிவிட்டுப் போன எச்சில் இலையை அவசரமாய் மூக்கால் பிரித்து மிச்சத்தை உண்ட நாழிகையில். ஆண் நாய் கனகாரியமாய் காவல் காக்கிற மாதிரி அதே அசட்டுக்களை மாறாமல் வாலை ஆட்டிக்கொண்டு க்கம் க்கம் என்று குரல் கொடுத்தபடி குப்பைத் தொட்டியை ஒட்டி நின்றது.

ஓரிரு நிமிஷங்களில் மிóச்சத்தைத் தின்று முடித்ததும் கீழே குதித்துப் பெண் நாய் ஓட. ஆண் நாய் தன் முகர்தல் ஸ்பர்சித்தலுடன் மறுபடி அதைத் தொடர்ந்தது.

சைக்கிள் நிறைய அலுமினியப் பாத்திரங்களைக் கட்டியபடி. எதுவும் புரியாமல் குரல் கொடுத்துக்கொண்டே பாத்திரக்காரர் ஒருவர் சென்றார். எண்ணெய் காணாத செம்பட்டை முடி. கிழிந்த அழுக்கான உடைகள். அதைவிட அழுக்கான சாக்கு. கையில் ஒரு இரும்புக் கம்பி சகிதம் வந்த பெண்மணி குப்பைத் தொட்டி அருகே வந்து அதனுள் இருந்த குப்பைகளை வெளியே வாரி இறைத்தார். பின்னர். தனக்கு வேண்டிய பேப்பர்களை மட்டும் இரும்புக் கம்பியால் குத்திஎடுத்து சாக்குப் பைக்குள் போட்டார்.

அவர் தூக்கி எறிந்த எச்சில் இலைகள். கிழிந்த பிளாஸ்டிக் பைகள்.துண்டுக் காகிதங்கள் காற்றில் இங்கும் அங்கும் பறக்க முற்பட. கைலாசத்துக்குள் சட்டென்று அத்தை எட்டிப் பார்த்தார்.

அத்தை என்றால் இவனுடைய சொந்த அத்தை இல்லை; புதுசாக அறிமுகப்படுத்தப்பட்ட நண்பன் நாணாவின் அத்தை. படித்தவர். இதமாகப் பேசத் தெரிந்தவர். வித்தியாசமானவர். முக்கியமாய் இளைய தலைமுறையினரின் மனசைப் புரிந்து கொண்டு பழகுபவர். இத்தனை வருஷங்களாக நாக்பூரில் இருந்த நாணா தற்சமயம் அத்தை வீட்டில் தங்கி ஸி.ஏ. செய்ய வந்திருக்கிறான். நண்பன் சுரேஷ் மூலம் மூன்று மாசங்களுக்குமுன் நாணா பரிச்சயமாக. அவன் வீட்டுக்குப் போய்வரும் கைலாசத்துக்கும். இந்த மூன்று மாசங்களாய் அத்தை நெருக்கமானார்.

அத்தைக்கு வயது 45. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார். பகல் பூராவும் தனியார் கம்பெனியில்அக்கௌண்டன்டாக உத்தியோகம். மாலையிலும். சனி. ஞாயிறு. இதர விடுமுறை நாட்களிலும் கண் தெரியாத இரண்டு பசங்களுக்கு ஸ்க்ரைபாக உதவி. தொழு நோய் கண்டு பயப்படத் தேவையில்லை. “மல்டி ட்ரக் தெரபி” மூலம் அதைக் குணப்படுத்துவது வெகு எளிது என்று ஊர் ஊராகச் சென்று கூட்டங்களில் பேசி. சென்னையை அழகுபடுத்தும் முயற்சியில்
இறங்கி இருக்கும் இயக்கத்தோடும். காவேரியைச் சுத்தமாக்குவோம் என்கிற கூட்டத்தோடும் அயராது இணைந்து செயல்பட்டு…

இத்தனையை மனசில் வைத்துக்கொண்டு. அத்தைக்கு கதர் புடவை சுற்றி. நரைத்த தலையும். குங்குமப்பொட்டும். கையில் குடையுமாய் கற்பனை செய்ய முனைந்தால் ஏமாற்றம்தான்.

கோட்டா புடவை. ஹீல் செருப்பு. கவர்ச்சியான சிரிப்பு. தானே ஓட்டும் வண்டி என்று அறிமுகமாகும் அத்தை சின்னப் பெண்ணின் சுறுசுறுப்பு. அழகுடன் யாரையும் இரண்டாம் தரம்
திரும்பப் பார்க்கச் செய்வது நிஜம்…

அத்தைக்கு அவரை “சமூக சேவகி” என்று குறிப்பிட்டால் பிடிக்காது. நம் உடம்பை. நம் வீட்டை. “நம் உடைமைகளை சுத்தமாக அழகாக வைத்துக்கொள்ளப் பாடுபடுகிறோம். ஆனால் தான் ஸ்வாசிக்கும் காற்றை. வசிக்கும் தெருவைப் பராமரிக்க ஒருவர் முன்வரும்போது மட்டும் எதனால் அவருக்கு சமூக சேவகி பட்டம்? ம்? இப்படி கூட்டம் கூட்டி ஒதுக்கிப் பேசுவதனாலேயே
நமக்கெல்லாம் எது நம் கடமை. பொறுப்பு என்பது கூட மறந்துபோய் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை. அடுத்தவரை குறை சொல்லும் குணம் வந்துவிட்டது. தெருவில் சின்னதாக ஒரு குழி இருந்து. அதில் ஒரு குழந்தை தடுக்கி விழுந்ததும் நாம் என்ன செய்கிறோம்? – முதல் மந்திரியிலிருந்து கார்ப்பரேஷன் கடைநிலை ஊழியர் வரை திட்டித் தீர்க்கிறோம் – அப்புறம் அத்துடன் நம் வேலை முடிந்தது என்று சும்மா இருந்து விடுகிறோம். ரைட்? இதைத் தவிர்த்து ஒரு கூடை மண்ணை எடுத்துவந்து அந்தக் குழியில் போடுவது பிரச்சனைக்கு நம்மாலான உதவியாக இருக்கும் என்று எத்தனை பேர் செயல்படுகிறோம். இல்லை நினைத்துத்தான்
பார்க்கிறோம்? ம்.”

புருவங்கள் முடிச்சுப் போட. தீவிரமான அக்கரையுடன் அத்தை ஒருதரம் பேசியது நினைவுக்கு வர. எழுந்து போய் பறக்கும் காகிதங்களைப் பொறுக்கி குப்பைத் தொட்டியில் போடலாமா என்று கைலாசம் நினைத்தான். ஆனால் கூடவே “ஆமாம் – நான் சுத்தம் செய்வதால் மட்டும் இந்தத் தெரு சுத்தமாகி விடப் போகிறதாக்கும்!” என்கிற ஆயாசம் எழ. திரும்பி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான்.

படிக்கட்டுகளில் அந்தக் கோடியில் லேசாக வெடிப்பு கண்டிருந்த தரையில் சாரியாய் எறும்பு ஊர்வலம்…

கறுப்புப் பிள்ளையார் எறும்புதான்…

புருபுருவென்று சதா ஓடிக்கொண்டே இருக்கும் சுறுசுறுப்பான எறும்புகள்….

“இந்தப் பிள்ளையார் எறும்புங்களுக்கு இருக்குற சுறுசுறுப்புல. சமர்த்துல. பொறுப்புல பாதிகூட இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு இருக்கறதில்லை” என்று இரண்டு நாட்கள் முன் அதே எறும்புக் கூட்டத்தைப் பார்த்துவிட்டுப் பேப்பரும் கையுமாய் உட்கார்ந்திருந்த அப்பா விமர்சித்தது நினைவுக்கு வர. கைலாசம் “ப்ச்” என்று கோபத்துடன் சூள் கொட்டினான்.

பிறகு. அந்தக் கோபம் மாறாமலேயே முன்னால் நகர்ந்து எறும்பு ஊர்வலத்தின் நடுவில் விரலால் ஒரு கோடு இழுத்தான். மோப்ப சக்தியின் உதவியுடன் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த எறும்புகளின் ஊர்வலம் தடைப்பட்டுப் போக. திடுமென உண்டான குழப்பத்துடன் எறும்புகள் தாறுமாறாக இங்கும் அங்கும் ஓடியது குட்டியாக ஒருவித மகிழ்ச்சியை உண்டாக்க. கைலாசம் பொந்துக்கு அருகில் இன்னொருதரம் கோடு கிழித்து. இன்னும் கொஞ்சம் குழப்பத்தை மற்ற எறும்புகள் நடுவிலும் ஏற்படுத்தினான்.

“டே கைலாசம் … சாப்பிட வாயேண்டா… மணி பன்னிரண்டாவுது….”

உள்ளிருந்து ஒறீத்த அம்மாவின் குரல் காதில் விழாத மாதிரி கைலாசம் தொடர்ந்து எறும்புகளையே வெறித்தான்; பின்னர் பார்வையைக் குப்பை பொறுக்கும் பெண்மணியிடம் வீசினான்…

வேண்டியதைப் பொறுக்கிக் கொண்டுவிட்ட நிறைவுடன் அவள் நகர. இந்தக் குப்பைத் தொட்டிதான் எத்தனை பேருக்கு வேண்டியதாக இருக்கிறது என்கிற நினைப்பில் கோபம் குறைந்து
அவனுக்குச் சிரிப்பு எழுந்தது.

எச்சில் இலைக்காக வரும் நாய்கள்..

துண்டு பேப்பர்களை நாடி வரும் பெண்மணி…

அப்புறம் அப்பா….

“நா அந்தக்கால இண்டர்… ஆனாலும் முனைஞ்சு வேலை தேடினதுல படிச்சு முடிச்ச மறு மாசமே கையில வேலை. சம்பளம்… ஆனா; நீ? வேண்டாத லொட்டு லொசுக்கு சொல்றீகிட்டு. குண்டு சட்டில குதிரை ஓட்டற! உன்னால யாருக்கு ஆதாயம்? ஏதுடா. அப்பா இத்தனை கஷ்டப்படறாரே. நாம கை கொடுப்பம்னு துளி அக்கறை கிடையாது… இருந்தா. இப்படி வர்ற வேலை எல்லாம் ‘ஆ அது என் படிப்புக்கு ஏத்தது இல்லை…’ இதவிட உசந்த வேல எனக்கு வரும்-னு நொட்டாங்கு
அடிப்பியா? எல்லாம் நா செஞ்ச பாவம்டா… போன ஜன்மத்துப் பாவம்… பேசாம டிகிரி. மத்த ஸர்டிபிகேட்டுங்களைக் கிழிச்சு குப்பைத் தொட்டில போட்டுடு … உன்னோட தொடர்ந்து
முட்டிக்காம நா வாய் மூடிக்கிட்டாவது இருப்பேன்.”

குப்பைத் தொட்டியில் போடு – கிழித்து எறி – இதைத் தவிர வேறு பேச்சே கிடையா…

“டே… உனக்கென்ன காது செவிடா? தொண்ட கிழிய கத்தறது கேக்கல? வந்து சாப்டுட்டு போயேண்டா…”

அம்மாவின் தொனியில் இப்போது அலுப்பும். கோபமும் கலந்து ஒறீப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும். கைலாசம் எழுந்திருக்கப் பிடிக்காமல் அப்படியே சலனமில்லாமல் அமர்ந்திருந்தான்.

அப்பா வீட்டில் இருந்தால். “ஏண்டா சாருக்கு கொட்டிக்கறதுக்குக் கூட வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?” என்று நக்கலாய்க் கேட்டிருப்பார் – நிச்சயம்.

எத்தனை தரம் எத்தனை தரம். என்னவெல்லாம் கேட்டாகி விட்டது!

வேகமாக வீசிய காற்றில் அழுக்கு பிளாஸ்டிக் பேப்பர் ஒன்று பறந்து வந்து கடைசிப் படிக்கட்டில் ஒட்டிக்கொண்டது.

“நம் உடம்பை. நம் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் நாம். நம் வீட்டுக் குப்பையைத் தெருவில் கொட்டுவதை . ஏன் தடுக்க மாட்டேன் என்கிறோம்? ஏனென்றால் தெரு நம்முடையது
என்கிற அக்கறை இல்லை – அதானே? அடுத்தவர்களைப் பற்றின கரிசனம் நமக்குக் குறைந்து வருகிறது… கேரிங் அண்ட் ஷேரிங்… அக்கறையும் பகிர்ந்து கொள்ளுதலும் மறந்துவிட்ட மனசு
குறுகிப்போய் சுயநலம் தலை எடுப்பதில் ஆச்சர்யம் என்ன?”

மீண்டும் அத்தையின் பேச்சுகள் நினைவுக்கு வர ஒருவிதத் தவிப்பு உண்டாயிற்று.

பிளாஸ்டிக் பேப்பரை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விடலாமா?

தொடர்ந்து யோசிக்கும் முன்னர் தெருமுனையில் ஒரு சிகப்பு வண்டி எண்.இ .118 திரும்ப. யார். பாபுவா என்கிற ஆர்வத்துடன் முன்னால் சாய்ந்து பார்த்தான்.

இல்லை… இரண்டாவது வீட்டு வாசறீல் நின்று யாரையோ இறக்கிவிட்டபின் வண்டி புறப்பட்டுச் சென்று மறைந்தது.

பாபுவின் அப்பா பெரிய புள்ளி. கோயமுத்தூரில் மில். எக்ஸ்போர்ட் பிஸினெஸ் என்று தடபுடல் வாழ்க்கை. எண்.இ.118 ஐ போன பிறந்த நாளுக்கு முப்பதாயிரம் ரூபாய் பிரிமியம் கொடுத்து
பாபுவுக்கு. பரிசாக வாங்கித்தரும் அளவுக்குப் பணத்தில் புரள்பவர்.

அப்பாவின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன் என்று பாவ்லா காட்டிவிட்டு. துளி அவகாசம் கிடைத்ததும் வண்டி. பணத்துடன் பாபு வந்துவிடுவான். பாபு. நாணா. சுரேஷ். கைலாசம்-அத்தனை நண்பர்களும் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம் அவர்கள் பாஷையில் சொல்வது மாதிரி சுத்தாக்ஸ்

மஹாப்ஸ். கடறீல் குளியல். பியர். சிகரெட் எல்லாம் தண்ணீர் பட்டபாடு…

பத்து நாட்களுக்கு முன் சுரேஷுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாட இப்படித்தான் வண்டி எடுத்துக்கொண்டு எலியட்ஸ் பீச் போய்விட்டு. எட்டுபாட்டில் பியரையும் பாக்கெட் பாக்கெட்டாய் சிகரெட்டையும் குடித்துவிட்டு வந்தபோது. முதல் முறையாய். வகையாய் நாணா வீட்டில் அத்தையிடம் மாட்டிக்கொண்டார்கள்.

“என்ன வேலை கிடைத்ததற்கு செலப்ரேஷனா”

“எஸ் அத்தை….”

“என்னென்ன செய்தீர்கள்?”

அத்தை புரிந்துகொள்வார்கள் என்கிற தைரியம் உண்டென்பதால் நாணா உண்மையைச் சொன்னான்.

அத்தை அரை நிமிஷம் மௌனித்தார். பின். சின்னக் குரலில் கேட்டார்:

“உங்களை எல்லாம் பொறுத்தவரை கொண்டாட்டங்கள் என்றால் குடிப்பதும். சிகரெட் குடிப்பதும் தானா?”

அத்தை சீண்டுபவரோ. வெற்றுக்கு புத்திமதி சொல்ல முனைபவரோ அல்ல – அக்கறையுடன் பேசுபவர் என்கிற வித்தியாசம் நினைவில் இருக்க. அன்று நால்வருமே வாய் அடைத்துத்தான் நின்றார்கள்.

அத்தை எழுந்து கதவருகில் சென்றார். திரும்பி நம்பிக்கை நிறைந்த குரலில், ஆனால் மென்மையாய் கேட்டார்:

“நீங்கள் எல்லாமே அதிபுத்திசாலிகள் – தீவிரமாய் யோசிக்கத் தெரிந்தவர்கள். ஸோ, நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? உங்களைப் பெற்றவர்கள் சம்பாத்தியத்தில் இப்படி எல்லாம் செலவழிப்பது உங்களுக்கு உறுத்தவில்லை? டோண்ட் யூ ஆல் ஃபீல் கில்டி அபௌட் இட்?”

அத்தை பேசின பிறகு ரொம்ப நேரத்துக்கு நால்வரும் மௌனித்ததும். இந்த பத்து நாட்களாக சிகரெட்டைக் கையால் நிம்மதியாய் தொடமுடியாதபடி உள்ளே என்னமோ உறுத்துவதாக
பாபுவே சொன்னதும் இப்போது ஞாபகத்துக்கு வர. இருப்புக்கொள்ளாமை அதிகமாக கைலாசம் எழுந்து நின்றான்.

கோடு போட்டதினால் உண்டான குழப்பம் மறைந்து மறுபடியும் தங்கள் ஊர்வலத்தை கர்ம சிரத்தையுடன் எறும்புகள் மேற்கொள்வதைப் பார்த்தவாறு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி
சோம்பல் முறித்த நிமிஷத்தில். மீண்டும் அம்மா இன்னும் கொஞ்சம் கத்தலாக அழைப்பது காதில் விழுந்தது.

எறும்பு ஊர்வலத்தில் நாலு எறும்புகள் கஷ்டப்பட்டு ஒரு அரிசியைப் பொந்துக்கு அருகில் இழுத்துச் செல்வதைப் பார்த்த போது காரணம் புரியாமல் ஒரு நமநமப்பு எழ. கைலாசம்
சட்டென்று குனிந்தான். ஆள்காட்டி விரலால் அந்த அரிசியை லேசாகச் சுண்டிவிட்டான். அரிசி இரண்டடி சென்று மூலையில் விழ. எறும்புகள் உணவைப் பறிகொடுத்த கவலையோடு
என்னவோ ஏதோ என்று பயந்து தறிகெட்டு ஓடிய காட்சி சின்னதாக ஆனால். குரூரமான மகிழ்ச்சியை உள்ளுக்குள் பரப்புவதை உணர முடிய. மெல்ல நடந்து வீட்டுக்குள் சென்றான்.

சமையல் அறையில் சாப்பிடத் தட்டை வைத்துவிட்டு காத்திருந்த நாழிகையில் மதியச் சிற்றுண்டிக்காக வெங்காயம் அரிந்து கொண்டிருந்த அம்மா. இவனைக் கண்டதும் சிடு சிடுத்தாள்.

“ஏண்டா. இப்படி எதுக்கும் உபயோகமில்லாம இருந்து இருக்கிறவங்க கழுத்த அறுக்கறே? மணி பன்னிரண்டு ஆச்சு… காலாகாலத்துல சோத்துக் கடைய முடிச்சாதான் மேக்கொண்டு வேலை ஆகும். நாலு மணிக்கெல்லாம் பரிமளாவப் பெண் பார்க்க வரப் போறாங்க… அவங்களுக்கு டிபன் பண்ணியாகணும்…பெரியப்பாவை ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்…. அங்கே ஒரு நடை போயிட்டு வரணும்…. என்னால முடியாட்டியும் ஆறு சாத்துக்குடி பழங்கள வாங்கிட்டு நீ போயிட்டு வரக் கூடாது? மாசக் கடைசி இங்க முழி பிதுங்குது… இப்பப் பாத்து மேலமேல
வேண்டாத செலவெல்லாம்….”

குறைப்பட்டு. குறைப்பட்டு…பட்டு சுட்ட கத்திரிக்காய் மாதிரி சுனங்கிப் போய்விட்ட அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கப் பிடிக்காமல் கைலாசம் சாப்பிட உட்கார்ந்தான்.

சோற்றைப் பிசைந்து குழம்புடன் கலந்து உருட்டி. கவளத்தை வாயருகே கொண்டு போனபோது சொடேரென்று மனசுக்குள் சவுக்கு ஒன்று சொடுக்கியது.

“கேரிங் அண்ட் ஷேரிங்… அக்கறையும் பகிர்ந்து கொள்ளுதலும் மறந்துவிட்ட நிலையில் மனசு குறுகிப்போய். சுயநலம் தலை எடுப்பதில் ஆச்சர்யம் என்ன?”

வாயில் போட்ட சாதத்தை விழுங்க முடியாமல் மீண்டும் மீண்டும் சவுக்கு வலிக்க வலிக்க உள்ளுக்குள் சொடுக்கியது…

தொண்டைக்குழிக்கு மேல் கட்டை ஒன்று வைத்து அடைத்துவிட்ட மாதிரி சோறு இறங்க மறுத்தது.

கையை உதறிக்கொண்டு எழுந்தான். ‘டே..’. என்ற அம்மாவின் கத்தலை லட்சியம் பண்ணாமல் வாசலுக்கு வேகமாய் சென்றான். மூலையில் கிடந்த அரிசியைத் தேடி எடுத்து. பொந்தருகில் குனிந்து மெல்ல. கவனமாய் உள்ளே போட்டான். சின்னக் குரறீல் ‘ஸாரி’ என்று முனகிவிட்டு நிமிர்ந்து. வாசப்படியில். தெருவில் இங்கும் அங்கும் கிடந்த பிளாஸ்டிக் பேப்பர் துண்டங்களை அவசரமாய் பொறுக்கி பந்தாகச் சுருட்டி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு. மீண்டும் உள்ளே வந்து என்னவாயிற்று உனக்கு? என்கிற பார்வையுடன் நின்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.

வழக்கமாகத் தென்படும் சுணக்கம் புலப்படாமல் அந்த களைத்துப் போன முகத்தைப் பார்க்கப் பாவமாக இருக்க. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாமாம்மா? என்றான் இதமான குரலில். 

தொடர்புடைய சிறுகதைகள்
எப்படி? எப்படி இது சாத்தியம்? யாராலும் நம்பவே முடியவில்லை. வியப்பும் தவிப்புமாகத் திணறினார்கள். அக்ரஹாரத்துக் காற்றில் சற்று முன் பலாமரத்து வீட்டம்மா சொன்ன சேதி கும்மியடித்துக் கொண்டிருந்தது. அய்யன் குளக்கரை அரச மரம் கூட இலைகளை சலசலத்துப் பேசிக்கொண்டது. பலாமரத்து வீடு, அந்த ...
மேலும் கதையை படிக்க...
சியாமா-எங்கள் நாய்-இரண்டு நாட்களாய் சரியாய்ச் சாப்பிடுவதில்லை; மந்தமாய் இருக்கிறாள். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். 'நத்திங் டூ ஓர்ரி.. டிவர்ம் பண்ணுகிறேன்... சரியாயிடும்' என்றவர், "எக்ஸசைஸ் கொஞ்சம் கொடுத்துப் பாருங்களேன்; உடம்பு சுறுசுறுப்பாகும்" என்று சொன்னார். என்ன தேகப் பயிற்சி கொடுப்பது! பந்து விட்டெறிந்த பார்த்தேன்-இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ். வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை. என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ...
மேலும் கதையை படிக்க...
அன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான். தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் ...
மேலும் கதையை படிக்க...
பலாமரத்து வீடு கதை!
வாக்
ட்ரங்கால்
தாய்மை..ஒரு கோணம்
வைராக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)